அதைத்தான் வைஷு நானும் சொல்லறேன். இவங்களோட ஒரு தலைப்பட்ச நியாயத்தை பார்த்து பார்த்து தான் இளைய தலைமுறைக்கு இதுல இருந்து தப்பிக்கணும்ன்னு தோணுது. அப்படி ஒரு அழுத்தத்துல அவங்க தேடற வழி வேற புது design- ல பிரச்னையை கொடுக்குது, இயற்கையோட நியதிகளையே ஆட்டம் காண வைக்குது.நீங்க சொன்னது போல நடந்தா இயற்கை கொஞ்சம் தடுமாறி போக வாய்ப்பு இருக்கு மச்சீ.
எப்பவுமே நியாயங்கள் ஒரு பக்கமாவே தான் வேலை செய்யும். அதுவும் இருக்கப்பட்டவனுக்கு கொண்டாற மாதிரியும் இல்லாத பட்டவனுக்கு வேற மாதிரியும் தான் செய்யும்.
இப்படிப்பட்ட அபாயகரமான மாற்றங்களை முளையிலையே அழிக்கணும்னா அதற்கு existing system எங்க weak-கா இருக்குன்னு பார்த்து சரி பண்ணனும். அந்த பொறுப்பு யாருக்கு? அதுவும் பெண்ணைப் பெத்தவங்களையும் பெண்களையும் சேர்ந்ததா?