Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வதனியின் தேடியுனைச் சரணடைந்தேன் - 4

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
ஃப்ரண்ட்ஸ் அடுத்த எபி போட்டுட்டேன். படிச்சிட்டு எப்படி ரிஉக்குன்னு சொல்லுங்க. உங்கள் கருத்துக்களூக்கு மீ ஆவலோட வைட்டிங்.. தேங்க்ஸ் ஃபார் யுவர் சப்போர்ட்டிங்,





தேடியுனைச் சர்ணடைந்தேன் – 4

ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது

காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்



தொடர்ந்த பயணம் முழுவதும் அமைதியிலேயேக் கழிந்தது. சீனு பெரியவரிடம் என்ன சொன்னாரோ, அடுத்து அவர்கள் கோவையை அடையும் வரை ராமசாமி இவர்களுடன் காரின் முன்னிருக்கையில் இருந்தார். அவர் முன்னால் ரசபாசம் ஆகும் எந்த பேச்சும் வேண்டாம் என்பது போல் இருவரும் அமைதியாக, தேவைக்கும் கூட பேசிக்கொள்ள வில்லை.

கோவையை நெருங்கியதுமே, வெற்றியின் உடல் இறுகி, முகம் தானாக கோபத்தில் சிவந்தது. வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்கிய நினைவுகள் எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு மனதின் அடி ஆழத்திலிருந்து மேல்நோக்கிப் படையெடுத்தன. அதன் பிரதிபலிப்பாக எங்கே இவர்களிடம் தன் கோபத்தை எல்லாம் காட்டி விடுவோமோ என்று பயந்து போனவன், கார்க் கண்ணாடியைத் திறந்து வெளிக்காற்றை உள்ளிழுத்துத் தன்னை சமன் செய்ய முயன்றுக் கொண்டிருந்தான்.

கணவனின் செய்கை முதலில் வித்தியாசமாக இருக்க, ஒருவேளை வாந்தி மாதிரி ஏதேனும் தொந்தரவோ என்று மருத்துவராக அவள் நினைக்க, அப்படி இல்லை என்று அவனது இறுகிப்போன உடலமைப்பில் தெரிந்து விட, வேற என்ன என்று யோசித்தவளுக்கு சட்டென்று அன்றைய நாளும், அதைத் தொடர்ந்து வெற்றி கோபமாக வீட்டை விட்டுக் கிளம்பியதும், அதன் பிறகு அவன் அந்த வீட்டிற்கே வராததும் நினைவில் வர, என்ன செய்ய, என்ன செய்ய என்று யோசித்தவளுக்கு சட்டென்று விடைக் கிடைத்தது.

முன்னிருக்கையில் இருந்த தன் தாத்தாவிடம், “தாத்தா.. எனக்கு உங்ககிட்ட ஒன்னு சொல்லனும், நீங்க எனக்காக செய்யனும்..” என்றாள் பீடிகையோடு.

இன்றைய நாளில் நடந்தக் குழப்பங்களுக்குப் பிறகு, பேத்தி இப்போது தான் முதன்முதாலாகத் தன்னிடம் பேசுகிறாள் என்ற எண்னம் வர, அவரது கண்ணில் நீர் நிறைந்தது. ஆனால் அதை மற்றவர் உணரும் முன் மறைத்தவர், “என்ன கண்ணு சொல்லு, உனக்கு என்ன செய்யனும், தாத்தா உனக்காக இல்ல இல்ல, உங்களுக்காக கண்டிப்பா செய்றேன்.. என்ன கண்ணு” என்றார் பரபரப்பாக.

இருவரையும் இணைத்து ஒன்றாக்கிப் பேசிய அவரது பேச்சில் அவளுக்கும் கண்கள் நிறைந்தது. அதைப் பின்னுக்குத் தள்ளி, அருகிலிருந்த வெற்றியைக் கண்களால் சுட்டிக்காட்டி, “எனக்கு நம்ம வீட்டுக்கு போகனும்னு தோனுது தாத்தா. என் அம்மாவும் அப்பாவும் வாழ்ந்த வீட்ல தான் நாங்க முதன்முதலா போகனும்ன்னு நினைக்கிறேன் தாத்தா. அங்கதான் அவங்க இருக்காங்க. நம்ம வீட்டுக்குப் போனாதான் எனக்கு அவங்க ஆசிர்வாதம் கிடைக்கும். எங்களை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போறீங்களா தாத்தா..” என ஆசையும், நிராசையுமாகக் கேட்டத் தன் செல்லப் பேத்தியைப் பார்த்த அந்தப் பெரியவருக்கு எப்படி இருக்குமாம்.

“உனக்கு மீறி எங்கிட்ட என்னடா கண்ணு இருக்கு. உனக்கு என்ன விருப்பமோ அதையே செய்யலாம். அதோட நம்ம வீட்டுக்குப் போறது தான் முறையும் கூட, உன் அத்தையைப் பத்தி எல்லாம் கவலைப் படாதே, நான் பார்த்துக்குறேன். இனி அவங்க என்ன சொல்லுவாங்களோன்னு நீ பயப்படவே வேண்டாம். வெற்றிக்கும் உனக்கும் என்ன தேவையோ அதை மட்டும் செய்யலாம் சரியா.. இனியும் வெற்றி வருத்தப்படுற மாதிரி எதுவும் நடக்கக் கூடாது புரியுதா” என அவள் எண்ணத்தைப் புரிந்துப் பேசி, மங்கையின் மனதைக் குளிர வைத்தார்.

உடனுக்குடனே மணமக்கள் பெரிய வீட்டிற்கு வருகிறார்கள் என்றத் தகவலைக் கொடுத்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறிவிட்டு, நிம்மதியாக, மகிழ்ச்சியாக சீனுவைப் பார்த்தார். தன் பேத்தி வாழ்க்கையில் ஜெயித்து விடுவாள் என்ற நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்திருந்தது அவருக்கு. அதன் வெளிப்பாடே அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி.


நடந்த எதையுமேக் கவனத்தில் கொள்லாமல் தன் எண்ணத்திலேயே சுழன்றுக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு குற்ற உணர்ச்சி அதிகரித்தது. அவள் பொருட்டு, அவளுடைய சுயநலத்தினால் நடந்தத் திருமணம். ஆனால் அது ஆச்சி, புகழைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. புகழுமே கடைசி நிமிடத்தில் இப்படி செய்வான் என்று ஆச்சியும், அவளும் எதிர்பார்க்கவில்லை. இவனிடம் சொல்லியிருக்கலாம். முயன்றிருக்கிறாள் தான். ஆனால் வெற்றி பிடியேக் கொடுத்ததில்லை. பிறகு அவளும் தான் என்ன செய்வாள்.


“மங்கை என்ன அப்படியே இருக்க, இறங்கி வாங்க ரெண்டு பேரும்..” என்றத் தாத்தாவின் குரலில் நினைவுக்கு வந்தவளுக்கு வீடு வந்தது நினைவு வர, வெற்றியின் தோளைத் தொட்டு “மாமா.. வீடு வந்தாச்சு.. இறங்கலாம்..” எனவும், திடுக்கிட்டவன், எங்கே இருக்கிறோம் என்ற சுற்றம் பார்க்காமல், “ம்ச்… நீ போ… நான் வர்ரேன்..” என்றான் சலிப்பாக.

“அடடா.. என்னாச்சு மாமா உங்களுக்கு… தாத்தா ரொம்ப நேரமா வெளியே வெயிட் பன்றாங்க.. இறங்குங்க மாமா.. உள்ள போயி நீங்க ரெஸ்ட் எடுங்க.. மத்ததை நான் சமாளிச்சிக்குறேன்.. வாங்க மாமா..” என அன்பாக வார்த்தைக்கு வார்த்தை மாமா போட்டு பேசுபவளைக் கண்டு, இத்தனை நாள் எங்கே போச்சாம் இந்த அக்கறையும் அன்பும் என எரிச்சலாக எண்ணியவன், கல்யாணத்துல நடந்தக் குழப்பத்தைப் பத்திக் கொஞ்சமும் கவலைப்படாம என்ன இது என்றுக் கோபமும் சேர்ந்து கொள்ள “அவனையும் மாமான்னு சொல்லுவ, என்னையும் அதாவது உன் புருஷனையும் மாமான்னு சொல்லுவியா.. உனக்கு வேனும்னா அது சரியா இருக்கலாம். ஆனா எனக்குப் பிடிக்கல, அவனை அப்படிக் கூப்பிட்ட இந்த வாயால, இனிமே என்னை மாமான்னுக் கூப்பிடாதே..” என அதுவரை இருந்தக் கோபத்தில் வார்த்தைகளில் அமிலத்தைக் கக்கியவன், அவளைக் கண்டு கொள்ளாமல், காரை விட்டு இறங்கிவிட்டான்.

கணவனின் பேச்சில் விதிர்த்துப் போயிருந்தாள் மங்கை. என்னப் பேச்சு இது. அதுவும் இவன் வாயிலிருந்து. என்ன பழக்கம் இது. இப்படியான வார்த்தைகளை ஆரம்பத்திலேயே முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இல்லையேன்றால் தொடரும் வாழ்க்கை முழுவதும் நரகமாக மாறிவிடும் என்று உணர்ந்தாள், மனதில் வைத்து எதையும் பேசவில்லை, அன்றையக் குழப்பங்களில் ஏற்பட்டக் கோபத்தில் பேசுகிறான் என்று புரிந்தது பெண்ணவளுக்கு. அவன் பேச்சில் தோன்றிய கோபம் கரைந்து இப்போது சிரிப்பு வந்து ஒட்டிக்கொண்டது.

மேளும் அவன் பேச்சில் ஒன்றைக் கண்டுகொண்டாள். அது புகழிடம் அவள் காட்டும் நெருக்கம் இவனுக்குப் பிடிக்கவில்லையென்று. பொறமையா..? ஹாஹா.. சாருக்கு பொறாமை வந்துடுச்சுடோய்.’ என மனதுக்குள் கவுண்டர் கொடுத்து, என்னை டென்சன் பண்ணிட்டு நீ மட்டும் ஹாயா வெளிய நிப்பியா, இரு இந்தா வாரேன்.. உன்னைக் கடுப்பாக்கி கம்மர்கட் சாப்பிட வைக்குறேன்’ எனவும் நினைத்து சிரித்துவிட்டு, அதேப் புன்னகையோடே வெளியே வந்தாள்.

“என்ன மங்கை இது, உள்ள என்ன பண்ண, எதுக்கு இவ்வளவு நேரம், வெற்றி இறங்கி எத்தனை நேரம் ஆச்சு.” எனக் கடிந்தவரிடம்,

“இல்லை.. நீங்க இறங்குங்க நான் புடவையை சரி செய்துட்டு வாரேன்னு எங்கிட்ட சொன்னா..” என்றான் வெற்றி ஆளுக்கு முன்னே. தாத்தாவும் பேத்தியும் ஆச்சரியமாக நோக்கிக் கொள்ள, அதையெல்லாம் அவன் கண்டுகொள்ளவில்லை.

யாரும் கவனிக்கா வண்ணம் கணவனின் அருகில் நெருங்கி நின்றவள், “சின்ன வயசுல இருந்தே மாமான்னு கூப்பிட்டு பழகிட்டேன், புதுசா மாத்துன்னு சொன்னா முடியாதே மாமா. உங்கக்கிட்ட பேசலன்னாலும், மாமான்னு தான் மனசுல நினைச்சுருக்கேன். இதையும் மாத்த முடியாது என்ன செய்யலாம்” என்று யோசிப்பது போல் அவனைப் பார்க்க, அவனோ ஆச்சரியமாகப் பார்த்தான்.

ஏற்கனவே உள்ளே அவளைப் பேசியதில் குற்ற உணர்ச்சி வேறு, அப்படி பேசியிருக்கக் கூடாது என்று புரிந்தது. தனியாக இருக்கும் போது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால் மங்கை இப்படிக் கேட்பாள் என்று நினைக்கவில்லை.

அவளைப் பார்த்த மாதிரியே நிற்க, ஆனால் அவனின் மனைவியோ “ஒன்னு வேனா செய்யலாம் மாமா, புகழ் மாமாவை புகழ் மாமான்னேக் கூப்பிடுறேன். நீங்க புருஷனாகிட்டீங்க அதனால, புருஷ் மாமான்னு கூப்பிட்டுக்கிறேன்..” என அசால்டாய் கூறிவிட்டு, பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணிடம் பேச ஆரம்பித்து விட்டாள்.

மங்கையின் பேச்சில் முதலில் திகைத்தாலும், அவளின் கிண்டலில் சட்டென்று முகம் மென்மையாகி, உதடு சிரிக்கத் துடித்தது, ஆனாலும் அதை வெளிக்காட்டவில்லை. வெற்றிக்கு அந்த வீட்டிற்குப் போகாமல் இங்கு வந்ததே பெரும் நிம்மதியாக இருந்தது.

நிச்சயம் இது தன் மனைவியால் தான் என்று அவனுக்கு உறுதியாகத் தெரிய, அவனது மனதைப் புரிந்து, அவனுக்காக மங்கை செய்த இந்த செயல் மனதுக்கு இதமாக இருந்தது. அது கொடுத்த இதம் தான் உடல் இறுக்கத்தை தளர்த்தி, முகத்தில் ஒரு புன்னகையைக் கொடுத்து, தாத்தாவிடம் இருந்து மனைவியைக் காப்பாற்றவும் தூண்டியது.

ராமசாமியின் பங்காளி முறைகளில் எல்லாரும் வந்திருக்க, மங்கைக்குத் தங்கை முறையில் இருந்த பெண் ஒருத்தி ஆரத்தி எடுக்க, மணமக்கள் இருவரும் உள்ளே சென்றனர். அடுத்தடுத்து சம்பிராதாயங்கள் முடிந்து இவர்கள் அறைக்கு வர, மாலையே ஆகியிருந்தது.

முதன்முறையாக அவளது அறைக்குள் அவன். சற்றுத் தினறலோடு தான் உள்ளே வந்தான். அவளுக்கு அப்படி ஒன்றும் இல்லை போல, சாதரணமாகத் தான் இருந்தாள்.

மனைவியின் செய்கைகளை எல்லாம் யோசனையோடு தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவனை விரும்பி மணவறை வந்து திருமணம் நின்று, அதே இடத்தில், அதே மேடையில் மற்றொருவனோடு திருமணம். இவளுக்கு வேதனையே இல்லையா.. எப்படி சாதரணமாகக் காட்டிக் கொள்கிறாள். காலையில் புகழைக் கேட்டு அவள் அழுதபோது எனக்கு வலித்ததே. என்று பலவாறாக யோசித்துக் கொண்டே அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தான்.

குளித்து வெளியே வந்தவள், “மாமா நீங்களும் குளிச்சிட்டு வந்துடுங்க, ரெண்டு பேரும் சேர்ந்தே கீழ போகலாம்.” என,

“ம்ம்ம்.. என்னோட பேக் எங்க இருக்கு,” என்றவனிடம், பேகைத் தேடி, துணியை எடுத்துக் கொடுத்தவள் மீண்டும் தன் வேலைகளைத் தொடர,

ஒரு பெருமூச்சோடு குளியல் அறைக்குள் நுழைந்தான் வெற்றி. மூடியக் கதவை யோசனையோடு பார்த்தவள், தன் போனைத் தேட, அது இன்னும் தன் தாத்தாவிடம் இருந்து வாங்கவில்லை என்பது புரிய, மெத்தையில் கிடந்த கணவனின் போனில் இருந்து நாச்சிக்கு அழைத்தாள்.

இரண்டு ரிங்கில் எடுத்தவர், “கண்ணப்பா… ஆச்சி மேல உனக்கு இன்னும் கோபமா, அதான் எனக்கு பேசவே இல்லையா..?” என பாவமாகப் பேச,

வெற்றியின் போனிற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று அவளுக்குப் புரிய, கண்ணைக் கரித்தது. பின் தொண்டையைச் செறுமி, “ஆச்சி நான் மங்கை.. மாமா குளிக்குறாங்க..” என்றாள் மெதுவாக.

“கண்ணு.. நீயாடா.. எந்தப் பிரச்சினையும் இல்லையே, வீட்டுக்குப் போயிட்டீங்களா.. “ என்றார் பரவசமாக,

“ம்ம் ஆச்சிம்மா.. ஒரு பிரச்சினையும் இல்ல, எங்க வீட்டுக்கு வந்துட்டோம். மாமா அங்க, அத்த வீட்டுக்கு வர சங்கடப் படுவாங்கன்னு தெரியும். அதுதான் தாத்தாட்ட சொல்லி இங்க நம்ம வீட்டுக்கு வந்துட்டோம். நீங்க கவலைப் படாதீங்க ஆச்சி. நான் பார்த்துக்குறேன்.” என்றாள் சமாதானமாக,

“தெரியும் கண்ணு.. எனக்குத் தெரியும் நீ பார்த்துக்குவன்னு எனக்குத் தெரியும். என் பேரன் வாழ்க்கை எப்படி ஆகுமோன்னு இருந்தக் கவலை எல்லாம் இப்போக் காத்துலக் கரைஞ்சக் கற்பூரமா போயிடுச்சு. நீங்க நல்லா இருக்கனும் கண்ணு. நல்லா இருப்பீங்க.. ரெண்டே நாள் தான் அப்புறம் இங்க வந்துடுங்க, சரியா.. அவன் மூஞ்சைத் தூக்கி வச்சிட்டு இருப்பான். எப்படியாச்சும் சரி பண்ணிடு கண்ணு. அந்தப் பைய கோபமா இருந்தா பார்க்க சகிக்காது..” என்றார் சற்றேக் கிண்டலாக,


“அய்யோ ஆச்சி, என்ன நீங்க என் புருஷனைப் பத்தி எங்கிட்டயேக் கிண்டல் செய்வீங்களா, என்ற புருஷன் மாதிரி நான் அமைதியா எல்லாம் போக மாட்டேனாக்கும். என்ற புருஷனோட பொஞ்சாதிக் கொஞ்சம் கோவக்காரியாக்கும். பார்த்து நடந்துக்கோங்க.” என மிரட்டலாகப் பேச,

“அய்யய்யோ எனக்கு பயமா இருக்கே. ஒரு ராங்கிக்காரியவா என் பேரனுக்கு கட்டி வச்சுட்டேன். தப்பு பண்ணிட்டியே நாச்சி. உன் பேரனுக்கு துரோகம் பண்ணிட்டியே..” என சோகமாகப் பேசுவது போல் பேச, இருவருக்கும் சிரிப்பு பீறிட்டது.

வாய்விட்டு சிரித்தவள், பின் குரலில் மென்மையைத் தேக்கி, “ரொம்ப நன்றி ஆச்சி, நீங்க மட்டும் எனக்கு உதவலைன்னா என் வாழ்க்கை என்னாகிருக்கும்” என

“ஒன்னும் ஆகிருக்காது, உனக்கும் வெற்றிக்கும் தான் நடக்கும்ன்னு விதி இருந்தா அதை யாரால மாத்த முடியும் சொல்லு. ஆனாலும் என் பேரனுங்க ரெண்டு பேரும் ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைச்சவனுங்க இல்லைன்னு புரிய வச்சுட்டானுங்க. வெற்றிக்காக புகழ் எப்படி ஒரு காரியம் செஞ்சிருக்கான். நாம ஒன்னும் யோசிச்சா, அவன் ஒன்னு செஞ்சிட்டு போயிட்டான்” என்றவரிடம்,

“எனக்குமே புகழ் மாமா அப்படி பண்ணுவாங்கன்னு தெரியாது ஆச்சி. இப்போ எங்க இருக்காங்களோத் தெரியல,” என்றவள், வரும்போது நடந்ததைக் கூற, ஆச்சியும் யோசனை ஆனார். பிறகு “அவன் எங்கே இருந்தாலும் வந்துடுவான் கண்ணு, நீ கவலைப்படாத இங்கே வந்த பிறகு, நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவங்க ரெண்டுபேரோட ரகசியத்தைக் கண்டுபிடிப்போம். இப்போ நீ வேலையப் பாரு, கண்ணப்பா வந்தா எனக்கு பேசச் சொல்லு கண்ணு” என்று விளையாட்டாகப் பேசினாலும், கணவன் பேசாத வருத்தம் அவரது குரலிலேயேத் தெரிந்தது.

“டோன்ட் ஃபீல் ஆச்சி, உங்க பேரன் வரவும் சட்டையைப் பிடிச்சு, சண்டைப்பொட்டாச்சும் உங்க கூட பேசவைக்கிறேன் சரியா.. நோ சோகம். நீங்க சோகமா இருந்தா எனக்கு வேலையே ஓடாது” என்றவளின் பேச்சில் சமாதானம் ஆனவர், “ஆமாக் கண்ணு என்ற புருஷன், என்ற புருஷன்னு சொன்னியே, அவன் எப்போ உங்க பேரன் ஆனான்” எனக் கிண்டலடித்துவிட்டு போனை வைத்தார்.

ஆச்சியிடம் பேசியதில் மனம் லேசாக, அது கொடுத்த உற்சாகத்தில், கூந்தலை கைகளால் அலைந்துக் கொண்டே,

‘உன் பேரை சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குமே
நீயெங்கே நீயெங்கே..’

என்ற பாடலை முணுமுணுத்தபடியே இருக்க, அவளையே விசித்திரமாகப் பார்த்தபடி நின்றிருந்தான் வெற்றி.

கணவனின் பார்வையில் வாய் தானாக பாட்டை நிறுத்த, பார்வைத் தரையை நோக்கியது. குளித்திருந்ததால் உடலில் இருந்த சூடு குறைந்து, மனமும் சற்று ஆசுவாசமாகியிருந்தது.

அவன் பேசப்போவதில்லை என்பதை உணர்ந்தவள், “ஆச்சி பேசச் சொன்னாங்க மாமா, உங்களுக்கு என் மேலத்தானக் கோபம், அதுக்கு ஏன் ஆச்சியைத் தண்டிக்குறீங்க. என்மேல இருக்குறக் கோபத்தை அவங்ககிட்ட காட்டாதீங்க மாமா. பாவம் வயசானவங்க பேசுங்க ப்ளீஸ். நீங்க பேசாம அவங்க சாப்பிடக் கூட மாட்டங்க.” என்றுக் கெஞ்ச,

‘உன்மேலக் கோபமா, உங்கிட்ட சொன்னேனா..’ என்பது போல் பார்த்துவிட்டு, வேறெதுவும் பேசாமல், உடனே ஆச்சிக்கு அழைத்து “ஆச்சிம்மா என்ன..? கல்யாணம் ஆகி ஒருநாள் தான் ஆச்சு. அதுக்குள்ள என்னைப்பத்தி என் பொண்டாட்டிக்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணி வச்சுருக்க, என்னமோ நான் கொடுமைக்காரன் மாதிரி அவளும் உனக்காக கெஞ்சிட்டு இருக்கா.. குளிச்சிட்டு வர கேப்ல என்ன நடந்துச்சு..” என்றான் இயல்பாக.

“பின்ன நீ செய்ரது தான் சரின்னு சுத்திட்டு இருந்த, அதான் உன்னையும் அடக்க ஒருத்தி வந்துருக்கா.. எனக்கும் என் பேத்திக்கும் பேச ஆயிரம் இருக்கும், அத ஏன் உங்கிட்ட சொல்லனும் நான்..” என அவரும் அதே இயல்பாகவே பேசினார்.

இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டே இருக்க, இவர்களின் பேச்சைக் கேட்டபடியே சோஃபாவில் அமர்ந்திருந்தவள் அப்படியே உறங்கியும் இருந்தாள். அவன் பேசி முடித்ததும் அவளைப் பார்க்க, கால்கள் இரண்டையும் மடக்கி, ஒரு கையை சோஃபாவின் திண்டில் வைத்து, அதிலேயே தலையையும் வைத்து, மற்றொரு கை அவளது வயிற்றை சுற்றியிருக்க, அடர்ந்த கூந்தல் காற்றில் ஆடி முகம் முழுவதும் மூடியிருந்தது.

நொடிகள் நிமிடங்களாக மாறியிருந்தாலும், அவன் பார்வை சற்றும் மாறாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க, காற்று சற்று பலமாக வீசி, முகத்தில் மூடியக் கூந்தலில் சிறுபகுதி அசைய, அதில் அவளது கண்கள் மற்றும் லேசாகத் தெரிந்து, ஒரு முடி மட்டும் இதழில் சிக்கி மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

அதற்கு பிறகு அவன் கால்கள் அவன் பேச்சைக் கேட்கவில்லை, அவளின் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன், இதழில் மாட்டி விடுதலைக்கு தவித்துக் கொண்டிருந்த அந்தக் கூந்தலை அவளுக்கு வலிக்குமோ என்ற பாவனையில் மெல்ல எடுக்க முற்பட்டான். ஆனால் முடியவில்லை. அந்த சிறுமுடியைப் போல அவனது விரல்களும் அந்த செப்பு இதழில் சிக்கிக் கொள்ள, மெல்ல வருடியவன் அதற்கு மேல் முடியாது என்பது போல் தன்னிதழை அதில் பொருத்த,

தன்னியல்பாய் அவளும் உள்வாங்கிக் கொள்ள, மனைவியின் செயலில் விழி விரித்தாலும், முதல் முத்தத்தின் சுகத்தை அனுபவிக்க தவறவில்லை. எப்போது மன்னவனின் கைகள் மங்கையின் இடைத் தழுவியதோ. அவளின் கரங்கள் எப்போது அவனின் தோளில் மாலையானாதோ.. அவன் கைகள் எங்கெங்கோ எல்லை மீறிப் பயணிக்க, அவள் மேணித் துவளத் துவங்கிய நேரம், அப்படியே அவளை அள்ளிக் கொள்ள, அவன் அணைப்பின் மயக்கத்தில் பெண்ணவளீன் விழிகள் மூட, கட்டிலில் கிடத்தினான்.

இரு ஜோடி விழிகளும் மோகத்தை மொழியாக்கி, அடுத்தக்கட்ட சங்கமத்திற்கு சம்மதம் தெரிவித்தன. வரைமுறைகள் மொத்தமும் தகர்க்கப்பட்டிருக்க, அவன் மீசையின் கூர்முனைகள் மங்கையின் ஆசை நரம்புகளைத் தட்டியெழுப்ப, இனிய அவஸ்தைகளில் தத்தளித்தவள், இறுதியில் அவனிடமே சரணடைந்தாள்.

கதலில் களித்து, காமத்தில் திளைத்து, மோகத்தை வென்று உடலும் உள்ளமும் இணைந்துவிட்ட அற்புதமான தருணம்..! கூடலின் முடிவில் “லவ் யூ சோ மச் மாமா..” என்ற அவளின் கிறக்கக் குரலில் அவன் உடல் விரைத்தது.


நினைக்காத நேரம் இல்லை

காதல் ரதியே ரதியே ..
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழிவிடும் காதல் நதியே நதியே
என் சுவாசம் உன் மூச்சில் ..
உன் வார்த்தை என் பேச்சில்..
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா..
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..
விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ …


தொடரும்…
 
அப்ப மங்கை வெற்றியதான் விரும்பி இருக்கா. இது பாட்டிக்கும் புகழுக்கும் மட்டும்தான் தெரியுமா சிஸ்.

புகழ் வேற பெண்ணை காதலிக்கிரானா சிஸ்?
 
Hey padichutten... Padichutten...
Deiii ennada ipdy panreenka? wedding la apdy muraichuttu iruntha vetry athukulla ipdy maarittane..? so vetry mangai 2 perume muthale manasukulla luv panirukanka. Rightuuu... Ini Enna?? ? Waiting 4r next episode ka.
 

Advertisement

Top