Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனசெல்லாம் மழையே' - முன்னோட்டம்

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

விஷ்வதேவ் கிட்ட பேசிட்டேன் வார்ட் தயாரா இருக்கு ப்ரீத்தி வர்ஷுவும் கூட இருக்காங்க.. நாளைக்கு எபியோடு வரேன் 💞

"ராஸ்கல் பணம் பறிக்க இப்படி ஃபோட்டோவை மார்ஃபிங் செய்து எடுத்துட்டு வந்திருக்கியா..? மரியாதையா உண்மையை சொல்லு" என்ற சரவணனும் அவன் முகத்தில் பளீரென அறைந்திருந்தான். எங்கே தொழில் போட்டி காரணமாக யாரேனும் உதய்க்கு எதிராக அனுப்பி வைத்திருக்கின்றனரோ என்று சந்தேகித்தவனின் மனம் யாராக இருக்ககூடும் என்றும் அலச தொடங்கிவிட்டது.

அவன் சட்டையை பிடித்து "உன் பேர் என்ன..?" என்று ராகவன் அப்புதியவனை கேட்க இங்கே மேடையில் உதய்யின் அருகே அமர்ந்திருந்த தளிரின் இதழ்கள் "சரத்" என்று அன்னிச்சையாக அவன் பெயரை உச்சரித்தது.

புகைப்படத்தை பார்த்த அனைவரும் ஸ்தம்பித்து போயிருந்த அதேவேளை திருமண மண்டபம் முழுதும் இருந்த வெள்ளை திரைகளில் தளிரும் புதிதாக வந்திருந்த வாலிபனும் கடற்கரை, பூங்கா, கல்லூரி, காஃபி ஷாப் என்று ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்ற போது எடுத்த காணொளிகள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

தளிரின் முகத்தில் இருந்த சிரிப்பும், மகிழ்ச்சியும் அவ்வப்போது அவள் மீது ரசனையோடு படிந்த அவன் பார்வையையும் கண்டு திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் இடையே, 'அம்பலவாணன் ஸார் எப்படி இந்த மாதிரி ஒரு பெண்ணை மருமகளா தேர்ந்தெடுத்தார்..? பணக்காரன் கிடைச்சதும் இவனை கழட்டிவிட்டுட்டா போலயே..! உதய் ஸார் அழகுக்கும் பண்புக்கும் அடுத்தவன் பொண்டாட்டியா கிடைச்சா..? என்ற பேச்சுக்கள் கிளம்பிய அதேவேளை,

"பாருங்க ஸார் நானும் அவளும் ஸ்கூல் படிக்கிறப்ப இருந்தே உயிருக்கு உயிரா காதலிச்சோம்.. காலேஜ் படிக்கும் போது இனியும் பிரியக்கூடாது சொல்லி நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு இரண்டு மாசம் என் பிரென்ட்டோட அப்பார்ட்மென்ட்ல குடுத்தினம் பண்ணினோம்.. ஆனா என்ன ஆச்சுன்னு தெரியல திடீர்னு என்னை விட்டு போயிட்டா, எங்க போனான்னே தெரியாம தேடின நான் இப்போ இங்க கல்யாண கோலத்துல இவளை பார்க்கிறேன்.. என் பொண்டாட்டியை எனக்கு கொடுத்துடுங்க.." என்று அங்கே வந்த அம்பலவாணன் காலில் விழவும் அவனை தூக்கி நிறுத்தியவர் அடுத்த நொடியே ஓங்கி அறைந்திருந்தார்.

"ஸார் ப்ளீஸ் ஸார் தயவுசெய்து என் பொண்டாட்டியை என்கூட அனுப்பி வச்சுடுங்க அவ இல்லன்னா எனக்கு வாழ்க்கை இல்ல நான் செத்துடுவேன் ஸார்" என்று சரத் பேசிக்கொண்டிருக்கும் போதே அடுத்ததாக கோவிலுக்கு இருவரும் தம்பதியராக நடந்து செல்லும் காணொளியும் ஒளிபரப்பப்பட்டது அவர்களுடன் மேலும் ஒரு பெண்ணும் மூன்று ஆண்களும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர் அதை பார்த்த கூட்டம் மொத்தமும் அதிர்ந்து போனது.

அத்தனை நேரம் திடமாக அமர்ந்திருந்த இளந்தளிரும் ஒவ்வொரு காணொளியும் கண்டு அதுகாறும் கொண்டிருந்த தைரியம் மொத்தமும் வடிய நெஞ்சம் படபடக்க உதயாதித்தனை தான் பார்த்தாள்.

Last edited:

Nirmala vandhachu 😍😍😍
 
Top