Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வண்ணம் - டீஸர்

Advertisement

Bookeluthaporen

Well-known member
Member
யாரும் என்ன தேடலைல? ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் 😉😉

"ஏன்டி ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா?"

"புரிய வேணாம் ரகு. எச்சி ப்ளேட் எடுக்குறேன். ரோடுல நின்னு தப்பான வேலை பாக்..." முழுதாய் அவள் பேசும் முன்பு ஓங்கி அறைந்திருந்தான் ரகு.

சுற்றி அதிகம் கூட்டம் இல்லாவிடினும் அவர்களை சிலர் பார்க்க தான் செய்தனர், விழி விரித்து அதிர்ந்து நின்ற திவ்யாவை எரிமலையின் சீற்றத்தோடு முறைத்தவன், "இன்னொரு வாட்டி இந்த மாதிரி பேசுன வெட்டி கடல்ல வீசுடுவேன்"

அவள் கை பிடித்து விறுவிறுவென சாலையை அடைந்து ஆட்டோ ஒன்றை பிடித்தவன் அவளை மட்டும் அதனுள் விட்டு வீட்டிற்கு செல்லும் வழியை ஓட்டுனரிடம் கூறி மீண்டும் அவளிடம் வந்தான்.

"இனிமேல் நீ என்ன வேலை வேணும்னாலும் பாரு. ஏன் எதுக்குனு ஒரு வார்த்தை உன்ன நான் கேட்டா... செருப்பை எடுத்து அடி" அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் சீரியவன் தலை நிமிர்ந்து சற்று தள்ளி நிற்க வாகனம் அவ்விடத்தை விட்டு கண்கள் கலங்கியிருந்த திவ்யாவை சுமந்து அகன்றது.

*************************************************
லூசாக அணிந்திருந்த அவளது டீ-ஷர்டின் கை பகுதியை பிடித்து மெல்ல இழுத்தான் கேலி செய்யும் பொருட்டு. அவன் கையை தட்டிவிட்டவள், "டி சொல்லாத" என்றாள் வேகமாக கோவத்தை காட்டாமல்.

"என்னது?" தவறாக கேட்டுவிட்டோமோ என மீண்டும் கேட்டான்.

"நான் என்ன உன் பொண்டாட்டியா இப்டி உரிமையா டி சொல்லி பேசுற" முகம் சுளிக்காமல் தீர்க்கமாய் அவள் கேட்ட கேள்வியில் தன்னால் அவளை ஒட்டியிருந்த கால்களை தள்ளி அமர்ந்தான்.

"என்னாச்சுடி... ப்ச்" தலை கோதியவன் பிறகு, "என்னாச்சு உனக்கு? காலைல நல்லா தானே இருந்த" நிதானமாக கேட்டான் பொறுமையை பிடித்து வைத்து.

"ஏன் எங்கையாவது தலைல அடிபட்டு பைத்தியமானா தான் இப்டி எல்லாம் பேசணுமா"

"இவ்ளோ நேரம் சந்தோசமா இருந்தேன். கருமம் ஏன்டா உன்ன பாத்து பேச வந்தேன்னு இருக்கு. அப்டியே போயிருக்கனும்" கோவத்தில் அவள் மடியில் வைத்த மடிக்கணினி பையை வெடுக்கென பிடிங்கி வீட்டை நோக்கி சென்றுவிட்டான்.

அவன் செல்லவும் இவளால் ஜடமாக அமர்ந்திருக்க முடியவில்லை, கேட்பாறட்று மௌனமாய் அலுத்து தீர்ந்தாள்.


************************************************************

"யு ஆர் லுக்கிங் வெரி கார்ஜியஸ்... ப்பா எப்படி திவ்யா?" அவன் பேசியது தெளிவாக பின்னால் நின்ற ரகுவின் காதில் விழுந்தது.
"கவின்..." அவள் வெட்க சிரிப்பை கேட்டு இங்கு ரகுவுக்கு இன்னும் எரிந்தது.

"பாரு உன் வெக்கம் கூட அழகு தான். அதுலயும் இத கவனிச்சியா டால்... நாம மேட்ச்சா சில்வர் கலர் டிரஸ் பண்ணிருக்கோம்" தன்னை குனிந்து பார்த்தான் ரகு.

"அப்போ கண்டிப்பா சாக்லேட் வாங்கி தந்துடுங்க"

"நீ கேட்டா சாக்லேட் என்ன உயிரை கூட தர நான் ரெடி தான்" சிரிப்போடு ஆசை ததும்பி ததும்பி வழிந்தது அவன் குரல்.

"அதான் டிவோர்ஸ் குடுக்க போறேன்ல, உயிர் என்ன மயிரையே குடு"

சீற்றத்தோடு அவன் அவ்விடத்தை விட்டு அகல கவினை சுத்தமாக மறந்து, "ரகு கைல ரத்தம் வருது" ஓடி சென்று அவன் கையை பிடித்து தடுத்து நிறுத்த பார்க்க, அவனோ அவளை உதறி வேகமாக குடிலுக்குள் சென்றுவிட்டான்.

"போயிருடி... பக்கத்துல வராத"

"கை... கைல ரத்தம் வருதுடா"

"ரத்தம் வந்தா செத்துட மாட்டேன்" உஷ்ண பேச்சை கேட்டவள் குளியலறை சென்று தண்ணீர் பிடித்து வந்து அவன் கையை பற்ற அந்த கோப்பை தரையில் உருண்டு ஓடியது அவன் கோவத்தின் விளைவால்.

**************************************************
"ரெண்டு வருஷமோ, நாலு வருஷமோ வேற ஒருத்தனை என் முன்னாடி கல்யாணம் பண்ணி வந்து நின்னா உயிரோட என்னால நிக்க முடியாதுடா" ஏகத்திற்கும் ரகுவின் குரல் உடைந்தது.

"மளிகை ஜாமான் வாங்கிட்டு வர சொல்றா, தூங்க விடாம வீட்டை உருட்டுறா, விளையாட விடல-னு அன்னைக்கு சொன்ன காரணம் எல்லாம் இன்னைக்கு ஆசையா நிக்குதே தினேஷா.

தட்டுல விழுந்த நீளமான முடிய எடுத்து அவளை திட்டுனா 'நம்ம உறவு என்னைக்கும் விட்டுப்போகாதுடா'னு என் தலையை களைச்சு விட்டு போற திவ்யா வேணும்டா.

நான் கோவப்பட்டா முகத்தை சுருக்கி என் பின்னாடியே குட்டி போட்ட நாய் மாதிரி வர்ற என்னோட திவ்யா எனக்கு வேணும் மச்சான்" வேதனை சூழ்ந்த ரகுவின் விழிகளை பார்த்த தினேஷ் வார்த்தைகள் தடைபட்டது.

"காசு செலவாகுதுடி-னு திட்டிட்டே அவ கேக்குற ஒன்னு ஒன்னையும் வாங்கி குடுக்கணும் மச்சான்" எழுந்து நின்றான் முகத்தை கைகளில் துடைத்து.

"அண்ணனா இருந்தாலும் அவளை என்ன தவற யாரும் அழகுனு சொல்ல கூடாது. அவ என் பொண்டாட்டி, நான் மட்டும் தான் அவள கொஞ்சுவேனு அந்த கவினை அடிச்சு துவைக்கணும் போல கோவம் வருது"


என்ன மக்களே... கதையோட டீஸர் எப்படி இருக்கு?😀

இந்த கதை ஒரு குட்டி கதை தான்🙂. மொத்தமே பத்து சாப்டர்ஸ் தான் வரும். வாரம் வாரம் சனி மற்றும் புதன் கிழமை கண்டிப்பா அப்டேட்டோட வர்றேன்🫶. தாராளமாக கதையின் நிறை குறைகளை தயங்காம சொல்லிடுங்க.❤😇
 
Top