Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 14

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---14

சத்யாவின் பேச்சை கேட்ட தாமரை பயத்தில் மூலையில் இருந்தவள் அவன் அருகில் வந்து தோளை பிடித்து “என்ன சொன்ன …? என்ன சொன்ன….? ஆயாவின் ஆசையா….?”

“ஆமாம் அண்ணி உங்க ஆயாவின் ஆசை தான்.”

“சீ உங்க கீழ்த்தரமான எண்ணத்தை …..என் ஆயாவின் ஆசை என்று சொல்லி…. போன அவங்களை அசிங்கப்படுத்தாதீங்க.”

“அண்ணி நான் சொல்றதை பொறுமையா….கேளுங்க.”

“தோ பார் என்னை அண்ணின்னு சொல்லாதே…..எனக்கு அதை கேட்கவே அருவெறுப்பா இருக்கு.”

இவ்வளவு நேரமும் தன் கோபத்தை கட்டு படுத்திக் கொண்டு இருந்த ஆதித்யா.அவளின் அண்ணி என்ற வார்த்தை அருவெறுப்பு கொடுக்கிறது என்று சொல்ல கேட்டதும் கோபத்துடன் அவள் கையைய் பற்றி தன் புரம் திருப்பியவன் “என்னடி அருவெறுப்பா இருக்கு. என்ன அருவெறுப்பா இருக்கு.” என்ற அவனின் டீ என்ற வார்த்தையும் அவன் கைய் பற்றுதலில் உள்ள அழுத்தமும் உள்ளுக்குள் பயத்தை ஏற்படுத்தினாலும் அதை முகத்தில் காட்டாது.

“ஆமாம் அருவெறுப்பு தான். அண்ணி என்பது மிக புனிதமான வார்த்தை. அந்த வார்த்தை உங்கள் போல் உள்ளவர்களின் வாயில் இருந்து கேட்பதுக்கு அருவெறுப்பாக தான் இருக்கு. அதுவும் நீ என்னிடம் எதிர் பார்க்கும் உறவுக்கும் அந்த வார்த்தைக்கு சம்மந்தமே இல்லை.”

என்ற அவள் பேச்சில் சத்யா ஒ தலைவர் சொல்லிட்டார் போல. அதான் தாமரைக்கு இத்தனை கோபம் என்று சாதரணமாக நினைத்துக் கொண்டு இருக்கே…..

மனது கேளாமல் என்ன தான் பயம் இருந்தாலும் தாமரைக்காக அங்கு வந்த வசந்தி தாமரையின் பேச்சி கேட்டு துடி துடித்து போனாள்.

இதை அவள் எதிர் பார்த்தது தான். ஆனால் இவர்களை உத்தம புத்திரர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்த தாமரை அந்த வார்த்தை கேட்டு எப்படி துடி துடித்து இருப்பாள் என்று நினைக் கொண்டே தாமரையை கண்ணீர் வழிய பார்க்க.

அப்போது தான் வசந்தியை பார்த்த தாமரை ஆதித்யாவை பிடித்து தள்ளி விட்டு அந்த அறையின் வாசல் அருகில் இருந்த வசந்தியின் அருகில் சென்றவள். “வசந்தி இவனுங்க என்ன என்னவோ சொல்றாங்க வா நாமா போயிடலாம்.” என்று அவள் கைய் பிடித்து இழுக்க.

ஆனால் வசந்தியோ அவள் இழுப்புக்கு போகாமல் சத்யா பார்க்கும் கோபப் பார்வையை பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றாள்.

தன் இழுப்புக்கு வராமல் இருக்கும் வசந்தியை பார்த்த தாமரை.இவள் ஏன் இப்படி பயப்படுகிறாள் என்று நினைத்து அவளை பார்க்க. அவள் சத்யாவையே பயத்துடன் பார்த்திருப்பதை பார்த்து.

சத்யாவின் அருகில் சென்றவள் “சத்யா நான் உன்னை என் அண்ணா….மாதிரி தானே நினைச்சி இருந்தே….ப்ளீஸ் சத்யா. “ என்று அதற்க்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாது அவன் காலிலேயே விழுந்து விட்டாள்.

இதை சத்யா துளி கூட எதிர் பார்க்க வில்லை. சத்யா தாமரையை தூக்குவதுக்குள் ஆதித்யா விரைந்து வந்து அவளை தூக்கியவன். “என்ன தாமரை என்ன பண்ற ….நீ பேசுவதை கேட்டா….ஏதோ வில்லன் கிட்ட பேசுவது போல் இருக்கு.” என்றதும் தான் அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவனை பார்த்தாளே ஒரு பார்வை.

அந்த பார்வையை ஏனோ தைரியத்துடன் பார்க்க முடியாது ஒரு நிமிடம் தான் தலை குனிந்து நின்றான் .

பின் என்ன நினைத்தானோ…..அவளையே நேராக பார்த்துக் கொண்டே “நீ என்னை வில்லனாக நினைப்பாயோ….? ஹீரோவாக நினைப்பாயோ….அது எதுவாக இருந்தாலும் அது நானாக மட்டும் தான் உனக்கு இருக்க வேண்டும். அதை முதலில் மனதில் ஏத்திக் கொள்.

அப்புறம் இனி ஒரு தரம் நீ யார் காலிலும் விழக் கூடாது. நன்றாக கேட்டுக் கொள் யார் காலிலும் விழக் கூடாது. அத நானாக இருந்தாலும். ம் இப்போ வசந்தி கிட்ட என்ன சொன்னே போகலாமா….இதையும் நீ மனதில் ஏத்திக்கோ….இனி நீ இங்கு தான் இருக்க போற….அதாவது உன் வாழ் நாள் முழுமைக்கும்.” என்று மேலும் அவன் ஏதோ சொல்ல வர.

“அதாவது உன் வைப்பாட்டியா……?” அந்த வார்த்தை ஆதித்யாவின் மனதை தைத்தாலும் அதை வெளிக்காட்டாது.

“ஆமாம் பொண்டாட்டியா இருந்தாலும் அது நீ தான். நீ சொன்ன மாதிரி வைப்பாட்டியா இருந்தாலும் அது நீ தான். எனக்கு உறவு முறை பத்தி எல்லாம் கவலை இல்லை. நான் உன்னுடன் வாழனும் . அது தான் எனக்கு வேண்டும்.” என்ற அவன் பேச்சை கேட்ட தாமரை முகத்தை திருப்பினாள் என்றால்.

வசந்தி ஆதித்யாவின் பேச்சிக்கு தலை குனிந்து நின்றாள். என்ன இருந்தாலும் அவளும் ஒரு வயது பெண் தானே….அவளுக்கு இந்த மாதிரி பேச்சி கேட்பது ஒரு மாதிரியாக இருந்தது. அவள் முகத்தை பார்த்தே அவளின் சங்கடத்தை புரிந்துக் கொண்ட சத்யா.

“நான் இங்கு வரக்கூடாதுன்னு தானே சொன்னே போ கீழ வேற வேலை இருந்தா பார்.” என்று அவளை அகற்றி விட்டு ஆதித்யாவையும் தாமரையும் மாறி மாறி பார்க்க.

அவன் வசந்தியை அந்த இடத்தை விட்டு போக சொன்னது பிடிக்காத தாமரை வசந்தி எப்போதும் நினைக்கும் வார்த்தையை தைரியத்துடன் அவனை பார்த்து கேட்டாள்.

“நீ என்ன இவனுக்கு மாமாவா….?”

அவள் அந்த வார்த்தையை முடிப்பதற்க்குள் காதில் கொயுங் என்று ஒரு சத்தம் மட்டும் தான் கேட்டது.

ஆம் ஆதித்யா தான் தாமரையை அடித்திருந்தான். அவன் அடித்ததில் கன்னம் பற்றி ஆதித்யாவை பயத்துடன் பார்க்க.

அவள் பார்வையோ….அவளின் கன்னம் பற்றியதையோ கவலை படாது திரும்பவும் அவளை அடிக்க அவள் அருகில் செல்ல. அவனின் எண்ணத்தை புரிந்துக் கொண்ட சத்யா அவளை தடுத்து “விடு தலைவா….ஏதோ கோவத்தில் தானே பேசினாங்க விடுங்க.” என்று சொன்னாலும்.

அந்த வார்த்தை சத்யாவுக்கும் ஈட்டியாக தான் குத்தியது. ஆமாம் ஆமாம் உண்மையை சொன்னால் குத்த தானே…. செய்யும்.

“ உன்னை பார்த்து எப்படிடா அவள் அப்படி சொல்வாள்.” என்று விடாமல் அவன் அதையே பிடித்து தொங்க.

தாமரை “அப்போ என்ன அனுபிச்சிடுங்க.”

“தோ பார் தாமரை திரும்ப திரும்ப என்ன சொல்ல வைக்காத….எனக்கு பொறுமை என்பது எனக்கு கிடையவே கிடையாது. இது தான் உன் வீடு. இந்த வீட்டை விட்டு போகலாம் என்று கனவிலும் நினைச்சி பாக்காத…..” என்று சொன்னவன் அவள் முகத்தை பார்க்க.

அந்த பார்வையில் தெரிந்த அருவெறுப்பில் பயத்திலும் எப்படி இவளுக்கு என்னை புரிய வைப்பேன் என்று ஆயாசமாக இருந்தது. பாவம் இவனுக்கு யார் புரியவைப்பது விரும்பும் பெண்ணிடம் பேசும் பேச்சி இது அல்ல என்று.

ஆதித்யாவின் மனதை புரிந்தவன் போல அவன் தோள் மீது கைய் வைத்து அவனுக்கு தைரியத்தை கொடுத்த சத்யா தாமரையிடம் போதிய இடை வெளி விட்டு அமர்ந்தவன்.

“சரி தாமரை நான் உன்னை அண்ணி என்று கூப்பிடலே…..ஆனால் நான் சொல்வதை நீ கேட்டு தான் ஆகனும். அன்னிக்கு உன் ஆயா இறக்கும் போது தலைவரிடம் என்ன கேட்டாங்க தெரியுமா….?”

“என்ன கேட்டாங்க என் பேத்தியை வைச்சிக்கன்னா…..?”

“இதோ பார் தாமரை எனக்கு பொறுமை அவ்வளவா கிடையாது. திரும்ப திரும்ப நீ இதே மாதிரி பேசி வைச்சா… கொன்னு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.” என்ற அவன் வார்த்தையில்.

“போடுங்க கொன்னு போடுங்க. இது மாதிரி இருப்பதுக்கு பதிலாக சாவதே மேல்.” என்று அவள் கத்த.

சத்யா ஆதித்யாவை பார்த்து “தலைவா என்ன மாதிரி நேரத்தில் என்ன பேச்சி பேசிட்டு இருக்கீங்க. “ என்று அவனை அமைதி படுத்தியவன் தாமரையைய் பார்த்து.

“வள்ளியம்மா தலைவர் கிட்ட என் பேத்தியை கட்டிக்க என்று தான் கேட்டாங்க.”

“இதை என்ன நம்ப சொல்றீயா…..?” என்று தாமரை சந்தேகத்துடன் கேட்க.

அதற்க்கு ஆதித்யா “அப்போ ஏன் வள்ளியம்மா அவங்க சாவதற்க்கு முன். என்னை பாக்க துடித்தாங்க. சாவுவதற்க்கு முன் சத்யா உன் கையைய் என் மீது வைத்து வாக்கு கொடுக்கும் போது அவங்க முகத்தை பாத்த தானே….அதில் எவ்வளவு சந்தோஷம் தெரிந்தது.”

சாதரணமாக நடந்த ஒவ்வொரு விஷயத்தை ஒன்று சேர்த்து தனக்கு சாதகமாக கோர்க்க முதலில் நம்ப மறுத்தவள் பின் தனக்கு தானே யோசிக்கவும் ஆராம்பித்தாள்.

தன் ஆயா சாவதற்க்கு முன் தன்னிடம் சொன்ன உன் விஷயமாக தான் ஆதித்யா தம்பியிடம் பேச வேண்டும் என்று சொன்னது.பின் இவர்கள் சொன்னா மாதிரி அன்று சத்யா ஆதித்யாவின் கைய் மீது வைத்து இனி தாமரையின் அனைத்து பொறுப்பும் தலைவருடையது என்று சொன்னதும் தான்.

“சரி நீங்கள் சொல்வது போல் கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டதாகவே இருக்கட்டும் ஆனா இப்போ நீங்க கேட்பது எதில் சேர்த்தி இது தான் எங்க ஆயாவின் ஆசையை நிறைவேத்தும் லட்சணமா….? இது மாதிரி என்னிடம் கேட்க உங்க வாய் கூசல…..”

“கூசல என் வாய் கூசல. எனக்கு நீ வேண்டும்.”

“நீ வேண்டும் என்று சொன்னா நான் என்ன பொருளா….?சரி என் மீது ஆசையோ….விருப்பமோ….எந்த கன்றாவியாவது இருக்கட்டும். அப்படி இருந்தால் கல்யாணம் செய்துக்க தானே கேட்பாங்க.”

“நீ சொல்வது சரி தான் நியாயமா நான் கல்யாணம் செய்துக்க தான் கேட்கனும். அது என்னன்னா….எனக்கு உன் மீது அளவுக்கு அதிகமான காதல் என்றால் என் பதியின் மேல் எனக்கு உயிர் என்றே சொல்லலாம்.”என்ற அவன் பேச்சி தாமரைக்கு புரியவில்லை.

இவன் பதவிக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம். என்று அவள் யோசிக்க அவள் முகத்தை பார்த்தே அவளின் எண்ணம் புரிந்தவனாய் “நான் வென்றது ஜாதி ஓட்டில் தான் .நீ என் ஜாதி கிடையாது. நான் உன்னை கல்யாணம் செய்தால் என் பதவி என்னை விட்டு போயிடும்.”என்று அவன் பேச பேச தான் தாமரைக்கு விளங்கியது.

இது மட்டுமா விளங்கியது அனைத்தும் தான் இவன் ஏன் காலை வாரமல் பொழுது சாய வருகிறான் என்பதும். முன் பக்க வழியாக வராமல் பின் பக்க வழியாக வருகிறான் என்பது வரை புரிந்தது. ஆனால் புரிந்து என்ன பயன் காலம் கடந்த ஞானோதயம் மாதிரி தான் தாமரையின் நிலையும்.

ஆதித்யா அனைத்தையும் சொல்லிவிட்டு சத்யாவை போ என்பது போல் சைகை காட்ட. சத்யாவும் எதுவும் பேசாது வெளியேறினான். அனைத்தும் தாமரையின் கண்ணுக்கு தப்ப வில்லை. இனி நம் கதி இது தானா…..

இதுக்கு தான் பாட்டி தன்னை அப்படி பொத்தி பொத்தி வளர்த்தார்களா….? எவ்வளவு நம்பினேன். அவன் தன் அருகில் வருவதை ஒரு கைய்யாளக தனத்துடன் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள். ஆதித்யாவும் தாமரரையைய் பார்த்துக் கொண்டே தான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தான்.

அவள் பக்கத்தில் அமர்ந்தவன் தாமரையின் பின் பக்கம் கையைய் எடுத்து செல்ல அவள் என்னவோ ஏதோ என்று பயந்து போய் தன் உடலை குறுக்கி பார்க்க. ஆதித்யாவும் அவளை பார்த்துக் கொண்டே அங்கு விழுந்து இருந்த நெக்லஸை எடுத்தவன் அவளிடம் கேளாமலேயே அவளுக்கு மாட்டி விட்டான்.

அந்த ஸ்பரிசம் தாமரைக்கு அருவெறுப்பை கொடுத்தது என்றால் ஆதித்யாவுக்கு சொல்ல முடியாத இன்பத்தை கொடுத்தது.தாமரையும் அவன் செயலை தடுக்க முடியாது அமர்ந்து இருந்தாள்.

ஆதித்யா தான் “ இப்படியே எவ்வளவு நேரமா உட்கார்ந்து இருக்க போற….மத்த வேலையே பாக்க வேணாமா….?”

சந்தேகத்துடன் “மத்த வேலேன்னா…..”

“இப்போத்திக்கு சாப்பிடுறது தான்ம்மா…..”

“அப்...போ பிறகு.”

அது அப்ப பாத்துக்கலாம் வா முதல்ல சாப்பிடலாம்.” என்று அவள் வேணாம் என்று சொல்ல சொல்ல வலுக்கட்டயமாக கீழே அழைத்து சென்றவன் வசந்தியிடம் “எல்லா எடுத்து வைய் வசந்தி.” என்று அவன் சாப்பிட அமர்ந்தவன் தன் பக்கத்திலேயே தாமரையின் கையைய் பிடித்துக் கொண்டு அமர்த்திக் கொண்டான்.

பின் சத்யாவையும் பார்த்து “வா சதயா உனக்கு தனியா கூப்பிடனுமா…..?” என்று ஆதித்யா சொன்னதும் எந்த எதிர் பேச்சிம் பேசாது ஆதித்யாவின் எதிரில் அமர்ந்தவன் தாமரையை பார்க்க.

தாமரைக்கு தான் சத்யாவையோ…. வசந்தியையோ….. பார்க்க முடியாது போனாது.

என்ன தான் பெண்கள் படித்து சம்பாதிக்க வெளியில் சென்று வந்தாலும், மற்றவர்கள் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்று சொன்னாலும். இன்னும் அது வெறும் வாய் மொழியாக மட்டும் தான் இருந்து வருகிறது.

இதோ இப்போது நடப்பதற்க்கு தாமரையின் பங்கு ஏதும் இல்லை. இந்த திட்டம் முழுக்க ஆதித்யா சத்யா போட்ட திட்டம் தான். ஆனால் மத்தவங்களை தலை நிமிர்ந்து பாக்க முடியாது போவது தாமரை தான்.

தப்பு செய்த தப்பு செய்ய காத்திருக்கும் ஆதித்யா தலை நிமிர்ந்து தான் அமர்ந்திருந்தான். இது தான் இந்த சமூகத்தின் நிலை.

சத்யாவுக்கு தாமரையின் நிலை தெரிந்து தான் இருந்தது. ஆனாலும் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. ஏன் என்றால் ஒருத்தன் ஒருவருக்கு மட்டும் தான் விசுவாசமாக இருக்க முடியும்,.

அது அவன் தலைவனுக்கு என்று முடிவு செய்து அவனே ரூட்டும் போட்டு கொடுத்தாயிற்று இப்போது தாமரை பார்த்து பாவப்படுவது தவிர அவனாலும் ஒன்றும் செய்ய இயலாது என்று நினைத்துக் கொண்டே சாப்பிட ஆராம்பித்தான்.

அனைவரையும் விட வசந்தியின் நிலை தான் மிக மோசமாக இருந்தது.தாமரையை பார்க்க பார்க்க அவளாள் சாதரணமாக பறிமாற முடியவில்லை. அன்னகுத்தியில் சாப்பாடு எடுத்து ஆதித்யாவின் இலைக்கு வரும் போதே பாதி சிந்தி விடும் அளவுக்கு அவள் கைய் ஆட்டம் கண்டது.

அதை பார்த்த ஆதித்யா என்ன நினைத்தானோ “நீ போ நாங்களே போட்டுக்குறோம்.” என்று சொல்லி அவனே தனக்கும் போட்டுக் கொண்டு தாமரைக்கு போட்டு சாப்பிட ஆராம்பித்தான்.ஆனால் தாமரைக்கு தான் ஒரு வாய் பருக்கு உள்ளே செல்ல முடியாமல் தொண்டை சத்தியகிராகம் செய்தது.

அவள் சாப்பிடத்தை பார்த்த ஆதித்யா என்னவோ கட்டிய மனைவியிடம் செல்வது போல் “சாப்பிடு தாமரை முன்னை விட...இப்போ ரொம்ப இளச்சிட்ட….” என்று அத்தோடு விட்டு இருந்தாலும் பரவாயில்லை.

“ உடம்ப பார்த்துக்க வேணாமா…?” என்று கேட்டு வைக்க.

சாப்பாட்டை சாப்பிடாமல் அதை அலைந்து கொண்டு இருந்தவள். ஒரு கைய் சோற்றை மொத்தமாக எடுத்து வாயில் வைத்து அடக்கி கொண்டாள். பின் அது படியே மூன்று முறை வாயில் அடைத்தாள்.

அதனால் சாப்பாடு தொண்டை குழியில் அடைத்துக் கொள்ள அங்கு இருந்த தண்ணீயை குடித்தவள் பின் மீண்டும் ஒரு கைய் சோற்றை எடுத்து வாயில் அடைக்க பார்க்க.

அதை தடுத்த ஆதித்யா “என்ன தாமரை என்ன செய்றே…..”

“சாப்பிடுறேன்.”

“இப்படி தான் சாப்பிடுவாயா….?”

“நீ தானே சொன்ன உடம்பை பார்த்துக்க வேணாமான்னு….இனி எனக்கு உடம்பு தானே மூலதனம்.”

என்று சொல்லி அவ்விடத்தை விட்டு போக. அந்த வார்த்தை கேட்ட சத்யாவிக்கே ஒரு மாதிரியாகி விட்டது.

முதன் முறையாக நாம் செய்வது தவறோ என்று நினைத்துக் கொண்டு இருக்க….ஆதித்யாவோ…..கோபத்துடன் தாமரையை பின் தொடர சத்யா….என்ன நினைத்தானோ….”தலைவா வீட்டுக்கு போயிடலாமா….?” என்று அவனை தடுக்க.

ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்த ஆதித்யா “தாமரை இருக்கும் வீடு தான் இனி என் வீடு.” என்று சொல்லி தாமரையின் அறைக்கு சென்றான்.
 
:love::love::love:

அடேய் முட்டா பசங்களா........ வேலியில்லாத ஆடுனு ஈஸியா பலியாக்குறீங்களே......
தாமரை வேணும்னா கல்யாணத்தை பண்ணு........ அதை விட்டுட்டு இப்படி பண்ணுறியே........
இது வெளியில் தெரிந்தால் பதவி போகாதா??? தாலி கட்டினால் மட்டும் தான் போகுமா???
என்னடா நியாயம் இது ?

தாமரை கேள்வி எல்லாம் நச் ???
தன வீடு பொண்ணுகளை இப்படி பார்க்கமுடியுமா இவனுங்களால???
 
Last edited:
Top