கதை ஃபுல்லா படிச்சு முடிச்சிட்டேன். எனக்கு தேவா உயிரோட வந்தான்னு தெரிஞ்சதும் தான் நிம்மதியாவே இருந்தது
ஆதியை நிச்சயம் வில்லன்னு சொல்ல முடியாது. நமக்கே நம்ம லைஃப் சரியில்லன்னா நம்மளை சுத்தி இரூக்கறவங்க ஓஹோன்னு வாழ்ந்தா சின்ன பொறாமை வரத்தான் செய்யும். ஆனா ஆதி ஆரம்பத்துலயே யூ டிபைன்ட்டு இட் க்ளியர் . தனக்கு பிடிச்சதை அடைய அவன் எந்த எல்லைக்கும் போவான். அவன் கெட்டவனா இருந்தா மாளவி கல்யாணம் பண்ணப்பவே பழி வாங்கி இருப்பான். ஆனா மாளவி தன்னை மிஸ் பண்ணதை உணரனும்னு தான் கண்மணியை கல்யாணம் பண்றான். அவ மேல விருப்பம் இல்லேன்னா கூட போகப்போக விரும்பினான்.
ஆனா அவன் பாஸ்ட் அவன் முன்னாடி வந்து நிக்குது. கண்மணி அதையே குத்தி காமிச்சு அவன் வாழ்க்கையை நாசம் பண்றா.உயிருக்கு உயிரான அக்கா வாழ்க்கை நாசமா போச்சு. அதை பழி வாங்கலேன்னு அவன் உடையறான். எனக்கு அவனை அங்க தான் பிடிக்க ஆரம்பிச்சுருச்சு.
தனக்கு கிடைக்க வேண்டியது இன்னருத்தனுக்கு கிடைச்சு அதன் மூலமா சந்தோஷமா அவன் இருக்கான்னு தெரிஞ்சா ஆதிக்கு கோபம் வரத்தான் செய்யும். ஹி ஹேஸ் ஹியுமேனிட்டி. அதான் பழிவாங்கறப்ப கூட பதினாலு வருஷம் நான் நரகத்துல இருந்தேன். நீ உன் வீட்டை விட்டு போனாத்தான் அந்த நரகம் உனக்கும் உன் மனைவிக்கும் கிடைக்கும்னு சொல்றான். மோர் ஓவர் பொண்ணுங்கனே சுத்தின ஒருத்தன் மாளவியை தேவா போனாக்கூட தொட மாட்டேன்னு சொல்றான். ராவணன் மாதிரி இவன் ஆண்டி ஹீராவா நினைக்கப்பட்ட ஹீரோ.
ஆனா பண்ண பழைய தப்பெல்லாம் என்ன ஆகிறது. அதுக்கான தண்டனை ஆதிக்கு கிடைக்குது. உயிர் அவ்ளோ சாதாரணமான விஷயமா.. அதை அசால்ட்டா எடுத்தான் இல்ல அப்போ. அதான் அந்த மரண வலி.. நீங்க நீதி நியாயம்னு சும்மா தேவாக்காக சொல்றீங்கன்னு நினைச்சேன். ஜஸ்டிஸ் சரியா இரூக்கு ஆதி விஷயத்துல.
தேவா மாளவி. ரியலி ஐ லவ்ட் தெம். எப்படி இப்படி அன்பை கொடுத்து எடுத்து (உங்க வார்த்தை தான்). வெறும் காமம் இல்ல. வெறும் காதலும் இல்ல. தாம்பத்தியம்னா என்ன? இப்படி ஒருத்தருக்காக ஒருத்தர் உண்மையா வாழ்றது.
ஐ ரெட் சம் ரிலேட்டட் ரியல் லைஃப் இனிசிடென்ட்ஸ். அவங்களை பிரதிபலிச்சு கொடுத்தீங்களா தெரியல.
ஆதி தேவா.. மகாபாரத்து கர்ணன் துரியோதனன். அவங்களே சண்டை போட்டாலும் செஞ்சோற்று கடனுக்காக தேவா மன்னிக்கல. நண்பன்னு மன்னிச்சான் பாருங்க அங்க நிக்கறான் தேவா.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.. இந்த கதையை தூக்கி பிடிச்சது உங்க வார்த்தைங்க தான். என்ன சொல்றது. அள்ளி எடுக்கவும் கிள்ளி கொடுக்கவும்.. கிணற்று நீர் என்ற பொறுமை இல்லை.. ஆற்று நீர் என்ற அவசரம் இல்லை. கொடுத்து சிவந்தன அவள் இதழ்கள். எடுத்து சிவந்தன அவன் கைகள்.
கடைசியாக ஊமத்தம் முள் இல்ல அம்பது வயசுக்கு மேல வர காதல். உன்மத்த முள். நீ தான் நான்னு பித்தாகி நிக்கற புத்தன்னு.
ஆசையே இல்லாத புத்தன் பித்தனானா எப்படி இருப்பான். மனைவியை வேண்டவே வேண்டாம்னு ஓடி போனவன் மனைவியே கதின்னு கிடந்தான்னா.. ரீடர்ஸ் எவ்வளவு கற்பனை செய்ய விட்டிருக்கீங்க இந்த இடத்துல..
நதியா அக்கா சொல்லித்தான் படிக்க வந்தேன். இப்போ நீங்க என் அக்காவா ஆகிட்டீங்க. உங்க எழுத்தில் நான் பித்தானது தெளிய கூடாது. சோ கீப் ரைட்டிங்...
எனக்கு எப்.பி அக்கவுண்ட் கிடையாது. அதான் இங்க போட்டிருக்கேன். ஆல் தி பெஸ்ட் பார் யுவர் ப்யூச்சர்
ஆதி கண்மணிக்கு தனியா கொடுங்க ப்ளீஸ். என்னால் அவனை வில்லனா நினைக்கவே முடியல. அன்புக்கு ஏங்கின குழந்தையா தான் பாக்க முடியுது..
சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும்.இது உங்க பெஸ்ட்.. லவ் யூ.

