Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 11

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---11

தாமரை தன் அருகில் இருக்க ஆதித்யா ஒவ்வொரு பருக்கையும் வாயில் இடும் போதும் ரசித்து ருசித்து உண்டான். எவ்வளவு நிதனமாக உணவு உண்ட போதும் சாப்பிட்டு முடித்து விட்டால் எழ தானே வேண்டும்.

சாப்பிட்டு முடித்த ஆதித்யா சாப்பாட்டு அறையில் இருந்து ஹாலுக்கு வந்தவன் சத்யா பக்கத்தில் அமர. சத்யா தன் பக்கத்தில் ஆதித்யா வந்து அமர்ந்ததை கூட பார்க்காது வசந்தியை ஏன் இவள் இப்படி பார்க்கிறாள் என்று அப்போதும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

சத்யாவை பார்த்த ஆதித்யா அவன் பார்வை போகும் இடத்தை பார்த்து “என்ன சத்யா ஏன் வசந்தியை அப்படி முறைச்சி பார்த்துட்டு இருக்க….?என்று வினவ.

அப்போது தான் ஆதித்யாவை பார்த்த சத்யா “ என்ன தலைவரே அதுக்குள்ளே சாப்பிட்டிங்களா…..?” என்று அப்போது தான் ஹாலுக்கு வந்த தாமரையைய் பார்த்து கேட்க.

“என் கதை விடு . நீ ஏன் இப்போ வசந்தியை அப்படி பார்த்துட்டு இருந்த….” என்று ஆதித்யா சந்தேகத்துடன் கேட்க.

“அய்யோ தலைவா நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை. அந்த பொண்ணு என்னை முறைச்சி முறைச்சி பார்த்துட்டு இருந்தது. அது தான் ஏன் அப்படி என்னை பார்க்குறா என்று நான் பார்த்தேன்.”

“என்ன உன்னை முறைச்சி பார்த்தாளா….?” அப்போதும் ஒரு மார்க்கமாக ஆதித்யா கேட்க.

“தலைவா பார்த்தானா ...அது நீங்க நினைப்பது போல இல்லை. இது வந்து எப்படி சொல்வது.” என்று யோசித்தவன்.

‘ஆ குற்றம் சாட்டனா மாதிரி பார்த்தா தலைவா….”

“பரவாயில்லை சத்யா பெண்களின் பார்வை எல்லாம் கரைக்ட்டா கண்டு பிடிக்கிற.ஆமாம் உன்னை ஏன் அவள் குற்றம் சாட்டனும்.”

“அது தான் தலைவா எனக்கு விளங்க மாட்டேங்குது. சரி இதை விடுங்க அண்ணி என்ன சொன்னாங்க.”

பேச்சி தாமரை பக்கம் சென்றதும் ஆதித்யாவின் முகம் மென்மையாக மாறியது. “ஒன்றும் பேசலைடா….ஆனால் அவள் பக்கத்தில் இருந்து சாப்பாடு போட்டது என் அம்மாவே போட்டது போல இருந்ததுடா….” என்று உணர்ச்சி மிகுந்து சொன்ன ஆதித்யா.

பேச்சி சத்யாவிடம் இருந்தாலும் பார்வை வசந்தி பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த தாமரை மீதே இருந்தது.அவளை பார்க்க பார்க்க என்ன செய்தாவது அவள் என்னுடனே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

பின் கட்சி ஆபிசில் இருந்து போன் வர வசந்தியிடம் “பத்திரமாக பார்த்துக் கொள்.” என்று சொன்னவன்.தாமரையிடம் ஒரு தலை அசைப்போடு விடைப் பெற. அதற்க்கு தாமரையின் தலையும் தன்னால் அசைந்து விடை கொடுத்தது.

இது வரை இல்லாத மனநிறைவோடு ஆதித்யா அன்று விடை பெற்றான். ஆதித்யா இது வரை தாமரையிடம் அதிகம் பேசியது எல்லாம் கிடையாது. வள்ளியம்மா இருக்கும் போது ஒன்று இரண்டு வார்த்தை தான் பேசி இருக்கிறான். அதுவும் வள்ளியம்மாவின் உடல் நிலையைய் விசாரிப்பது தான்.

வள்ளியம்மா இறந்த பிறகு தாமரை தன்னையே மறந்து இருந்தவள் ஆதித்யாவிடம் மட்டும் என்ன பேசி இருக்க போகிறாள். ஆதித்யா தான் தாமரையின் அறைக்கு சென்று அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்த்து சாப்பிட்டாயா...என்று கேட்டு விட்டு உடனே வந்து விடுவான்.

அப்படி இருந்த நிலை மாறி இப்போது தாமரை சாப்பாடு பரிமாறியது இல்லாமல் தனக்கு விடை கொடுத்தது என்றும் இல்லாத மகிழ்ச்சியோடு அன்று கட்சி ஆபிசுக்கு காரை செலுத்தினான்.

எப்போதும் சத்யா தான் காரை ஓட்டுவான். அன்று ஆதித்யா டிரைவிங் சீட்டில் அமர்ந்துக் கொண்டு விடலை பையன் மாதிரி சீட்டி அடித்துக் கொண்டே காரை ஓட்டியவன். தன்னையே பார்த்துக் கொன்டு இருந்த சத்யாவை பார்த்து.

“என்ன சத்யா என்னை புதுசா பாக்குற மாதிரி பாக்குற.”

“ஆமாம் தலைவா புதுசா தான் பார்க்குறேன். பன்னிரெண்டு வருடமா நான் உங்க கூடவே இருக்கேன். இந்த அளவு மகிழ்ச்சியை நான் உங்க முகத்திலே பார்த்ததே இல்லை தலைவா….ஏன் நீங்க எம்.எல்.ஏவா ஜெயிச்சிங்களே அப்போ கூட உங்க முகத்திலே நான் இந்த அளவுக்கு சந்தோஷத்தை பார்க்க முடியலே தலைவா…

அந்த பொண்ணால உங்களுக்கு இவ்வளவு சந்தோஷத்தை கொடுக்க முடியுதுன்னா...ஏது செய்தாவது அந்த பெண்ணை நான் உங்களுடனே இருக்க வைப்பேன் தலைவா….” என்ற சத்யாவின் பேச்சில் அவன் தோளை தட்டிய ஆதித்யா.

“நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலைடா….” என்று தோழமையுடன் பார்த்து சிரித்தான். இவர்களின் கூட்டு ஒரு சின்ன பெண்ணின் வாழ்க்கையை கூறு போட போகிறது என்று அவர்களுக்கு புரியுமா...?புரியாதா…?.

ஆதித்யா சென்றவுடன் தாமரை வசந்தியிடன் “நான் இன்று ஆதித்யா சாரிடம் ஏதாவது ஹாஸ்ட்டல் பார்த்து கொடுங்க என்று கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் சத்யா எது என்றாலும் நாளை பேசலாம் என்று சொல்லி விட்டார்.”

என்று சொன்னவளை பார்த்து வசந்திக்கு பாவமாக தான் இருந்தது. அடி பாவி இந்த வீடு உனக்கு ஒரு வழி பாதை தான். இனி இதை விட்டு நீயே நினைத்தாலும் போக முடியாது.போக விட மாட்டார்கள். இது தெரியும் போது நீ எப்படி தாங்கிக் கொள்வாய்.

என்னால் முடிந்தது உன் கூடவே இருக்க முயற்ச்சி செய்கிறேன். ஆம் முயற்ச்சி மட்டும் தான் செய்ய முடியும். அவர்கள் வட்டத்துக்குள் செல்ல நான் தடையாக இருந்தால் கண்டிப்பாக என்னை அகற்ற தான் பார்ப்பார்கள்.

இந்த வேலையை விட்டு அனுப்பி விடுவார்கள். என்று நினைத்துக் கொண்டவள் தாமரையைய் பார்த்து “அந்த சத்யா தலைவர் கிட்ட சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டாமா…? அது தான் நாளை பேசலாம் என்று கூறி இருக்கிறார்.” என்று சொன்னவளின் பேச்சி புரியாது.

“என்ன சொல்லி ...என்ன பேசுறது.” என்று கேட்டவளை பார்த்து.

“அது நாளை உனக்கு புரியும் தாமரை.” என்று சொன்னவள்.

“ ஆனால் எது என்றாலும் தைரியமாக இருக்க வேண்டும்.” என்று சொல்லி செல்பவளை பார்த்துக் கொண்டே ஆமாம் இனி நான் தனியாக இருப்பதற்க்கு எனக்கு தைரியம் தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் பாவம் அவளுக்கு தான் இனி தனியாக இருக்க போவது இல்லை என்றும் அப்படி இருக்க ஆதித்யா விட மாட்டான் என்றும் தெரியாது. எப்படி இருந்தாலும் நாம் ஹாஸ்ட்டலுக்கு தானே செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு துணிகளை தன் பெட்டியில் அடுக்க ஆராம்பித்து விட்டாள்.

கட்சி ஆபிசில் இருந்து வீட்டுக்கு வந்த ஆதித்யாவும் ,சத்யாவும் புதியதாக அமர்த்திய சமையல்காரர் அய்யாவின் கையில் உணவை உட்கொண்டு அறைக்கு வந்ததும் எப்போதும் எடுத்து வைக்கும் சரக்கை எடுத்து வைக்காமல் தன்னை பார்த்துக் கொண்டு இருந்த சத்யாவை பார்த்து.

“என்ன சத்யா நம்ம அயிட்டத்தை எடுக்கலே….”

“அது அப்புறம் பார்க்கலாம் முதலில் நாம் அண்ணியைய் பத்தி ஒரு முடிவுக்கு வரலாம் தலைவா….” என்றதற்க்கு ஒன்றும் பேசாது சத்யாவையே பார்த்த ஆதித்யாவை பார்த்து “என்ன தலைவா ஒன்றும் சொல்ல மாட்டேங்கிறிங்க.” என்றதற்க்கு.

“இல்லே முதலில் இருந்தே நீ ஏதோ முடிவோட தான் காய் நகர்த்துறேன்னு தெரியுது. அது என்ன என்று நீயே சொல்லுவே என்று பேசாம இருக்கேன்.”

அதற்க்கு சத்யா சுத்தி வளைக்காமல் “நான் எது செய்தாலும் அது உங்க நல்லதுக்கு தான் செய்வேன் என்று என் மீது நம்பிக்கை இருக்கு தானே தலைவா….?” என்ற கேள்விக்கு.

“இது என்ன பேச்சி சத்யா.நான் உன்னை தம்பி மாதிரி என்பது பேச்சிக்கு என்று நினைத்தாயா….அது என் மனமார சொன்னதுடா...இனி இது மாதிரி பேசாதே….” என்று அவனிடம் கோபிக்க.

அந்த கோபத்தில் உள்ள அன்பில் நெகிழ்ந்தவனாய் ஆதித்யாவை கட்டிக் கொண்ட சத்யா. பின் அவனை விடுவித்து “அப்போ நாளைக்கு தாமரை கிட்ட போய் நான் சொன்னதை சொல்லனும்.”

“என்ன என்று”

“உன் பாட்டி உன்னை எனக்கு கல்யாணம் செய்ய விரும்புனாங்க.” என்று சத்யா சொல்லி முடிப்பதற்குள்.

“ ஏன்டா நீ தெரிஞ்சி தான் பேசிறியா….அவள் கழுத்தில் நான் தாலி கட்டிய உடன் என் பதவியை நான் மறந்துட வேண்டியது தான்.”

“அது தான் தலைவா நான் சொல்றேன் தாலி கட்டினால் தானே….”

இப்போது ஆதித்யாவுக்கு புரிவது போல் இருந்தது. யோசனையுடன் “நீ என்ன சொல்ல வற்ற”

“நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சிடுச்சி தலைவா….திரும்ப திரும்ப என்னை சொல்ல வைக்காதீங்க.”

அது தான்டா நான் சொல்றேன். என் கிட்ட சொல்லவே வெக்கப்படுற ஒரு விஷயத்தை நான் எப்படிடா தாமரையிடம் சொல்வேன். இந்த பதவியால் தான் நான் அவளை கல்யாணம் பண்ண யோசிக்கிறேன். இல்லேன்னா நான் வள்ளியம்மாவிடமே உங்கள் பேத்தியை எனக்கு கல்யாணம் செய்து கொடுங்க என்று கேட்டு இருப்பேன்.வள்ளியம்மாவுக்கும் தன் பேத்தி கல்யாணம் பார்க்கனும் என்று தான் ஆசை.அவர்களின் ஆசையையும் நிறைவேத்தி இருப்பேன்.

ஆனால் ஒன்றுடா தாமரயைய் பார்ப்பதற்க்கு முன்னே யாராவது இந்த பதவியை நான் வெறுப்பேன் என்று சொல்லி இருந்தா….நான் அவங்களை பைத்தியம் என்று தான் நினைத்திருப்பேன்.” என்று சொல்லி முடித்து என்ன செய்வது என்று தடுமாறி நின்றிருந்த ஆதித்யாவின் தோள் மீது கைய் வைத்த சத்யா.

“அப்போ பதவியை ராஜனாம செய்துட்டு தாமரையைய் கல்யாணம் செய்துக்கோ தலைவா….”

“என்னால் முடியாது.” ஒரு நொடி கூட யோசிக்காது சத்யாவின் கண்ணை பார்த்து சொன்னான்.

“அப்போ நாளை தாமரை நான் அந்த வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்லும் போது அவங்களை வழி அனுப்பி வைச்சிடுங்க.” என்று சொல்பவனை வேதனையுடன் பார்த்தான்.

“முடியாது இல்லே தலைவா...நாளை கண்டிப்பா அண்ணி அதை பத்தி தான் பேச போறாங்க.”

தான் என்ன தான் செய்வது என்று ஆதித்யா தலை மீது கைய் வைத்து அமர்ந்து விட்டான். தாமரையை வெளியில் அனுப்புவது என்பது அவனால் முடியவே முடியாது என்ன செய்வது என்று அவன் யோசித்து கொண்டு இருக்கும் போதே சத்யா.

“இன்னும் ஒன்னும் சொல்றேன் தலைவா. நீங்க தாமரையைய் கல்யாணம் செய்துக்க வில்லை என்றால்.வேறு யாரையும் செய்துக்க மாட்டிங்க.ஏன்ன நீங்க தாமரையை விரும்புறிங்க.

ஆனால் தாமரை அப்படி இல்லை. அதாவது தாமரை உங்களை விரும்பவில்லை. இன்னும் சொல்ல போனால் நீங்க விரும்புவது கூட அவங்களுக்கு தெரியாது.அப்படி இருக்கும் போது அவங்க வெளியில் போனால் யாராவது அவங்களை விரும்பலாம். அதை தாமரை ஒத்துக் கொள்ளலாம்.

இல்லை தாமரையே கூட யாராவது ஒரு பையனை விரும்பலாம். சொல்ல முடியாது அது அந்த டாக்டர் பையனா கூட இருக்கலாம்.நீங்க எதுக்கும் கையில் அட்சதைய ரெடியா வைச்சிக்குங்க ஆசிர்வாதம் செய்வதற்க்கு.” என்றதும் தான்.

உட்கார்ந்து இருந்த ஆதித்யா கோபத்துடன் எழுந்து சத்யாவின் காலரை பிடித்துக் கொண்டு “என்னை என்ன எதுக்கும் வக்கு இல்லாதவன் என்று நினைச்சியா….நான் விரும்புன பொண்ணை இன்னொருத்தனுக்கு தாரை வார்த்து கொடுத்துட்டு விரல் சூப்பிட்டு இருக்க ஆதித்யாடா ஆதித்ய நாரயணன்.” என்று சொல்பவனை ஒரு புன் சிரிப்புடன் பார்த்திருந்தான்.

அப்போது கோபத்தில் தான் சத்யாவின் சட்டையை பிடித்துக் கொண்டு இருப்பதை உணர்ந்தவன் அவன் சட்டையைய் விடுவித்து தான் பிடித்ததால் ஏற்பட்ட சுருக்கத்தை சரி செய்துக் கொண்டே “சாரிடா “ என்று சொன்னவன்.

பின் “இருந்தாலும் நீ அப்படி பேசி இருக்க கூடாது.” என்பவனை அப்போதும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டே “நீங்க கோபப்பட்டாலும் நான் நடப்பதை தான் சொன்னேன் தலைவா….

நாம் தான் தலைவா கட்சி ,கொடி என்று இத்தனை வயசு வரை ஒரு பெண்ணை பத்தி நினைக்காம காலத்தை தள்ளி விட்டோம். வெளியில் போய் பாருங்க. மீசையே மொளைச்சி இருக்காது அவனுக்கு இருக்கும் ஒரு கேள் பிரண்ட்.

நான் வெளிபடையாவே பேசிடறேன் தலைவா….வள்ளியம்மா ஏன் தாமரையை பொத்தி பொத்தி வளத்தாங்க. அவங்க அழகா இருப்பதால் தானே….

இப்போது பசங்க அட்டு பிகரை கூட விட்டு வைக்க மாட்டேங்கிறாங்க. அப்படி இருக்கும் போது தாமரை மாதிரி இருக்கும் பொண்ணை எங்காவது விட்டு வைப்பாங்களா….கண்டிப்பா தாமரையை பார்த்தா காதல் சொல்ல தான் தோன்றும்.

ஏன் அந்த டாக்டர் பையனையே எடுத்துக்குங்க. அவன் தாமரை பின்னாடி சுத்தினதை நீங்களும் பார்த்திங்க தானே….பார்க்க வேறு நல்லா இருக்கான். நம்மளை மாதிரி வெள்ளை வேஸ்ட்டி வெள்ளை சட்டையா போடுறான்.

கலர் கலரா ஜீன், டீ சர்ட் என்று கலக்குறான். அந்த வெள்ளை கோட்டை கையில் வைச்சிகுறது கூட ஒரு ஸ்டைலா தான் தலைவா இருக்கு. எந்த பொண்ணும் அவன் ப்ரபோஸ் பண்ணா ஏத்துக்க தான் தோணும். இப்போ தாமரை வெளியில் போனாங்கன்னா….கண்டிப்பா அவன் தாமரையிடம் காதலை சொல்லுவான்.அதில் எந்த வித சந்தேகமும் தேவையில்லை.

இப்போ தான் தாமரை தன் ஒரே ஆதரவான பாட்டியைய் இழந்து இருக்காங்க.தனக்கு என்று யாரும் இல்லை என்று நினைக்கும் இந்த நேரத்தில் எல்லா தகுதியும் உடைய ஒரு ஆண் மகன் தன் காதலை சொன்னா கண்டிப்பா ஏதுக்கா தான் தோணும்.அவன் தாமரை கூட பேசுவதையே உங்களால் தாங்க முடியலே.

இருக்கும் இடத்தை மறந்து சண்டை போட்டிங்க. அப்படி இருக்கும் போது அவங்க கல்யாணம் செய்யும் சூழ்நிலை வந்தால் உங்களால் தாங்க முடியுமா….?”

“முடியாது கண்டிப்பா முடியாது. அந்த டாக்டர் என்ன வேறு யார் அவள் பக்கத்தில் நின்றால் கூட நான் பொறுத்துக்க மாட்டேன்.” என்று ஆவேசத்துடன் கூறினான்.

“அதான் தலைவா ...நானும் யோசித்து யோசித்து பார்த்தேன். இதை தவிர வேறு ஒன்றும் எனக்கு தோனலை.” என்று கட்சி மீட்டிங்கில் பக்கம் பக்கமாக பேசுவது போல் பேசிய சத்யா.

ஆதித்யா யோசிப்பதை பார்த்து விட்டு இனி தன்னால் அவரே ஒரு முடிவுக்கு வருவார் என்று நினைத்து தான் எப்போதும் செய்யும் சேவையை செய்ய ஆராம்பித்தான்.அது தாங்க சரக்கு கலக்கி கொடுப்பது.

அவன் கொடுக்க கொடுக்க வாயில் ஒரே முழுங்காக முழுங்கி கொண்டே ஆதித்யா ஒரு முடிவுக்கு வந்தான்.

எந்த காரணத்துக்காகவும் தாமரையை இழக்க மாட்டேன். அதே மாதிரி தாமரைக்காவும் என்றாலும் இந்த பதவியை துறக்க மாட்டேன். அதற்க்கு ஒரே வழி சத்யா சொன்னது தான் என்று முடிவு செய்தவனாய்.

நாளை தாமரையிடன் எப்படி பேச வேண்டும் என்று மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டே தூங்கி போனான்.
 
???

அடேய் கடங்காரா..... நல்லா ஏத்தி விடுறா....... தண்ணியையும் சேர்த்து......

தாமரை எப்படி இதை எதிர்கொள்வாள்???
பிடித்த பெண்ணை விட ஜாதி அதனால் வரும் பதவி.......
சே போங்கடா......
 
Last edited:
Top