Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் விமர்சனம்.

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 078 ன் மௌனத்தின் மறுபக்கம் எனது பார்வையில். ஷ்யாம் மற்றும் அனாமிகா அருகருகே வீடுகள் அமைந்து நட்பாக இருக்கும் குடும்பங்களின் வாரிசுகள். ஷ்யாம் அனுவை விரும்பி பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணமாக நடத்திக் கொள்கிறான். ஷ்யாமின் காதலை உணர்ந்த அனுவிற்கும் அன்பான வாழ்க்கையின் பலனாக இரட்டைப் பெண் குழந்தைகள். மென்பொறியியல் துறையில் அதிகாரியாக பணியாற்றும் ஷ்யாம் அனுவின் விருப்பமான ஆடை வடிவமைப்பு துறையில் ஈடுபட ஆதரவளிக்கிறான். அனுவின் கனவு மற்றும் ஆதர்ச நாயகன் நிகில் மல்ஹோத்ராவின் நிறுவனத்தில் பணியில் சேரும் அனு நிகிலின் நன்மதிப்பைப் பெற்று தலைமை ஆடை வடிவமைப்பாளர் பணிக்கு முன்னேறுகிறாள். ஆதர்ச நாயகன் மீது எப்பொழுதும் ஒரு சிறு மயக்கம் இருக்கும். அவர்களின் புகழுரையும் அவர்களுக்கும் ஒரு மயக்கமும் ஈடுபாடு இருக்கிறது என்றால் அறியாமல் ஒரு கர்வமும் இவ்வளவு பெரிய ஆளுக்கு நம் மீது மயக்கமா என்ற எண்ணமும் தோன்றி அவளை தடுமாற செய்து தன் உறவுகளின் நினைவு வராமல் சுயநலத்துடன் நிகில் உடனான தவறான உறவுக்கு அழைத்துச் செல்கிறது. அன்பான காதலின் ஷ்யாமிற்கு அவள் துரோகம் செய்வது அவளின் மனதிற்கு ஒப்பாமல் இருப்பதும் இந்த உறவை தப்பு என்று உணராமல் யதார்த்தமாக கொண்டு செல்ல நினைக்கும் நிகிலுடனான உறவை கட்டுப்படுத்த நினைக்கும் மனதிற்கும் இடையில் ஊசலாடும் அவளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அவளை சிறு வயதில் இருந்தே பார்த்து வரும் ஷ்யாம் அவளின் மாற்றம் குறித்து ஆராய்வதால் உண்மையை அறிந்து கொள்கிறான். இருவரும் மனநல மருத்துவரை அணுகி அதிலிருந்து மீள முயற்சி செய்கிறார்கள். ஷ்யாம் என்னிடம் அவள் வாழ நினைத்தால் அவளுக்கு கண்டிப்பாக சந்தர்ப்பம் தந்து வாழ்க்கையை மீட்பேன் என்பதும் உண்மையை தெரிந்துக் கொண்ட பிறகு அவளுடன் அவளை பற்றி பேசுவதும் நன்றாக இருக்கிறது. நிகில் குடும்பம் பாவம்தான். இது வரை அதிகம் தவறு செய்த ஆண்கள் அதை கையாளும் பெண்கள் பற்றிய கதைகள் அதிகம் வந்திருந்தாலும் தப்பு செய்த பெண்களின் நிலை மற்றும் அதை ஆண்கள் எப்படி ஏற்கிறார்கள் வந்துள்ள கதைகள் சில. அவற்றுள் இந்தக் கதையும் ஒன்று. இந்தக் கதையில் ஒரு ஆணின் பார்வையில் தந்திருப்பதற்கு பாராட்டுகள். அதிகம் எடுக்கத் தயங்கும் கதைக் களத்தை எடுத்து நேர்த்தியாக தங்கு தடையின்றி கொண்டு சென்று நிறைவு செய்த எழுத்தாளருக்கு பாராட்டுகள். வாழ்த்துகள் .
 
விமர்சனத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி ?
 
வழக்கம்போல உங்கள் விமர்சனங்களை படித்த பின் தான், எந்த கதை படிக்கலாம் என்று தேர்ந்தெடுக்கிறேன் சித்ரா மா??
நன்றி
 
Top