Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 6

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
hi ladies and girlss.thanks for sharing ur views.....:love::love::love::love::love:stay tuned..
share your views.

here comes the next update of ராஜா ராணி ?
-----------------------------------------------------------------------

காதல் 6:

மதுரவசனியின் வார்த்தைகள் நந்தனின் மனதில் மழைச்சாரலை உண்டாக்கின. அந்த மகிழ்ச்சியோடு இதழ்க்கடையோரத்தில் உதித்த குமிண்சிரிப்போடு, மதுவின் மதி முகம் பார்த்துக் கொண்டே,

“ரகு… வா…. ஃபீஸ் பே பண்ணிட்டு போகலாம்.. டேக் கேர் மது..” என்றபடியே வெளியேறினான். அவனது மனதின் ராணி அவனை ராஜாவாக உணர வைத்தாள்.

அவனது இத்தனை ஆண்டுத் தேடலுக்கான விடையை இன்றுதான் கண்டுக்கொண்டான் நந்தன். அதில் அவனுக்கு அத்தனை உவகை.

தீபனோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவனுக்கு நந்தன் பிரச்சனை செய்யாமல் போனதே பெருத்த மகிழ்ச்சி.

ஹம்சா மதுவை எழுந்திருக்க உதவிச் செய்ய அவள் கட்டிலில் இருந்து இறங்கினாள்.

“…ஹம்சா விடு… நானே நிப்பேன்..”

“அவர்ட்ட இருந்து என் போனை வாங்கித் தா… வேறு எதுவும் கேட்காத….” என்று ஹம்சா மதுவின் காதில் முனுமுனுக்க

அவளிடம் ஆமோதிப்பாய்த் தலையசைத்தவள் தீபனை ,
“சார்..” என அழைக்க

“என்ன மது…?”

“ஹம்சாவோட போன் தாங்க… சார்”

“ஒஹ்….இந்தாங்க…” என்றபடியே அவன் போனை நீட்ட, அவனிடமிருந்து போனை வாங்கிய மது, வெளியே செல்ல முயன்ற தீபனை தடுத்து,

“சார்.. ஒரு நிமிஷம்….. எதுக்காக நீங்க ஹம்சா போனை எடுத்தீங்க….?” என முறைப்போடு கேட்க

‘இவ்வளவு நேரம் அவன்ட்ட மட்டும் தலையாட்டினா… என்னை மட்டும் நிக்க வைச்சு கேள்வி கேட்குது இந்த பொண்ணு… அதுவும் ஹம்சா… முன்னாடி கேட்குது லூசு’ என்று மதுவை மனதில் வைதவன், என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க

“சொல்லுங்க சார்….. நாங்க எங்க ரிலேடிவ்க்குப் போன் செஞ்சா உங்களுக்கு என்ன சார்… எதுக்காக போனை வாங்கினிங்க….?”

“பிரச்சனை ஆகாம இருக்கறதுக்குத் தான்…..மது..”

“என்ன பிரச்சனை…யாருக்கு……உங்களுக்கா…இல்ல நந்தன் சாருக்கா…?” என்று கரெக்டாகப் பாயிண்டைப் பிடிக்க

“ஆமா… அவனுக்காகத்தான்…” எனத் தீபனும் ஒத்துக்கொண்டான்.

“என்ன சார் நீங்க அவருக்குப் பிரச்சனை வரக்கூடாதுன்னு சொல்றீங்க.. அவர் உங்களால தான் பிரச்சனைன்னு சொல்றார்… நீங்க ஏன் அவருக்காகப் பார்க்கனும்..?”

“அண்ணனுக்கு ஒன்னுனா தம்பி பார்க்கனுமில்லயா?”

“என்னது…..?” என்று பெண்டிர் இருவரும் ஷாக் ரியாக்ஷன் தர

“நந்தன் சார் உங்க சொந்த அண்ணனா…?” என்று மது வினவ

“எஸ்… என்னோட சொந்த அண்ணன் தான்.. நந்தன்…… ராஜ்நந்தன்…….” என்றான் ராஜதீபன்.

‘சொந்த அண்ணனாம். ஆனால் நாட்டாமை பட சரத்குமார் மாறி இல்லாம இவனுங்க சேரன் பாண்டியன் சரத்குமார் விஜயகுமார் மாறிதான இருக்கானுங்க……’ என்று மதுரவசனி மூளைக்குள் ஆராய்ச்சி நடத்த,

ஹம்சா அமைதியாகவே இருந்தாள். அவளுக்கு தீபனிடம் பேச விருப்பமில்லை. ஆனால் மங்கையர் இருவர் மனதும் குழம்பி இருந்ததென்னவோ உண்மைதான்.

அவர்களது மௌனத்தை உணர்ந்தவன் , சின்னக்குரலில்

“கொஞ்சம் ஃபேமிலி இஷ்யூஸ்… அதான்………” என்று சொல்ல மதுவுக்கும் ஹம்சாவுக்கும் என்ன சொல்வதென்று புரியவில்லை. சொல்லவும் எதுவுமில்லையே...!!

இருந்தும் கூட மது, “ஒஹ்…சாரி….சார்…..” என்று வருத்தம் கொள்ள

“இட்ஸ் ஒகே மது…. உன் மேல தப்பு இல்ல… இன்னிக்குக் கூட உன்னோட கண்டிஷனுக்கு நாங்க தான் காரணம்.. ஐ அம் சாரி..” என்று மனதார மன்னிப்புக் கேட்டான்.

அதன்பின் இருவரையும் அவர்கள் இல்லத்தில் தன் காரில் இறக்கி விட்டு விட்டு ராஜதீபன் ஆபிஸ் சென்றான்.

இரவு ஏழு மணிக்கு நன்றாகத் தூங்கி எழுந்த மதுரவசனி தன்னறையை விட்டு வெளியே வர, ஹம்சா பாட்டிற்கு ஏதோ யோசனையில் இருந்தாள். ஒரு பக்கம் தொலைக்காட்சி வேறு ஓடிக்கொண்டிருந்தது.

“என்ன ஹம்சா….ஒரு மாதிரியா இருக்க…?”

“இப்போ எப்படி இருக்கு மது….. எதாவது சாப்பிடுறியா..?ஜூஸ் போட்டு தரவா…?” என ஹம்சா அக்கறையாகக் கேட்க

“ஏய்….. போதும்டி.. நான் நல்லாயிட்டேன்….. ஏதோ காலையில சரியா சாப்பிடல… அதான்.. அப்புறம் நந்தன் சார் வந்த டென்ஷன் வேற…”

“இல்ல மத்தியானம் சாப்பிட்டதோட இருக்கியே……..அதான் கேட்டேன்..”

“ப்ச்.. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டா நைட்டுக்கும் சேர்த்து சாப்பிட்ட மாறி இருக்கும்…… அது சரி.. நீ நல்லா சுத்தி வளைக்கிறன்னு தெரியுது…… விசயத்தை மறைக்காம என்னன்னு சொல்லுடி..?” என்று மது ஹம்சாவை அதட்ட

“என்ன செய்றதுன்னு யோசிச்சேன்…”

“எந்த விசயம்.. தீபன் சார் விசயமா..?”

“ம்ம்…. வேலையை விட்டுடலாம்னு நினைச்சேன்…….” என்று சொல்லி முடிக்கவில்லை

அதற்குள், “அய்யோ..என்னடி நீ..” என மதுரவசனி அலற

“ஹே..!! கீழா(லூசு) இருடி… அப்படி நினைச்சேன்.. ஆனா…. அவரா எங்கிட்ட எதுவும் சொல்லாம நான் ஏன் அப்படி ஒரு முடிவெடுக்கனும்….. நம்ம வீட்ல இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் செஞ்சிடுவாங்க…….. அதுவும் உங்க ஆத்தா உனக்குக் கொடுத்த டைம்ல இன்னும் இரண்டு மாசம் தான் இருக்கு….. அதுக்கப்புறம் எப்படியும் வேலையை விடப்போறோம்….”

“மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டை ஏன் கொளுத்தனும்…… அவருக்குப் பயந்து நான் என் வேலையை ஏன் விடனும்.. அவரா வந்து சொன்னா அவர்ட்ட மனசில ஆசையை வளர்க்காதீங்கன்னு சொல்லிடுவேன்…. இப்போ வேண்டாம்னு சொன்னா அவருக்கு இன்னும் என்னை வேணும்னு தோணும்…” என்று ஹம்சா அவள் நிலையை விளக்க

“எஸ்.. hunting instinct…. கரெக்டி ஹம்சு…… விலகிப்போற விசயத்தைத் தான் விரும்பும் மனசு… அவர் எங்கிட்ட சொன்னதை உங்கிட்ட சொன்னா பார்த்துக்கலாம்…. எப்படியும் ரெண்டு மாசம் தான் நம்ம இஷ்டத்துக்கு இருக்கலாம்.. அதை ஏன் நம்மளே கெடுக்கனும்…. நீ எதுவும் தெரியாத மாதிரியே காட்டிக்கோ…” என மதுரவசனி அறிவுறுத்த


“ஆமாடி.. அப்படி தான் நானும் முடிவு செஞ்சேன்….” என்றவள்

“ஆனாலும் ஒரு கம்பீரமான ஆளை மூட்டைப்பூச்சியோட கம்பேர் பண்ற பார்த்தியா… இது டூ மச் புள்ள…” என மதுரவசனி சிரிக்க

“ஏதோ வாயில வந்ததை சொன்னா…. உன்னை… எதை வைச்சு அடிக்க..” என்று சுத்தி முத்தி தேட

“மூட்டைப் பூச்சியைக் கொல்லும் நவீனை மெஷினை வைச்சு அடிடி.” என்று மது இன்னும் வாய்விட்டுச் சிரிக்க

“ஹா ஹா.. முடியல.. விடு……… ஆனாலும் இன்னிக்கு நாளு ரொம்ப சீரியஸா போச்சு…… ஒரு நாள்ல எவ்வளவு விசயம் நடந்துடுச்சு இல்ல..”

“ஆமா…… நந்தன் நாங்க வந்ததும் என்ன சொன்னார்…. நீ எங்க தீபன் சாரை சொல்லி நந்தன் சாரை டென்ஷன் பண்ணிடுவியோன்னு நினைச்சேன்…. நிஜமா மனுசனோட குரலுக்கும் குணத்துக்கும் பயங்கர வித்தியாசமில்ல..”

“அவர் மேல தப்புன்னு ஃபில் செஞ்சாருடி…. அவ்வளவுதான்…. அந்த நேரத்துல அவரைப் பார்க்கப் பாவமா இருந்தது…. செஞ்ச தப்பை சரி செய்ய அவருக்குத் தெரிஞ்ச வழி அதான்.. அதனால தான் நான் அவரையே பில் கட்டச் சொன்னேன்…… அவர் கோபத்தைத் தான் ஒரே நாள்ல நான் தெரிஞ்சிட்டேனே…. எதுக்கு அவர கோவப்படுத்தனும்னு தான்…” என மது அவளின் செயலை விளக்க

“நல்ல காரியம் செஞ்ச நீ…………….. இல்லன்னா சிங்கர் நந்தன் ருத்ரதாண்டவம் ஆடி அவரோட டான்ஸ் பெர்ஃபாமன்ஸைப் பார்க்க வேண்டி இருந்திருக்கும்…..”

“ஹா ஹா…..அதானே….”

“சரி. டைம் ஆச்சு…. நீ இரு… நான் போய் தோசை ஊத்திட்டு வரேன்… சட்னி வைச்சிட்டேன்….. சாப்பிடலாம்..” என்றுக் கிச்சனுக்குள் புகுந்தாள் ஹம்சா.

***************************************************************************

ராஜதீபனின் இல்லமான ராஜபவனத்தில் ,

அந்த வீட்டின் தலைவர் சுந்தர்ராஜன் டைனிங் டேபிளில் இரவு உணவு உண்ண அமர்ந்திருக்க, அவரது மனைவி வைரம் கணவனுக்குப் பரிமாறினார்.

அப்போது அங்கு வந்து அமர்ந்த தீபனிடம் சுந்தர் ,

“என்ன தீபா…. இன்னிக்கு ராஜா ஆபிஸ் வந்தானாமே…. என்ன விசயம்..?” என விசாரிக்க

மகள் கீர்த்திக்கு தோசையை வைத்துக் கொண்டிருந்தவரின் பார்வைத் தீபனையே பார்க்க,

“ஒன்னுமில்லப்பா…சும்மா தான் வந்தான்….” எனச் சமாளிக்க

“நான் உங்களுக்கு அப்பாடா… சும்மா வரலாம் மாட்டான் அவன்.. எனக்கு உன்னையும் தெரியும் அவனையும் தெரியும்…. என்ன எதாவது சண்டை போட்டானா..?” என சுந்தர் மகன்களைப் பற்றி அறிந்தவராகக் கேட்க,

‘ராஜாவுக்கு சண்டை போடுறதுதான் வேலையா…’ என முணுமுணுத்தவர் பரிமாறாமல் போய் ஹாலில் உட்கார்ந்துக் கொள்ள

மனைவியின் செயலால் கடுப்பான சுந்தரும் சாப்பிடாமல் எழுந்துச் செல்ல ,

“அப்பா…என்னப்பா..?” என அவர் பின்னாடியே சென்றான் தீபன்.

“என்னப்பா…. ஏன் இப்படி சாப்பிடாம வந்திட்டீங்க….. உங்களுக்கு ப்ரஷர் இருக்கு.. மாத்திரைப் போடணும்பா… வந்து கொஞ்சமாச்சும் சாப்பிடுங்க….” எனக் கீர்த்தி தந்தையைக் கெஞ்ச

“ஆமாம்பா… வாங்கப்பா.. ராஜா பத்தி பேசினா அம்மா அப்செட் ஆவாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா…..?”

“என்னடா பேசுற நீ… அவன் மேல எனக்குப் பாசமே இல்லாத மாதிரிதான் அவ நடந்துக்கிறா…… அவன் எனக்கும் புள்ளைதானே……அதை ஏன் அவ புரிஞ்சிக்க மாட்றா…?” எனக் கோபமாய் கேட்க

“ப்ச்….. நைட் மட்டும் தானப்ப… நம்ம சேர்ந்து சாப்பிடுறோம்.. இப்போவும் நீங்க ரெண்டு பேரும் இப்படி சண்டைப்போட்டுக் கிட்டா எப்படிப்பா…?” எனக் கீர்த்தி தாங்கலாய்க் கேட்க

“என்னமோ நானா அவட்ட சண்டை போட்டேன்… புருசனும் புள்ளைங்களும் நைட் மட்டும்தானே நம்ம கூட சாப்பிடுறாங்க….. இப்போவும் இப்படி மூஞ்சியைத் தூக்கி வைச்சிக்கலாமான்னு அவளுக்குத் தோணுதா….. போன பிள்ளையை நினைச்சு இருக்கறவங்களை டார்ச்சர் செய்றாடா அவ..”

“கீர்த்து… நீ போய் அம்மாவ கூப்பிடு…. நான் இவரைக் கூட்டிட்டு வரேன்..” எனத் தீபன் சொல்ல , தன் தாயாரை சமாதானம் செய்யப் போனாள் கீர்த்திகா.

தீபனோ தந்தையிடம் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்ல, அவரோ, “அந்த எடிட்டரைக் கூப்பிட்டு நாளைக்கு நான் பேசுறேண்டா…. இனிமே இப்படி நம்ம ராஜாவைப் பத்திப் போடக்கூடாதுன்னு வார்ன் பண்றேன்….. ஆமா அந்த பொண்ணு எப்படி இருக்கா…?”

“நல்லா இருக்காப்பா…………… இப்போ வாங்கப்பா…. அம்மா ஏதோ டென்சன்ல போயிட்டாங்க.. நீங்க சாப்பிடாம நாங்க யாரும் சாப்பிட மாட்டோம்…” என அவரை மிரட்டி உணவு உண்ண அழைத்தான். மகளது சமாதானத்துக்குப் பின் வைரமும் உணவருந்தினார். ஆனால் தன் மூத்த மகன் ராஜாவை பற்றிய கவலை அவர் மனதை விட்டு அகலவில்லை.. அகலும் காலும் எக்காலமோ…..?
 
நந்தன் மனதோ மதுரவசனியின் நினைவிலேயே உழன்றது. அவளது செயலால் அவனது செல்கள் அனைத்தும் புத்துயிர் பெற்றன. புரியாத உணர்வு புதிராய் அவனை ஆட்டிவைக்க, அந்த புதிருக்குள் புதைந்து போகவே அவன் விரும்பினான்.

மதுவிடம் பேச வேண்டுமென தோன்ற, அவனது ஆல் இன் ஆல் அழகுராஜாவான ரகுவை அழைக்க ,

“என்னண்ணா…?”

“எனக்கு மது நம்பர் வேணும் ரகு…?”

“எந்த மது…?”

நந்தனோ பதில் சொல்லாமல் அவனை முறைக்க, “ஒஹ். காலையில ஒரு பொண்ணைக் காய்ச்சி எடுத்தீங்களே.. அந்த அப்பாவியா… ஆமா…. இப்போ என்ன…. சீசன் 2 வா..?” என்று கிண்டலடிக்க அதை ரசிக்காதவனாய்

“இப்போ உன்னால எனக்கு அவ நம்பர் வாங்கித் தர முடியுமா முடியாதா..?” என்றான் அழுத்தமாக.

“அண்ணா…ஆர் யூ சிரியஸ்….?”

“வர வர நீ நான் சொல்றதைக் கேட்க மாட்றடா ரகு……காது கீது அவுட் ஆச்சா.. இல்ல உடம்புல கொழுப்பாச்சா?”

“அய்யோ….. அது இல்லண்ணா…. இப்போ எதுக்கு மது நம்பர்…?”

“அவட்ட நான் இப்போவே பேசனும்.. எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லனுமா என்ன?”

“இப்போவே வா… நைட் 9 மணி.. இப்போ போய் அவங்களுக்கு போன் அடிக்கலாமா.. அவங்க வீட்ல தப்பா நினைச்சுட்டா…?”

நந்தன் ரகுவை கோபமாய் ஒரு பார்வைப் பார்த்து விட்டு, அவன் அறைக்குள் செல்ல முயல ,

‘அவன் உதவா விட்டால் இவனே எதாவது செய்வான்’ என்றறிந்த ரகு,

“ஒரு டூ மினிட்ஸ் இருங்க……. நானே வாங்கித் தரேன்….” என்றவன் தீபனுக்குப் போன் செய்து அவனை காலில் விழாத குறையாக கெஞ்சிக் கேட்க, தீபன் ஆபிஸ் டேட்டாபேஸிலிருந்து மதுவின் எண்ணை எடுத்துக் கொடுத்தான்.

ஆனால் தீபனின் மனதில் ஏதோ சரியில்லையென்று பட்டது. ரகு நம்பர் தந்த பின், நந்தன் அவனது அறைக்குள் சென்று பால்கனியில் சில்லென்று கடற்காத்து அவன் முகத்தில் வீச, அதில் அவனது தலைமூடிப் பறக்க, மதுவைப் பற்றி நினைத்தாலே இனித்தது.

அந்த தூரத்தில் தெரிந்த கடலும் அதன் உள்ளே இருக்கும் ஆழ்ந்த அமைதியையும் அவன் மனம் உணர்ந்தது. அந்த அமைதிக்குக் காரணம் மது என்று அவன் மனம் அறியும்.

‘எத்தனை இரவுகள் அவன் அலைப்புறுதலோடு கழித்திருப்பான். மனம் விட்டு சிரித்து எத்தனை ஆண்டுகள் ஆயிற்று. ஆனால் ஒற்றை வார்த்தையில் அவனது மனதின் பாரத்தை எல்லாம் லேசாக்கி விட்டாள் அவனது மது.

ஆம்..!! அவனது மது தான்.

அவளது நினைவுகள் அதிகமாக, உடனே அவளுக்குப் போன் செய்தான் ராஜ்நந்தன்.

ஹம்சா சீக்கிரமே தூங்க போய் விட, மதியம் முழுவதும் தூங்கியதால் தூக்கம் வராமல் தவித்தவள் பாட்டு சேனல் ஒன்றை ஓட விட்டு சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.

போன் அடிக்க அதை எடுத்தவள் ,

டீவியில் ஓடிக்கொண்டிருந்த பாட்டை முணுமுணுத்தவாறே ,

“யாரு…?” என அறியாமல் அவள் கேட்க

“என்னை விட நீ நல்லா பாடுற மது..?”

“நந்தன் சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?” என இவள் ஆச்சரியமாய்க் கேட்க

“எஸ்.. ஆமா எப்படி கண்டுபிடிச்ச…. நீ?”

“உங்கப் பாட்டை எத்தன தடவக் கேட்கிறோம்… எங்களுக்குத் தெரியாதா..?”

“ம்…. உன் வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கு மது.. உன் பெயரை மாதிரியே..”

அதுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. மனதில் ஏன் அவன் போன் செய்தான்.. என் எண் அவனிடம் எப்படி..? என்று பல கேள்விகள். விடை தெரியா வினாக்கள்…? அதனால் அவள் அமைதியாக இருக்க

“என்ன மது அமைதியாகிட்ட…”

“தே..தேங்க்ஸ் சார்..”

“என்ன மது வாய்ஸ் திக்குதே…”

“ஒ..ன்னுமில்ல…சார்… நீங்க ஏன் எனக்கு போன் செஞ்சிங்க…?”

அவள் வீட்டைப் பொருத்தவரையில் இப்படி இரவு நேரத்தில் போன் பேசும் வழக்கமெல்லாம் இல்லை…. அதுவும் இப்படி அந்நிய ஆணிடம் பேசும் பழக்கம் அறவே இல்லை.. என்ன தான் பெரிய பாடகனாக இருந்தாலும் இவள் வெறும் ரசிகை தானே… அதைத் தாண்டி எதுவுமில்லாத போது எதுக்கு அவனோடு பேச வேண்டும் என்று மனம் வினா தொடுக்க

“உன்னை விசாரிக்கலாம்னு தான் மது.? எப்படி இருக்கு உன் ஹெல்த்..?”

“ம்ம்…நல்லாயிருக்கு சார்”

“தேங்க்ஸ் மது..?”

“எதுக்கு சார்..?”

“என்னை விட்டுக்கொடுக்காம இருந்ததுக்கு..” என்றவன் நிதானமாய்
நெஞ்சை உருக்கும் குரலில்

“என்னை எப்போவுமே விட்டுக்கொடுக்காம இருப்பியா மது..?” என்றுக் கேட்க அவன் பேசியதன் அர்த்தம் உறைக்க அவன் வார்த்தைகள் மனதை பிசைய, கைகள் நடுங்கப் போனைக் கட் செய்தாள் மதுரவசனி.

-------------------------------------------------


உள்ளத்துக்குள்ள நீ சொன்ன கத நூறு
நெனச்சுப்பார்த்தா இனிக்கும் பாரு
கண்ணுக்குள் உன்ன நாகட்டி வச்சேன் பாரு
கலைப்பதாரு பிரிப்பதாரு
தேனோட பாலும் தினம் நான் ஊட்ட வேணும்
பூவான வானம் அதில் போய் ஆட வேணும்
இனி மேலே என்ன வேணும்
நாளும் பொழுதெல்லாம் உன்ன நினைக்கிறேன்
தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்
ராஜா ராணி போலே


இந்த பாட்டுல இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சது...இப்ப ரீசண்டா தான் கேட்டேன்...இன்னிக்கு.....ராஜா ராணி போலன்னு வருது...அதுவும் மனோ அண்ட் சித்ராம்மா....கேட்டு பாருங்க...




ஆட்டம் தொடரும்…!!!
 
Top