Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

மித்ரா பரணி

Well-known member
Member
Hiiiii friendssss :love:?

How r u all!!!!?? hope u all doing great.. ?

1471

Things end but memories last forever :love:?

இவை எல்லாம் முகநூலில் மண்வாசத்திற்கு வந்த விமர்சனங்கள். thought of sharing this with u all ??

?????

மித்ரா பரணி

மனதோடு மண்வாசம்

அருமையான கிராமத்து கதை

மூன்று ஜோடிகள் இவர்களின் காதலும், உணர்வுகளும், பாசம், அன்பு, அனைத்தும் கொண்ட அருமையான கிராமத்து பின்னணியில் செம யா எழுதி இருக்காங்க

ஆடு, மாடு, கோழி, வயல், கோவில் என்று கிராமத்துக்கே உரிய அனைத்தும் கொண்ட மண் மனம் மாறா அற்புதம்

விக்ரமன், குலசேகரன் இரு பாண்டியர்களும் செம இவர்களின் சொல்ல படாத காதலும், அது திருமணத்தில் முடிவதும், தங்கள் கிராமத்திற்கு இவர்கள் செய்யும் விஷயங்களும் சூப்பர்

நாயகி பாட்டி அற்புதமான மனுஷி, தன்னுடைய இந்த வயதிலும் தன் பேத்திகளை பார்த்து பார்த்து செய்வது அருமை

அரசி நிஜமாவே அரசி தான் தன்னுடைய மச்சானுக்காக தன் கிராமத்திற்காக அவள் தேர்ந்தெடுத்து செய்யும் பணி அற்புதம் அவளை புலி என்று சொல்லுவதில் தவறே அல்ல புலி தான்

அரும்பு இந்த எலி பண்ணும் வேலையும் தன் மாமனுக்காக போராடுவது, இவளின் வேலை எல்லாமே அருமை

வெள்ளையன் இவன் காதல் சூப் சுப்பாத்தாவோட CCTV கேமரா செம

ஆறுச்சாமி அருமையான தந்தை, தன் பெண்களை வளர்ப்பதில் இருந்து தன் கெளரவம் காப்பதில் இருந்து தன் பெண்ணுக்காக மருகுவது எல்லாம் அருமை

மைக் மாரிமுத்து, இன்னும் பிற கதாபாத்திரங்களும் ரொம்பவே அருமை

சாரதா அம்மா தன் மகன் காதலுக்காக இவர் செய்யும் அலும்பும் கந்தசாமியிடம் மாட்டி முழிப்பது எல்லாம்

மாறன், தமிழ் இவர்களின் காதலும், இவர்களின் பண்பும் சூப்பர்

மண் மணம் மாறா கிராமத்து பாஷையுடன் உணர்வுகளும், தூய்மையான காதல் கதை படிக்க விரும்புவோர் படிங்க ( DON'T MISS IT )


?????

TamilNovelWriters.com Novels Discussion

மித்ரா பரணி சகோதரி எழுதிய "மனதோடு மண்வாசம்" போட்டிக் கதைக்கான விமர்ச்சனம்

பிரண்ட்ஸ் மூன்று ஜோடிக்கள் இருப்பதால் இந்த முறை சற்று வித்தியாசமாக ரிவ்யூ கொடுக்கிறேன்.

ஆறுச்சாமி :

மனைவியை இழந்து தாயின் துணையுடன் இரு மகள்களை வளர்த்து வருபவர். ஊர் தலைவர் நம்ம கெத்துச் சாமி.மூத்தமகள் பள்ளி ஆசிரியை அடக்கமான பெண், தகப்பன் பேச்சுக்கு கட்டுப்பட்டவள். சில நாட்களாக அறிமுகம் ஆன ஆடவனை "கட்டவண்டி " என்றழைப்பதும் அவனை விரும்புவதும் அழகு...தகப்பனார் பார்க்கும் மாப்பிள்ளை இவனாக இருக்கும் என நினைத்து சம்மதித்து நிச்சயதினத்தில் பார்த்தால் அப்பாவின் தோழன் மகன் மணமகனாக நிற்கிறான்…..இவளது காதலின் நிலைப்பாடு…. திருமணம் யாருடன்….விரும்பியவனை மணந்தாலும் தகப்பன் ஏற்பாரா...மகளின் மீதான பாசம்….

அடுத்த மகள் ஐந்து வருடங்களாக லண்டனுக்குச் சென்று டாக்டர் படித்து வருகிறார். தைரியசாலி ,குறும்புக்காரி காம்பவுண்ட் ஏறி குதித்து அத்த கருப்பனிடம் மாட்டுவது ,வீட்டிலே சாமி வந்ததாக ஆடி கறிவேப்பிலை கொத்தால் எல்லோரையும் அடித்து, தகப்பனின் பெல்ட் அடியிலிருந்து தப்புவது ,அப்பாவின் தோழனின் மகன் மீது ரசனைப் பார்வைகளை வீசுவதும் பெறுவதும் அழகு.திடீரென வேலை விஷயமாக சென்னை சென்று வருபவள் வீட்டில் அக்காவின் நிச்சயத்தை கண்டு திகைப்பது ,அமைதியாகி செல்வது ,கோபப்படுவது ,திட்டுவது ,மாமனின் சமாதியில் மனதில் உள்ளதை சொல்லி அழுவது ,அவனை வார்த்தையால் வேதனைப்பட செய்வது ,எல்லாமே அருமை. திடீரென நின்ற திருமணத்தில் மணப்பெண்ணானவள் அவனின் கோபத்தால் பாதிக்கப்படுவாளா...இவர்களின் காதல் திருமண வாழ்வின் நிலைப்பாடென்ன…..

அரும்பு :

முத்துச்சாமி & மரகதம்மாள் தம்பதியின் மகள். வாயாடி. பாட்டியின் பேச்சைக்கேட்டு அம்மாவையும் அவளையும் பெல்டால் அடிப்பதால் கோபப்படுவது ,தோழியுடன் சேர்ந்து நைட்ஷோ பார்க்க கிளம்பும் போது மாமனிடம் மாட்டுவது ,சிறு வயதிலிருந்தே தாய் மாமன் மீது ஆசைப்பபடுவது, அவனுக்கு கறிக்குழம்பு கொடுத்து அவனுடன் கலாட்டா பண்ணுவது, அத்தையின் மகனை மணக்க மறுப்பது, மாமனிடம் வருந்துவது, அவனை திட்டுவது மிரட்டுவதெல்லாமே ரசனை. திருமணத்தில் அவள் யாரை மணக்கிறாள்...மாமனை மணந்தாலும் தகப்பன் ஏற்றுக் கொள்வாரா….திருமணத்திற்கு பிறகு எப்படி வாழ்ந்து காட்டுகிறார்கள் என்பதையெல்லாம் ரொம்ப ரொம்ப நன்றாக சொல்லியிருக்காங்க….

மூன்று ஹீரோக்களும் அமர்க்களம். மூன்று ஜோடிகளையும் தனி தனியாக காட்சிப் படுத்துவதால் ஆவலான எதிர்பார்ப்பே தோன்றுகிறது…போட்டிகதை படிக்க நன்றாகவே இருக்கு நீங்களும் படித்து மகிழுங்கள் நட்புக்களே….
விக்ரமன் ,குலசேகரன் ,நன்மாறன், அருந்தமிழ் தேவி, வேங்கையரசி ,கந்தசாமி ,சாரதா, ரங்க நாயகி ,சரோஜினி, தேவராஜ்… இன்னும் பல கதாபாத்திரங்கள் உலவுகிறார்கள்…..எல்லாருமே அருமையான படைப்புகள்.

மேலும் பல புதிய தொடர்கதைகளை கொடுத்திட வேண்டுகிறேன்….

வாழ்த்துக்கள் சிஸ்
நன்றி தோழமைகளே


?????

TamilNovelWriters.com Novels Discussion

மித்ரா பரணியின் மனதோடு மண்வாசம் மிக அருமையான ஸ்டோரி நாட்டாமை, சேரன் பாண்டியன், ஐயா, ஆகிய படங்களில் உள்ள கேரக்டர்களை எல்லாம் இந்த ஸ்டோரியில் உள்ள கேரக்டர் களோடு நான் கற்பனை செய்து கொண்டேன். இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்தஜோடி என்றால் அது சாரதா அண்ட் கந்தசாமி ஜோடி தான் மிகவும் அருமையான ஜோடி. சாரதா கேரக்டர் அவ்வளவு அருமையான கேரக்டர். அவரும் அவரது மகனும் வரும் சீன்கள் எல்லாம் செமையா இருக்கும்.

அப்புறம் விக்ரமன் அண்ட் வேங்கை அரசி சரியான டாம் அண்ட் ஜெர்ரி அவர்களுடைய பட்டபெயர்கள் மிகவும் அருமையாக இருக்கும். அத்தக்கருப்பன் கட்டக்காரி இது நம்முடைய நாட்டு மாடுகளின் பெயர்கள்.இந்த ஸ்டோரியில் ரைட்டர் கிராமிய தன்மையோடு நிறைய தகவல்களையும் நமக்கு அள்ளித் தந்துள்ளார். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் கிராமத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் அதிலிருந்து ஒவ்வொருவரும் எவ்வாறு வெளி வருகிறார்கள் என்றும் அழகாக எடுத்துரைத்துள்ளார்.

குலசேகரன் அரும்பு அழகான ஜோடி. இந்த கதையில் அதிகமான கேரக்டர்கள் இருக்கிறார்கள் என்று முதலில் நமக்கு தோன்றும் ஆனால் கதை முடியும்போது ஒவ்வொருவரும் நம் மனதில் இருப்பார்கள்.

ஆறுச்சாமி அருமையான அப்பா என்றால் கந்தசாமி அருமையான மாமனார்.நிறைய பாட்டிமார்களும் இதில் இருக்கிறார்கள் நல்ல பாட்டிக்கு உதாரணம் நாயகி அப்பத்தா. ஊர்வம்பு பேசுவதற்கு சுப்பாத்தா பாட்டி, சிறந்த வில்லி வேலாத்தா பாட்டி.
இதில் மிகவும் அருமையான ஜோடி தன் மனைவியை மிகவும் மரியாதையாக அழைக்கும் மாறன் அண்ட் தமிழ் ஜோடி தான்.இதில் மூன்று குட்டி பசங்களும் வருவாங்க கவின் அகிலன் கட்டவண்டி அடிச்சு ஓட்டுனேன் சொல்லும் போது மிக அழகு.

இன்னும் இந்த ஸ்டோரியை பற்றி நிறைய சொல்லலாம் நிறைய இருக்கு அவ்வளவும் அவ்வளவு அருமையா எழுதி இருப்பாங்க வாசிச்சு பார்த்து என்ஜாய் பண்ணுங்க பிரண்ட்ஸ்.


?????

TamilNovelWriters.com Novels Discussion

மல்லிகா மணிவண்ணன் புதிய தளத்தில் போட்டிக் கதை மித்ரா பரணி
யின் மனதோடு மண்வாசம் எனது பார்வையில். அழகான கோவை மாவட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டு மூன்று காதல் இணைகள். அந்தக் காதலுடன் வீரம், அன்பு, பாசம் எல்லாம் கலந்த கிராமத்துக் கதை. வேங்கயரசி, அரும்பு, அருந்தமிழ் தேவி, விக்ரமன், நன்மாறன், குலசேகரன் அழகான தமிழ் பெயர்கள். விவசாயம், வேளாண்மை சார்ந்த தொழில்கள் படித்த பெண்கள். அழகான மரியாதையான கொங்குத் தமிழ். கதையை படிக்க இதுமட்டும் போதும். மித்ராபரணியின் நீரோட்டம் போன்ற சரளமான எழுத்து நடை. நாட்டு மாடுகளை பற்றிய செய்திகள். அருமையாக கதையை கண்ணியமாக தந்திருக்கிறார் எழுத்தாளர். வாழ்த்துகள்.


?????

TamilNovelWriters.com Novels Discussion

மனதோடு மண்வாசம்...மித்ரபரணி.
போட்டி கதை.
கிராமத்து கதை.தலைப்பே சொல்லுது.
முதல் பாராட்டு அழகான தமிழ் பெயர்களுக்கு குலசேகர பாண்டியன்,விக்ரம பாண்டியன்,வேங்கை அரசி,நன் மாறன்,அருந்தமிழ்,அரும்பு,தீரன்,இன்னும் இருக்கு.அருமை.
அடுத்த பாராட்டு..கால்நடைகள் பற்றி சொன்னதுக்கு.பசு மாடு காளை, அதன் கஷ்டம்,கோழி வளர்ப்பு, என்று நிறைய சொன்னதுக்கு.
அடுத்த பாராட்டு...மண் வளம்.விவசாயம் என்றால் அரிசி மட்டும் இல்லை களாகா முதல் சிறு தானியம் வரை சொன்னதுக்கு.
அசத்தலான ரேக்ளா ரேஸில் ஆரம்பிக்குது கதை.ரேஸில் பாண்டியர் இருவரும் ஜெய்கிறார்கள்.
5 வருடம் லண்டன் சென்று கால்நடை மருத்துவம் படித்து அரசி அன்று தான் ஊர் திரும்புகிறாள்.
ரேஸில் தன் பாண்டியன் ஜெய்ப்பதை பார்த்து வீட்டுக்கு செல்கிறாள்.
எதையும் அவள் மறக்கவில்லை.
ரணகல நாயகி.இவள் வரும் போது எல்லாம் சிரிசிக்கிட்டு இருக்கலாம்.
சாமியாடி எல்லோரையும் மண்டி போட செய்த ஒரு வேலை போது இவளை பற்றி சொல்ல.
கொடுத்த ஒரு வாக்கிற்காக 3 ஜோடிகளும் பிரிந்து பின் சேருகின்றனர்.
என்ன வாக்கு.ஜோடிகள் எப்படி மாறியது. யார் யார் இதுக்கு பின்னாடி இருந்தாங்க.பின் எப்படி சேர்ந்தங்க என்பது தான் கதை.
அத்த கருப்பன்..கட்டைக்காரி நாட்டு மாடுகள் பேராம்.
ஜல்லிக்கட்டு கொண்டு வந்து இணைச்சிட்டுங்க.
நல்லா இருக்கு மா.



?????
 
1472


மனதோடு மண் வாசம்
மித்ரா பரணி

இயற்கையும் பாரம்பரியமும் கலந்த கிராமிய மணம் கமழும் காதல் கதை.....
கதை மாந்தர்கள் எல்லார் பத்தியும் சொல்ல போறது இல்ல நான்..... வேலன் வீரன் வெள்ளையன் அட்டைகருப்பன் கட்டகாரி அழுக்குமறையன் இவுங்களை பத்தி மட்டும் தான்..... ஒரு ஒரு உயிரும் ஒரு இனத்தோட அடையாளம்..... அப்படி இருக்குற அந்த உயிரை அழிச்சிட்டா அந்த இனமே அழிந்து போகும்கிற அடிப்படை கூட தெரியுமா எத்தனை எத்தனை இனத்தை நம்ம இழந்து இருக்கோம்னு சொல்லுற கதை தான் இந்த கதை.....
கதை மாந்தர்கள் பெயரில் ஒரு உயிர்ட்டோம் இருக்கும்....
கண்டிப்பா இந்த கதையை படிச்சிமுடிக்கும் போது கோவை பக்கம் போயிட்டு வந்த பீல் கிசைக்கும்..... வாழ்த்துக்கள் மித்ரா பரணி...

?????

மித்ரா & பரணி அவர்களின் 'மனதோடு மண்வாசம்' #கனவுப்பட்டறை போட்டிக்கத்தை.

தோழர்களின் மக்களான, வேங்கை அரசியும், விக்ரம பாண்டியனும் ஒருவரை ஒருவர் மனதால் விரும்ப, அரசியின் அக்கா, அருந்தமிழ் தேவியை கோவிலில் பார்த்ததில் இருந்து, தன் நெஞ்சுக்குள் அவளை நிறைத்துக்கொண்டு அவளின் சம்மதத்துடன், காதல் செய்கிறான் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த நன்மாறன். அதே நேரம், குடும்ப பிரச்சனையில் விலகி இருக்கும் தன் தாய்மாமனும், விக்ரமனின் நண்பனுமான குலசேகர பாண்டியனின் மேல் உயிரையே வைத்திருக்கும் அவனின் அக்கா மகள், அரசியின் தோழி அரும்பு, என கதையில் மூன்று ஜோடிகள், தங்கள் காதலால், கண்ணீரால், பாசத்தால், நம்மை கட்டிப் போடுகின்றனர்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது போல, இவர்களின் காதல் ஏதும் அறியாமல், விக்ரம பாண்டியனுக்கும், அருந்தமிழ் தேவிக்கும் ஒரு பக்கம் நிச்சயம் நடக்க, மறுபக்கம் அரும்புவுக்கும் அவளின் அத்தை மகனுக்கும் திருமணம் பேசி முடிக்கப்படுகிறது.

மூவரின் காதலும் திருமணத்தில் கைகூடியதா? இல்லை....?
தெரிந்துகொள்ள படியுங்கள், 'மனதோடு மண்வாசம்'

மிக மிக அழகான கதை. காதல், பாசம், வீரம், அன்பு என அத்துணை உணர்வுகளுடன் தொய்வில்லாமல் நகர்கிறது கதை. இதனுடன் ஆங்காங்கே குபீர் சிரிப்பு மொமெண்ட்சும் நம் வயிற்றை கிச்சு கிச்சு மூட்டுகிறது. தேன் போல இருக்கும் கொங்கு தமிழ் வசனங்களை படிக்கையில், மனோரமா ஆச்சி, விஜயகுமார், சரத்குமார் போன்றோர் கண்முன் வந்து செல்கின்றனர். கதை முழுவதும், விவசாயதின் முக்கியத்துவம், நாட்டு மாடுகளின் தேவை, கோழி வளர்ப்பு என நிறைய அத்தியாவசிய விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. கதை மாந்தர்களின் அழகான தமிழ் பெயர்கள், நம்மை கவர்கிறது.

மொத்தத்தில் 'A Very Good Family Entertainer.'

Congratulations and Best Wishes to both of you da.

?????

மித்ரா பரணியின் மனதோடு மண்வாசம்....

பொள்ளாச்சியும் அதன் சுற்று வட்டாரமும் தான் இந்த கதை. ஆரம்பமே ரேக்ளா ரேஸ் அதுல வின் பண்ற நம்ம ஹீரோஸ் பாண்டியர்கள்... விக்ரம பாண்டியன் குலசேகர பாண்டியன். இனொரு ஹீரோ நன்மாறன்.
ஹீரோயின் அரசி அப்பா கூட சண்டை போட்டு வெளிநாடு போய் கால்நடை மருத்துவம் படிக்குறா. தைரியம் ரொம்ப அதிகம்.

தமிழ் இவ அரசியோட அக்கா தங்கச்சிக்கு நேர் ஆப்போசிட்.
அரும்பு இவ அரசி ஓட பிரண்ட் குலசேகர பாண்டியன் இவளுக்கு தாய் மாமா.

குலசேகர பாண்டியனுக்கும் அவங்க மாமாக்கும் செட் ஆகாது ஆனாலும் அவனை காதலிக்கும் அரும்பு. அவள்மேல் தான் காதல் கொண்டு இருந்தாலும் அதை மறுபவன்.

அரசியும் விக்ரம் உம் காதலிப்பாங்க. நன்மாறனும் தமிழும் காதலிப்பாங்க. ஆனா விதி வசத்தால் இல்ல இல்ல கொடுத்த வாக்கின் காரணமாக தமிழின் அப்பா தமிழை விக்ரமிற்கு திருமண ஏற்பாடு செய்வாங்க.

அரசி ஏன் அப்பா கூட சண்டை போட்டுட்டு போய் படிச்சா?
திரும்பி வந்தாளா இல்லையா?
குலசேகரனும் அரும்பும் சேந்தாங்களா இல்லையா?
விக்ரம் அரசியின் காதல் என்ன ஆகும்?
மாறனுக்கும் தமிழுக்கும் திருமணம் நடக்குமா?
அவங்க அப்பா அப்டி யாருக்கு என்ன வாக்கு குடுத்தாங்க?
இதுனால பாதிக்க பட்ட நால்வர் வாழ்கை என்னாச்சு?
இதுதான் கதை.

இதுகூட அரும்பின் அப்பத்தா வேற இவங்கள பண்ணுன கொடுமை என்ன கடைசியில் அவங்க என்ன ஆனாங்க? சூப் கடை சுப்பாத்தா, அரும்பு தமிழ் இவர்களின் பாட்டி இவர்களின் அட்டகாசங்களும் பாக்கலாம்.

எல்லாமே கோவை தமிழ் கொங்கு தமிழ். அதும் அந்த ஸ்லாங் ல படிக்கும்போது அவ்ளோ நல்லா இருந்துச்சு. கூடவே கால்நடை, இயற்கை விவசாயம் பத்தின information எல்லாம் இருக்கு. கிராமத்து கதை படிக்க விரும்புவோர் தாராளமாக இதை படிக்கலாம்.

?????


#கதை_விமர்சனம்

கதை பெயர்:மனதோடு மண்வாசம்
கதாசிரியர்: மித்ரா பரணி.
ரொம்பவே கலகலப்பான கதை..
கதை படிக்கும் போதே மண் வாசம் வீசுது.. லாங்குவேஜ் நல்லா இருந்தது கிராமிய சாயலில்..
கதை மாந்தர்களின் தமிழ் பெயர் கூட அருமை..
விவசாயத்தோட முக்கியம் அதுக்கு தேவையான தகவல் எல்லாம் பயனுள்ள தகவல் .
சில இடங்கள்ள சிரிச்சு முடியல..
வாழ்த்துக்கள்...


?????


Lol
மித்ரா பரணி
அவர்களின்
மனதோடு மண்வாசம்
Entertaining ...
அரசிக்கு சாமி வர்ற சீன்...வாசிச்சு..சிரிச்சு இன்னும் வயிறு வலிக்குது
மிக அருமை
சுவாரஸ்யம் குறையாத படைப்பு.
முதல் 15 அத்தியாயங்கள் சிரிச்சு தீரலை...அடுத்த ஏழெட்டு எபி திக் திக் திக்னு போச்சு.
கல்யாணத்துல பிரச்சினை மூணு ஹீரோஸீம் மந்தமா நிக்குறாங்க..ரொம்ப கடுப்பாச்சு
மத்ததெல்லாம் நல்லாருந்துச்சு.
வாசித்ததில் மனம் முழுக்க மண் வாசம் தான்.
போட்டிக்கான இந்த அழகான படைப்பிற்கு வாழ்த்துகள்
Stress buster

?????


TamilNovelWriters.com Novels Discussion

TamilNovelWriters.com Novels Discussion

TamilNovelWriters.com Novels Discussion

1473

1474

1475

மண்வாசத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பும் ஆதரவும் என்றும் எங்கள் நினைவில் நீங்கா இடம் பெற்றிருக்கும். ????

இப்பயணத்தில் எங்களுக்கு துணை நின்ற ஒவ்வொருவருக்கும் மித்ரா பரணியின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

வாழ்க வளமுடன்
 
Last edited:
Top