Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீனாளின் சுந்தரம்..

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
“மீனாளின் சுந்தரம்..!”


“மச்சி நைட் டின்னருக்கு வரியா....” – முதல் நபர்


“என்ன மச்சி... நீயெல்லாம் டின்னருக்கு வெளிய கூப்பிடுற.... ஆரத்திக் கரைச்சு கூப்பிட்டாக் கூட வரமாட்ட... இன்னைக்கு என்ன... ஹ்ம்ம் அதோட உனக்கும் வெளிய சாப்பிட்டா சேராதே.... வீட்ல அவங்க இல்லையா....?” – இரண்டாம் நபர்


“ஹ்ம்ப்ச்.... கடுப்பேத்தாத.... வரியா இல்லையா.... அதை மட்டும் சொல்லு...? – பஸ்ட்


ஹ்ம்ம் வரேன்.. வரேன்... பட் ரீசன் சொல்லு வரேன்.... – செகண்ட்


“ ஒரு ரீசனும் இல்ல.... வீட்ல அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்க.... ரெண்டு நாளாச்சு... ஃபிரிட்ஜ்ல இருக்குறதை வச்சு அப்படி, இப்படின்னு ரெண்டு நாள் ஒப்பேத்திட்டேன்.... இன்னைக்கு வீட்ல ஒண்ணுமில்ல மச்சி... எப்படியும் வெளியதான் சாப்பிடனும், அதான் நீ ப்ரீயா இருந்தா ஒண்ணா போகலாம்னு கேட்டேன்....” – பர்ஸ்ட்

“ஓ... அப்படியா, சரி மச்சி, நீ வண்டிக்கிட்ட வெயிட் பண்ணு, நான் வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிட்டு, லீட்க்கிட்டையும் சொல்லிட்டு வந்திடுறேன்...” – செகண்ட்


ஹ்ம்ம் ஓகே பா.... கீழே வெயிட் பண்றேன்... பாய்....” – பர்ஸ்ட்


“ஹ்ம்ம் பாய்..” – செகண்ட்


பத்து நிமிடம் கழித்து வந்த இரண்டாம் நபர் “என்ன மச்சி டூ டேஸ்லயே இவ்ளோ டல்லாகிட்ட.... உன்னைப்பார்த்தா ஏதோ மூடவுட் போல தோணுது, என்னன்னு சொல்லு முடிஞ்சா ஹெல்ப் பண்றேன்... உனக்கும் ஒரு ரிலீஃபா இருக்கும்...”


“ஹ்ம்ப்ச் என்ன மூடவுட்... ஒன்னும் இல்லப்பா.... மாமியார் போன் பண்ணாங்க..” என


“ஓ.... ஏன்... அதுக்கும் உன்னோட மூட் ஆஃப்க்கும் என்ன சம்மந்தம்..” –


“வீட்ல எங்க ரெண்டு பேருக்கும் சின்ன சண்டை... அவங்க கோச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்காங்க.... அதான்..” –


“நினைச்சேன்... உன் மூஞ்சியப் பார்த்தாலே தெரியுதே... உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்... இப்படி எதுக்கெடுத்தாலும் அவங்ககிட்ட சண்டை போடாதேன்னு... கேட்கவே மாட்டியா... ரெண்டு குட்டீஸ் இருக்காங்க ப்பா... அதை யோசிக்க மாட்டியா... அவங்க முன்னாடி சண்ட போட்டீங்களா ரெண்டு பேரும்...” –


“ஹ்ம்ம்... ஏன்...? நான் அவங்களை ஒன்னும் சொல்லக்கூடாதா...? எனக்கு அந்த உரிமை இல்லையா..? கோவத்துல ஒரு வார்த்தை சொன்னா உடனே அம்மா வீட்டுக்கு கோச்சிக்கிட்டு போய்டுவாங்களா..? அதுவும் படிக்கிற பிள்ளைகளையும் இழுத்துக்கிட்டு, இது என்ன பழக்கம்... என்னைப்பத்தி யோசிக்க மாட்டாங்களா..? என முதலாம் நபர் பொறும...


“பர்ஸ்ட் நீ யோசிச்சியா.... நீ என்ன செஞ்சாலும் பொறுத்துட்டு இருப்பாங்களா... அவங்களுக்கு மனசு இல்லையா... குழந்தைங்க முன்னாடி சண்டை போட்டா, அதுங்க மனசு எப்படி பீல் பண்ணும், அதையெல்லாம் யோசிக்க மாட்டியா.... ஹ்ம்ப்ச் சரி விடு... இப்போ உன்னோட மாமியார் என்ன சொன்னாங்க...” என்று இரண்டாம் நபர் வினவ...


“ஹ்ம்ப்ச் என்ன சொன்னாங்க... அவங்க பிள்ளையத்தான் தப்பு சொன்னாங்க.... ஏதோ கோவத்துல பண்ணிருக்கும், பெரிய மனசு பண்ணி மறந்துடு.... அதுக்கிட்டயும் பேசிருக்கேன்.... இப்படி ஆ... ஊண்ணா அம்மா வீட்டுக்கு வர்றதை நிறுத்திக்கனும்.... எந்த பிரச்சினையா இருந்தாலும், அங்கயே இருந்து சமாளிக்கணும், அதுதான் நீ பிறந்த வீட்டுக்கு வாங்கி கொடுக்குற மரியாதை என்று எடுத்து சொல்லிருக்கேன்...”


“ நீயும் கொஞ்சம் பொறுத்துப்போகனும், ரெண்டு பிள்ளைங்க வந்த பிறகும் இப்படியே இருந்தா எப்படின்னு...’ புத்திமதி சொல்லிருக்காங்களாம்... அதோட இப்போ புள்ளைங்களுக்கு ஸ்கூல் லீவ் தானே, வர்ற ஞாயித்துக்கிழமை நானே கொண்டு வந்து விட்டுட்டு வர்றேன்னு சொன்னாங்க...” என தன் மாமியார் கூறியதை உள்ளே போன குரலில் முதலாம் நபர் கூற


“ஹ்ம்ம் உனக்கேத் தப்புன்னு தோணுது தானே... அவ்ளோ பெரிய மனுஷி சொல்ற அளவுக்கு நடந்துக்கிட்டீங்க ரெண்டு பேரும்.... இனி இப்படி நடந்துக்காதே... சரி நீ என்ன முடிவு எடுத்துருக்க... அவங்ககிட்ட போன் பண்ணி பேசுனியா....” - செகண்ட்


“ஹ்ம்ம் இல்லை.... அதான் சண்டே அத்தைக் கொண்டுவந்து விடுறேன்னு சொல்லிட்டாங்களே அப்புறம் என்ன..? நைட் வீட்டுக்குப் போயிட்டு பேசுறேன்.... நீ வா சாப்பிட்டு கிளம்புவோம்..” – பர்ஸ்ட்


“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது..” என்று இரண்டாம் நபர் பேசிக்கொண்டிருக்கும் போதே அவருக்கு போன் வர.... அதை எடுத்துப் பார்க்க, அதில் மை ஹப்பி என்றிருந்தது.... உடனே அதை சைலெண்டில் போட்டுவிட்டு.. வண்டியை ஸ்டார்ட் செய்ய இருவரும் கிளம்பினார்கள்.


அந்த மிகப்பெரிய ஹோட்டலின் உள்ளே அமர்ந்தவர்கள் வேண்டியவற்றை ஆர்டர் செய்து இருவரும் பொதுவான பிரச்சினைகளை மட்டுமே பேசிக் கொண்டு டின்னரை முடித்தனர். அப்போது மீண்டும் போன் அடிக்க....


“எடுத்து பேசு மச்சி... எதாவது அவசரமா இருக்கப் போகுது...” என முதலாம் நபர் கூற


“நம்ம கால் பண்ணும் போது, எனக்கென்னனு கால் அட்டென்ட் பண்றது இல்ல... அதான் கொஞ்சம் நேரம் அடிக்கட்டும்னு விட்டேன்..” என்று இரண்டாம நபர் பதில் கூறியவாறே போனை எடுத்துக் காதுக்கு கொடுத்து... “ம்ம் சொல்லு ஜீவா..”

“.............”


ஹ்ம்ம் ஆமாம் கால் பண்ணேன் எங்க போன..”

“.............”

“ஓ... சரி சரி...ஹ்ம்ம் ஓகே...”

“...........”


“இல்ல வெளிய சாப்பிட்டுட்டேன்... அதை சொல்லத்தான் கால் பண்ணேன்.... உனக்கு வாங்கிட்டு வரவா....”


“................”


“ஹ்ம்ம் அப்படியா...”


“............”


“அப்போ வேண்டாம்தானே... சரி..”


“.......”


“இல்ல... இங்க என் பிரண்ட் மீனா தெரியும்தான, அவ கூட தான் வந்தேன்... ஹ்ம்ம் அவங்க வீட்ல ஊருக்குப் போயிருக்காங்க.... மீதி நான் வந்து சொல்றேன்.... ஓகே பார்த்து இரு... பாய்...” என்று போனை அனைத்துவிட்டு பக்கத்தில் இருந்தவளைப் பார்க்க...


அவளோ ஏதோ யோசனையில் மூழ்கி இருப்பது தெரிந்தது. அவளை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு “மீனா பாப்பா தூங்கினாளாம், அதனால் போனை சைலேன்ட்ல போட்டுடானாம் ஜீவா.... ப்ரிட்ஜ்ல மாவு இருக்காம், அதே போதுமாம்... தோசை ஊத்திக்கிறானாம்... சரி இப்போ நீ சொல்லு, என்ன முடிவு பண்ணிருக்க...” என்றாள் மோனிகா..


“ஹ்ம்ம்,... சுந்தர் மேல தப்பில்ல.... நான் கொஞ்சம் பொறுமையா போயிருக்கலாம்... ஹ்ம்ப்ச் இனி அதைப் பேசி ஒன்னும் ஆகப்போறதில்ல... அவங்க இல்லாம வீட்டுக்குப் போகவே எரிச்சலா இருக்கு....” என்றாள் இதுவரை முதலாம் நபர் என்றழைக்கப்பட்ட மீனாட்சி @ மீனா.


தொடர்ந்து “அப்பா வேற போன் பண்ணி தங்கமா மாப்பிளைப் பார்த்தாலும், நீயெல்லாம் திருந்தாத ஜென்மம்னு திட்டிட்டு, நான் போய் மாப்பிள்ளையும் பிள்ளங்களையும் இங்கே கூட்டிட்டு வந்துடுறேன்... உனக்கு வேணும்னா இங்க வா அப்படின்னு சொல்லிட்டார்...” என்றாள் மீனா.


“பெத்தவங்க அப்படித்தான் பேசுவாங்க... நீ வொர்ரி பண்ணிக்காத... நைட் புல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா.... சுந்தரையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணு... உன்னைக் கல்யாணம் பண்ணத தவிர வேற என்ன தப்பு செஞ்சார்... ஹ்ம்ம் யோசி.... இப்போ கிளம்பலாம்.... டைமாச்சு...” என்று தோழியை சமதானப் படுத்தி அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் இதுவரை இரண்டாம் நபர் என்றழைக்கப்பட்ட மோனிகா.


வெளியே வந்தவர்கள் தத்தம் தன் வண்டியில் கிளம்பி அவரவர் வீட்டிற்கு கிளம்பினர். தனது ப்ளாட்டிற்கு வந்த மீனாவிற்கு வீட்டிற்குள் செல்லவே மனம் இல்லை..


காலிங் பெல்லை அடித்ததும் சிரித்த முகத்துடன் கதவைத் திறக்கும் சுந்தர் இன்று இல்லை... எத்தனை சோர்வாக வந்தாலும் அந்த ஒரு புன்னகையில், அணைத்து சோர்வும் பறந்து விடுவதாக அவளே எண்ணியிருக்கிறாள். வீட்டினுள் நுழைந்ததும் காலைக் கட்டிக்கொண்டு ஊஞ்சலாடும் இரு தேவதைகளும் அவளைப் பெரிதும் இம்சித்தனர்.


தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்திருந்தால் இந்தப் பிரிவிற்கு அவசியேமே ஏற்ப்பட்டிருக்காது... ஹ்ம்ம் இனி யோசித்து என்ன செய்ய.... காலம் கடந்த யோசனை... என்று எண்ணியவள்.... விடிந்ததும் முதல் வேலையாக ஊருக்குச் சென்று அவர்களைப் பார்த்து அழைத்து வரவேண்டும் என்ற எண்ணிக்கொண்டாள், வேண்டா வெறுப்பாய் சாவித் துவாரத்தில் சாவியை நுழைத்து திருக.... கதவு தன்னால் திறந்தது.


கதவு தன்னால் திறக்கவும் ஒருவித படபடப்பு வந்து ஒட்டிக்கொண்டது அவளுள். கதவு அதுவே திறக்கிறது என்றால், எதனால் என்பது அவளுக்கு புரியாமல் இல்லை... ஊருக்கு சென்றவர்கள் வந்துவிட்டார்கள் என்று யூகித்தவளின் மனம் நொடியில் பூத்து மனம் பரப்பியது.


அடுத்த நொடியே இரண்டு நாட்கள் அவனில்லாமல் அவள் பட்ட கஷ்டங்கள் கண்முன் நிழலாக உலா வர, மலர்ந்த முகம் பட்டென்று கோபத்தை பூசிக்கொண்டது.


கதவைத் திறந்து வைத்துக்கொண்டு முறைத்துப் பார்த்த சுந்தரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தபடியே உள்ளே நுழைந்தாள் மீனா... அந்தப் பார்வையைக் கொண்டுவர அவன் பட்ட சிரமம் அவளுக்குத்தான் தெரியும்... ஒரே பார்வையில் கணவனின் சோர்வு தெரிய, அவளைப் பிரிந்து அவன் ஒன்றும் சந்தோசமாய் இருக்கவில்லை என்று புரிந்து கொண்டவள், ரெப்ரெஷ் ஆகி அவன் முன்னே வந்து நின்றாள்.


அதுவரைக்கும் எதுவுமே பேசாமல் அமைதியாய் இருந்த சுந்தரைப் பார்க்க, அவளுக்கு சிரிப்பு வந்தது.... நாமாக பேசாமல் அவன் பேசமாட்டான் என்பது புரிய, மேலும் அவனை சீண்டி கோபத்தை ரசிக்க அவள் மனம் ஆசைப் பட்டது.


அதனால் “என் வீட்டை தாண்டி வெளிய போனவங்களுக்கு எல்லாம் இந்த வீட்ல இடம் கிடையாது... இஷ்டத்துக்கு போறது, இஷ்டத்துக்கு வாறது.... இப்படியெல்லாம் இருக்க முடியாது... யாரும் யாரையும் இங்க அழைக்கல...” என முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு மீனா பேச....


சுந்தரோ..... ‘அடிப்பாவி பொண்டாட்டி இவ்ளோ நேரம் அந்த வீணாப்போன வெங்காய பிரண்டுக்கிட்ட பிடில் வாசிச்சிட்டு வந்துட்டு, இப்போ ஏன் வந்தேனா கேட்குற....இருக்கு உனக்கு.... எல்லாத்துக்கும் இருக்கு.... அப்புறமா அத்தான்... பொத்தான்னு வருவியில்ல அப்போ இருக்கு...’. என்று திட்டிகொண்டான் மனதுக்குள்ளே தான் வெளியே பரிதாபமாய் ஒரு லுக்கு விட்டான்.


அவனது அந்த லுக்கை பார்த்தவள் ‘ஏற்கனவே நம்ம விட்ட வார்த்தையால தான் கோச்சுக்கிட்டு போனான்.... ஏதோ போனா போகுதுன்னு பெரிய மனசு பண்ணி அவனே திரும்பி வந்துட்டான்... இனியும் வாயை அடக்கல, அப்புறம் எங்கப்பா இந்த தன்காமான மாப்பிள்ளையை கூட்டிட்டு போய் வீட்ல வச்சிக்கிட்டு ஊரையே நாறடிக்கிற மாதிரி ஒரு பாஞ்சாயத்தைக் கூட்டி ஏழரையை இழுப்பாரு.... நமக்கெதுக்கு வம்பு... வந்தவரைக்கும் லாபம்....’ என்று மனதோடு பேசியவள் சமதான கொடியை பறக்க விடும் பொருட்டு....


“வீட்ல ஒண்ணுமே இருந்திருக்காதே.... சாப்டாச்சா இல்லையா..” – மீனா


“என்னமோ டெய்லி இவதான் போய் கிட்சன்ல உழுது தள்ளுற மாதிரி, வீட்ல ஒண்ணுமே இல்லையாம்... இதெல்லாம் எங்க திருந்த போகுது, உனக்கு கடைசி வரைக்கும் இந்த கிட்சன் தான் சுந்தர்..’ என்று மீண்டும் மனதுக்குள்ளே திட்டியவன், வெளியே ஹ்ம்ம் எனும் விதமாய் தலையாட்ட....


‘ஓ அப்போ சரி.... நாளைக்கு மீட்டிங் இருக்கு.... நான் தூங்குறேன்...” என்று கணவனின் அதிர்ந்த முகம் பார்வை வட்டத்தில் விழுந்தாலும் ஒரு நமட்டு சிரிப்புடன் படுக்கை அறைக்குள் நுழைந்தாள் மீனா.


‘ச்சை.... போகுது பாரு மண்ணு மாதிரி... இதுக்காக வீட்ல அம்மா கூட சண்ட போட்டு வந்துருக்கேனே... தனியா வந்திருக்கானே ... என்ன ஏதுன்னு விவரம் கூட கேட்காம எப்படி போகுது... இதெல்லாம் நல்லா சுத்தல்ல விட்டுருக்கனும்டா சுந்தர்... பாவமே நம்ம பொண்டாட்டி...”


“ஏதோ கோவத்துல திட்டிட்டா... மன்னிசிடலாம்னு பார்த்தா.... இவ்ளோ பண்றா.... ம்ஹூம்... நாளைக்கே பெட்டியைக் கட்டிட வேண்டியதுதான். இவளை நல்லா அந்த மாமனாருக்கிட்ட அடி வாங்கி கொடுத்தாதான் அடங்குவா...” என அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தன் போக்கில் பொருமியவனின் இதழ்களை ஒரு மென்கரம் மூட அதில் திகைத்து விழித்தவன், மனைவியை சற்றும் எதிர்பார்க்காமல் திணற....


அவளோ.... “வாங்கத்தான் வந்து படுங்க... தூக்கம் வருது” எனவும்...


“உனக்குத்தான் என்னைப் பிடிக்கலயில்ல... நீதானே என்னை பட்டிக்காட்டான், சமைக்க மட்டும் தான் தெரியும்னு சொன்ன....” என அவன் முறுக்கிக்கொள்ள


“அச்சோ அத்தான்... அது சும்மா லுல்லாயிக்கு... நான் எத்தனை தடவை சொல்லிருக்கேன்... இதுக்கு போய் கோச்சுட்டீங்களா... உங்களை ரொம்ப ஹர்ட்
பண்ணிடுச்சா.. ஐம் வெரி சாரி அத்தான்...”


“சாரிக் கேட்டா சரியா போகுமா....”


“ம்ப்ச் அத்தான் ரியல்லி வெரி சாரி, இனி இப்படி பேசுறதை கம்மி பண்ணிக்குறேன்... அதுவும் குழந்தைங்க ,முன்னாடி கண்டிப்பா அவாய்ட் பண்ணிடுறேன் போதுமா.... ப்ளீஸ் சிரிங்க.... கொஞ்சம் சிரிங்க பார்ப்போம்... என்று கூறியவள் அவனின் கையை பிடித்துக் கொண்டாள்...


அவளின் கைகளை விலக்கி விட்டவன் அமைதியாக அவர்களின் அறைக்கு சென்றான்... சென்ற அவனை பின் தொடர்ந்து சென்ற மீனா, “இன்னும் கோபம் போகலியா உங்களுக்கு.. நான் தான் சாரி கேட்டேன்ல இன்னும் என்ன செய்யனும் உங்களுக்கு.” என்ற படி அவனின் முன் சென்று நின்றாள்...


அவளை பார்த்தவன் மெதுவாய் அதே சமயம் திடமாய் வந்தது அவனின் கேள்வி, “உனக்கு அப்படி என்ன ஒரு கோபம்... யார் முன்னாடி என்ன பேசுறோம்னு கூட தெரியமா பேசிட்டு,இப்போ வந்து சாரி சொன்னா எல்லாம் முடிஞ்சு போச்சா? குழந்தைகள் முன்னாடி நீ பேசினது இல்லன்னு ஆகிடுமா?


குழந்தைங்களுக்கு முன் உதாரணமா நாம் இருக்க வேண்டாமா? நான் பட்டிக்காட்டான் தான் படிக்காதவன் தான் ஆனா குழந்தைங்க முன்னாடி நீ இதை சொன்னா அவங்க மனசுல அது பதியாதா? இப்படி பேசினா நாளைக்கு குழந்தைங்க எப்படி என்னை மதிப்பாங்கனு யோசனை இருக்கா உனக்கு?


என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சு தானே கல்யாணம் செஞ்ச, இப்போ இப்படி பேசினா என்ன அர்த்தம் மீனா? நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் என்னை எப்படி காயப்படுத்தும்னு உனக்கு தெரியுமா? எனக்குனு ஒரு மனசு இருக்குன்னு என்னைக்காவது யோசிச்சு பார்த்து இருக்கியா நீ? எப்பொவும் நீ சொல்றது தான் கேக்கனும்.. நீ சொல்லற படி தான் நடக்கனும் நானும் அப்படி தான் இருந்தேன்... ஆனா இப்போ நீ சுய மரியாதை மேல கை வச்சா அதையும் நான் பொறுத்து போகனுமா?


இந்த மாதிரி நான் உனக்கு செஞ்சா நீ என்ன செய்வ சொல்லு மீனா... ஏன் அமைதியா இருக்க பதில் சொல்லு பதில் சொல்லு..” என்று கத்தியவனை,


“ஏங்க... ஏங்க என்னாச்சு உங்களுக்கு என்னங்க உங்களைத் தான்..” என்றபடியே தன்
கணவனை தட்டி எழுப்பி விட்டுக் கொண்டிருந்தாள் மீனா...


அவளின் சத்ததில் அடித்து பிடித்து எழுந்தவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. சிறு நொடிகளில் தன்னிலை அடைந்தவன் தான் கண்டது அனைத்தும் கனவு என்று தெரிந்தவன் பதட்டத்தோடு தன் முன்னே நிற்கும் மனைவி பார்த்து ஒன்னும் இல்லை மீனா ஒரு கனவு அவ்ளோ தான் பதட்டப்படாதே என்றான்...


கணவனை பார்த்து இன்னைக்கு ஏதோ முக்கியமான மீட்டிங்க் இருக்கு சீக்கிரம் ஆபிஸ் போகனும்னு சொன்னீங்க அத்தான் நேரமாச்சு குளிக்க போங்க... டிபன் எல்லாம் ரெடியா இருக்கு என்ற படியே குழந்தைகளை கவனிக்க சென்றாள்... சென்றவளை கொஞ்ச நேரம் பார்த்த படி எழுந்தவனின் காலில் தட்டுப்பட்டது சுருட்டி எறியப்பட்ட் ஒரு காகிதம் அதை எடுத்து படித்தவனின் முகம் என்னவென்று சொல்ல முடியாத பாவனையை காட்ட, தன் மனைவியின் கையெழுத்தில் உள்ள அந்த கவிதை மனைவியின் மனநிலையை சுட்டியது....


உனக்காக பிடித்த அனைத்தும் விட்டு
கொடுத்தேன்....
என் தனித்துவதை சுயத்தை விட்டு
கொடுக்க சொல்கிறாய்...
விட்டு கொடுக்க காதல் மனம் விரும்புகிறது
ஆனால் தன்மானம் அதை தடுக்கிறது....
காதல் கொண்ட நெஞ்சமா இல்லை
சுயமரியாதையா இதற்கு
இடையில் தவிக்கிறது என் மனம்!!!!


அதை படித்தவனின் மனம் வேதனையைக் காட்டியது... இத்தனை நாளாக அவளின் மனதை பற்றி கவலை கொள்ளாமல் இருந்தவன் இனியும் இப்படி இருக்க கூடாது என்று உடம்பின் அழுக்கோடு மனதின் அழுக்கையும் சுத்தம் செய்ய குளிக்க சென்றான்....


------ சுபம் -----
 
Top