Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரம்யா ராஜனின் அனிதாவின் அப்பா 3 2

Advertisement

Admin

Admin
Member

“மனசு வரமாட்டேங்குது தேவ். பிருந்தாவை என்னால மறக்க முடியலை டா....”

“உன்னை யாருடா மறக்க சொன்னா.... இன்னொரு கல்யாணம் தான் பண்ணிக்கச் சொல்றோம்.”

“இந்தப் பேச்சை விடு....” என்ற ஹரி சென்று அனிதாவை அழைத்துக் கொண்டு வர.... தேவ் அவர்களை உணவகத்திற்குள் அழைத்துச் சென்றான்.

அங்கிருந்த டேபிளில் அனிதாவை வசதியாக உட்கார வைக்க..... அவள் ஸ்பூனால் உணவை அழகாக எடுத்து சாப்பிட்டாள். ஸ்பூன் பெரிதாக இருந்ததால்....அவள் குஞ்சு வாய்க்குள் பாதி உணவு தான் சென்றது, மீதி அவள் தட்டிலேயே விழுந்தது. ஹரி அதை ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

பிருந்தாவை பற்றியே மனசுக்குள் ஓடிக்கொண்டு இருந்ததால் ஹரி சாப்பிடாமல் இருந்தான். அதைக் கவனித்த அனி “நீங்க சாப்பிடலையா...” என்றதும்,

“இதோ...” என்ற ஹரி தானும் சாப்பிட்டு அனிதாவுக்கும் ஊட்டி விட... இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

ஹரி அனிதாவுக்கு மட்டும் ஐஸ்கிரீம் வரவழைத்தான். அதைப் பார்த்தவள் “உங்களுக்கு...” எனக் கேட்க “எனக்கு வேண்டாம் நீ சாப்பிடு....” என்றதை பொருட்படுத்தாமல் அவனுக்கு ஸ்பூனால் அள்ளிக்கொடுக்க.... ஹரி கண் கலங்க அதை வாங்கிக்கொண்டான்.

தேவ் இதையெல்லாம் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். பிருந்தா இறந்ததில் இருந்து ஹரி இனிப்பே தொட மாட்டான். இன்று அனிதா கொடுக்கவும் தான் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறான்.

ஹரி அனிதா மீது பாசம் வைப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் அனிதாவுக்கு ஏன் ஹரியின் மீது இவ்வளவு பாசம் என்றுதான் புரியவில்லை.... அவளுக்கு அவள் பெற்றோர் இருக்கும் போது....ஹரியின் மீது ஏன் இந்தத் தனிப் பட்ட பாசம்? என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

அங்கிருந்து கிளம்பும் போது “இன்னும் ஒரு தடவை விளையாடிகட்டுமா.... ப்ளீஸ்.” அனி கொஞ்சலாகக் கேட்க.... பொய்யாக முறைத்தாலும் ஹரி அவளைக் கீழே இறக்கி விட்டவன் “சீக்கிரம் வா...அம்மா தேடுவாங்க.” என்றான்.

“ஏன் அப்பா தேடமாட்டாங்களா...” தேவ் சும்மா ஒரு ரைமிங்காகக் கேட்க.....

“இருந்தா தானே தேட.... இப்படி ஒரு பொண்ணு இருக்கிறதே அவனுக்குத் தெரியாது. அப்புறம் எங்கிருந்து தேட....”
ஹரி சொன்னதைக் கேட்ட தேவ் அதிர்ந்து நிற்க....




அனிதாவை பற்றிச் சுருக்கமாகச் சொன்ன ஹரி “நான் ஏன் இதை உன்கிட்ட சொல்றேன்னா.... இனி நாங்க இங்க அடிக்கடி வருவோம். அப்ப நீ எதுவும் அனிதா கிட்ட அவங்க அப்பா பத்தி பேசக்கூடாது. அதுக்குத்தான்.” என்றான்.



செல்லும் வழியிலேயே அனி தூங்கி வழிய.... ஹரியால் அவளை வைத்துக்கொண்டு வண்டி ஓட்ட முடியவில்லை.... கீழே விழுந்து விடுவாளோ என்று வேறு பயமாக இருந்ததால்.... வண்டியை அங்கிருந்த ஒரு கடையின் முன்பு நிறுத்தி பூட்டியவன், அனியை தூக்கிக்கொண்டு சென்று அந்த வழியே வந்த ஆட்டோவில் ஏறினான்.

அனி அவன் மீது வசதியாகச் சாய்ந்து தூங்கிக் கொண்டு வந்தாள். அவளின் வீட்டின் முன்பு ஆட்டோவில் இருந்து இறங்கியவன், ஆட்டோவை அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு, அவளின் வீட்டிற்குச் செல்ல மாடி ஏறினான்.
ஆட்டோ சத்தத்தில் மாடியில் இருந்து எட்டி பார்த்த மீனா ஹரி அனியை தூக்கிக்கொண்டு வருவதைப் பார்த்தவள், வேகமாகச் சென்று அவனை வரவேற்றாள்.

“சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.” என்றபடி வந்த ஹரியை விஸ்வம் “உள்ளே வாங்க...” என்று அழைத்ததும், அவன் அனியோடு உள்ளே சென்றான்.

மொத்தமே அந்த வீட்டில் ஒரு ஹாலும் சிறய சமையல் அறை அதோடு ஒரு குளியல் அறையும் தான் இருந்தது. ஹாலில் ஒரு பக்கம் மளிகை சாமான்கள் பாக்கெட் போட்டபடி இருக்க... மறு ஓரமாகப் போடபட்டிருந்த கட்டிலில் ஹரி அனியை படுக்க வைக்க.... மீனா சென்று மகளின் ஷூவை கழட்டினாள்.

“வண்டியில வரும் போதே தூங்கிட்டா.... அது தான் ஆட்டோவில் வந்தேன்.”

“ஆமாம் அவ எப்பவுமே எட்டு எட்டரைக்கு எல்லாம் தூங்கிடுவா...உங்களுக்குத் தான் வீண் சிரமம்.” மீனா சொல்ல....

“இல்லை அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.... நாங்க நல்லா என்ஜாய் பண்ணோம். ரொம்பத் தேங்க்ஸ் அனியை என்னோட நம்பி அனுப்பினதுக்கு...”

ஹரி வேண்டுமென்றே நம்பி என்ற வார்த்தையை அழுத்தி சொல்ல.... மீனவுக்கும் அவன் ஏன் அழுத்தி சொல்கிறான் என்று புரிந்து தான் இருந்தது.

“சாரி, நான் உங்களைத் தப்பா நினைச்சு அன்னைக்கு வரலை... எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது தான....”

“கண்டிப்பா... முதல்ல கோபம் வந்தாலும், அப்புறம் யோசிக்கும் போது நல்லதுன்னு தான் தோனுச்சு... இனி என்னை நம்பி அனியை அனுப்புவீங்கள்ள...” என்ற ஹரி விடைபெற்று கிளம்ப... அவனுடன் விஸ்வமும் கிளம்பினார். மீனா அவர்கள் சென்றதும் கதவை தாழிட்டுக் கொண்டாள்.

“நீங்க அவங்களோட இல்லையா...” ஹரி கேட்க....

“இல்லை... நான் என் பையன் வீட்ல இருக்கேன்.”

“ஓ... சரி சார் நான் வரேன்.” என்றபடி ஹரி விடைபெற்றுச் சென்றான்.
அன்று இரவு வீட்டில் தங்கள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தேவ், இன்று ஹரி அனியோடு ஹோட்டலுக்கு வந்த கதையைச் சொன்னதும்.

“தெரியும் இப்ப நீ என்ன நினைக்கிறேன்னு நான் சொல்லட்டுமா....” தீப்தி அவனைக் கிண்டலாகப் பார்க்க....

“என்ன தெரியும் உனக்குச் சொல்லு பார்க்கலாம்.” என்றான் தேவ்.

“ஹரிக்கு மீனாவை கல்யாணம் பண்ணி வச்சிட்டா.... அனிக்கும் அப்பா கிடைக்கும்ன்னு தானே நினைக்கிறே....”

“கரெக்ட்டா சொன்ன டி செல்ல குட்டி....” தேவ் தீப்தியை கொஞ்ச... தீப்தி அவனைத் தள்ளி விட்டாள்.

“தெரியும், நீ இப்படித் தான் லூசு மாதிரி யோசிப்பேன்னு.... அவங்க ஒன்னும் கல்யாணம் ஆகாத சின்னப் பசங்க இல்லை... நீ கோர்த்து விட்டதும் சேர.... அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில ஏற்கனவே இன்னொருத்தரோட வாழ்ந்தவங்க. அதுவும் ரெண்டு பேரும் கஷ்டபட்டிருக்காங்க ”

“இப்படிச் சட்டுன்னு எல்லாம் முடிவு எடுக்க முடியாது. அதுவும் அப்படி முடிவு எடுத்தாலும் அது ஹரியும், மீனாவும் எடுக்க வேண்டியது. அதனால் நீ கொஞ்சம் அடங்கி இரு.... இப்ப தானே பேச ஆரம்பிச்சிருக்கங்க கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம். நீ எதாவது ஹரிகிட்ட அவசரப்பட்டு உளறாத.... அப்புறம் அவன் முறுக்கிப்பான். புரிஞ்சுதா...”

தீப்தி சொல்வது சரிதான் என்பதால் தேவ்வும் அதை ஒத்துக்கொண்டான்.



“தீப்தி, இன்னைக்கு ஹரியையும் அனிதாவையும் பார்க்க உண்மையா அப்பா பொண்ணு போலத்தான் இருந்தாங்க. அவங்க ஒரு குடும்பமா ஆனா நல்லாயிருக்கும். பார்க்கலாம் என்ன எழுதி வச்சிருக்குன்னு....”

தேவ்வும் தீப்தியும் ஆசைப்பட்டது போல் ஹரியிடமோ மீனாவிடமோ எந்த முன்னேற்றமும் இல்லை. ஏனென்றால் அதன் பிறகு அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை....

ஹரியை பற்றித் தெரிந்ததால்.... மீனாவுக்கு அவன் மீது இறக்கம் ஏற்பட்டது. பாவம் அவனுக்குத் தான் யாருமில்லையே... குழந்தையோட இருந்திட்டு போகட்டுமே என்று நினைத்தாள். அதோடு அவன் மீது முழு நம்பிக்கையும் இருந்ததால்... அனி அவனோடு பழகத் தடை எதுவும் சொல்லவில்லை....

அதுவும் அலுவலகம் முடிந்து வந்து வீட்டில் வேலை பார்க்க விடாமல் முன்பெல்லாம் அனி அவளைத் தொல்லை செய்வாள். இப்போது ஹரியோடு இருப்பதால்.... நிம்மதியாக வேலை பார்க்க முடிந்தது. அதிகம் சம்பாதித்தால் மகளின் எதிர்காலத்திற்கு இன்னும் சேமிக்கலாமே என நினைத்தாள்.

“அனி குட்டி சார் கிட்ட அது வேணும் இது வேணும்ன்னு கேட்க கூடாது. அவரா எதாவது கொடுத்தாலும் வாங்க கூடாது.” என எச்சரிக்கை செய்தே அனுப்புவாள்.

இரண்டு மூன்று முறை அனிக்கு எதாவது வாங்கிக்கொடுக்க முயன்ற போது... அவள் தன் அம்மா திட்டுவார்கள் என்று மறுத்துவிட்டாள். எதாவது வாங்கிக் கொடுத்து, மீனா இவர்கள் இருவர் பழகுவதற்கும் தடை சொல்லிவிட்டால் என்ற பயத்தில் ஹரியும் உணவைத் தவிர வேறு எதுவும் அவளுக்கு வாங்கித் தருவது இல்லை.

ஹரி மிகவும் சந்தோஷமாக இருந்தான். அனியோடு இருக்கும் நேரத்தை அதிகபடுத்திக் கொண்டான். ஞாயிற்றுக்கிழமைகளில் சீக்கிரமே வருபவன் அனியோடு அவன் அத்தை வீட்டில் இருப்பான். இருவரும் சேர்ந்து டிவியில் கார்ட்டூன் பார்ப்பார்கள்.

சில நேரம் அவளை அழைத்துக்கொண்டு வெளியே சென்று வருவான். எதாவது மால், பார்க் அல்லது தேவ்வின் ஹோட்டல் என்று சுற்றிவிட்டு வருவார்கள். அன்றைக்குப் பிறகு அனியின் வீட்டிற்கு ஹரி சென்றது இல்லை.... கீழே நின்று அனி வந்ததும் அழைத்துக்கொண்டு செல்பவன், திரும்பக் கொண்டு வந்து வாசலிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிடுவான். மீனாவும் மேலே இருந்தே மகள் ஹரியுடன் தான் செல்கிறாளா என்று மட்டும் பார்த்துக்கொள்வாள்.

அவரவர் எல்லையைக் கடக்காமல் பார்த்துக்கொண்டதால்.... எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நாட்கள் சென்றது. ஹரிக்கும் மீனாவிற்கும் இப்படி இருப்பதே சந்தோஷம். ஆனால் அனிக்கு இது மட்டும் போதுமா....

 
???

ஆஹா அனிதாவை அப்பா விஷயத்தில் சீண்டபோறாங்க......
தேவ் அவசரகுடுக்கை...... தீப்தி சரியா பிரேக் போட்டுட்டா.....

மீனாவின் தற்போதைய நிலை முழுதும் தெரிஞ்சாச்சு ஹரிக்கு......
அனிதாவை சந்தோஷமா வச்சுக்க ஹரி என்ன பண்ணுவான்???
 
Last edited:
Top