Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 9

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்----9

இந்த அதிகாலையில் எப்படி எழுப்புவது என்று யோசித்த தாமரை….

“ஆயா மணி நாலரை தான் ஆகுது. இப்போ எப்படி ….?” என்று அவள் இழுக்க.

“கூப்பிடு” என்று தன் சக்தி எல்லாம் திரட்டி குரல் எழுப்பி சொல்ல.

தாமரைக்கும் பயம் வந்து விட்டது. ஆதித்யா வந்தால் ஹாஸ்பிட்டல் அழைத்து செல்வார் என்று நினைத்து போன் பக்கத்தில் இருக்கும் டைரியில் அன்று போன் நம்பர் எழுதி ஏதாவது அவசரம் என்றால் போன் செய் என்று சொன்னதை நினைவுக்கு வந்தவளாக அதை எடுத்தவள்.

ஆதித்யா நம்பரை தட்டி காதில் வைத்து காத்திருக்க. அந்த பக்கத்தில் இருக்கும் ஆதித்யா தூக்க கலக்கத்தில் யார் என்று தெரியாமலேயே போனை காதில் வைத்து “ஹாலோ” என்று தூக்க கலக்கத்தோடு பேச.

“சார் நான் தாமரை” என்ற குரலில் தன் தூக்கம் மொத்தமாய் கலைய “தாமரை என்ன இந்த நேரத்தில் “ என்று கேட்டுக் கொண்டே சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரத்தில் டைம் பார்த்தவன் அது நாலரை என்று காட்டியது.

தன் கேள்விக்கு பதில் வராது வெரும் அழுகை மட்டுமே போனில் கேட்ட ஆதித்யாவுக்கு புரிந்து விட்டது. வள்ளியம்மாவுக்கு தான் ஏதோ என்று. “தாமரை அழதே...வள்ளியம்மாவுக்கு என்ன….?” என்று அவனாகவே கேட்க.

“ஆயா மூச்சி விடவே ரொம்ப சிரம படறாங்க சார். நான் ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டாலும் வராமல் உங்களை கூப்பிடு கூப்பிடுன்னு அடம் பிடிக்கிறாங்க சார்.”

உடனே “நீ ஹாஸ்பிட்டலுக்கு எல்லாம் கூப்பிட்டு போக வேண்டாம். இதோ நானே வர்றேன்.” என்று போனை வைத்தவன். கீழே படுத்து உறங்கிக் கொண்டு இருக்கும் சத்யாவை எழுப்பி “வள்ளியம்மாவுக்கு உடம்பு ரொம்ப முடியமா இருக்கு வா போகலாம்.” என்று சொல்லிக் கொண்டே தன் சட்டையைய் எடுத்து மாட்டியவன்.

தன் கார் சாவியைய் எடுக்க. அதை பார்த்த சத்யா “சார் அந்த சாவிய வைச்சிடுங்க. என்னுடையதை எடுத்துக்குறேன்.” என்று சொல்லி விட்டு தன் பாக்கெட்டிலேயே இருக்கும் சாவியைய் எடுத்து காட்டினான்.

எப்போது வள்ளியம்மாவை அந்த வீட்டில் வைத்தானோ...அப்போதிலிருந்து அந்த வீட்டுக்கு போவதற்க்கு தன் காரை எடுக்காது சத்யா கார் தான் எடுப்பான். அதுவும் கூடவே சத்யாவும் வருவான்.

அதே போல் இப்போதும் தன் காரை எடுத்த சத்யா முன் கதவை ஆதித்யாவுக்காக திறந்து காத்திருக்க. காரில் ஏறியா ஆதித்யா “சீக்கிரம் வண்டிய எடு சத்யா. அங்கு தாமரை தனியா என்ன கஷ்டப்படுறாளோ…..” என்று அவன் சொல்ல.

தலைவன் சொல்லே வேதம் என்பது போல் கார் ஜெட் வேகத்தில் பறந்தது.அந்த வீட்டின் பின் பக்கத்தில் காரை நிறுத்திய சத்யா காரை விட்டு இறங்குவதற்க்குள் ஆதித்யா காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் விரைந்தான்.

வள்ளியம்மாவின் அறைக்குள் நுழைந்தவன் அங்கு தாமரையின் மடி மீது படுத்துக் கொண்டு இருந்த வள்ளியம்மாவை நெருங்கி “என்ன வள்ளியம்மா என்ன பண்ணுது.” என்று ஆதித்யா கேட்டதுக்கு பதில் சொல்லாது.

“வந்துட்டியா தம்பி” என்ற அவரின் அதிகபடியான எதிர் பார்ப்பு ஆதித்யாவுக்கு குற்றவுணர்ச்சியைய் தோற்று வித்தது. நம்மை நேற்று அதிகம் எதிர் பார்த்தாரோ...நம் பிரச்சனையில் வள்ளியம்மாவை பற்றி யோசிக்கவில்லையே….என்று தான் நினைக்க தோன்றியது.

ஆம் நேற்று ஆதித்யா மனது வைத்தால் வந்து இருக்கலாம். ஆனால் இங்கு வந்து தாமரையிடம் எதுவும் பேசாது யாரோ போல் இருப்பதற்க்கு இப்போது எல்லாம் அவனால் முடிவது இல்லை.

அவளுக்கு எல்லாமாக அவன் இருக்க வேண்டும். அவன் மட்டுமே தான் இருக்க வேண்டும் என்று அவன் மனது முரண்டு பிடிக்க ஆராம்பித்து விட்டது. அதுவும் அவள் வள்ளியாம்மாவின் உடல் நிலை குறித்து வேதனை படும் போது.

ஒரு கைய்யாளாகத தனத்துடம் தூர இருந்து பார்ப்பது தன் ஆண்மைக்கே ஒரு இழுக்காக கருதினான்.இத்தனை வசதி இருந்து என்ன பயன் தன் மனதுக்கு பிடித்தவளிடம் மனம் விட்டு பேச முடியவில்லை. அவள் துன்பத்தில் பங்கு கொள்ள முடியவில்லை. இன்னும் சொல்ல போனால் அவளை பார்ப்பதற்க்கே சத்யாவின் காரில் தான் திருட்டு தனமாக தான் வந்து போக வேண்டியதாக இருக்கிறது.

இதை நினைத்து தான் நேற்று இங்கு வருவதை அவன் தவிர்த்தான். சத்யா கேட்டதுக்கு தன் மனதில் இருப்பதை அனைத்தையும் கொட்டியவன் “அவளை யாரோ போல் பார்ப்பது என் மனதுக்கு மிக கஷ்டமா இருக்கு சத்யா...அவள் எனக்கானவள்.

அப்படி இருக்கும் போது அவளுக்கு செய்ய வேண்டியதை இப்படி ஒளிந்து செய்யவேண்டியதாக இருக்கிறதே” என்ற அவன் புலம்பலை கேட்ட சத்யா “கவலை படாதே தலைவா இதற்க்கு ஏதாவது வழி கிடைக்கும் நான் யோசிக்கிறேன்.” என்று சொன்னவன்.

“உங்கள் மனதுக்கு கஷ்டமாக இருந்தால் இன்று நீங்கள் போக வேண்டாம் தலைவா…ஒரு சமயம் தாமரைக்கு உங்கள் மீது விருப்பம் இருந்தால் நீங்கள் வராததை பார்த்து அவங்களாவே போன் செய்யலாம் இல்லையா ….?”. என்று கேட்டதும்.

அவன் மனது ஒரு எதிர் பார்ப்புடன் அன்று போகாமல் தாமரை போன் செய்வாளா...?என்று காத்திருந்தான். அவன் எதிர் பார்த்த மாதிரி தாமரையும் தான் போன் செய்தாள்.

ஆனால் அவள் தன்னை எதிர் பார்க்காது பாட்டி எதிர் பார்த்தார்கள் என்று சொன்னதும் அவன் ஆசை மொத்தமாய் வடிய போனை வைத்தவன் எப்போதும் போல அவளை மறக்க குடிக்கிறேன் என்று குடித்து விட்டு அவளை மறவாது நினைத்துக் கொண்டே படுத்து விட்டான்.

அதை நினைத்து தான் அவன் மனதில் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. வள்ளியம்மா நம்மிடம் பத்து வருடமாக வேலை பார்ப்பவர்.ஒரு முதாலாளியாய் மட்டும் தன்னை பாராது ஒரு மகனாய் தன்னை பார்த்துக் கொண்டவர். அவருக்காவது நாம் வந்து இருக்க வேண்டும் என்று நினைத்தவன்.

தாமரையிடம் “ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பலாம். நீ அதற்க்கு உண்டானதை எடுத்து வைய் .” என்று சொன்னதும் தன் மடி மீது இருந்த பாட்டியின் தலையைய் தலையணை மீது வைத்து விட்டு அவள் ஹாஸ்பிட்டலுக்கு போக தேவையானதை எடுத்து வைக்க வெளியில் செல்ல.

ஆதித்யாவின் பின்னோடு வந்த சத்யாவுக்கு ஒரு போன் கால் வர அதை அட்டென் செய்து பேசி விட்டு அப்போது தான் வள்ளியம்மாவின் அறைக்கு வந்த சத்யா வெளியில் செல்ல முயன்ற தாமரையைய் பார்த்து “ வள்ளியம்மாவுக்கு இப்போது எப்படி இருக்கிறது.” என்று கேட்டது தான் தாமதம்.

எதுவும் பேசாது ஒ என்று அழ ஆராம்பித்து விட்டாள் சத்தியமாக இது சத்யா எதிர் பார்க்காதது. சத்யா தாமரையிடம் அதிகம் பேசியது கிடையாது ஏதோ ஒன்று இரண்டு வார்த்தை தான் பேசி இருக்கிறான் அதுவும் வள்ளியம்மாவை பற்றியதாக தான் இருக்கும்.

அப்படி இருக்கும் போது தன்னிடம் இவள் இப்படி அழுகிறாளே….நான் இப்போது என்ன செய்ய வேண்டும். அவளை சமாதானம் படுத்த வேண்டுமா….?தாமரை வெரும் வள்ளியம்மாவின் பேத்தியாக மட்டும் இருந்தால் கண்டிப்பாக யோசிக்காது ஆறுதல் கூறியிருப்பான்.

ஆனால் தாமரை தன் தலைவனின் காதலியாக வேறு இருக்கிறாளே….என்று நினைத்துக் கொண்டே அவளை பார்த்து வாய் திறவும் வேலையில் ஆதித்யாவின் “என்ன இன்னும் இங்கே என்ன பண்ணிட்டு இருக்க.” என்று கோபத்துடம் ஆதித்யாவின் பேச்சை கேட்ட தாமரை எதுவும் நினைக்காது அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாள்.

ஆனால் சத்யாவுக்கு தான் தலைவர் நம்மை தவறாக நினைத்து விடுவாரோ என்று பயந்து “தலைவா நான் ஒன்னும் கேட்கலை வள்ளியம்மா எப்படி இருக்காங்கன்னு தான் கேட்டேன். ஆனால் அதற்க்கு என்னிடம் அழுவாங்க என்று நினைத்து கூட பார்க்கலை.” என்றதற்க்கு.

“நான் உன்னை தப்பா நினைக்கலை சத்யா...எப்போதும் நினைக்கவும் மாட்டேன்.” அந்த வார்த்தையைய் கேட்டதும் தான் சத்யாவுக்கு நிம்மதியாக ஆனாது.

ஆதித்யாவின் சோர்ந்த முகத்தை பார்த்து “அப்போ ஏன் தலைவா உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு.”

“ தாமரையைய் நினைத்து தான் சத்யா. நான் பக்கத்தில் இருந்தேன் என் முகத்தை கூட பார்க்க மாட்டேங்கிறா….அவள் பாட்டியைய் பத்தி என் கிட்ட ஒன்றும் கேட்க மாட்டேங்கிறா….ஏன் இப்போது உன்னிடம் அழுதாள் இல்லையா….?அதை ஏன் என்னிடம் செய்யவில்லை. என்னை அவள் தூர விலக்கி தான் பார்க்கிறாள் சத்யா.” என்ற ஆதித்யாவின் பேச்சு அனைத்தும் சரி தான் என்று சத்யாவுக்கு தோன்றியது.

இருந்தும் ஆதித்யாவை சமாதானம் படுத்தும் நோக்குடன் “தாமரை என்னிடம் அழுதாங்க என்றால் நானும் வேலைகாரன் அவங்களும் இங்கு வேலை செய்பவரின் பேத்தி அந்த முறைக்கு அழுது இருப்பாங்க தலைவா….நீங்க தாமரை மீது ஆசை படுறது அவங்களுக்கு எப்படி தெரியும்.” என்று கேட்டவனிடம்.

“ நீ சொல்றதும் ஒரு வகையில் சரி தான் சத்யா.” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வள்ளியம்மாவின் “தம்பி ” என்ற அழைப்பில் இருவரும் வள்ளியம்மாவை திரும்பி பார்க்க.

அங்கு வள்ளியம்மா மூச்சி விட கஷ்டப்பட்டவராக தன் கைய் அசைவில் ஆதித்யாவை வா என்று அழைக்க.

அதை புரிந்துக் கொண்ட ஆதித்யா வள்ளியம்மாவின் அருகில் சென்று அவர் கையைய் பிடித்துக் கொண்டு “கவலை படாதே வள்ளியம்மா ஹாஸ்பிட்டலுக்கு போயிடலாம். அப்புறம் எல்லாம் சரியாயிடும்.” என்று அவருக்கு ஆறுதல் படுத்த.

ஒரு விரக்தி புன்னகையை முகத்தில் பரவ விட்ட வள்ளியம்மா “தம்பி எனக்கு படிப்பு அறிவு இல்லை தான். ஆனால் என் உடம்பை பத்தி எனக்கு தெரியாதா…?.தம்பி. எனக்கு என்ன நோயின்னு தெரியலை. ஆனால் ரொம்ப பெரிய நோய் என்று மட்டும் என் பேத்தி முகத்தை பார்த்து கண்டு பிடிச்சிட்டேன்.

அவள் முகத்தை தான் என்னால் கண் கொண்டு பார்க்க முடியலை தம்பி. நான் போவது பத்தி எனக்கு கவலை இல்லை. ஆனால் என் பேத்தியைய் ஒருத்தன் கையில் பிடித்து கொடுத்துட்டு போயிடனும் என்று நினைத்திருந்தேன்.அதை நிறைவேற்றாமல் போவது தான் எனக்கு வேதனையாக இருக்கு.” அவர் பேச பேச அவர் மூச்சி அதிகம் வாங்குவதை பார்த்த ஆதித்யா.

“ அதிகம் பேசாதீங்க வள்ளியம்மா மூச்சி வாங்குது பாருங்க. நான் இருக்க அப்படியே விட்டு விடுவேனா….” அவன் என்னவோ வள்ளியம்மாவை உயிரை அவ்வளவு சீக்கிரம் போக விட்டு விட மாட்டேன் என்ற அர்த்ததில் தான் சொன்னான்.

ஆனால் அதை வள்ளியம்மா வேறு விதமாக புரிந்துக் கொண்டு “எனக்கு தெரியும் தம்பி. என் பேத்திக்கு நான் இல்லை என்றாலும் நீங்களே ஒரு நல்ல பையனா பார்த்து கட்டி கொடுத்துடுவீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது தம்பி.”

என்று அவர் பேச பேச என்ன நான் தாமரைக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டி கொடுப்பதா...இதோ என் தம்பி போல் கருதும் சத்யாவிடம் தாமரை அழுததுக்கே என்னால் தாள முடியலே.

அப்படி இருக்கும் போது நானே என் தாமரைக்கு மாப்பிள்ளை பார் என்று அவர் பாட்டியே ஆனாலும் வள்ளியம்மா தன்னிடம் சொன்னதை கேட்டதும் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டவன் எதுவும் பேசவில்லை.

தான் கேட்டதுக்கு எந்த பதிலும் சொல்லாது இருக்கும் ஆதித்யாவை தலை நிமிர்த்தி பார்த்த வள்ளியம்மா ஆதித்யாவின் முகம் இறுகி இருப்பதை பார்த்து “என்ன தம்பி நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா….?” என்று கேட்டவர்.

ஏதோ நினைத்தவராய் “தம்பி நீங்க நல்ல மாப்பிள்ளையா பார்த்த மட்டும் போதும். தாமரைக்கு உண்டான நகை அப்புறம் கொஞ்சம் பணம் தாமரை மீது போட்டு இருக்கேன்.” என்று சொல்லி விட்டு திரும்பவும் ஆதித்யாவை பார்க்க.

வள்ளியம்மாவின் இப்பேச்சில் சட்டென்று கண் முழித்து பார்த்தவன். அவர் கையைய் விடாது “வள்ளியம்மா நான் பணத்துக்கு பார்ப்பவனா...இந்த அளவுக்கா என்னை நினைச்சிட்டு இருக்கீங்க.” என்ற கேள்விக்கு.

“இல்லை தம்பி நீங்க பணதுக்கு பார்ப்பவர் இல்லை என்று எனக்கு நல்லா தெரியும்.ஆனால் நான் கேட்டதுக்கு ஒன்றும் சொல்லாது இருக்கவும் தான் நான் இப்படி பேசினேன்.” என்று அவர் பேச பேச இன்னும் மூச்சி தான் வாங்கியது.

அதை பார்த்த ஆதித்யா “ வள்ளியம்மா நீங்க ஒன்றும் சொல்ல வேண்டாம் எல்லாம் நான் பார்த்துக்குறேன்.” என்று சொன்னவன்.

சத்யாவிடம் “தாமரை என்ன செய்றா என்று பாரு.” என்று சொன்னவன்.

என்ன நினைத்தானோ இல்லை நானே போய் பார்க்கிறேன் என்று வள்ளியம்மாவின் பிடித்த கையைய் விட பார்க்க. ஆனால் வள்ளியம்மா ஆதித்யாவின் கையைய் விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டவர்.

“வேண்டாம் ஆதித்யா தம்பி நான் ஹாஸ்பிட்டலுக்கு வரலை. எனக்கு என்னவோ பண்ணுது. நான் போவதற்க்குள் எனக்கு ஒரு உறுதி மட்டும் கொடு தம்பி. அந்த நிறைவோடு நான் போறேன்.” என்ற வள்ளியம்மாவின் பேச்சும் முகமும் ஆதித்யாவுக்கு ஏதோ உணர்த்த.

அவர் கையை இன்னும் கெட்டியாக பிடித்துக் கொண்டு ஏதோ பேச வர அப்போது தான் ஹாஸ்பிட்டலுக்கு தேவையானதை அனைத்தையும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு அங்கு வந்த தாமரை ஆதித்யாவையும் தன் பாட்டியையும் புரியாது பார்க்க.

சத்யா என்ன நினைத்தானோ சட்டென்று தாமரையின் கையைய் ஆதித்யாவின் மற்றொரு கையில் வைத்து விட்டு “உங்கள் பேத்தியை பற்றி நீங்க கவலையே படாதீங்க வள்ளியம்மா. உங்கள் ஆசைப்படி தாமரைக்கு எல்லாமுமாய் தலைவர் இருப்பார்.” என்று சொன்னவனின் பேச்சை கேட்ட ஆதித்யா அதிர்ச்சியுடன் சத்யாவை பார்க்க. தாமரை குழப்பத்துடன் பார்த்தாள்.

ஆனால் வள்ளியம்மாவோ தான் கேட்ட வாக்குக்கு தான் அப்படி சத்யா சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டாரோ என்னவோ ஒரு புன் சிரிப்புடன் தன் பேத்தியைய் பார்த்துக் கொண்டே தன் கண்ணை நிறந்தரமாக மூடிக் கொண்டார்.
 
:love: :love: :love:

பாட்டி கேட்டாங்கனு சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திவிட்டானே இந்த சத்யா........
தாமரைக்கு புரிந்ததா இல்லையா??
 
Last edited:
Top