கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதைக்களம் சுவாரஸ்யத்தையும் நெகிழ்ச்சியையும் கொடுத்தது.
ரகுநந்தன்: பாரம்பரிய மருத்துவ குடும்பப் பின்னணியில் பிறந்து தாயின் மீது அளவில்லாத அன்பை கொண்ட நல்ல ஆண்மகன். தன் திறமையினால் கல்வியில் சிறந்து மருத்துவத்துறையில் தடம் பதித்து சிறந்து விளங்கியவனின் மனம் நிறைவை அடையாமல் பிறர் அடைமொழியில் தன்னை அடையாளப்படுத்துவதாக தேவையற்ற எண்ணப் போக்கை வளர்த்துக் கொண்டதன் விளைவு வாழ்வை சோதனைக்குள்ளாக வைத்து கலங்கி நிற்க காரணமாக அமைந்துவிட்டது. உண்மையான நட்பை கொண்டவனின் வாழ்வில் வைஷ்ணவி வரமாக வந்தவள்., அதே நட்பினால் சாபமும் பெற்றான் பார்த்திபன் என்னும் கருநாகத்தினால், என்ன சொல்ல எவ்வளவுதான் படித்திருந்தாலும் மேன்மை பெற்றிருந்தாலும் கண்மூடித்தனமான நம்பிக்கையை கயவன் மீது வைத்ததன் பயன் திருமண வாழ்வில் ஆரம்பமே அடி வாங்க வைத்தது. தன் மடமையை எண்ணி தெளிந்து வருந்தி அதை சரி செய்ய போராடியவனின் வலியும் கவலையை கொடுத்தது. நிறைவில் தன் மனதை உரியவளுக்கு உணர வைத்து உயிர் காதலை கொடுத்து சந்தோஷ கடலில் மிதந்தவனின் மகிழ்ச்சி நெகிழ்ச்சியை கொடுத்தது





.
மதுமிதா: அழகும் அறிவும் பண்பும் நிறைந்த மெல்லிய மனம் படைத்த குணவதி இவள். தன் அன்பால் செயலால் பிறர் அன்பை பெறுமளவிற்கு ஆசீர்வதிக்கப்பட்டவள்
. தன் தாய் தந்தையையும் பாசத்திற்குரிய மாமனையும் அத்தையையும் இழந்து நிற்கதியாய் தவித்து நின்றவளின் நிலை வலிக்க செய்தது. தன்னை சார்ந்து நிற்கும் தங்கை மற்றும் தம்பியின் வாழ்விற்காக விடாமுயற்சியுடன் தனித்துவத்துடன் வாழ்க்கையை வெல்ல போராடியவளின் உள்ளம் கண்டு நெகிழ்ந்தது நெஞ்சம். தன் வாழ்வின் அங்கமாய் நேசத்தினை விதைத்து கரம் சேர்ந்து மகிழ்ந்தவளின் மனதினை கொண்டவனே நொறுக்கிய போது ஒடுங்கியவளின் வலி ரணத்தை கொடுத்தது. தன்னவன் தவறை மன்னித்து காதல் வானில் சிறகடித்து பறந்தவளின் மகிழ்ச்சி ரசனையை கொடுத்தது


.


ரகு -மது 

தன் தாயின் குண இயல்புகள் மூலம் தன் இதயக் கூட்டில் நுழைந்தவளை புரிந்தும் அறிந்தும் தாயுமானவனாய் உயிர் கூட்டில் பதுக்கி வைத்தவனின் காதலும் தன் நந்து கண்ணனுக்கு தாய் அன்பை கொடுத்து மடி தங்கியவளின் காதலும் தங்கள் காதல் பரிசு மழலையுடன் என்றும் சீரும் சிறப்பும் பெற்று சந்தோச வானில் சிறகடிக்க வாழ்த்துக்கள்










வைஷாலி -ராகவன் : உண்மையான நட்பின் இலக்கணம் 
. எங்கும் எப்பொழுதும் நட்புக்காக துணிந்து துணை நின்று நல்வழிப்படுத்தும் இவள் உள்ளமும் அழகு.
ராகவன் :வைஷுக்கு ஏற்ற குணவாளன் நல்ல ஆண் மகன்.
தேவேந்திரன் -சொர்ணம்:பெறாத பிள்ளைகளுக்கு அனைத்துமாய் இருந்து மனதில் உயர்ந்து நின்றனர் 



.
ரெங்கநாதன், ராமநாதன், பட்டு பாட்டி :போற்ற பட வேண்டியவர்கள் 



மானஸா -திலீப் 

ராஜீ, பிரகன் மாதவ், ராகினி:அன்பு நெஞ்சங்கள் 



.
மகேஸ்வரி, நாகா :மனித உருவில் நடமாடும் அரக்கிகள் 


.
பார்த்திபன் :நட்பை வைத்து சதியும் சகுனி தனமும் செய்த மிருகம் 
.இவனது முடிவு இவன் செய்த பாவத்திற்கான பிராயசித்தம்.
@Lavanya Rajesh மென்மேலும் நல் படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்
Last edited: