Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-18

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??






எவ்வளவு நேரம் நின்றாளோ அவளுக்கே அது தெரியவில்லை....அதை மறுபடியும் எடுத்து பார்த்தவள் அதை அப்படியே உள்ளே வைத்து பூட்டி விட்டு கீழே வந்து சிறிது அன்னாசி பழ கேசரியும் பஜ்ஜியும் செய்து டீ போட்டு முடித்து வர ஹர்சித்தும் குழந்தைகளை அழைத்து உள்ளே வந்தான்...

அவனுக்கு சிற்றூண்டியை குடுத்து விட்டு குழந்தைகளை குளிக்க வைத்து உடைமாற்றி விட்டு பால் மற்றும் சிற்றூண்டியை அருந்த வைத்து அவளும் அவர்களுடனே சாப்பிட்டாள்....

"அம்மா....கேசரி....ரொம்ப நல்லாயிருக்கு..."கார்த்திக்

"இல்ல.....பஜ்ஜி தான் ரொம்ப நல்லாயிருக்கு...."காவ்யா

"ஓகே....இரண்டும் நல்லாதான் இருக்கு...சாப்பிடுங்க"என்றுவிட்டு ஹர்சித்தை பார்க்க அவன் சிரிப்புடன்"நானும் குழந்தைகள் மாதிரி சொல்லனும்னு எதிர்பார்க்கர போல"என்றான்....

தெரிதுல....அத சொன்னாத என்ன?....

என்ன???இப்படி பதிலுக்கு பதில் லாம் பேசுற....ஆச்சர்யமா இருக்கே....

இனி அப்படி தான் பேசுவேன்.....

என்ன திடீர்னு மாற்றம்?...

ஏன்னா...இது என் வீடு...என் கணவன்...என் குழந்தைங்க....

ஓஓஓஓஓ.....இப்ப என்ன ...நான் சொல்லனும்...அவ்வளவு தான....

ம்ம்ம்....

"டீ,பஜ்ஜி,கேசரிய விட அத குடுத்த பொண்ணுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...."கூறி கண்ணடித்தான்...

குப்பென்று முகம் வெட்கத்தால் சிவக்க திரும்பி குழந்தைகளை பார்க்க அவர்கள் ஏதோ பேசியபடி சாப்பிட்டு கொண்டிருக்க அதன்பின் அவன் முகத்தை பார்க்க முடியாமல் எழுந்து செல்ல அவன் விசிலடிக்க நின்று பார்த்து விட்டு சமையலறைக்குள் சென்று விட்டாள்....

---------------

மறுநாள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வந்தவன் அலுவலகம் செல்லாமல் உட்கார்ந்து இருந்தான்...

பார்த்தாலும் ஏன் என்று கேட்காமல் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்...

சிறிது நேரத்தில் கற்பகமும் கணேசனும் வந்தனர்....ஸ்வேதா மறுபடியும் உண்டாகி இருப்பதாய் கூறினர்...காபி குடித்ததும் கணேசனும் ஹர்சித் தும் அலுவலகம் கிளம்பினர்....

கிளம்பும் முன் அவன் அம்மாவிடம் பெருவிரலை காட்டிவிட்டு சென்றதை மகிழினியும் கண்டிருந்தாள்.....

அவள் துணிகளை மாடியில் உலரவைத்து விட்டு வர கற்பகம் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்....

அவருக்கும் தனக்கும் காபி போட்டு அவருகே வந்தமர்ந்து அவருக்கு தந்து தானும் குடித்தாள்.....

எப்படி ஆரம்பிப்பது என்று அவர் யோசனையாய் இருந்தார்...

"அத்த.. "...

அவர் அலைபேசி சிணுங்கியது... எடுத்துப் பார்த்தப்படி" என்னமா...."என்றார்.

உங்கட்ட ஒன்று சொல்லனும்...."என்றாள் மகிழினி.


ம்ம்ம்...சொல்லுமா....என்று தன் அலைபேசியை டேபிளில் வைத்தார்...

அத்த... கார்த்திக் மற்றும் காவ்யா பிறப்பு சான்றிதழில் தாயின் பெயரில் என் பெயர் தான் இருக்கு....

ரொம்ப சந்தோசம் மா...

எனக்கு ஒரு பயம் எப்பவும் இருந்துட்டே இருந்தது அத்த....எப்பவாவது எனக்கும் குழந்தைகளுக்கும் சம்மந்தம் இல்லனு ஆகிருமோ என்று.... ஆனால் இப்ப பாருங்க.....இனி யாரும் எதுவும் பண்ண முடியாது....இவங்க ரெண்டு பேரும் என்னோட குழந்தைகங்க தான்....

ஆமாம்மா...அவங்க எப்போதும் உன் குழந்தைகள் தான்...

இவங்க இப்படி ரெடி பண்ணிருப்பாங்கனு எனக்கு தெரியாது அத்த....நேத்து லாக்கர்ல இரண்டு பேரோட பிறப்பு சான்றிதழ்களை பார்த்ததும் தான் தெரிந்தது....

ம்ம்ம்ம்.....

உங்களுக்கு இது முன்னாலே தெரியுமாத்த?

ஆமாம்மா....தெரியும்...நீ வந்த கொஞ்ச நாள்களிலே ரெடி பண்ணி கொண்டு வந்து காட்டினான்...

ஓஓஓ....என் மேல் இருக்கிற நம்பிக்கைல தான இத நீங்களாம் பண்ணுவீங்க... கடைசி வரை அத நான் காப்பாற்றுவேன்....

ம்ம்ம்...சரிம்மா....

(அப்போ இத பார்த்த பிறகு தான் நேற்று சாயங்காலம் இவளிடம் மாற்றம் தெரிஞ்சிருக்கா....-நினைத்தது ஹர்சித்தே தான்.....[அவன் தான் கற்பகத்திற்கு குறுஞ் செய்தி அனுப்பிருந்தான்....அவன் ஏற்கனவே கண்ணைவேற காட்டிருந்தான்ல]....அவரை கால் செய்து அலைப்பேசியில் அவனை இணைப்பில் வைத்து விட்டு பேசுமாறு கூறியிருந்தான்)


ஏன் அத்தை??ஒரு மாதிரி இருக்கீங்க??ஏதாவது செய்யுமா???...

இல்லமா....நல்லாத் தான் இருக்கிறேன்...நீ சொல்லு மா.....


உங்கட்ட கொஞ்சம் கேட்கனும் அத்தை...

கேளும்மா....

உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சி???

அப்பாடா....நானே இத எப்படி தொடங்கனு தெரியாம இருந்தேன்....இவளே கேட்டுட்டா....மனதினுள் தான்...
நான் காலேஜ் சேர்ந்து மூன்று மாதங்களில் எனக்கு திருமணம் நடந்துவிட்டது.....

இவங்க நல்ல வசதியானவங்க .....உங்க மாமாவும் நல்லா படிச்சி வேலைல இருந்ததுனால வீட்டில் பிடிச்சிபோச்சி....முதல்ல நான் எவ்வளவோ மறுத்தேன்...வீட்ல ஒத்துக்கல....சரின்னு நிச்சயத்தில் தான் உங்க மாமாவ பார்த்தேன்....பார்த்ததும் பிடிச்சிருந்துச்சி....முப்பது நாள்ல திருமணம்..... திருமணம் முடிந்து நேரே பத்தாவது மாதம் எனக்கு இரட்டையர்கள் பிறந்தாங்க....சரவணன் &சங்கர்....

அப்போ ஹர்சித்?????....ஏதோ ஒன்னு பெரிதாக வரப்போதுனு மனசு சொல்ல
அவர் கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டாள்....

அவன் என் பிள்ளதான்மா....ஆனா நான் பெத்து எடுக்கல....

ஓஓஓஓஓ...அவங்க எப்படி உங்கட்ட வந்தாங்க??

இரட்டை குழந்தைகள் னால என்னால் மேற்க்கொண்டு படிக்க முடியல.... இருவருக்கும் ஒரு வயது வரை எங்கேயும் போனதில்லை....

அவங்க பதினைந்தாவது மாதத்தில் ஊருக்கு போயிட்டு குழந்தைகளுக்கு மொட்டை போட்டுட்டு திரும்பி வந்திட்டு இருந்தப்போ சிவகாசி பக்கம் ஒரு வண்டி கவிழ்ந்திருந்தது....

போய் பார்த்தா ஆறுபேர் இருந்தாங்க.... எல்லாருக்கும் அடி....யாரிடமும் அசைவில்லை.....ஒரு பொண்ணு மட்டும் முனங்கிட்டு இருந்தது....அவருகே போய் பார்த்தா"என் குழந்தை"னு மட்டும் தான் அவளால் பேச முடிந்தது.... அப்படியே பேச்சு மூச்சு நின்னுட்டு...

அங்க சுத்தி பார்த்தப்போ மூன்றர வயதில் ஒரு ஆண் குழந்தை விழுந்து கிடந்தது....எடுத்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம்....குழந்த பிழைச்சிகிட்டு....அந்த வண்டி நம்பர் வச்சி அந்த குழந்தையோட வீட்டு முகவரி கண்டுபிடித்து போய் குழந்தையை ஒப்படைச்சா அவன ஏத்துக்க யாருமில்லை...அப்புறம் முடிவு பண்ணி நாங்களே எங்க முதக் குழந்தையா வச்சிக்கிட்டோம்.... இன்னைக்கு வர அவன் யாரும் தேடி வந்ததேயில்லமா....வரவும் கூடாது னு தினமும் வேண்டிப் பேன்.... மூன்று பிள்ளைகளையும் ஒரே மாதிரி தான் பார்த்துக்கிட்டோம்....

அவங்களுக்கு இது தெரியுமா அத்த???

தெரியும்மா..

அச்சோ!!!தெரிஞ்சப்போ நீங்களும் அவங்களும் ரொம்ப தவிச்சி கஷ்டப்பட்டீர்ப்பிங்கிளே???எப்படி தெரிஞ்சிச்சி?

உங்க மாமாக்கு ஹர்சித் காலேஜ் படிச்சிட்டிருக்கும் போது ஒருதடவை ஆக்சிடன்ட் ஆச்சிமா???நிறைய இரத்தம் போய்ட்டு.....இரத்தம் தேவை னு வந்தப்போ அவனிது பொருந்தல‌....முதல்ல அவன் அதை கவனிக்கல... திடிரென்று ஒரு நாள் அவன் வந்து கேட்டப்போ என் மூச்சே நின்னுட்டு....அப்போ உங்க மாமா தான் பக்குவமா எடுத்து சொல்லி புரியவச்சாங்க....அவன் எங்கள் புரிஞ்சிகிட்டான்....எங்கள் விட்டுட்டு போக மாட்டேன்னு சொன்னான் ம்மா....

அவங்கள இப்படி நல்ல பிள்ளையா வளர்த்துருக்கீங்க அத்த.....

ம்ம்ம்....

அப்புறம் என்னாச்சி??அதாவது சங்கருக்கு என்னாச்சி??

காலேஜ் கடைசி வருஷம் பிராஜக்ட் க்காக பெங்களூர் போய்ருந்தப்போ ஆக்ஸிடென்ட் ஆகி அங்கே அவன் உயிர் போய்ட்டும்மா....

கொஞ்ச நாள்ல ஹர்சித் அனுசியாவ திருமணம் செய்து கூட்டிட்டு வந்தான்...ஒரு வாரத்துல தனி வீட்டுக்கு போய்ட்டான்.....
அதற்கு பிறகு அங்க வந்து தங்குறதே இல்ல....என்னையும் இங்க வந்து இருக்க விடறதுமில்லம்மா....

இவன் வீட்ட விட்டு போய் நான்கே மாதத்தில் சரவணன் ஸ்வேதாவ விரும்புறேன்னு சொல்ல இரண்டு மாசத்தில திருமணம் நடந்தது...அனுசியா வரவேயில்ல... ஹர்சித் மட்டும் தான் வந்தான்....அவளுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறாள்னு சொன்னான்...அதற்கு அப்புறம் எங்க இரண்டு பேரையும் குழந்தைகள் பிறந்துட்டாங்கனு சொல்லி ஆஸ்பிட்டலுக்கு வரச் சொன்னான்...போய் பார்த்தா அனுசியா க்கு உடம்பு முடியாம போய்ட்டுனு தெரிஞ்சிச்சி.....

உள்ளே போய் பார்த்தப் போ என்ன மன்னிச்சிருங்க....நான் செய்த பாவத்திற்கு தண்டனையாத்தான் இத நான் நினைக்கிறேன்...ஆனா இன்னும் என் பாவக் கணக்கு முடில....அதுக்கு நீங்க எனக்கு ஒரு உதவி செய்யனும்....நாளைக்கு இரவுக்குள்ள ஒரு பொண்ண அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்....உங்க புள்ள இன்னொரு கல்யாணத்துக்கு ஒத்துக் கிட்டார்...வரப்போறவ ஒரு நல்ல பொண்ணா எங்க குழந்தைகள அவக்குழந்தைங்க மாதிரி பார்த்துப்பா....எனக்கு கடைசியா செய்ய வேண்டிய எந்த இறுதிச்சடங்குகள் அவங்க செய்யக் கூடாது....என்ன மறுபடியும் மன்னிக்கும்படி கேட்கிறேன்னு சொன்னா.... எங்களுக்கு எதுவும் புரியலமா... கொஞ்சம் நேரத்தில் அவள் உயிர் பிரிஞ்சிட்டு....

என்ன செய்யனு தெரியாம ஹர்சித் ட்ட கேட்டப்போ கல்யாணம் பண்ணிக்கிறேன்...ஆனால் அந்த பொண்ணால குழந்தை பெற்றுக் கொள்ள முடியாம இருக்கனும்னு கண்டிசன் போட்டான்....

என்ன நடந்துச்சுனு கேட்டாலும் சொல்லமாட்டேனு சொல்லிட்டான்....எங்களுக்கும் எதுவும் புரியல....அனுசியா கடைசி ஆசையை நிறைவேற்றுவோம்னு முடிவுபண்ணுணோம்...

அவங்க வீட்டுக்கு தகவல் சொன்னோம்...அவங்க அம்மா மட்டும் தான் வந்தாங்க....இறுதி காரியத்தை ஹர்சித் பண்ணக்கூடாது னு சொல்லிருக்கானு சொல்ல என்னிடமும் போன்ல பேசினாள்,அவ அண்ணன் இப்போ வருவான்னு சொன்னாங்க...அவன் தான் இறுதி காரியம் எல்லாம் செய்தான்....

உன் மாமா தான் உடனே அவங்க நண்பனுக்கு கால் செய்ய அவங்க மனைவி உன்ன பத்தி சொல்லி வீட்டுக்கு வரச் செய்தாங்க.....அப்புறம் தான் உனக்கே தெரியுமே......


அவளால் எதுவுமே பேசமுடியவில்லை..... இதெல்லாம் கேட்டு இன்னும் அவள் அதிலிருந்தே வெளி வரவில்லை....

அவளாக வெளியேவரட்டும் என்று அவர் அமைதியாக இருந்தார்....அவர்க்கு இப்போ தான் ஹர்சித் அலைபேசி இணைப்பில் இருப்பது தக்ஷநியாபகம் வர அதை எடுத்து துண்டித்தார்.....

சிறிது நேரம் கழித்து,நீங்க எல்லாம் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சிருக்கீங்க....என் கஷ்டம் தான் பெரிசுனு நினைத்துக் கொண்டிருந்தேன்.... வாழ்க்கைல கஷ்டமில்லாதவங்களே இல்லலத்த....


ஆமாம்மா... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம்மா...கஷ்டத்தை நினைத்து வாழ்ற வாழ்க்கைய நரகமாக்க கூடாது.....இதுவும் கடந்து போகும் என்று அடுத்த வேலைய பாக்க போய்ரனும்மா....

சமையலறைல வேற ஏதுவும் வேலை இருக்காம்மா???

இல்லத்த.....நேரம் ஆகிட்டு....சாப்டுறீங்களா?

அவங்க இரண்டு பேரும் இங்க சாப்பிட வருவாங்கல...சேர்ந்தே சாப்பிடுவோம்...


சரித்த....நான் போய் அப்பளம் பொறிக்கிறேன்.....என்று சமையலறை சென்றாள்...

அப்போது மதிய உணவுக்கு ஹர்சித்தும் கணேசனும் வந்தனர்....


அனைவரும் சேர்ந்து உண்டப்பின் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினர்...



உள்ளம் வசமாகுமா???
 
Last edited:
Nice ud dear.
In your story narration if it is mind voice '........'
If it is a conversation "..........."
Present like dear then there won't be any confusion, and narration will be clear.
Oh! Hardhith adopted child ??
Ippo than konjam spicy ah irruku. Nice. Authore oru padu twist and turn vachu kalakkureengo. Interesting.
 
Nice ud dear.
In your story narration if it is mind voice '........'
If it is a conversation "..........."
Present like dear then there won't be any confusion, and narration will be clear.
Oh! Hardhith adopted child ??
Ippo than konjam spicy ah irruku. Nice. Authore oru padu twist and turn vachu kalakkureengo. Interesting.
மிக்க நன்றி சகோதரி ?...
நீங்க சொன்னதை நான் follow செய்கிறேன்...
தெளிவாக சொன்னதற்கு நன்றி சகோதரி....
நீங்க இப்படி எனக்கு சொல்றது தான் நிஜமாவே ஹப்பி...இதைத்தான் என்னோட best comment ஆ feel பண்றேன்...
தொடர்ந்து வழி நடத்துங்கள் Leenu சகோதரி...

ஆமாம்....அவன் அடாப்டட் பேபி தான்...
மிக்க நன்றி சகோதரி ??? ‌‌..‌.
 
நல்லா இருக்கு பதிவு
அவன் வளர்ப்பு குழந்தைனு
தெரியுது

சங்கர் மறைவுக்கும்
இவன் கல்யாணத்துக்கும்
ஏதோ சம்பந்தம் இருக்கு போல
 
Top