Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 8

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----8

வள்ளியம்மாவும் ஆதித்யாவின் பேச்சிக்கு பதில் பேச்சி பேசாது ஒத்துக் கொண்டது தான் ஆச்சரியம். வள்ளியம்மாவுக்கு தன் உடம்பின் உயிர் ரொம்ப நாள் தங்காது என்று யாரும் சொல்லாமலேயே புரிந்துக் கொண்டார்.

ஆம் அவளுக்கு இவ்வளவு பெரிய வியாதி இருக்கிறது என்று அவரிடன் சொல்லவில்லை.சொல்ல வேண்டாம் என்று ஆதித்யா தான் சொல்லி விட்டான்.அவருக்கு மருத்துவம் பார்ப்பது வேஸ்ட்டு என்று டாக்டர் சொன்னதும் இது தான் அவனுக்கு தோன்றியது.

எப்படி இருந்தாலும் இறக்கத்தான் போகிறார். அந்த இறப்பு எப்போ வருமோ….என்று பயந்துக் கொண்டு அவர் ஏன் இறக்க வேண்டும். அதுவும் இல்லாமல் சிகிச்சை செய்யலாம் என்றாலாவது அவரிடம் சொல்லி அவர் மனதை தேத்தலாம். அது தான் இல்லை என்று ஆகிவிட்டதே….

எதற்க்கு சொல்ல வேண்டும் என்று தான் அவன் இந்த முடிவை எடுத்தான். தாமரைக்கும் ஆதித்யா சொல்வது சரி என்று பட்டதால் அவளும் ஒத்துக் கொண்டாள். ஆனால் இவர்கள் சொல்லாமலேயே வள்ளியம்மாவுக்கு தன் உடல் நிலை மாற்றாத்தால் தான் நீண்ட நாட்கள் இருக்க மாட்டோம் என்று கருதியே ஆதித்யா தன்னுடைய மற்ற வீட்டுக்கு அழைத்து வந்ததுக்கு ஒத்துக் கொண்டாள்.

அதுவும் இல்லாமல் தன் ஏரியா அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லை என்பது அவர் கருத்து. தான் படுத்தால் கடைக்கு எல்லாம் தாமரை தான் செல்ல வேண்டும் அது அவளுக்கு நல்லது இல்லை என்று கருதி தான் இங்கே வந்தார்.

ஆதித்யாவிடம் சொல்லி தான் கண் மூடுவதற்க்குள் தாமரைக்கு ஒரு நல்ல இடத்தை பார்த்து முடித்து விட வேண்டும் என்றும் அவர் எண்ணி இருந்தார். ஆனால் பாவம் அவர் அறியாதது தன் பேத்திக்கு இங்கு தான் பாதுகாப்பு இல்லை என்றும்…. அவர் தன் பேத்தியின் திருமணத்தை பார்க்க போவதும் இல்லை என்றும்.

தாமரையும் வள்ளியம்மாவும் அந்த வீட்டுக்கு வந்து மூன்று வாரங்கள் கடந்து விட்டன.தாமரை அந்த வீட்டில் இருந்தே காலேஜ் செல்வதற்க்கு ஆதித்யா ஏற்பாடு செய்து விட்டான்.

அந்த வீடு ஆதித்யாவுடையது என்று யாருக்கும் தெரியாது. அதுவும் ஆதித்யாவின் பினாமி பேரில் தான் இருந்தது.அதனால் தாமரை அங்கு இருந்து காலேஜ் போய் வருவதற்க்கு ஆதித்யா கார் ஏற்பாடு செய்து அதற்க்கு ஒரு டிரைவரையும் வைத்து விட்டான்.

முக்கியமான ஒன்று ஆதித்யா வள்ளியம்மாவை டிச்சார்ஜ் செய்துக் கொண்டு வந்ததோடு சரி. அதற்க்கு பிறகு அவரை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லவே இல்லை. அவனுக்கு தெரியும் வள்ளியம்மா ஹாஸ்பிட்டல் சென்றால் கூட தாமரையும் செல்வாள்.

அங்கு அந்த சுரேந்தரும் இருப்பான்.நானும் அவளுடன் செல்ல முடியாது. அதுவும் இல்லாமல் இன்னும் கொஞ்ச நாளில் உள்ளாட்சி தேர்தல் வேறு வர இருக்கிறது. என் நல்ல நேரம் அன்று ஹாஸ்பிட்டலில் நான் தாமரைக்காக செய்து வைத்த வேலையை யாரும் பார்க்க வில்லை.

அந்த டாக்டர் கண்டிப்பாக இதை பற்றி சொல்லமாட்டார் என்று அவனுக்கு நிச்சயம்.கூடவே தன் மகனுக்கு அனைத்தும் புரியவைத்து விடுவார் என்றும் அவனுக்கு தெரியும் இருந்தும் அந்த சுரேந்தரை தாமரை பார்ப்பதை அவன் விரும்பவில்லை.

அதனால் டாக்டரே வீட்டுக்கு வந்து வள்ளியம்மாவை பார்ப்பதற்க்கு அவன் ஏற்பாடு செய்து விட்டான். ஆதித்யா வள்ளியம்மாவுக்காக செய்வான் தான். ஆனால் இந்த அதிகபடி எல்லாம் ஆதித்யா தாமரை மீது வைத்திருக்கும் விருப்பத்தால் தான்.

இது எதுவும் தெரியாது தாமரை தன் ஆயாவுக்கு இவ்வளவு பார்த்து பார்த்து செய்கிறாறே...என்று அவன் மீது இன்னும் மதிப்பு அதிகம் தாம் ஆகியது.அதாவது ஆதித்யா தன்னை விரும்புவான் என்ற எண்ணம் சிறிதும் அவளுக்கு கிடையாது.

சத்யா தினம் வந்து பார்ப்பான். அதுவும் ஆதித்யாவின் ஏற்பாடு தான்.ஆதித்யா மூன்று நாளுக்கு ஒரு தடவை தான் வந்து பார்ப்பான். அதுவும் பொழுது சாய்ந்து தான் வந்து பார்ப்பான். ஒரு சமயம் வள்ளியம்மாவுக்காக மட்டும் பார்த்திருந்தால் தைரியாக தன் வீட்டிலேயே கூட வைத்து பார்த்திருப்பானோ….மனதில் கள்ளம் வந்தால் தானே திருட்டு தனமும் வரும்.

வள்ளியம்மாவுக்கு பாவம் நோயின் கொடுமையால் இதை ஏதும் அறியாது படுத்திருந்தார். அவர் மட்டும் நல்ல நிலையில் இருந்தால் கண்டிப்பாக இதை அனைத்தும் யோசித்து இருப்பார்.

ஏன் ஆதித்யா தம்பி தன் வீட்டுக்கு கொண்டு போகாமல் இங்கு கொண்டு வந்தார் அதுவும் பகல் பொழுதில் வராது இரவு ஏன் வருகிறார் என்றும் யோசித்து இருப்பார். பாவம் இப்போது அவரின் ஒரே கவலை தன் பேத்தி கழுத்தில் தாலி ஏறுவதை தன் கண் குளிர பார்க்க வேண்டும். அது மட்டுமாக தான் இருந்தது.

ஆதித்யாவிடம் இதை பற்றி பேசலாம் என்று பேச்சி ஆராம்பித்தாலே பக்கத்தில் இருக்கும் சத்யா தம்பி ஏதோ பேசி பேச்சை மாத்தி விட்டு விடுகிறார் இன்று கண்டிப்பாக பேசியே ஆகவேண்டும் என்ற முடிவோடு தூங்காமல் ஆதித்யாவுக்காக காத்துக் கொண்டு இருந்தார்.

அன்று இரவு தாமரை தன் பாட்டிக்கு தேவையான மாத்திரையை எடுத்துக் கொண்டு வந்து “ எழுந்துக்குங்க ஆயா...இந்த மாத்திரை போட்டுட்டு படுத்துக்குங்க.” என்றதும்.

“வேண்டாம் தாமரை கண்ணு. தம்பி கிட்ட நான் பேசனும்.”

“பேசுங்க உங்களை யாரு வேண்டாம் என்று சொல்றாங்க.” இந்த மாத்திரை போட்டுட்டு அவருக்காக காத்திருங்க.”

“இந்த மாத்திரை தானே….இந்த மாத்திரை போட்டா எங்கே முழிச்சிட்டு இருக்கருது. போட்ட உடனே கண்ணை தூக்கம் கட்டுது.” ஆம் அவர் சொல்வது உண்மை தான். இந்த நோயினால் ஏற்படும் வலி தெரியாமல் இருக்க தூக்க மாத்திரையும் கலந்து தான் டாக்டர் கொடுத்து இருக்கிறார்.

அதனால் இந்த மாத்திரை போட்டதும் கண்டிப்பாக தூங்கி விடுவார்கள். அப்படி தூங்காமல் இன்றே பேச வேண்டிய முக்கிய விஷயம் என்னவாக இருக்கும் என்று யோசித்தவள்.

அதை தன் பாட்டியிடமே கேட்க. “எல்லாம் உன் விஷயமாக தான்.”

“என் விஷயமா அது என்ன…?அதை பத்தி அவர் கிட்ட ஏன் பேசனும்.”

“அவர் கிட்ட பேசமா….வேறு யார் கிட்ட பேசுவது.”

“ஆயா நீங்க சொல்வது எனக்கு புரியலே……”

“உனக்கு புரிய வேண்டாம். உன்னிடம் சொன்னால் நீ வேண்டாம் என்று தான் சொல்வாய். அதனால் நான் ஆதித்யா தம்பியிடம் சொல்கிறேன். தம்பி சொன்னால் தான் நீ கேட்பாய்.”

என்று தான் சொல்வதை ஒழுங்காக சொல்லாமல் தான் விட்ட இந்த வார்த்தை பிற்காலத்தில் எந்த அளவுக்கு விளையாட இருக்கிறது என்று தெரிந்து இருந்தால் கண்டிப்பாக விளக்கமாக சொல்லி இருப்பாரோ…..

வள்ளியம்மா அன்று ஆதித்யாவுக்காக மாத்திரை போடாமல் காத்துக் கொண்டு இருக்க. அன்று ஆதித்யா வருவதற்க்கு பதிலாக அவனிடம் இருந்து போன் கால் தான் வந்தது. தாமரை பாட்டிக்கு மாத்திரை கொடுத்து விட்டே படுக்கலாம் என்று கருதி பாட புத்தகத்தை எடுத்து படிக்க ஆராம்பித்தாள்.

அவள் எப்போதும் நன்றாக படிப்பவள் தான். இப்போது இன்னும் தன் உழைப்பை தன் படிப்பில் போட்டாள். அவளுக்கு தெரிந்து விட்டது தன் பாட்டி அதிக நாட்கள் தன்னுடன் இருக்க மாட்டார் என்று. பிறகு நமக்கு கைய் கொடுப்பது இந்த கல்வி தான் என்று தன் கவனத்தை முழுவதும் தன் பாட்டியை பார்த்துக் கொள்வது பின் படிப்பு இதே தான் தன் எண்ணமாக இருந்தது.

அன்றும் அவள் படித்துக் கொண்டு இருக்கும் போது லேன் லையினுக்கு போன் வந்தது.போனின் ரிங் கேட்டவள் தன் புத்தகத்தை கவிழ்த்து வைத்து விட்டு காதில் வைத்து “ஹாலோ” என்று கூறியும் அந்த பக்கம் சத்தம் வராமல் போக தாமரை திரும்பவும் இரண்டு முறையும் “ஹாலோ ஹாலோ” என்ற அழைப்பிக்கு பதில் இல்லாது போக இவள் வைக்கும் வேளையில்….

அந்த பக்கத்தில் இருந்த ஆதித்யா கரகரப்பான குரலில் “தாமரை நான் ஆதி.” என்றதும்.

“சார் நீங்களா….?” என்று ஆச்சரியமாக வினாவினாள்.

ஏன் இந்த ஆச்சரியம் என்றால் அவள் இங்கு வந்து இது வரை அவன் போன் செய்தது கிடையாது. மூன்று நாள்களுக்கு ஒரு நாள் இரவு ஏழு மணிக்கு வந்தால் எட்டு மணிக்கு கிளம்பி விடுவான்.

அதன் படி இன்று அவன் வரும் நாள் .அதற்க்காக தான் வள்ளியம்மா அவன் வருகைக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்.அவன் வராமல் போன் வரவும் தான் அவள் ஆச்சரிய்ப்பட்டான்.

அவள் ஆச்சரியம் அவனுக்கு அவளிடம் பேச தூண்டியது. அவனுக்கு தாமரை மீது விருப்பம் இருந்தாலும் அவளிடம் தனிப்பட்ட பேச்சி எதுவும் பேசியது கிடையாது.அந்த வீட்டுக்கு சென்றால் வள்ளியம்மா அறைக்கு சென்று அவரின் உடல் நிலையை பற்றி விசாரித்து விட்டு வந்து விடுவான்.

தாமரையும் ஆதித்யா வள்ளியம்மா அறைக்கு வந்தால் அவர்களுக்கு காபி கலக்க சமையல் அறைக்கு சென்று விடுவாள். ஆதித்யா எப்போதும் தனியாக வரமாட்டான்.சத்யாவோடு தான் வருவான். ஆதித்யாவும் தாமரையோடு தனியாக பேசுவதற்க்கு அக்கரை காட்டியது கிடையாது.

அவளை எப்படி தன் வாழ்வில் இணைத்துக் கொள்வது என்பதை பற்றி ஒரு முடிவுக்கு வராமல் அவளுடன் பேசுவதில் அவனுக்கு விருப்பம் இல்லை. மேலும் அன்று ஹாஸ்பிட்டலில் அந்த சுரேந்தர் தனக்கும் தாமரைக்கு உள்ள உறவு பேஷண்டின் அட்டண்டர்,டாக்டருக்கும் இருக்கும் உறவுக்கும் மீறியது என்று அவன் சொல்லும் போது இவள் மறுத்து ஏதும் கூறவில்லையே என்ற கோபமும் அவனுள் கணன்றுக் கொண்டு இருந்தது.

ஆனால் அந்த கோபம் இப்போது தாமரையின் குரல் கேட்டதும் மறைந்து போனது. அதுவும் அவள் ஆச்சரியத்துடன் நீங்களா….?என்று கேட்டதும் அவனுக்கு அவளிடம் பேசும் ஆர்வத்தை தூண்டியது.

அவளிடம் பேச்சி வளர்க்கும் பொருட்டு “ஏன் நான் பேச கூடாதா….?”

“ பேசலாம் சார். ஆனால் இன்று நீங்கள் வரும் நாள்.” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை.

“என்னை எதிர் பார்த்தியா தாமரை” என்ற அவன் பேச்சில் என்ன இருந்தது என்று சுத்தமாக தாமரைக்கு விளங்க வில்லை. ஆனால் இது ஆதித்யா பேசும் சாதரண குரல் இல்லை.

அவன் குரலில் எப்போதும் ஒரு கம்பீரம் இருக்கும். ஒரு ஆளுமை தன்மை இருக்கும். ஆனால் இந்த குரம் மெல்லியதாக….அவளை மேலே சிந்திக்க விடாமல் “என்ன தாமரை நான் கேட்டதுக்கு ஒன்றும் சொல்ல வில்லை.”

அவனின் குரலின் ஆராய்ச்சியின் அவன் என்ன கேட்டான் என்பதே சுத்தமாக மறந்து விட்டது. அதனால் “என்ன சார் கேட்டிங்க.” என்ற அவள் கேள்வியில் அவனின் ஆவால் கொஞ்சம் குறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இருந்தும் அவளிடம் பதில் தெரிந்துக் கொள்ளும் ஆவாளில் “இல்லை நான் வருவேன் என்று எதிர் பார்த்தயா…..? என்று கேட்டேன்.”

அதற்க்கு வெள்ளந்தியாக “நான் இல்லை சார் .ஆயா எதிர் பார்த்தாங்க. நான் மாத்திரை கொடுத்தா சாப்பிடமா….உங்க கிட்டே பேசனும். அதனால் அப்புறம் போட்டுகிறேன் என்று சொன்ன பிறகு தான் நீங்க இன்று வரும் நாள் என்று என் நியாபகத்தில் வந்தது.”

அவள் பதிலில் அவன் ஆவால் மொத்தமாக மடிந்தது. அந்த வெறுப்பில் “நான் இன்று வரமாட்டேன் அதை சொல்ல தான் போன் செய்தேன்.” என்று சொல்லி சட்டென்று வைத்து விட்டான்.

ஆதித்யா போனை வைத்தது தாமரைக்கு வித்தியசாக தெரியவில்லை. இன்னும் சொல்ல போனால் தன் வேலை நேரத்திலும் கூட வள்ளியம்மா காத்துக் கொண்டு இருப்பார்களே...என்று கருதி இன்று வரமுடியாது என்று போன் செய்து சொல்கிறாரே….என்ற மதிப்பு தான் அவன் மேல் வந்தது.

பின் ஆதித்யா போனை வைத்தது தன் பாட்டியிடம் சென்றவள் “ஆயா சார் வரமாட்டேன் என்று சொல்லிட்டார். அதனால் மாத்திரை போட்டுட்டு தூங்குங்க.” என்றதும்.

“ஏம்மா தம்பி போன் செய்தப்ப என் கிட்ட கொடுத்து இருக்கலாம் இல்லையா….?”

“ஏன் ஆயா…..?”

“தம்பி கிட்ட பேசனும் அது தான்.”

“என்ன ஆயா நாளைக்கு வந்தப்ப பேசினா போச்சி….” என்று மாத்திரையை கொடுத்து அவரை தூங்க வைக்க முயல அவர் தூங்காமல் “தம்பி கிட்ட என்னை பேச வைச்சி இருக்கலாம்.” என்று அதிலேயே குறையாக இருந்தார்.

எமன் வாசப்படியில் நிற்ப்பது அவருக்கு தெரிந்து விட்டதோ….என்னவோ…..அதனால் தான் ஆதித்யாவிடம் பேச அவ்வளவு அவசரம் காட்டினாரோ….என்னவோ…..

தூங்காமல் இருந்த வள்ளியம்மா மாத்திரையின் உபயத்தால் தூங்கிக் கொண்டு இருக்கும் போது காலை நான்கு மணிக்கு உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் முழித்தவர் பின் தூங்கவில்லை என்பதை விட தூங்க முடியவில்லை.

பொறுத்து பொறுத்து பார்த்தவர் கீழே உறங்கி கொண்டு இருக்கும் தாமரையை தன் பலகீனமான குரலில் “தாமரை தாமரை….” என்று கூப்பிட அவள் எழவில்லை.

இரவு பன்னிரண்டு மணி வரை விழித்திருந்து படித்த காரணத்தால் தன் பாட்டியின் குரல் கேட்காமல் அவள் தூங்க. வள்ளியம்மாவுக்கு நாக்கு எல்லாம் வரண்டு போய் தண்ணி குடிக்க வேண்டும் போல் இருந்ததால் எழுந்து உட்கார்ந்தவர் பக்கத்தில் டேபிளில் வைத்திருந்த தண்ணியைய் எக்கி எடுக்க போக.

ஆனால் அது அவர் கையில் அகப்படாமல் கீழே படுத்து இருந்த தாமரை பக்கத்தில் விழுந்து தாமரையை எழுப்பியது. அந்த சத்ததில் கண்முழித்த தாமரை எழுந்து “என்ன ஆயா என்ன வேண்டும்.” என்று கேட்டவள் விழுந்த தண்ணி ஜக்கை பார்த்து தண்ணி வேண்டும் போல் அவளாகவே யூகித்து சமையல் அறையில் இருந்து தண்ணி எடுத்து வந்து பாட்டியுடம் கொடுத்தாள்.

அதை குடித்த பிறகும் வள்ளியம்மாவுக்கு ஏதோ செய்தது. அது என்ன என்று தான் அவரால் சொல்ல முடியவில்லை. அவருக்கு தெரிந்து விட்டது தன் பேத்தியை இந்த பொல்லாத உலகத்தில் நிற்கதியாக விட்டு போக போகிறோம் என்று.

அதை நினைத்தால் தான் அவருக்கு பயமாக இருந்தது. தன் மருமகளுக்கு கணவன் மாமியார் என்ற சொந்தம் இருக்கும் போதே அப்படி நடந்ததே….யாரும் அற்று அவளை விட்டு செல்கிறனே….என் பேத்தியில் நிலை என்ன ஆகுமோ….என்று துடித்தவர்.

தன் உயிர் போவதற்க்குள் ஆதித்யாவிடம் பேசவேண்டும் என்று முடிவு செய்தவராக தாமரையிடம் “தம்பிக்கு போன் செய். தம்பிக்கு போன் செய்.” என்று சொன்னதே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தார்.
 
???

பூனையையே பாலுக்கு காவல் வைக்க ஆசைப்படுறாங்களே பாட்டி......
ஆதிக்கு என்ன அவ்ளோ ஜாதி வெறி.....
அரசியல் கண்ணை மறைக்குது......
 
Last edited:
Top