வான் தழுவிடிலோ வெண்ணிலவே 13

Advertisement

நாலு பேரின்
நாக்கு நஞ்சாய் மாற
நிச்சயத்தின் பந்தம்
நிமிடத்தில் உடைந்தது....

நிதானம் இழந்து
நியாயம் மறந்து
நெஞ்சில் நின்ற காதலை
நெருப்பாக்கிட...

நம்பிக்கை கட்டிய நேசம்
நாடகமென சிதறி
நிழலாய் நின்றது நினைவு....


நேசம் வைத்த
நம்மவர்களின் வார்த்தை
நெஞ்சை கிழித்தபோது
நரம்பில் ஓடிய நேசம் கூட
நஞ்சென தோன்றியது....


நிச்சயதன்றே
நிட்சயமற்று போனது
நிலவாய் ஒளிர்ந்த உறவு
நொடியில் இருளாயிற்று...
ரொம்ப ரொம்ப அழகா முழு கதையையும் சில வரிகள் லே சொல்லிட்டீங்க. உண்மையில் இப்படி கவிதையாக சொல்வது ஒரு தனிக்கலை. அருமை மா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றிகள் பல
 
ஆராதனா விக்ரம் உறவு அலுவலக ரீதியாகவேச் சென்று கொண்டிருக்கிறது. அவனின் உணர்வுகள் அவளுக்குப் புரியும் வகையில் அவர்களின் சந்திப்புகள் இல்லை. ஆனால் விக்ரம் முதலிலே அவனின் சாம்ராஜ்யத்தில் இடம் என்று கூறி விட்டான். அவனைப் பொருத்தவரை அவளே எல்லாம். கண்ணனின் ராதையாக நினைக்கிறான் விக்ரம். ஆராதனவோ தேவகி மைந்தன் எனும் கண்ணோட்டமே. பார்க்கலாம். யார் முதலில் உணர்கிறார்கள் என

நட்புடன்
தேவி
கதையை ரொம்ப அழகா அனலைஸ் செய்து இருக்கீங்க. அடுத்து அடுத்து வரும் அத்தியாயங்களில் அவங்க கண்ணோட்டம் மாறுகிறதா அப்படின்னு பார்ப்போம். உங்க கமென்ட் எங்களுக்கு பெரிய சந்தோஷம். நன்றிகள் பல
 
Aaradhana has not got into Vikram's shoes; not able to understand his emotions..she is not able to think from his point of view...
She has not informed him about her friend or friendship and has not pulled Vikram in the scenes..but she has kept him away
Beautiful analysis. This lets us know how much u r engrossed and enjoying the story. Really very happy to see such comments maa. Lets wait for the upcoming episodes and see how aaraadhana and vikram try to resolve their differences. Thanks a lot ma
 
இருவரும் இப்படி இருந்தால் எப்படி சரியாகும்
உண்மையோ உண்மை. பார்க்ல்லாம் அடுத்து வர அத்தியாயங்களில் ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பண்றாங்க அப்படின்னு. தொடர்ந்து கதை படித்து நீங்கள் கருத்துக்கள் தருவது எங்களுக்கு எஒம்ப சந்தோஷம். நன்றிகள் பல மா
 
அடுத்த பிரச்சனை ஆரா அம்மா ,அவங்க மேல் நம்பிக்கையின்மையால் தான் விக்ரமின் அவசரம்,
எனக்கென்னவோ ஆரா மோதிரத்தை கழட்டி இருக்க கூடாது என்று தோணுது,நல்ல நண்பனா இருந்தால் அப்படி சொல்லியிருக்க மாட்டான்.
இருவருக்கும் பொறுமை ரொம்ம கம்மி.
கதையை ரசிச்சு படிச்சு ரொம்ப அழகா அனலைஸ் பண்றீங்க. எங்களுக்கு அத்தனை சந்தோஷம் உங்க கமென்ட் பார்க்க. அடுத்து ஆராவும் விக்ரமும் என்ன செய்ய காத்திருக்காங்களோ. பார்க்கலாம். நன்றிகள் பல மா
 
ஆரா விக்ரம் இருவர் மனதிலும் காதல் இருக்கிறது புரிதல் தான் இல்லை.
 
  • Love
Reactions: M&V
ஆரா விக்ரம் இருவர் மனதிலும் காதல் இருக்கிறது புரிதல் தான் இல்லை.
சீக்கிரம் வரும் என நம்புவோம். நன்றிகள் பல
 

Advertisement

Advertisement

Back
Top