Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(20)

Advertisement

“ எனக்கு அப்பவே தெரியும்டி உண்மை எப்போ தெரியும் எப்போ உரிமை கொண்டாடலாம்ன்னு இவ்வளவு நாளு பிள்ளை பூச்சியாட்டம் இருந்துட்டு இப்போ இப்படி பேசுற” என லீலாவதி தன பங்குக்கு எகிற

“ இங்க பாருங்க எனக்கு உங்க வீட்டுல உரிமை கொண்டாடணும்ன்னு எப்பவும் எந்த எண்ணமும் இருந்தது இல்ல. அதோட நான் சின்னதுல இருந்து எங்க வீட்டுல அமைதியா பொறுமையா இருந்ததுக்கு காரணம் என்னால என் ஆத்தாவை யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னுதான்” என சுந்தரியை பார்த்துக்கொண்டே கூறிய தென்றல் மீண்டும்

“ அதோட என் ஆத்தாவை பத்தி நீங்க பேசுன அப்புறமும் நான் இங்க இருக்க போறது இல்ல உங்க வீட்டு பையனுக்கும் நல்ல பொண்ண பார்த்து கட்டி வைங்க தகுதி இல்லாத நான் வேணாம் நான் ஒதிக்கிங்குறேன்” என கூறிவிட்டு சின்னாத்தாவை கையை பிடித்துக்கொண்டு அங்கிருந்து செல்ல பார்க்க தென்றலின் பேச்சில் மேலும் கோவம் அடைந்த லீலாவதி

“ போ போ என்னமோ உங்க வீட்டுல மகாராணியாட்டம் இருக்க போறமாதிரி இல்ல போற. அங்கேயும் வேலைக்காரிதான் அடிமை வாழ்க்கைதான்” என ஏளனமாக கூற அதனை கேட்ட தென்றல்

“ உரிமை இல்லாத இடத்துல அடிமையா வேலைக்காரியா இருக்கலாம் ஆனா எல்லா உரிமையும் இருக்குற வீட்டுல அப்படி இருக்கறதுதான் கொடுமை” என பதிலடி கொடுத்துவிட்டு ஏதோ பேச வந்த சின்னாத்தாவையும் பேசாத என தலையை ஆட்டி மறுத்துவிட்டு

ஜானவியிடம் ஒரு தலை அசைப்புடன் அங்கிருந்து செல்லுவதற்கு திரும்புகையில்

“ அப்போ உனக்கு எல்லா உரிமையும் தரமாட்டேன்னு சொன்னது யாருமா??” என்ற ருத்ரவர்மனிடம் இருந்து குரல் வர அனைவரும் ருத்ரவர்மனை காண தென்றலும் பதட்டத்தோடு திரும்பி ருத்ரவர்மனை காண,

அங்கு சோபாவில் கால்மேல் கால்போட்டு அமர்ந்துகொண்டு கைகளை கட்டிக்கொண்டு பூஜைக்காக வெள்ளை வேட்டி அரக்கு நிற சட்டை அணிந்து தோரணையுடன் அமர்ந்திருந்த ருத்ரவரமனை கண்டு அதுவரை தென்றலுக்கு இருந்த தைரியம் காணாமல் போக லேசாக உடல் நடுங்க ஆரம்பித்தது.

அதனை சின்னாத்தாவின் கைகளில் இருந்த தென்றலின் கை நடுக்கத்தை உணர்ந்து தென்றலை நோக்கி தோள் பட்டையை சுரன்ட்ட

“ ம்ப்ச் என்னத்தா??” என லேசாக குனிய தென்றலின் பேச்சு புரியாவிடினும்

“ ஏண்டி இவ்வளவு நேரம் என்னைய சுயநலம்ன்னு சொன்னவுடன் ஏதோ கோவம் வந்த மாதிரி நடிச்சு இங்க இருந்து போக திட்டம் போட்டு பேசுன சரி. இப்போ என் பேரன்கிட்ட உன் பேச்சு திறமையை காட்ட வேண்டியது தானே. ஏண்டி நடுங்குற??” என சிறு நக்கலுடன் கேட்ட சின்னாத்தாவை கொலைவெறியுடன் தென்றல் முறைக்க

“ இங்க என்ன முறைப்பு அங்க பாரு உன் முறைப்புக்கு சொந்தகாரன” என சின்னாத்தா மீண்டும் கிசுகிசுக்க

“ அடியே என் பொண்டாட்டி முதல்ல மாமனை பார்த்து பதிலை சொல்லு. அப்புறம் உன் ஆத்தாகிட்ட பேசலாம்” என கேட்டுக்கொண்டு தென்றலை நெருங்கிய ருத்ரவர்மனை கண்டு அங்கிருந்த அனைவரும் வாயை பிளக்க

“ என்…. என்ன…. சொல்லணும்??” என தடுமாற்றத்துடன் கேட்ட தென்றலின் அருகில் வந்த ருத்ரவர்மன்

“ உனக்கு இங்க உரிமை கொடுக்காதது யாருன்னு கேட்டேன்??”

“ அது…. அது…. யாரு…. ம்… இல்ல. நான்… நானே தான்”

“ அப்போ நீதான் உரிமைய எடுத்துக்கல அப்படித்தானே??”

“ ஹ்ம்ம் ஹம்ம்ஹும்” என எல்லா பக்கமும் தலையை ஆட்டிய தென்றலின் தலைமீது தன்னுடைய உள்ளங்கையை வைத்து தலை ஆட்டலை நிப்பாட்டிய ருத்ரன்

“ ஹ்ம்ம் இப்போ சொல்லு ஏன் உன் உரிமையை நீ எடுத்துக்கல??” என கேட்க

“ அது…. அது உங்க தகுதிக்கு…”

“ இவ்வளவு பெரிய குடும்பத்துக்கு மருமகள வர தகுதி இருக்கு எனக்கு மனைவியை வர தகுதி இல்லையா??” என அழுத்தமாக ருத்ரன் வினவ தென்றலோ புரியாத பாவனையுடன் “ புரியல”
என கூற

“ ம்ப்ச் இல்ல தகுதி இல்லைனு சொன்னியே அப்போ நீ கல்யாணத்துக்கே சம்மதிச்சு இருந்துருக்க கூடாது.
ஏன்னா அப்போ என்னைய பத்தி மட்டும்தான் தெரியாது. ஆனா இந்த குடுமபத்தை பத்தி தெரியும்ல” என கேட்க எதுவும் கூறாது அமைதியாக தென்றல் குனிந்து நிற்க மேலும் தென்றலை நெருங்கிய ருத்ரன் தென்றலின் தாடையை தன் சுட்டுவிரலால் நிமிர்த்தி,

“ என் கண்ணை பாரு தென்றல்” என கனிவுடன் கூற அந்த குரலில் கட்டுண்டு நிமிர்ந்து ருத்ரனின் கண்களை பாவையின் கண்கள் நேர்கொண்டு சந்திக்க ருத்ரனோ நிதானமாக,

“ அப்போ உரிமைய எடுத்துக்கோ தென்றல்” என மெதுவாக அதே நேரம் உறுதியுடன் கூற

அதில் அதிர்வுடன் இரண்டடி பின்னகர்ந்த தென்றல் “ இல்ல” என எதோ மறுப்பு கூற வர தன் விரலை தென்றலின் உதட்டின் மீது வைத்து தடுத்து

“ தென்றல் உரிமையை எடுத்துக்குறியான்னு கேட்கல எடுத்துக்கோன்னு சொன்னே” என அழுத்தமாக அதே நேரம் தீவிரமான முக பாவத்துடன் கூறிய ருத்ரவர்மனை கண்டு பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டு இருந்த தென்றலை விடுத்து நேராக ஜானவியிடம் சென்ற ருத்ரன்

“ அம்மா என் பொண்டாட்டி இனிமே என் அறையிலதான் இருக்கனும். அதான் நான் அவளுக்கு குடுக்குற முதல் உரிமை சரியா முதல்ல அந்த ஏற்பட்ட பாருங்க” என கூறிவிட்டு போனுடன் அங்கிருந்த நகர பார்த்த ருத்ரனிடம்

“ ஏன் ருத்ரா உனக்கு மூளை எதுவும் குழம்பிபோச்சா??” என மாயாவதி சத்தமாக கேட்க

“ ஏன் அத்தை அப்படி கேட்குறீங்க??” என சிறு நக்கல் தொனியில் கேட்ட ருத்ரவர்மனின் நக்கலை கவனிக்காது

“ இல்ல இவளை உன்னோட பொண்டாட்டின்னு சொன்னவுடன் ஏத்துக்கிட்ட”

“ அப்போ நான் என்ன செய்யணும்ன்னு எதிர் பார்க்குறீங்க ??” என தீவிரமாக கேட்ட ருத்ரனிடம்

‘ என்ன கூறுவது’ என மாயாவதி யோசிக்க

“ உனக்கு கோவமே வரலையா??” என லீலாவதி இடைபுகுந்து கேட்க

“ ஏன் வராம அது எல்லாம் நிறைய இருக்கு உங்க எல்லார் மேலையும். ஆனா என் பொண்டாட்டியோட அழகை பார்த்தவுடன் கோவம் எல்லாம் பறந்து போச்சு.

அதோட என் பொண்டாட்டிக்கு முதல்ல உரிமை பிரச்சனைய முடிச்சு வச்சு தான் யாரு இங்க விருந்தாளி யாரு சொந்தக்கரவங்கா யாருன்னு எல்லாம் தெரியணும் .

சரி அத்தை உங்க கேள்விக்கு எல்லாம் நான் அப்புறம் பதில் சொல்றேன் இப்போ நான் முக்கியமான போன் பேசணும்’ என கூறிவிட்டு தென்றலிடம் கண்ணடித்துவிட்டு வெளியில் சென்ற ருத்ரவர்மனை சிந்தனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் சின்னாத்தா.

அதன் பின் உணவருந்த சென்ற உறவுகள் அனைவரும் வீட்டிற்குள் வர அத்துடன் அனைவரும் ருத்ரன் தென்றல் பிரச்சனையை ஒதுக்கி வைத்தனர்.

“ என்ன லீலா இப்படி ஆகிடுச்சு…??”

“ ஆமா க்கா இவன் தென்றலை ஏத்துக்கலைனா மூணு வருஷ முன்னாடி நடந்த பிரச்சனையை வச்சும் இந்த கல்யாணம் வச்சு கடைசி வரைக்கும் கல்யாணம் ஆகாம விடலாம்ன்னு பார்த்தா இவன் ஏத்துக்கிட்டான். அதுவும் சந்தோசமா. ம்ப்ச் எனக்கு கடுப்பா வருதுக்கா” என மாயாவதியும் லீலாவதியும் புலம்பிக்கொண்டிருந்தனர்.

ருத்ரனின் அறைக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடித்த தென்றலை கண்ட சின்னாத்தா,

“ இங்க பாரு செல்வி இப்போ என்னத்துக்கு இவ்வளவு பயப்புடுற. உன் புருசனோட ரூம்புக்குத்தானே போற. பிறவு என்ன??” என கடுப்படிக்க

“ உனக்கு என்ன??.... அவரை பார்த்தா எனக்குல பயத்துல மயக்கம் வந்துடும் போல. இதுல பக்கத்துல அதுவும் ஒரே அறையில ஹ்ம்ம் கூம் நான் மாட்டேன்” என தென்றல் மீண்டும் அடம்பிடிக்க

“ மயக்கம் வந்தா என் பேரனை கெட்டியா பிடிச்சுக்க கீழ விழ மாட்ட” என கூறிய சின்னத்தவை கடுப்புடன் முறைத்த தென்றலிடம்

“ இங்க பாருடி உன் தாத்தாவை பார்த்து அந்த காலத்துல எட்டுப்பட்டி கிராமமும் பயப்புடும். ஆனா அந்த மனிசன் கடைசி வரைக்கும் என்கிட்டே பெட்டி பாம்பா அடங்கித்தான் இருந்தாரு. உன்னைய மாதிரி பயந்தா குடும்ப நடந்திருக்க முடியுமா இல்ல ரெண்டு பிள்ளையத்தான் பெத்துருக்க முடியுமா சொல்லு” என கூற

“ எப்படி ஆத்தா தாத்தாவை மடக்குன??” என வியந்து தென்றல் கேட்க

“ அது ஒன்னும் இல்லடி ஆரம்பத்துல இருந்து உங்க தாத்தாரு எதும் சொன்னாலும் என்ன இடம் எங்க இருக்கோம்ன்னு ஒன்னும் பார்க்க மாட்டேன் நின்ன இடத்துல இருந்து கத்தி ஒப்பாரி வைப்பேன் பாரு மனுஷன் அடங்கிடுவாரு” என சிறு வெட்கத்துடன் கூறிய சின்னாத்தாவை முறைத்த தென்றலை கண்டு சிரித்த ஜானவி

“ தென்றல் நீவாட்டுக்கு உன் ஆத்தா பேச்சை கேட்டு ருத்ரன் முன்னாடி அழுதுடாத அவனுக்கு அழுதா பிடிக்காது எரிஞ்சு விழுவான்” என தன் மகனை பற்றி நன்கு அறிந்தவராக கூற

“ அப்போ உனக்கு நான் வேற யோசனை சொல்றேன் செல்வி” என கூற வந்த சின்னாத்தாவை கண்டு

“ வேணாம் உன் யோசனைக்கு நான் அவருகிட்ட ரெண்டு அடிவேணும்ன்னா வாங்கிக்குறேன்” என சத்தமாக கூற இதுவரை அமைதியாக தென்றலை அலங்கரித்துக்கொண்டிருந்த நித்யவதி

“ ஒரு வேளை ஆத்தா அழுகாம இருந்திருந்தா இன்னும் ரெண்டு பிள்ளைகளை பெத்துருக்கலாம் போல” என போகிற போக்கிலசொல்லிவிட்டு தென்றலை அழைத்துக்கொண்டு ருத்ரனின் அறைக்கு செல்ல சின்னாத்தா நித்யவதியை முறைத்துக்கொண்டிருந்தார்

ஜானவியும் சின்னாத்தாவும் மிரட்டி கெஞ்சி கொஞ்சி அனுப்பிவைக்க பயத்துடன் சென்ற தென்றல் அங்கு அறையில் ருத்ரன் இல்லாததை கண்டு ஒரு நிம்மதியுடன் அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்க சிறுது நேரத்தில் உறங்கியும் போனாள்.

நள்ளிரவில் எங்கோ பறப்பது போலவும் பனி காற்று ஊசிபோல குத்தவும் சற்றே கண்களை திறந்து பார்க்க ருத்ரன் தென்றலை தூக்கிக்கொண்டு பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர வைக்க அதில் முழு தூக்கமும் கலைய பயத்துடன் எழுந்து குனிந்து கொண்டு நிற்க;

அவள் உடல் நடுங்க ஆர்மபித்தது .அதற்கு காரணம் பனியா இல்லை ருத்ரனிடம் இருந்த பணிவா பயமா என அவள் மட்டுமே அறிந்த ஒன்று.

“ இப்போ எதுக்கு எழுந்து நிற்கிற முதல்ல உட்காரு” என சற்றே அதட்டிய ருத்ரவர்மனை கண்டு

‘ பேசாம நம்ம ஆத்தா சொன்னமாதிரி அழுதுட்டா’ என உள் மனது கூற இன்னொரு மனமோ ‘ வேணாம் செல்வி அப்புறம் அவுங்க கை பேசுனாலும் பேசும். அதனால வேணாம் பேசாம என்ன சொல்ல்லுறாங்கன்னு கவனி’ என தென்றல் மனதில் பட்டிமன்றம் நடத்த

“ ஏய் உன்னையதான் உட்காரு முதல்ல” என இன்னும் சற்றே அதட்டலுடன் கூற அதில் பயந்து அமர அவளின் இருபக்கமும் கைகளை ஊன்றி முகத்தை நெருங்கிய ருத்ரவர்மன்

“ மூணு வருசத்துக்கு முன்னாடி பிரச்சனை எல்லாம் முடிஞ்சவுடன் உன்கிட்ட பேச வந்தப்போ நான் என்ன சொன்னே நீ என்ன பண்ணிவச்சிருக்க” என கோவமாக கேட்ட ருத்ரவர்மனை அதுவரை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த தென்றல்,

அவனின் கேள்வியில் அன்றைய நாளின் நினைவில் ருத்ரனை தன் பலம்கொண்டு நகர்த்துவிட்டு எழுந்து நின்று முறைத்து கொண்டிருந்தாள்.

‘ என்ன முறைக்குறா??... ரைட்டு formkuக்கு வந்துட்டா. கோவத்தை விட்டுடாதடா ருத்ரா. கெத்தை maintain பண்ணு’ என மனதில் கூறிக்கொண்டு ருத்ரனும் தென்றலை முறைக்க ஆரம்பித்தான்.

அதே நேரம் தோட்டத்தில் சின்னாத்தா ஜானவி நித்யவதி அருணா ராஜவர்மன் சிம்மவர்மன் ஐவருக்கும் தென்றல் ருத்ரன் திருமணத்தன்று இரவு சின்னாத்தாவிடம் தென்றல் கூறிய கடந்த கால விஷயங்களை கூற ஆரம்பித்தார்.


friends sorry for the delay. என் பையனுக்கும் பொண்ணுக்கும் முதல் மொட்டை போட்டு ஒரு வழிய காது குத்தி விழாவை முடிச்சாச்சு அதுல கொஞ்சம் தாமதமாகிடுச்சு (இல்லைனா மட்டும் சீக்கிரம் போட்டுடுவியாக்கும் )


அடுத்த ரெண்டு epi யும் flashback தான் அதுல தெரிஞ்சுடும் ருத்ரனோட இந்த changes கான காரணம். அப்புறம் story boringaa இருக்க இல்ல எதாவது குறைன்னா சொல்லுங்க friends i will try to change that.

இது என்னோட ரெண்டாவது கதை அதோட typing தெரியாது ஒருவழியா thanglishla type பண்ணுறதால தப்பு இருந்தா சொல்லுங்க நான் மாத்திடுறேன்

and thanks for supporting friends
Nice ep
 

Advertisement

Top