ஓலை குடிசையில் மழை நீர் ஒழுக, வீட்டை விட்டு வெளியே துரத்தினாள் தன் மகனை,
“போ…போய் தொல…
உங்க அப்பன் போன இடத்துக்கே போ”
சண்முகத்தை பார்த்து கத்தியபடி,கண்களில் நீர் பொங்க,அருகே இருந்த பாத்திரத்தை எடுத்து வீசினாள்.
சற்று தயக்கதுடன் அருகே சென்றவன்,பாறை போன்ற அவன் கைகொண்டு தாயின் முகத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தான்.
“படிக்க தானம்மா போறேன்.”
அவன் கைகளை தட்டிவிட்டு கண்களை துடைத்தவள்,
“உனக்கு என்ன படிக்க தானே செய்யனும்..
வேற பக்கம் படி அந்த இடம் வேண்டா”
இடி ஒன்று இடிக்க பெரும் அமைதி சூழ்ந்தது அறையை.
“காசு அதிகமா ஆகும் மா…"
சிறிய சலிப்புடன், கதவிடம் சென்று நின்று மெல்ல திரும்பியபடி,
"இன்னும் எத்தன நாள் தான் இந்த ஓலை குடிசையில வாழ்கய ஓட்டுறது."
மரத்தின் சாரத்தை இறுக்கி பிடித்தபடி,
"எப்போ எவன் ஓலைய பிரிச்சிட்டு வருவானு யாருக்கும் தெரியாது.அக்கா வ பாதுகாப்ப பாத்துக்கனும்ல”
வழிந்த கண்ணீரை துடைத்தபடி , சண்முகத்தை நோக்கி,
“அதுக்கு உன்ன நீயே பலி கொடுக்கனுமா!?, நம்ப ஊரு காரங்க மனு கொடுத்து இருக்கோம் எல்லாம் சரி ஆகிரும் போகாத”
கைகளை முறுக்கியபடி,
“அரசாங்கம், அரசாங்கமுனு எல்லாத்துக்கும் அரசாங்கத்த நம்பிகிட்டே உட்காந்து இருங்க,
அந்த அரசாங்கம் தா நம்பல ஓல குடிசைக்கு தள்ளுனது. மறந்துடாதீங்க.”
என கூறி கொட்டும் மழையில் வெளியே சென்றான்.
மீண்டும் இடி இடிக்க வேகமாக மூச்சிழுத்தபடி கண்விழித்தான்.
தூரத்தில் காவிரி ஆற்றின் கிளையாற்றின் மேற்கே சூரியன் சென்று மறைந்து கொண்டிருந்தது.
தன் வருகையை ஒலிப்பான் இசைத்து பதிவிட்டு சென்று கொண்டிருந்தது தொடர்வண்டி
தொடர்வண்டியின் சன்னல் வழியாக வடகிழக்கு பருவமழையின் சாரல் உள்நுழைய மீண்டும் பெரு இடி இடிக்க பயத்தில் தடுமாறினான் சண்முகம்.
அருகில் இருந்த பெரியவர் சிரித்தபடி,
“என்ன தம்பி , இடினா பயமா..
இந்தா தண்ணி குடி”
அம்முதியவர் கொடுத்த நீரை வாங்கி வேகமாக குடித்த அவன்,
கைகள் நடுங்க மூச்சிறைக்க,
“எங்க….
எங்க…
எங்க தாத்தா இடி இடிச்சு தான் இறந்தாரு”
“இடி எதுவும் பண்ணாது பயப்படாத”
“இந்தாங்க,பாட்டல்”
தன் சுருக்கு பையில் இருந்த திருநீரை எடுத்து அவன் நெற்றியில் வைத்து விட்டு,
“என்ன இத்தன மூட்ட, வெளியூருக்கு வேலைக்கு போறீயோ”
“வேலைக்கு இல்ல , படிக்க”
சில நொடிகள் அமைதியான அம்முதியவர்,
“இந்த பட்டிக்காட்டுல என்ன படிப்பு படிக்க போற”
“இங்க இல்ல தாத்தா, மதிலையூர் ல”
அதுவரை பேசியவர் எதுவும் பேசாமல் தன் பொருட்களை எல்லாம் எடுத்தபடி வேறு இடத்தில் சென்று அமர்ந்தார்.
சண்முகம் குழப்பத்துடன் அம்முதியவரின் கையினை பிடித்தபடி,
“தாத்தா என்ன ஆச்சி.
ஏன் எழுந்துட்டீங்க”
முகத்தை சுழித்து சிரித்தபடி,
“நான் இறங்குற ஸ்டாப் வந்துருச்சு,தம்பி”
என கூறி, சிறிதும் திரும்பிகூட பார்க்காமல்,அவர் வேறு இருக்கையில் சென்று அமர அடுத்த இரயில் நிறுத்தம் வந்தது.
ஜன்னலின் திரையினை திறந்து வெளியே வேடிக்கை பார்த்தபபடி,
என்னாச்சு தெரியல, கொஞ்சம் ஆச்சும் சிரிச்சு இருக்கலாம் ல
என மனதில் அம்முதியவரின் செயலை அசை போட்ட படியிருக்க,
மீண்டும் அதே போல் சம்பவங்கள் தொடரந்து நிகழ துவங்கியது.
முதியவர்கள் முதலாக சிறியவர்கள் வரை வருவதும் பின்னர் அவனை தனிமையின் நுனியில் தள்ளிவிடுதும் எனவே சென்று கொண்டிருந்தது.
இறுதியில், அவனை சுற்றியாரும் இல்லாமல் இருக்க, அடுத்த நிறுத்தமும் வந்தது.தொடர்வண்டியில் இருந்த அனைவரும் இறங்கினர்.
மீதமிருத்த ஓர் இரயில் நிறுத்தம் அது மதிலையூர்.
ஒரு கட்டத்தில் மதிலையூர் மட்டுமே மிஞ்சி இருக்க தொடர்வண்டியில் அதை இயக்குபவர் மட்டுமே இருந்தனர்.
சூரியன் ஒளி மெல்ல மங்க,ஜன்னலின் வழி உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.
சற்று சிரித்தபடி தன் கைகளிலிருந்த காயங்களை உற்று பார்த்துக்கொண்டே
“மன்னிச்சிடு மா, உன் பையன முழுசா கீறல் கூட இல்லாம திருப்பி தந்துருறேன்”
ஆள் அற்ற தொடர்வண்டி அவன் ஒருவனுக்காக ஓடிக்கொண்டுருக்க மதிலையூர் எல்லையினுள் நுழைந்தது.
அதுவரை வானில் ஓங்காரமிட்டு அமர்ந்திருந்த சூரிய கதிரின் அடர்வு குறைய இருள் சூழ ஆரம்பித்தது.
வானில் சிறிய மழைத்துளி போல் பனித்துளி விழ குழப்பத்தில்,
“இங்க பனித்துளி…?”
தயக்கத்துடன் கைகளை வெளியே நீட்ட தமிழ்நாட்டில் பனிப்பூ பொழிவதை முதல் முறை கண்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான்.
அவன் இறங்கிய வேகத்தில் தொடர்வண்டியின் பெட்டிகள் மாற்றபட்டு மின்னல் வேகத்தில் கிளம்பியது.
இரயில் சென்ற திசையினை பார்த்த வண்ணம்,துணி மூட்டைகளை கையில் எடுத்த படி,
“நினைச்சது தான்”
சட்டென்று தென்றல் காற்று வீச,மாலை சூரியனின் கதிர்கள் பட்டு பனிப்பூ மின்னி சிறியதொரு வானவில் உருவாக்கி மறைந்து விழுந்தது.
இரயில் நிலையமும் ஆட்கள் இன்றி வெறுமையாக இருந்தது.
என்றோ எதோ எதிர்பார்ப்பில் கட்டி வைக்கப்பட்டிருந்த கடைகள் எல்லாம் சிலந்திகளின் கூடாரம் ஆக, சிதிலமடைய துவங்கியிருந்தது மொத்த கட்டிடங்களும்.
இருள் சூழ பௌர்ணமி நிலவு வானில் தோன்றியது.மிகவும் பிரகாசமான உலகம் எங்கோ தொலைந்து விட வானிலுளள் பல லட்ச நட்சத்திரங்கள் சற்றே முகம் காட்டியது.
தூரத்தில் ஓர் ஒலிப்பான் ஓசை,
பெரிய மஞ்சள் நிற விளக்குடன் பொழியும் பனியையும் இருளையும் கிழித்துக் கொண்டு மதிலையூர் இரயில் நிலையம் முன் நின்றது.
அது தான் அந்த கல்லூரி பேருந்து.
அத்தியாயம் -ஒன்று
வந்த பேருந்து கண்டு ஆச்சர்யத்தில் உறைந்தான் சண்முகம்.
பேருந்தின் பெரிய மஞ்சள் நிற முகப்பு விளக்குகள்,இருக்கைகள் மற்றும்ஸ ஜன்னல்கள் என காண்கையில் இந்த ஊர் மட்டும் ஏதோ 80-90 களில் சிக்கிக் கொண்டது போல் தேன்ற வைத்தது.
சற்றே தயக்த்துடன் தரமில்ல அப்பேருந்தினுள் ஏற, அவனைப் போலவே சில மாணவர்கள் உள்ளே அமர்ந்திருந்தனர்.அனைவரும் குளிர் தாங்கமல் கைகளை தேயத்துக் கொண்டும் போர்வைகள் போர்த்தியவாரும் இருக்க, ஜன்னல் இருக்கையில் சென்று அமர்ந்தான் சண்முகம்.
பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் பயணம் துவங்கியது. எங்கு திரும்பினும் உயர்ந்து இருந்த மலைகள் அவனை வியப்பில் ஆழ்த்தியது. உடல் உறையும் அளவு இருந்த குளிரையும் மறந்து அலுப்பில் கண் அசர ஆரம்பித்தான்.
பேருந்தின் மௌன இராகம் அனைவரையும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தியது.
பெரியதொரு நெடுஞ்சாலையில் சிறிய ஒரு புழு போல் ஊர்ந்து கொண்டிருந்தது பேருந்து. அதுவரை சீராக அதிகரித்தே கொண்டிருந்த வேகம் சற்றே தடுமாறி மெல்லமாக குறைய ஆரம்பித்தது.
சட்டென்று நின்றது பேருந்து படக்கென்று கண் விழித்தான் சண்முகம்.இரவில் விட்டில் பூச்சிகள் கத்த பேருந்தின் உள்ளேயிருந்த மஞ்சள் நிற குழல் விளக்கு மட்டும் மெல்லிய ஓசையுடன் இசைத்துக்கொண்டிருந்தது.
அதுவரை அவனை சூழ்ந்திருந்த மொத்த சத்தமும் மறைந்து போக, சுற்றி இருந்த இருக்கையில் யாரும் இல்லாமல் பேருந்து மட்டும் தனியே நின்று கிடப்பதை உணர்ந்தான்.
நிலவு வானின் உச்சியில் ஏறி அமர நள்ளிரவு நெருங்கியிருந்தது . நெடுஞ்சாலை தொரும் வெள்ளை நிற கம்பலம் விரித்தது போலிருக்க எதுவும் புரியாமல் தட்டு தடுமாறி எழுந்து நின்றான்.
எழுந்தவன் பேருந்தின் கதவினை சென்றடைந்தான். வளைவு சுழிவு எதுவும் இல்லாமல் நேர்கோடென சென்று கொண்டிருந்தது. சுற்றிலும் அடர் வனம் .பாதையில் இருள் மட்டுமே எத்திசையிலும் இருக்க நிலவு மட்டுமே ஒளி தந்தது.
வெளியே அவன் கால்களை எடுத்து வைக்கும் முன் காற்றிலிருந்த அணுக்களில் எறிக்கிடந்த ஏதோ ஒன்று அவனை உறுத்தியது.
வெண்பூ என அவன் இரசித்த அப்பனி பூ அவன் மெல்லிய நாசி வழி உள்ளே நுழைய மென்தசைகள் கிழிந்தது.
கிழிந்த துவாரங்களில் இருந்த இரத்தம் சொட்டியது.
நுரையீரல் கனத்து மூச்சிழுக்க சிரமபட எங்கோ கிளம்பிய காற்று ஒன்று கடத்தி வந்தது அழுகிய பிணத்தின் வாடையை, சற்றே திரும்பி பார்க்க அவனுடன் வந்த அனைவரின் உடலும் கிழிந்து குருதி வடிந்து கொண்டிருக்க, பனி அப்பிணங்களை மூடி மெல்லமாக கரைக்க ஆரம்பித்தது.
சுற்றி நிகழ்வது என்ன என்று தெரியாமல் குழப்பிய அவன், தேகம் நடுங்க எதோ திசையை நோக்கி நடை பேட ஆரம்பித்தான்.
பட்டென்று அவன் பின்னே, ஏதோ ஒன்று கடந்து செல்ல, திரும்பி பார்க்க சாலையின் மறுபுறம், அத்துணை பனியிலும் ஓர் தீ பந்தம் மட்டும் விட்டு விட்டு எறிந்து கொண்டிருந்தது.
அத்திசையினை நோக்கி,
“யாரு…
யாரு நீ…”
ஆங்காங்கே அலைவுற்றுக் கொண்டிருந்த அகல்விளக்கு அசையாமல் நின்றது. இருளின் மத்தியில் மெல்லியதாக ஒரு உருவம் தெரிய மெல்ல விழி மூடினான் சண்முகம்.