Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வா வா என் தூர நிலா 🌜

Advertisement

Ashokaa

Well-known member
Member
வா வா என் தூர நிலா 🌜

என் மனசுக்கு நெருக்கமான இதமான வருடலான கதைகளில் இதுவும் ஒன்று. முதல் முறை படித்த அதே ஆவல் அதே தேடல் அதே காதலை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் தந்த கதை.

காவல் துறைன்னாலே ஒரு குண்டான் கஞ்சிய உள்ளையும் வெளியையும் விட்டுக்கிட்டு வெறப்பா சுத்தாம எல்லா இடத்திலும் காதலோடு சுத்தி வந்து, அதே காதலால் நம்மையும் சுத்தவிட்டு, எழுத்தாளரையும் இன்னொரு கதை எழுத சொல்லி சுத்தல்ல விட்ட சூரியாகாரு எனக்கு எவ்வளவு பிடிக்குமோ, அவரு பொண்டாட்டி யமுனா (சூர்யாகாருவோட செல்ல ப்ரியத்தமா) மேல எனக்கு அவ்வளவு பொறாமை. என்னங்கடா அவ்வளவு காதல் உங்களுக்குன்னு.

அப்படி ஒரு காதலை பொழியும் அம்மா அப்பாவுக்கே டஃப் காம்பிடிஷன் கொடுக்கும் சிரு, சிறுக சிறுக மனசெல்லாம் 'பங்காரமா' பயங்கரமா ஒட்டிக்கிட்டான்.

என்ன தான் பவி 'திருப்புனனேனி', 'சிங்காரம்', 'பயங்கர காரம்', 'வராத ப்ரசாத்' என இன்னும் பல பேருல சிருவை அர்ச்சனை பண்ணினாலும் அவன் என்னைக்கும் எனக்கு தங்கரதம் தான். My most favourite.

கொஞ்சி கொஞ்சியே காதலிக்கிற அப்பாவைவிட கொஞ்சம் கூட கொஞ்சாம, கெஞ்சாம, கோவத்துலையே காதலிக்கிற எங்க 'காதல் வர்ற ப்ரசாத்' தான் எங்க விருப்புப்பம்ன்னு பவி குட்டிக்கு இன்னும் பற்பலமுறை சொல்ல ஆசை. (ஆனாலும் அவ கேக்கமாட்டா - ஹ்ம்ம், சரியான சூர்யா கோண்டு @Pavithra Narayanan)

அன்பை நேசத்தை காதலை பேசி சொல்லலாம் பேசாமையும் சொல்லாம். எழுதி சொல்லலாம் ஏன், அழுது கூட சொல்லலாம். ஆனா தலைல முட்டி சொல்லலாம்ன்னு பல ஆயிரம் பேருக்கு சொல்லிகுடுத்த எங்க தங்க ரதம் திரிபுரனேனி சிரஞ்சீவி வரப்ரசாத் சூர்யநாராயணன் எப்பவும் அவன் பேரைப் போலவே இன்னும் பல வர்ஷம் நம் நினைவுகளில் நீண்டு நிறைஞ்சு இருப்பான்.

இவ்வளவு அன்பையும் தனக்கே தனக்குன்னு சேர்த்து அள்ளிகிட்ட கல்கி அவளோட பேரைப் போலவே படிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தால், அர்பணிப்பால், அப்பாவை ஏமாற்ற நினைக்காத மனசால் ரொம்பவே அழகா நிறைந்து நிற்கிறாள்.

மாமன் மகன் மேல் நட்பு மட்டுமே என்று விளக்கும் போதும், அத்தையை அத்தையின் அன்பின் வழி பார்க்கும் போதும், தன் அன்பால் திரிபுரனேனியை காதலால் திருப்பிப் போடும் போதும் அவளின் பார்வைகள் எல்லாமே தெளிவு தான்.

கல்கியும் ப்ரசாத்தும் காலமெல்லாம் காதல் பேசி தூர நிலவையும் நம் கைகளில் தந்துவிட, அந்த தூரத்து நிலவும் நம் மனதில் பௌர்ணமி நிலவாய் என்றும் என்றும் ஒளி வீசும்.

இன்னும் இன்னும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருவிதத்தில் மனதில் நிற்கும் போது, இந்த காதல் நிலா கதையே என்றாலும் தூவானமாய் மனதை நனைத்து நிலவின் ஒளிபோலவே நிதர்சனமாய் நினைவிலும் மனதிலும் நிறைந்து விட்டது.

மீண்டும் ஒருமுறை கல்கியையும் பங்காரத்தையும் பதிவுகளாய் என் பார்வைக்குத் தந்த என் குட்டி பங்காரம் பவித்ராவுக்கு அன்பு முத்தங்கள்.

அன்புடன்

அசோகா.
 
Last edited:
வா வா என் தூர நிலா 🌜

என் மனசுக்கு நெருக்கமான இதமான வருடலான கதைகளில் இதுவும் ஒன்று. முதல் முறை படித்த அதே ஆவல் அதே தேடல் அதே காதலை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் தந்த கதை.

காவல் துறைன்னாலே ஒரு குண்டான் கஞ்சிய உள்ளையும் வெளியையும் விட்டுக்கிட்டு வெறப்பா சுத்தாம எல்லா இடத்திலும் காதலோடு சுத்தி வந்து, அதே காதலால் நம்மையும் சுத்தவிட்டு, எழுத்தாளரையும் இன்னொரு கதை எழுத சொல்லி சுத்தல்ல விட்ட சூரியாகாரு எனக்கு எவ்வளவு பிடிக்குமோ, அவரு பொண்டாட்டி யமுனா (சூர்யாகாருவோட செல்ல ப்ரியத்தமா) மேல எனக்கு அவ்வளவு பொறாமை. என்னங்கடா அவ்வளவு காதல் உங்களுக்குன்னு.

அப்படி ஒரு காதலை பொழியும் அம்மா அப்பாவுக்கே டஃப் காம்பிடிஷன் கொடுக்கும் சிரு, சிறுக சிறுக மனசெல்லாம் 'பங்காரமா' பயங்கரமா ஒட்டிக்கிட்டான்.

என்ன தான் பவி 'திருப்புனனேனி', 'சிங்காரம்', 'பயங்கர காரம்', 'வராத ப்ரசாத்' என இன்னும் பல பேருல சிருவை அர்ச்சனை பண்ணினாலும் அவன் என்னைக்கும் எனக்கு தங்கரதம் தான். My most favourite.

கொஞ்சி கொஞ்சியே காதலிக்கிற அப்பாவைவிட கொஞ்சம் கூட கொஞ்சாம, கெஞ்சாம, கோவத்துலையே காதலிக்கிற எங்க 'காதல் வர்ற ப்ரசாத்' தான் எங்க விருப்புப்பம்ன்னு பவி குட்டிக்கு இன்னும் பற்பலமுறை சொல்ல ஆசை. (ஆனாலும் அவ கேக்கமாட்டா - ஹ்ம்ம், சரியான சூர்யா கோண்டு)

அன்பை நேசத்தை காதலை பேசி சொல்லலாம் பேசாமையும் சொல்லாம். எழுதி சொல்லலாம் ஏன், அழுது கூட சொல்லலாம். ஆனா தலைல முட்டி சொல்லலாம்ன்னு பல ஆயிரம் பேருக்கு சொல்லிகுடுத்த எங்க தங்க ரதம் திரிபுரனேனி சிரஞ்சீவி வரப்ரசாத் சூர்யநாராயணன் எப்பவும் அவன் பேரைப் போலவே இன்னும் பல வர்ஷம் நம் நினைவுகளில் நிறைஞ்சு இருப்பான்.

இவ்வளவு அன்பையும் தனக்கே தனக்குன்னு சேர்த்து அள்ளிகிட்ட கல்கி அவளோட பேரைப் போலவே படிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தால், அர்பணிப்பால், அப்பாவை ஏமாற்ற நினைக்காத மனசால் ரொம்பவே அழகா நிறைந்து நிற்கிறாள்.

மாமன் மகன் மேல் நட்பு மட்டுமே என்று விளக்கும் போதும், அத்தையை அத்தையின் அன்பின் வழி பார்க்கும் போதும், தன் அன்பால் திரிபுரனேனியை காதலால் திருப்பிப் போடும் போதும் அவளின் பார்வைகள் எல்லாமே தெளிவு தான்.

கல்கியும் ப்ரசாத்தும் காலமெல்லாம் காதல் பேசி தூர நிலவையும் நம் கைகளில் தந்துவிட, அந்த தூரத்து நிலவும் நம் மனதில் பௌர்ணமி நிலவாய் என்றும் என்றும் ஒளி வீசும்.

இன்னும் இன்னும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருவிதத்தில் மனதில் நிற்கும் போது, இந்த காதல் நிலா கதையே என்றாலும் தூவானமாய் மனதை நனைத்து நிலவின் ஒளிபோலவே நிதர்சனமாய் நினைவிலும் மனதிலும் நிறைந்து விட்டது.

மீண்டும் ஒருமுறை கல்கியையும் பங்காரத்தையும் பதிவுகளாய் என் பார்வைக்குத் தந்த என் குட்டி பங்காரம் பவித்ராவுக்கு அன்பு முத்தங்கள்.

அன்புடன்

அசோகா.
Wow ...lovely review.....sweet like Siru :love: :love:
 
Surya garu fans kum reason Pavi's writing thaana. Characterisation Pavi odathu thaana 😉
And Chiru vum fav hero thaan. Including Boomer all r unique in their own way. :)
kandippa... But எங்கயோ கொஞ்சம் பவி இவனுக்கு அதிகம் favour பண்ணிட்டா... அதான் இவனை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குது
 
Top