Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மின்னல் -(மர வீடு)

Advertisement

Crazy Queen

Well-known member
Member
வானத்துப் பறவைகள் 'கலகலத்வனி' யைக் கீத விழிகள் மங்கலாய் விழித்தால் கனிஸ்ரீ.

மூங்கிலால் வேயப்பட்ட மர வீடு போல் தெரிகிறதே?

விதானம் மரங்களால் கூட வேறுபட்டிருக்கிறது ? பரன் சாலை போல் வெகு அழகாய் இருக்கிறது?

வர வீட்டுக்கு நான் எப்படி வந்தேன் ?

கும்மென்று நாசியில் ஏதும் நறுமணம் வருகிறதே அது என்ன ?

தன்னை சுற்றிலும் பார்த்தவள்.... வியப்பில் விளிம்பிற்கே சென்றுவிட்டாள்.

காட்டு ரோஜாக்கள் கொத்துக்கொத்தாய் அவர் படுத்திருந்த கட்டில் சுற்றிலும் அழகாய் வைக்கப்பட்டிருந்தது.

சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

நான் ஒரு பூவை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டேன். அத்தனை பூக்கள் பறித்து வந்த என் அருகே வைத்து ....... "ஆசை தீர பார்த்து ரசி" என்று யாரோ சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறதே ?

இதெல்லாம் கனவா ? இல்லை நினைவா ?

அல்லது இரண்டும் இல்லையா?

செத்துப் போய் சொர்க்கத்திற்கு வந்து விட்டனா?

அப்படி தான் இருக்க வேண்டும்.

இந்த யானைகள் எல்லாம் சேர்ந்து துவம்சம் செய்து விட்டு என்னை கொன்று போட்டாதும் நான் சொல்வதற்கு வந்துவிட்டேன் போலா.....!

இது என்ன எனது காட்டன் சில்க் புடவை அணிந்து ஜில்லென்று இருக்கிறது

சொர்க்கத்தில் கூட குளிரில் உடம்பு வெடடெக்கும்மா என்ன?

அப்படி இருக்க முடியாதே ? தன்னைத்தானே கிள்ளிப் பார்த்தாள் 'சுரீர்' என்று வலிக்கிறதே ?

இது சொர்க்கமும் இல்லை..... நான் சாகவும் இல்லை.

அதே சமயம்....... இது கனவும் இல்லை.

அதே அட பஞ்சவர்ணக் கிளிகளும் மணி புறாக்களும் சுதந்திரமாய் கீச்கீச் என்று உற்சாக ஒலி எழுதியபடி வர வீட்டுக்குள் இங்குமங்குமாய் பறக்கின்றதோ?

நான் இங்கே எப்படி வந்தேன்?

ஆளரவமே இல்லாத இடத்தில் தானே நான் சறுக்கி விழுந்து தொலைந்தேன்?

அதுவும் படுத்துப் புரண்டு யானையின் முதுகில் வந்து விழுந்தேனே?

இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததை யாரும் பார்க்கவில்லையே?

அப்படி இருக்கும்போது யார் என்னைக் காப்பாற்றிக் கொண்டு வந்து சேர்த்தார்கள்?

உடம்பு முழுக்க களிமண் சேறு அப்பி கிடந்ததே? யார் என்னை குளிப்பாட்டி விட்டு .......சோறு எல்லாம் கழுவப்பட்டு சுத்தமாய் இருக்கிறதே?

யானைகள் எப்படி என்னை விட்டு வைத்தது? மூச்சு பேச்சின்றி கடந்தவளை சுமந்துகொண்டு சர்வின் வெளிவருவதற்கு எத்தனை சிரமப்பட்டு இருக்க வேண்டும்?

யார் இத்தனை மெனக்கெட்டது ?

அருகில் இருந்து பார்த்தவர் போன்று ......... மிகச் சரியான தருணத்தில் வந்து என்னை காப்பாற்றி இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது என் கடமை ஆயிற்று?

சற்றென்று கட்டிலை விட்டு இறங்கி நடந்து வாசலை நோக்கிச் சென்றாள்.

பர்ணசாலை வீட்டு காற்று அள்ளிக்கொண்டு போனது.

வாசல் அருகில் வந்ததும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.

அட இது உண்மையாகவே மர வீடா? காட்டு விருட்சத்திற்கு மேல்.... உயரத்தில் அழகாய் மரபு இது அமைந்திருக்கிறார்களே ?

இங்கிருந்து பார்த்தால்........ சுற்று வட்டாரமே தெரிகிறதே ?

அந்த முதியவர் என்னை வந்து ஏரிக்கு செல்லவிடாமல் தடுத்தாரே ?

இந்த இடம் கூட ....... இங்கிருந்து பார்த்தால் தெரிகிறதே?

அப்படி என்றால் காற்று ரோஜாவை நான் பறிக்க முயன்று சரிவில் சறுக்கி விழுந்தேனே ? அது ?

அட இந்த இடம் நன்றாகத் தெரிகிறதே ?

நான் சறுக்கி விழுந்ததை ..... இங்கிருந்து பார்த்துவிட்டு தான்...‌‌
விரைந்து வந்த காப்பாற்றியிருக்கிறார்கள்.

காப்பாற்றியவர் யார் ?

அவர்கள் காப்பாற்றமால் விட்டால் என் கதி என்னவாகி இருக்கும்?

உடனே நன்றி சொல்லி ஆக வேண்டுமே ?

தண்ணி நம்பர நிச்சயமாக என்னைத் தூக்கிக் கொண்டு மேலே வந்து இருக்க முடியாது.

காட்டு ரோஜாக்களை வேறு கணக்கில்லாமல் பறித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

யார் அவர்கள்?

காற்று பலமாய் வீசுகிறதே ?

ஒடுக்கமான மரப்படியில் மேலிருந்து இறங்குவதற்கு பயமாக இருக்கிறதே ?

காற்று வீசும் வேகத்தைப் பார்த்தால் அசுரத்தனமாய் ஆலை தள்ளி விடும் போல் இருக்கிறதே?

வேற வழி இல்லை..... மெதுவாய்..... கவனமாய் இறங்க வேண்டியதுதான்

நான்கு படிகள் தான் இறங்கியிருப்பாள்.

உய்ய்..... உய்ய் என்று வன் வனாந்தரத்து காற்று சுழன்றடித்தது.

மரத்தின் கிளைகள் ஆக்ரோஷமாய் அசைந்தது ஆடியது.

கிடுகிடுவென்று நடுக்கம் உச்சந்தலையிலிருந் சேலைத் தலைப்பு வேறு படபடவென்று காற்றில் பறந்தது.

தலைப்பை வலது கையில் பிடித்து வளர்த்த பலாத்காரமாய் இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு இருந்தபோது.....

காற்றின் அதீத வேகத்தாலோ..... கவனக் குறைவினாலோ.... இடது கையின் பிடி சற்று தளர்ந்தது.

சரிவில் சறுக்கி விழுந்து போது பெரிய காயம் ஏதும் விழ வில்லை.

யானை வீடு விழுந்தால்..... காயம் ஏற்படாமல் தப்பித்து விட்டேன்.

ஆனால் இப்போது நான்காம் படிக்கட்டில் இருந்து இத்தனை உயரத்திலிருந்து விழும் போது நிச்சயமாய் கை கால்கள் முறிந்து தான் போகின்றன.

ஐயோ குடல் புரண்டு தொண்டைக்கு
வந்துவிடும் போலிருக்கிறது ?

கண நேரத்தில் அவளது உள் மனம் புலம்பியது.

விழிகள் இறுக்க மூடியபடி பாபா....! என்று அலறினாள்.

அவள் அலறிய அலறலில்...... விருட்சங்களில் செல்லமாய் வீற்றிருந்த பறவைகள்..... சடசடவென்று பயத்துடன் பறந்தது.

அந்த அலறல் சப்தம் ............. வனாந்தரம் எங்கும் எதிரொலித்தது.

? ஸ்ரீ யார் காப்பாற்றி இருப்பார்கள் ? ?

? அந்த மர வீடு யாருடையது? ?

? காட்டு ரோஜாக்கள் யார் பறித்து வைத்திருப்பார்கள்??

? ஸ்ரீயின் உள்ளுணர்வு எச்சரித்தது உண்மையாகவே நடக்குமா ??
 
Sister பலவந்தமாய் னு தான சொல்வோம் நீங்க பலாத்காரமாய்னு ஏன் சொல்றீங்க
 
Top