Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 4

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----4

சத்யா தான் திரும்பவும் ஆதித்யாவின் காதில் “கட்சி காரர்கள் எல்லாம் உங்கள் முகத்தை தான் பார்த்துக் கொண்டு இருக்காங்க தலைவா….”

தன்னை திரும்பவும் நிலைப்படுத்தி “இப்போ நீ என்ன சொல்ல வற்ற.”

“அய்யா மங்கை ஒரு பையனை விரும்புவது தெரியும். ஆனால் அவன் என்ன ஜாதி என்று தெரியாது. அது போலவே மங்கையும் என்ன ஜாதி என்று எனக்கு தெரியாது. ஏன் என்றால் பள்ளி. கல்லூரியில் ஜாதி சான்றிதழுக்காக மட்டும் தான் ஜாதி கேட்பாங்க. மத்த படி ஜாதி பத்தி பேச அவசியம் எங்களுக்கு இல்லை.”

“சரி உன் வழியிலேயே வரேன்.ஜாதி பத்தி தெரியாது. ஆனால் அவர்கள் விரும்புவது தெரியும் போது அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரிந்து இருக்குமே….”

அதற்க்கு தாமரை ஏகாம்பரத்தை காமித்து “ இவர் இரண்டு நாள் முன்னவே என் கிட்ட வந்து கேட்டாரு. எனக்கு தெரியாது என்று அப்பவே சொல்லிட்டேனே…..”

“ நீ சொல்வது நம்புவது போல் இல்லையே…..”

“ஏன் அய்யா நம்புவது போல் இல்லே.”

“ விரும்புவது தெரியும் சொல்ற. அப்போ அவங்க எங்கே போயிருக்கனும் என்றும் தெரிஞ்சி இருக்கனும் இல்லையா….?”

“அய்யா நான் ஒன்னு சொன்னா நீங்க கோச்சிக்க கூடாது.”

சொல்லு என்பது போல் ஜாடை காட்ட.

“பொண்ணு வீட்டு விட்டு போகும் வரை தன் மகள் காதல் விவரம் தெரியாமல் இருக்கும் இவர்கள் இவ்வளவு யோசிக்கும் போது அவர்கள் போகும் வரை வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்ட அவர்கள் எவ்வளவு யோசிப்பார்கள். அவர்கள் ஓடிப் போனால் முதலில் பிடித்து விசாரிப்பது தோழிகளை தான்.

அது தெரிந்து இப்பத்து பிள்ளைங்க தோழிங்களுக்கு கூட சொல்லாமல் கம்பியே நீட்டிடுதுங்க. நானே இவர் நேத்து இவர் பொண்ணு எங்கே என்று கேட்ட பிறகு தான் மங்கை ஓடிப் போன விஷயமே எனக்கு தெரியுமுன்னா பார்த்துக்குங்களே….”

அவள் பேச பேச அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த ஆதித்யாவுக்கு ஒன்று மட்டும் விளங்கியது அவர்கள் எங்கே போனார்கள் என்று இவளுக்கு தெரியாது என்று.இருந்தும் அவளை சட்டென்று அனுப்பி விட மனது வரவில்லை.

அதே சமயம் இத்தனை ஆம்பிள்ளை இருக்கும் சமயத்தில் இங்கே நிறுத்தி வைக்கவும் அவனுக்கு விருப்பம் இல்லை. அதனால் வள்ளியம்மாவை பார்த்து “உங்கள் பேத்தியை உள்ளே அழைச்சிட்டு போங்க. வீட்டுக்கு அனுப்பிச்சிடாதிங்க. படிப்பை பத்தி கொஞ்சம் பேசனும்.”

என்றதும் தாமரைக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. முதலில் உள்ளே அழைத்து செல்லுங்கள் என்று ஆதித்யா சொன்னதும் அய்யோ வேலை பத்தி பேசனும் என்று நினைச்சமே...பேச முடியலையே என்று நினைக்கும் போது அவனே படிப்பை பத்தி பேசனும் என்றதும் மகிழ்ச்சியுடம் தன் பாட்டியுடன் உள்ளே சென்றாள்.

வள்ளியம்மா தாமரையை உள்ளே அழைத்து செல்லும் வரை எதுவும் பேசாமல் இருந்த ஆதித்யா பின் தன் கட்சி காரரை பார்த்து “அந்த பொண்ணுக்கு எதுவும் தெரியததால் நாம் வேறு வழியில் தான் பொண்ணையும் அந்த பையனையும் தேடனும்.” என்று சொன்னதும்.

அதில் இருந்த ஒரு ஆள் “அந்த பாப்பா சொல்றது நம்புவது போலே இல்லையே….” என்று இழுக்க.

அதற்க்கு ஆதித்யா “நான் நம்புறேன். இத்தோட இந்த பிரச்சனையில் அந்த பெண்ணை இழுக்க தேவையில்லை. ஏகாம்பரத்தில் பெண்ணை கண்டு பிடிகிறது என் பொறுப்பு.” என்று சொன்னவன்.

சத்யாவிடம் “கூட்டிட்டு போனனே அந்த பையன் பிரண்டு சைடில் விசாரி.”

என்று அத்துடன் தன் பேச்சி முடிந்தது என்ற வகையாக அவன் எழுந்து நிற்க. அவன் எழுந்ததும் மற்றவர்களும் எழுந்து “சரி தலைவரே நாங்க வர்றோம்.” என்று சொல்லி விட்டு ஆதித்யாவுக்கு ஒரு வணக்கமும் போட்டு விடை பெற்றனர்.

சத்யாவும் அந்த பையனின் பிரண்டை விசாரிக்க செல்ல உள்ளே சென்ற ஆதித்யா எங்கே தாமரை என்று தன் கண்களை சுழற்றி பார்க்க. தாமரை சமையல் அறையில் தன் ஆயாவிடம் கதை அளந்து கொண்டு இருந்ததாள்.சத்தம் மட்டும் தான் ஆதித்யாவுக்கு கேட்டது. அவன் கண்ணுக்கு அவள் மாட்டாமல் போனாள்.

சரி நாம் டையினிங் டேபிளில் உட்கார்ந்தால் வள்ளியம்மா சாப்பாடு போட வருவார்கள். அவர்கள் வந்தால் பின்னாடியே தாமரையும் வருவாள் என்று கருதி அவன் அமர.அந்தோ பரிதாபம் சாப்பாடு போட வள்ளியம்மா தான் வந்தார்கள் தாமரை சமையல் கட்டிலேயே இருந்து விட்டாள்.

ஆதித்யா நினைத்தது போல் வள்ளியம்மாவோடு தாமரையும் வர தான் பார்த்தாள். வள்ளியம்மா தான் ஆதித்யாவோடு எப்போதும் சத்யா இருப்பான் என்று கருதி வேண்டாம் நீ உள்ளயே இரு என்று சாப்பாடு போட வள்ளியம்மா மட்டும் வந்தார்.பாவம் தன் பேத்திக்கு அந்த சத்யாவால் பிரச்சனை இல்லை இந்த ஆதித்யாவால் தான் பிரச்சனை வரும் என்று தெரியாமல் போனது விதி என்று தான் சொல்ல வேண்டும்.

சாப்பாடு போட வள்ளியம்மா மட்டும் வந்ததும் ஏமாற்றமாய் உணர்ந்த ஆதித்யா வள்ளியம்மா சாப்பாடு போட்டதும் சாப்பாட்டில் கைய் வைத்தவன் “வள்ளியம்மா உங்க பேத்தியை கூப்பிடுங்க.படிச்சிட்டு வேலைக்கு நம்ம ஆஸ்பிட்டலுக்கே வருதா இல்லை மேல் கொண்டு படிக்குதான்னு கேட்கலாம்.” என்று அவன் சொல்லி முடிப்பதற்க்குள் உள்ளே இருந்த தாமரை ஓடி வந்து அவன் முன் நின்றாள்.

தன் ஆயாவின் முறைப்பையும் சட்டை செய்யாது “நானே இதே பத்தி உங்க கிட்ட பேசலாம் என்று தான் நினைச்சிட்டு இருந்தேன் அய்யா….”

என்றவளை பார்த்து சிரித்துக் கொண்டே “அது என்ன அய்யான்னு கூப்பிடுறே….”

என்றவனை பார்த்து அவளும் சிரித்துக் கொண்டே “என் ஆயாவை போல் உங்களை தம்பின்னு கூப்பிட முடியாது இல்லிங்களா….அப்புறம் உங்க கட்சி ஆளுங்க மாதிரி தலைவான்னும் கூப்பிட முடியாது. அதனால் தான் சின்ன வயசுலே இருந்தே உங்களை பத்தி நினைக்கும் போது எல்லாம் அய்யான்னு நினைச்சிப்பேன். இப்போ அது பேசும் போதும் அப்படியே வந்துடுச்சி.” அவள் சொல்லி முடித்தும்.

அனைத்தையும் விடுத்து “என்னை பத்தி சின்ன வயசுலே இருந்து நினைப்பியா….என்ன நினைப்பே….” என்று கேட்டவனை ஏன் கேட்டோம் என்று நினைக்கும் வகையாக ஒரு பதில் அளித்தாள்.

“ஆயா என் படிப்பு வேண்டாம் என்று சொன்னதும் நீங்க தான் படிக்க வைங்க படிப்பு பெண்ணுங்களுக்கு ரொம்ப முக்கியம் அப்புறம் உங்க பேத்தி பாதுகாப்புக்கு நான் பொறுப்புன்னு சொன்னதா ஆயா சொன்னாங்க.அப்போ எனக்கு இது தான் தோனுச்சி நம்ம அப்பா இருந்தா இப்படி தான் சொல்லி இருப்பாருன்னு. அதில் இருந்து உங்களை அய்யான்னே மனசுலே நினைக்க ஆராம்பிச்சேட்டேன்.” என்றதும்.

கோபத்துடன் “நான் ஒன்னும் உன் அய்யா கிடையாது. அதை முதலில் நியாபகத்தில் வைச்சிக்கோ” என்று சுல் என்று விழ.

பாட்டி பேத்தி இருவரும் அதிசயத்துடன் ஆதித்யாவை பார்த்தனர்.தாமரை உடனே “சாரி நான் உங்க வயசை ஏத்தனும் என்று அப்படி சொல்லலே….” என்று சொல்லியும் அவன் முறைக்க “சரி சார் இனி நான் அப்படி மனதிலேயும் நினைக்க மாட்டேன்.” என்று சொல்லிய பிறகு தான் விட்டான்.

இருந்தும் அவன் மனதில் ஏதோ பிசைவது போல் இருந்தது.என்னை பார்த்தால் அவள் தந்தை ஸ்தானத்திலா பார்க்க தோன்றுகிறது. ஆனால் எனக்கு இது வரை என் கட்சி என் பதவி என் ஜாதி என்று மட்டும் நினைத்திருந்த என்னை ஒரு ஆணா உணர வைத்தது அவள் தானே என்று அவன் நினைவு ஓடும் போதே….

அய்யோ அவள் என் ஜாதி கிடையாதே நான் எப்படி என்று அவன் இவ்வாறு யோசித்துக் கொண்டு இருந்தான் என்றால் வள்ளியம்மா தம்பி அதிகமாவே பேச மாட்டாரே அதுவும் இது போல் எல்லாம் பேச மாட்டாரே….என்று யோசனைக்கு நடுவில் ஆனால் நம்மிடம் நன்றாக தானே பேசுவார். அந்த நினைவில் என் பேத்தி என்று தாமரையுடன் பேசுகிறார் போல் என்று அவரே சமாதானம் படுத்திக் கொண்டார்.

அப்போதே கொஞ்சம் யோசித்து இருந்தால் தன் பேத்தியை பெரும் பிரச்சனையில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் என்ன செய்ய ஆதித்ய நாரயணன் மேல் வள்ளியம்மா வைத்திருந்த நம்பிக்கை அதற்க்கு மேல் அவரை யோசிக்க விடவில்லை.

ஆதித்யாவும் தன் நினைவை ஒதுக்கி விட்டு இது பற்றி பிறகு தனியாக தான் யோசிக்க வேண்டும் .ஆனால் என்ன இருந்தாலும் தன் ஜாதி தான் எனக்கு முக்கியம்.அதை விடுத்தால் எனக்கு இந்த கட்சி இல்லை. இந்த பதவி இல்லை. இந்த இடத்தை பிடிக்க நான் என்னவெல்லாம் கஷ்டம் அனுபவித்தேன் . ஒரு பெண்ணுக்காக எல்லாம் இதை என்னால் விட முடியாது என்று நினைத்தவன்.

முன்பு இருந்த இலகு தன்மை மாறி “ சரி அந்த பேச்செல்லாம் விடு.மேல் கொண்டு படிக்க போறியா இல்லை. வேலைக்கு போகனும் என்ற ஐடியாவில் இருக்கியா….வேலைக்கு போவது என்றால் நம் என்று சொல்ல வந்தவன் என் ஹாஸ்பிட்டலில் சேருவது என்றாலும் சரி வெளியில் வேலை பார்க்கிறேன் என்றாலும் சரி.”

என்று தாமரையை பார்த்து பேசியவன் வள்ளிடம்மாவிடம் “உங்க எண்ணம் என்ன வள்ளியம்மா….” என்றதும் .

தாமரைக்கு முதலில் நன்றாக பேசிக் கொண்டு இருந்தவன் ஏன் விறைப்புக்கு மாறினான் என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே ஆதித்யா தன் ஆயாவிடன் உங்கள் எண்ணம் என்ன என்று கேட்டதும் அய்யோ என்று இருந்தது.

போயும் போயும் ஆயாவிடம் கேட்கிறானே அவர்கள் விட்டால் இப்போதே யாருக்காவது திருமணம் செய்து அனுப்பும் ஐடியாவில் இருக்கிறார்கள் என்று பதறியவள்.

தன் ஆயா வாய் திறப்பதற்க்குள் “நான் படிப்பு முடிந்ததும் உங்கள் ஹாஸ்பிட்டலிலேயே வேலை பார்க்கிறேன் அய்யா என்று சொல்ல வந்தவள் மாற்றி சார்.” என்று முடித்தாள்.

உடனே வள்ளியம்மா “ வேலை எல்லாம் வேண்டாம் தம்பி. அவள் கல்யாணத்துக்குன்னு கொஞ்சம் பணமும் நகையும் சேர்த்து வைத்திருக்கிறேன் படிப்பு முடிஞ்சா கல்யாணம் செய்துடலாம் என்று இருக்கிறேன்.” என்று திட்டவட்டமாக சொல்லி விட்டார்.

அவள் பேச்சை கேட்ட தாமரை ஏதோ சொல்ல வர வள்ளியம்மா “வீட்டில் போய் பேசலாம் கண்ணு.” என்று சொல்லி விட அதற்க்கு மேல் தாமரையால் ஒன்றும் சொல்ல முடியவில்லை என்றால் ஆதித்யா அப்போ அவளின் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துடுவாங்களா….? என்று யோசனையில் ஆழ்ந்தான்.

என்ன தான் இந்த பழம் புளிக்கும் என்ற வகையில் தான் வகிக்கும் பதிவிக்கு அவளை திருமணம் செய்துக் கொள்ள முடியாது. அதனால் இந்த எண்ணத்தை வளர விட கூடாது என்று தன் மனதுக்குள் முடிவு செய்து இருந்தாலும் அவள் வேறு ஒருவருக்கு சொந்தம் ஆக போகிறாள் என்று நினைக்கும் போதே அவன் நெஞ்சம் கசந்தது.

ஆதித்யாவினாலும் அதற்க்கு மேல் பேச்சி வளக்க முடியாமல் போக வள்ளியம்மா ஆதித்யாவிடம் “தம்பி நான் என் பேத்தியை அழைச்சிட்டு போறேன். அதனால் ராவு சாப்பாட்டுக்கு வெளியில் பார்த்துக்கிறிங்களா….?இல்லை வந்து சமைச்சி கொடுத்துட்டு போகட்டுமா….?”

உடனே “வேண்டாம் வள்ளியம்மா நான் வெளியிலேயே பார்த்துக் கொள்கிறேன்.”

“ என்ன தம்பி ஒரு மாதிரி இருக்கிங்க. உடம்புக்கு ஏதாவது சரியில்லையா….?” என்று பரிவுடன் விசாரிக்க.

அந்த அன்பில் ஆதித்யாவுக்கு குற்ற உணர்ச்சி தான் ஏற்பட்டது. வள்ளியம்மா தன் பேத்தியை எப்படி பொத்தி பொத்தி வளர்க்கிறார் என்று அவனுக்கு தெரியும். அப்படி இருக்கும் போது இவ்வளவு நேரமும் அவர் பேத்தியை தான் நினைத்துக் கொண்டு இருந்தேன் என்று தெரிந்தால் அவர் என்னை பற்றி என்ன நினைப்பார் என்று நினைத்துக் கொண்டே ….

“அதெல்லாம் ஒன்னும் இல்லை வள்ளியம்மா….அந்த பொண்ணு எங்கே போயிருக்கும் என்று அதை பத்தி நினைச்சிட்டு இருந்தேன்.” என்று சொன்னதும்.

“அதற்க்கு தான் தம்பி கால காலத்தில் கல்யாணம் முடிச்சுடனும் என்று சொல்வது.” என்ற வள்ளியம்மாவை தாமரை முறைத்து பார்க்க “நான் உன்னை பத்தி தப்பா சொல்லலே கண்ணு.நம்ம பிள்ளைங்க நல்ல பிள்ளையா இருந்தாலும் பார்க்கிற அனைத்து கண்ணும் ஒரே மாதிரியா இருக்கும் என்று சொல்ல முடியாது இல்லையா….?”

என்ற வள்ளியம்மாவின் வார்த்தை ஆதித்யாவுக்கு சுருக்கு என்று தைத்தது. அவர் சொல்வதும் சரி தானே ….வள்ளியம்மா நான் இருக்கிறேன் உங்கள் பேத்தியை இங்கே கூட்டிட்டு வாங்க என்று சொன்னதால் தானே கூட்டிட்டு வந்தாங்க. அதே போல் அந்த பொண்ணு தாமரையும் தன்னை எங்கோ உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறாள்.ஆனால் நான்….?” அதற்க்கு மேல் யோசிக்க விருப்பம் இல்லாமல் அந்த நினைவை அதோடு விட்டவன்.

வள்ளியம்மாவிடம் “நீங்கள் போய் வாங்க வள்ளியம்மா….” என்று சொல்லி அனுப்பியவன் வேறு எந்த வேலை செய்யவும் எண்ணம் இல்லாது தன் ரூமுக்கு சென்றான்.

வீட்டுக்கு வந்த வள்ளியம்மாவோ...தாமரையை “ஏன்டி உனக்கு அறிவு இருக்கா அங்க இருக்கவங்க எல்லாம் எவ்வளவு பெரிய ஆளுங்க. அவர்கள் முன்னாடி அப்படி தான் தெனவட்டாக பேசுவியா…..? அதுவும் ஆதித்யா தம்பியிடம்.”

“நான் என்ன தப்பா பேசினேன் ஆயா…?”

“ஏன்டி அவர் பொண்ணு மத்த ஜாதி பையனோட ஓடி போயிட்டா என்று பதச்சி போய் விசாரிச்சா….என்னவோ ஜாதி பத்தி தெரியாது என்று வேதாந்தம் எல்லாம் பேசுற...ஏதோ நம்ம தம்பி இருக்க தொட்டு தான் அவர்கள் எதுவும் பேசாமல் சும்மா இருந்தாங்க.” என்ற வள்ளியம்மாவிடம் .

“நான் என்ன தப்பா பேசினேன். இருக்கிறது தானே பேசினேன். அது என்ன ஆயா ஜாதி ஜாதின்னு அந்த ஜாதியா கட்டிட்டு அழறாங்க.எனக்கு என்னவோ இந்த ஜாதி என்ற பேச்சை எடுத்தாலோ எரிச்சலா….வருது.” என்று தன் ஆதாங்கத்தை கொட்டினாள்.

அந்த ஜாதியால் தான் தன் வாழ்கையே ஆட்டம் காண போகிறது என்று அப்போது பாவம் அவளுக்கு தெரியவில்லை.

தன் பேத்தி சொல்வது அனைத்தும் நியாயமாக இருந்தாலும் “நமக்கு ஏன் கண்ணு பெரியவங்க பொள்ளாப்பு. தம்பியும் கொஞ்சம் ஜாதி பார்க்கிறவரு தான் .ஆனால் என் கிட்ட அன்பா தான் நடந்துப்பாரு.” என்று அந்த பேச்சை அத்தோடு முடித்தவர்.

“சரி கண்ணு சாப்பிட்டு விட்டு கொஞ்சம் தூங்கு. நானும் கொஞ்சம் தூங்கி எழுந்துக்குறேன். இப்போ எல்லாம் முந்தி மாதிரி தொடர்ந்தாப்பலே வேலை பார்க்க முடியலே….என்னவோ அசதியாவே இருக்கு.”

என்று சொன்னவரை கவலையுடன் பார்த்த தாமரை “என்ன ஆயா பண்ணுது. நாளைக்கு நான் காலேஜ் வேணா லீவ் போட்டுற்றேன். நீங்க காலையிலேயே போய் சமைச்சிட்டு வந்துடுங்க. நம்ம இரண்டு பேரும் ஹாஸ்பிட்டலுக்கு போய் உங்களுக்கு ஒரு செக்கப் செய்துடலாமா….?”

பேத்தியின் கவலையை பார்த்த வள்ளியம்மா “பயப்படும் படி ஒன்னும் இல்லே கண்ணு. வயசாயிடுச்சி இல்லியா...அது தான் கொஞ்சம் பலவீனமா இருக்கு.”

“அதற்க்கு தான் சொல்றேன் ஆயா….இது மாதிரி வயசு ஆயிட்டா புல் செக்கப் செய்துக்கிறது நல்லது.ஏதாவது சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் இருந்தாலும் கண்டு பிடிச்சி மாத்திரை போடனும்.”

“எனக்கு அந்த வியாதி எல்லாம் வராது கண்னு.இது வேலை செய்த உடம்பு. சோம்பி இருக்கவங்களுக்கு தான் கண்ட கண்ட வியாதி எல்லாம் வரும்.உன்னை ஒருத்தன் கையில் பிடிச்சி கொடுக்கிற வரை அந்த எமன் கூட என் கிட்ட வரமாட்டான்.” என்று அடித்து சொன்னவருக்கு அப்போது தெரியவில்லை.

அந்த எமன் வாசல் கதவு கிட்ட தான் நின்று கொண்டு இருக்கிறான் என்று. அதுவும் இல்லாம் தன் பேத்தியை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுப்பது என்பது முடியாத விஷயம் என்றும்.

“சரி கண்ணு அந்த பேச்சி எல்லாம் எதுக்கு வா சீக்கிரம் சாப்பிட்டுடலாம்.” என்று கூறி. தன் பேத்திக்கு வைத்து தானும் சாப்பிட்ட உடன் கொஞ்சம் உடல் அசதியாய் இருக்க படுக்கையில் தம் உடம்பை சாய்த்தார்.

தாமரையும் தான் ஆயா சொன்னது போல் சாப்பிட்டு கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்தவள். தன் ஆயா இன்னும் ஏழாததை பார்த்து சரி தூங்கட்டும் என்று தன் பாட புத்தகத்தை எடுத்து படிக்க ஆராம்பித்தாள்.

ஒரு இரண்டு மணி நேரம் எந்ந்ரம் போனதே தெரியாம் படித்து முடித்தவள். அப்போதும் தன் ஆயா ஏழாததை பார்த்து மணி பார்த்தாள் மணி அப்போது தான் மாலை ஆறு என்று காட்டியது.

சரி நாமே காபி போட்டு ஆயாவை எழுப்புவோம் என்று நினைத்து காபி போட்டு வள்ளியம்மாவின் அருகில் சென்று “ஆயா ஆயா எழுந்துடுங்க ஆயா. உங்க பேத்தி முதல் முதலா காபி போட்டு இருக்கா அது குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க பார்க்கலாம்.” என்று கூறியும் எழாமல் இருக்கும் உடலை தொட்டு எழுப்பியவளுக்கு அப்போது தான் உறைத்தது.

வள்ளியம்மாவின் உடல் சூடு. அய்யோ சுரம் அடிக்கிறதே...என்று ஆயாவை தட்டு எழுப்ப கொஞ்சமாக கண்ணை திறந்து பார்த்தவரை பார்த்து “ஆயா காபி குடிங்க. குடிச்சிட்டு ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்.”

என்ற பேத்தியிடம் “வேண்டாம் கண்ணு வீட்டில் இருக்கும் மாத்திரையே கொடு.” என்று காபியையும் மாத்திரையும் சேர்த்து முழுங்கியவர் உடம்பு சோர்வில் திரும்பவும் படுத்து கொண்டார்.
 
Top