மனைவி - 21
"எங்களுக்கு எதுவும் வேணாம்மா... நீங்க மதியம் கொடுத்துவிட்ட உணவே வயிறு நிறைய இருக்கு. வாங்க வீட்டுக்கு போகலாம்" என்று தாயை இழுத்துக் கொண்டு நடந்தார்கள்.
தந்தைக்கும் தாய்க்கும் விவாகரத்து ஆகப்போகிறது என்ற கசப்பான உண்மையை அவள் பிள்ளைகளிடம் சொல்லவில்லை.
அந்த இரண்டு குழந்தைகளையும் தன் கண்ணின் மணி போலப் பாதுகாத்தாள். தன் பன்னிரண்டு வருட ஏக்கங்களை ஒவ்வொன்றாகத் தீர்க்கத் தொடங்கினாள்.
அந்த நேரத்தில் ஸ்ரீராம் என்பவனின் நினைவு ஒரு முறை கூட அவள் மனதில் வந்து செல்லவில்லை.
பிள்ளைகளுக்குப் பிடித்ததைச் சமைப்பது, அவர்களுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்வது என அவள் வாழ்க்கை ஒரு புதிய திசையில் நகரத் தொடங்கியது.
இடையில் பிரபாகரன் இரண்டு முறை வந்து பார்த்துவிட்டுச் சென்றான். அவன் வரும்போதெல்லாம் வெறும் கையோடு வரவில்லை; பிள்ளைகள் விரும்பிச் சாப்பிட தின்பண்டங்களை வாங்கி வந்து கொடுத்து விட்டுச் சென்றான்.
அவனது அந்தச் சின்னச் சின்ன அக்கறைகள் ராதையின் புதிய வாழ்க்கைக்கு பெரும் பலமாக அமைந்தன.
அன்று அதிகாலைப் பொழுதில் ராதை பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டாள்.
அவர்கள் சென்ற பின் அந்தச் சிறிய வீடு அவளுக்குப் பெரும் சூனியமாக தெரிந்தது.
என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தவள், மனக் கவலையை மறக்க வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
சமையலறையில் இருந்த மளிகைப் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து, அதன் அளவுகளை பார்த்துப் பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு டப்பாவையும் துடைத்து வைக்கும் போது, அவளது கடந்த கால நினைவுகளும் சேர்ந்து துடைக்கப்படுமா என்ற ஏக்கம் அவள் கண்களில் நிழலாடியது.
அப்போது, "ராதா..." என்று கனிவோடு அவளை அழைத்தபடி பிரபாகரன் உள்ளே வந்தான். அவனது குரலில் ஒருவித நிம்மதி கலந்திருந்தது.
"அண்ணா வாங்க... உட்காருங்க," என்றாள் ராதை, கையில் இருந்த துணியை ஓரம் வைத்துவிட்டு.
பிரபாகரன் உற்சாகமாக, "உனக்கு வேலை ரெடி ஆயிடுச்சு ராதா. சாரி, கொஞ்சம் லேட் ஆயிடுச்சு," என்றான்.
ராதை மெலிதாகப் புன்னகைத்து,
"அதெல்லாம் இருக்கட்டும் அண்ணா... எனக்காக நீங்கதான் ரொம்ப கஷ்டப்படுறீங்க," என்றாள் நெகிழ்ச்சியுடன்.
"இதில் என்ன கஷ்டம் இருக்கு? ஸ்கூலுக்கும் வீட்டுக்கும் நடுவுல ஏதாவது வேலை கிடைக்குமான்னுதான் தேடிட்டு இருந்தேன். ஏன்னா, நீ தனியா அங்கயும் இங்கயும் அலைய முடியாது இல்ல," என்றான் அவன் அவளது சூழ்நிலையைப் புரிந்து கொண்டவனாக.
"நால் ரோட்ல ஒரு பெரிய ஷாப்பிங் மால் இருக்கு, உனக்குத் தெரியும் தானே அது?"
"தெரியும் அண்ணா."
"அங்கதான் உனக்கு சூப்பர்வைசர் வேலை கேட்டு வாங்கி இருக்கேன். காலையில ஒன்பதரை மணிக்குப் போகணும், சாயந்திரம் 5:00 மணிக்கு நீ வீட்டுக்கு வந்துரலாம். நான் அவங்ககிட்ட தெளிவா பேசிட்டேன்."
ராதைக்கு ஆச்சரியமாக இருந்தது. "அஞ்சு மணிக்கு வந்திடலாமா? ஆனா சூப்பர் மார்க்கெட்னா லேட்டா தானே மூடுவாங்க?" எனக் கேட்டாள்.
"நீ வந்துடலாம். உனக்குக் குழந்தைங்க இருக்குன்னு நான் அவங்ககிட்ட பர்மிஷன் வாங்கி இருக்கேன். முதல்ல உனக்கு வேலை எந்த அளவுக்குச் செட்டாகுதுன்னு பாரு. அதுக்கப்புறம் நீ எக்ஸ்ட்ரா டைம் வொர்க் பண்ணா, அதுக்குத் தகுந்த மாதிரி எக்ஸ்ட்ரா பணம் தரதா அவங்க சொல்லியிருக்காங்க."
சற்று இடைவெளி விட்டு அவன் தொடர்ந்தான், "ஆனா எனக்கு தெரிஞ்சு எக்ஸ்ட்ரா டைம் எல்லாம் நீ ஒர்க் பண்ண வேணாம். ஏன்னா பாப்பாங்க வீட்டுல தனியா நைட்ல இருந்தா பயந்துடுவாங்க. அப்புறம் என்ன பண்ண முடியும்? பொம்பள பிள்ளைங்க இருக்கிற வீடு, அவங்களை அதிக நேரம் தனியா விட முடியாது. அஞ்சு மணி வரைக்கும் உனக்கு வேலை போதும்."
அவள் கைகளைப் பிசைந்து கொண்டிருப்பதைப் பார்த்தவன், "மாசம் 20,000 சம்பளம் தராங்க. மேற்கொண்டு ஏதாவது தராங்களா இல்லையாங்கிறது நீ வேலைக்குப் போனால்தான் தெரியும். லஞ்ச் அங்கே ஃப்ரீ. உனக்கு ரெண்டு டைம் டீ, காபி, ஸ்நாக்ஸ் தருவாங்க," என்றான் விபரமாக.
"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா," என்றாள் ராதை. அவள் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.
"எனக்கு நன்றி எல்லாம் தேவையில்லை ராதா. நீயும் உன் குழந்தைகளும் நல்லா இருந்தாலே போதும். இப்போதைக்கு இந்த வேலைக்குப் போ. இதை விட வேற ஏதாவது நல்ல வேலை கிடைச்சா, அதுக்கப்புறம் நாம உன்னை மாறிக்கலாம்."
"எனக்கு இதுவே போதும் அண்ணா. ஏன்னா இது ஸ்கூலுக்கும் வீட்டுக்கும் நடுவுல இருக்கு. பசங்களுக்கு இப்ப எக்ஸ்ட்ரா கிளாஸ் வேற ஏதோ ஆரம்பிக்கிறாங்களாம். அஞ்சு மணிக்கு வேலை முடிஞ்சுதுன்னா, அப்படியே நடந்து போய் குழந்தைகளைக் கூட்டிட்டு நான் வந்துருவேன்," என்றாள் எதிர்காலத் திட்டத்துடன்.
"எதையும் இப்போதைக்கு முடிவு பண்ண வேண்டாம் ராதா. நீ இப்போதைக்கு இந்த வேலைக்குப் போ. ஆனா பஸ்ல போறது ரொம்ப கஷ்டம், அந்த டைமுக்கு பஸ் ரொம்ப கூட்டமா வரும்," என்றான் கவலையுடன்.
"நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்," என்று அவள் சொன்னாலும், அவள் படும் சிரமத்தை நினைத்து அவனுக்கு மனம் கேட்கவில்லை.
அவனுக்குத் டீ போட்டுக் கொடுத்துக் கொண்டே பேசினாள்.
அவன் டீயைக் குடித்துவிட்டு கிளம்பும்போது, "பசங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கானுங்க?" எனக் கேட்டாள்.
"நல்லா இருக்கானுங்க அண்ணா. முக்கியமா இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கானுங்க. நல்லா படிக்கிறானுங்க. அடிக்கடி உன்னைத்தான் கேட்பானுங்க. நான் இன்னும் எதுவும் சொல்லல அவங்ககிட்ட... அந்தப் பிரச்சனை எல்லாம் கொஞ்சம் தீரட்டும்னு இருக்கேன்," என்றான் ஒருவித பாரத்துடன்.
"எதுக்கு சின்ன பசங்க கிட்ட இதெல்லாம் சொல்லிக்கிட்டு? அவங்களும் மனசளவுல பாதிக்கப்படுவாங்க. கொஞ்ச நாள் போகட்டும், நான் அப்புறமா வந்து அவங்களைப் பார்க்கிறேன்," என்றான் பிரபாகரன்.
"அது உன் விருப்பம் அண்ணா. அட்ரஸ் எனக்கு வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணுங்க," என்றாள் ராதை.
பிரபாகரன் சட்டென சிரித்து, "சாரி... உன்கிட்ட வாட்ஸ்அப் இல்லங்கிறத நான் மறந்துட்டேன். இது பட்டன் போன் இல்ல..." என்றவன், மீண்டும் சீரியஸாகி, "சரி நான் போயிட்டு வரேன். நீ பத்திரமா இரு. என்னைக்கு ஹியரிங் வருதுன்னு பார்த்துட்டு நானே உன்னை அழைச்சிட்டுப் போறேன். நீ எதுவும் நினைச்சு டென்ஷன் ஆகாத," என்று ஆறுதல் கூறி கிளம்பினான்.
"ஓகே அண்ணா," என வழியனுப்பி வைத்தாள்.
அவளுக்கு வேலை கிடைத்த சந்தோஷம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
'இனி என் சொந்தக் காலில் நிற்கலாம்... என் பிள்ளைகளை நானே சம்பாதித்துப் படிக்க வைக்கலாம்' என்று மனதார கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டாள்.
நாளை முதல் வேலை! ஒரு புதிய உலகம்! முதல் நாளுக்குத் தேவையானவற்றைத் தயார் செய்தாள். முன்னெப்போதும் இல்லாத ஒரு தெளிவு அவளிடம் தெரிந்தது.
'எது எப்படி இருந்தாலும், எவ்வளவு கடினமாக இருந்தாலும், என் பிள்ளைகளுக்காக இந்த வேலையை நான் தக்க வைத்தே ஆக வேண்டும்' என்று உறுதியாக முடிவு செய்தாள்.
மாலை நேரம்... பள்ளி முடிந்து வந்த பிள்ளைகளை அழைத்து வந்தாள். அவர்கள் முகம் வாடியிருக்கக் கூடாது என்று நினைத்தவள்,
"சீதா, மகா... உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஹேப்பியான விஷயம்! அம்மாவுக்கு வேலை கிடைச்சுடுச்சு! மாமா தான் வேலை வாங்கி கொடுத்தாரு. நாளைக்கு உங்க கூட அம்மாவும் கிளம்பி வேலைக்கு வந்துடுவேன்!" என்றாள் உற்சாகமாக.
"வாவ்... சூப்பர் மா!" என்று மகா துள்ளிக் குதித்து அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.
மூத்தவள் சீதா மட்டும் யோசனையுடன், "நீங்க எப்படி வேலைக்கு வருவீங்க?" எனக் கேட்டாள்.
"இப்போதைக்கு அம்மா நடந்து வர்றேன். அப்புறம் என்ன பண்ணலாம்னு நான் யோசிக்கிறேன்," என்றாள் ராதை.
பஸ்ஸில் ஏறி இறங்கினால் ஒரு நாளைக்கு 20 ரூபாய் செலவாகும். அந்தச் சிறுகச் சிறுகச் சேர்க்கும் பணமும் பிள்ளைகளுக்குப் பயன்படுமே என்று அவளாகவே நடந்தே செல்வதென முடிவு செய்திருந்தாள்.
"அம்மா... இவ்வளவு தூரம் எப்படி நடப்பீங்க? ரொம்ப கஷ்டமா இருக்குமே?" என்றாள் சீதா கவலையுடன்.
"தினமும் நாம நடந்துதானே வர்றோம்? நாளைக்கு நடக்க மாட்டோமா? அதெல்லாம் எதுவும் யோசிக்க வேண்டாம், நான் பார்த்துக்குறேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் தான் பத்திரமா இருக்கணும். என்னால் உங்களை வந்து அழைச்சிட்டுப் போக முடியலன்னா, நீங்க ரெண்டு பேரும் பத்திரமா வீட்டுக்குப் போயிடணும். வீட்டுக்குப் போனதும் கதவை மூடிக்கொண்டு, யார் வந்து கதவைத் தட்டினாலும் திறக்கக் கூடாது. ஹவுஸ் ஓனர் அம்மா மட்டும் வந்து கூப்பிட்டா அவங்க கிட்ட பேசிட்டு இருங்க. ஆனா அவங்க வீட்டுக்குப் போய் அவங்களைத் தொந்தரவு பண்ணக் கூடாது, சரியா?"
"அம்மா... நீங்க எங்களைப் பத்தி கவலைப்படாதீங்க. நாங்க பத்திரமா இருப்போம். வெளிய எங்கேயும் போக மாட்டோம், யார் கூப்பிட்டாலும் போக மாட்டோம், யார் என்ன கொடுத்தாலும் சாப்பிட மாட்டோம். வீட்டுக்குள்ளேயே இருப்போம். ஹோம் ஒர்க் செஞ்சுட்டு நாங்க வீட்டுக்குள்ள விளையாடுறோம். தங்கச்சியையும் நான் பார்த்துக்குறேன்," என்று சீதா ஒரு முதிர்ந்த பெண்ணைப் போலப் பேச, ராதையின் கண்கள் கலங்கிப் போயின.
இந்தச் சின்ன வயதில் இவ்வளவு பக்குவமா? அவர்கள் அனுபவித்த துன்பங்கள் அவர்களை இவ்வளவு சீக்கிரம் வளர்ந்து விட்டன என்பதை நினைக்கும் போது அவளுக்கு வலித்தது. அவளும் இதே வயதில் இப்படித்தான் சூழ்நிலையால் பக்குவப்பட்டவள்.
வரலாறு மீண்டும் திரும்புகிறதா?
மறுநாள் காலை...
பரபரப்பாக விடிந்தது. பிள்ளைகளை தயார் செய்து, தானும் தயாராகி, மூவருக்குமான மதிய உணவுப் பைகளை எடுத்துக் கொண்டாள். பிள்ளைகளின் புத்தகப் பைகளையும் தன் தோளில் சுமந்து கொண்டு தெருவில் இறங்கினாள்.
அப்போது, அவர்களை உரசுவது போல ஒரு கார் வந்து நின்றது.
ராதை பயந்து போனாள்.
பிள்ளைகளைத் தன் பின்னால் இழுத்து அணைத்துக் கொண்டு பின்வாங்கி நகர்ந்தாள். அப்போது காரின் கண்ணாடியை இறக்கி, உள்ளிருந்து பிரபாகரன் கையசைத்தான்.
"நான்தான்... நான்தான்... பயப்படாதீங்க! சாரி... சாரி..." என்று கெஞ்சியபடி காரில் இருந்து இறங்கினான்.
"அண்ணா நீங்களா? நிஜமாவே பயந்துட்டேன் அண்ணா!" என்றாள் ராதை மூச்சைப் பிடித்துக்கொண்டு.
"சாரிம்மா... வாங்க உள்ள வந்து உட்காருங்க. இன்னைக்கு நானே உங்களை அழைச்சிட்டுப் போறேன்."
"இல்ல அண்ணா... உங்களுக்கு வேலைக்கு டைம் ஆயிடும். நான் பசங்களைக் கொண்டு போய் விட்டுட்டு அப்புறம் வேலைக்குப் போறேன்."
"நீ கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு ரிட்டர்ன் வேலைக்கு வர்றதுக்குள்ள உனக்கு லேட் ஆயிடும். நான் உன்னை மாலில் விட்டுட்டு, அப்புறமா பசங்களை ஸ்கூல்ல விட்டுடுறேன். ஏன்... என்னை நம்பி பசங்களோட வர மாட்டியா?" என்றான் அவன் உரிமையுடன்.
அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், "ஐயோ அண்ணா... என்ன இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்கீங்க... இதோ வர்றேன்," என்று தன் மகள்களுடன் காரில் ஏறி அமர்ந்தாள்.
காரின் சொகுசு அவளுக்குப் புதிதாக இருந்தது.
"யாரு கார் இது அண்ணா?" எனக் கேட்டாள் மெதுவாக.
"நம்ம கார்தான்."
"உங்ககிட்ட கார் இருக்கா? வீட்டுக்கு ஒரு டைம் கூட எடுத்துட்டு வந்து நான் பார்த்ததே இல்லையே?" என்றாள் வியப்புடன்.
தொடரும்.....