Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

♥️♥️ கனவோடு கார்காலம் ♥️♥️. 💞💞விமர்சனம் 💞💞

Advertisement

Ram priya

Well-known member
Member
IMG_20240128_130701.jpg
♥️♥️கனவோடு கார்காலம் ♥️♥️

எழுத்தாளருக்கு: லவ் & லவ் ஒன்லி போட்டி கதையில் காதலை கருவாக கொண்டு எழுத தொடங்கிய கதையின் மையப்புள்ளியாக நாயகன் நாயகியின் சிறு வயதில் ஏற்பட்ட ஈர்ப்பு காதலாக மலர்ந்து பெற்றோரின் துணைக் கொண்டு எவ்வாறு திருமண பந்தத்தில் இணைகிறார்கள் என்பதனை கதாசிரியர் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் 🥰🥰🥰 அதனோடு நாகரிகம் என்ற பெயரில் இன்றைய இளைஞர்கள் இளம்பெண்கள் நடந்து கொள்ளும் விதம் பற்றியும் திருமண வாழ்வை எவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பற்றியும் எந்த இடத்திலும் கண்ணியம் குறையாமல் கதைகளத்தை மிக அருமையாக கொண்டு சென்று நிறைவாக முடித்தமைக்கு வாசகர்களின் பாராட்டுகளும் நன்றிகளும் ✍️✍️👏👏👌👌


வசீகரன் நம் கதையின் நாயகன்: திருவேங்கடம் _ அகிலாண்ட நாயகி தம்பதியருக்கு ஒற்றை மகனாகப் பிறந்து சித்தப்பா பசுபதி _ அபிராமி அவர்களின் பிள்ளைகள் சர்வஜித் மற்றும் பிரஜன் ஆகியோருடன் வளர்ந்து டூரிஸ்ட் & டிராவல்ஸ் என்ற பணியை தொழிலாகக் கொண்டவன் 😍😍😍

இழையாள் நம் கதையின் நாயகி: கைலாசம் _ பார்கவி தம்பதியருக்கு ஒற்றை மகளாக பிறந்து நற்பண்புகளையும் நேர்மையான குணத்தையும் ஒருங்கே பெற்ற அருமையான பெண் 🥰🥰🥰 பெற்றோரின் வாக்கை வேதவாக்காக எண்ணி அவர்களை மதித்து அடங்கி நடப்பவள் 🥰🥰🥰 பல் மருத்துவம் முடித்து விட்டு மருத்துவப் பணியைத் தொழிலாகக் கொண்டவள் 😍😍😍


திருவேங்கடம் குடும்பத்துடன் டம்ளர் டம்ளராக தேநீர் அருந்துவதில் ஆரம்பமாகும் கதை 🤩🤩🤩 எதற்காக என்றால் பிள்ளை வசீகரனின் திருமணத்திற்காக நூற்றுக்கணக்கான வரன்கள் பார்த்தும் பிள்ளை திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத கோபத்தை தான் மனிதர் தேநீர் அருந்தி மனதை ஆற்றிக் கொள்கிறார் 🥰🥰🥰மகனுக்கும், மனைவிக்கும் இடையே சிக்கி மனிதர் படும் பாடு 😱😱😱 இத்தனைக்கும் அவர் ராணுவத்தில் பணியாற்றியவர் 😧😧😧
காதலில் முழு சரணாகதி என்பார்களே அந்த நிலை நாயகியின் மீதான திருவேங்கடத்தின் காதல் நிலை ❤️❤️❤️ மனைவியின் மீதான மனிதரின் நேசத்தை கானும் மனது நிச்சயம் உருகும் 🥰🥰🥰

வசீகரன் திருமணத்திற்காக அவன் போடும் கட்டளைகள் மற்றும் அவன் ஆற்றும் சொற்பொழிவைக் கேட்டு அவனின் குடும்பம் அரண்டு தான் போகிறது 😰😰😱😱

நாயகன் திருமணத்தை மறுக்க என்ன காரணம்... பள்ளி பருவத்தில் உடன் படிக்கும் மாணவி மீது கொண்ட காதல் ❤️❤️ தன் தம்பி சர்வஜித்தின் தோழியான இழையாளிடம் கார்ட் கொடுத்து அப்பெண்ணிடம் கொடுக்க சொல்ல இழை தவறுதலாக அப்பெண்ணின் தந்தையிடம் கொடுத்து விட பிரச்சினை வெடிக்கிறது 😰😰😰

வசீகரன்....பெற்றோர், உடன் பிறந்தோர் முன் அவமான படுத்தப்பட்டு உயிர்வதைக் கொண்டு மணவலியுடன் அமர்ந்திருப்பதைக் கண்ட இழையாள் தன்னுடைய செயல் தான் அவனுடைய துன்பத்திற்கு காரணம் என்று மனம் வருந்தி வசீகரனை தேற்ற அவனிடம் அவள் கூறும் வாக்கியம்....👇👇👇

IMG_20240205_065146.jpgஅந்த வார்த்தை அவன் மனதை மயிலிறகால் வருடச் செய்தாலும் அவள் மீது கோபம் கொண்டு உன் அன்னையிடம் கூறி விடுவேன் என்று கூறி அவளை துரத்தி விட அவளின் ஒற்றை கால் கொலுசும் ஒரு புத்தகம் அவனின் கை சேர அவர்களின் குடும்பம் வேறு ஊருக்கு சென்று விடுகிறார்கள் 😱😱😱 இருவரின் பிரிவும் உடலுக்கு மட்டும் தான் உள்ளத்திற்கு அல்ல என்பதனை நாம் அறியும் காலமும்.... மிக விரைவில் ❤️❤️

நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகு வசீகரனின் உயிர் நண்பனான சாரதியின் திருமணத்தில் இருவரும் சந்திக்க நேரிட... நாயகி மிரண்டு ஓட....நாயகன் தன் பெற்றோரிடம் திருமணம் செய்தால் அவளைத் தான் இல்லை என்றால் தன் வாழ்வில் திருமணம் என்ற வார்த்தைக்கே இடமில்லை என்று கூறி 😍😍😍அவளின் பின் பக்க புகைப்படத்தை காட்டிட... திருமண மண்டபத்தில் பெண்ணை தேடி அலைகிறார்கள் நாயகனின் தந்தையும், உடன் பிறந்தோரும் 😰😰😰😨😨😨

இனிதான நிகழ்வும் நடந்தேறுகிறது... ஆம் நம் நாயகியான இழையாள்
அகிலாண்ட நாயகியின் நெருங்கிய தோழியான பார்கவியின் மகள் என்பது 😧😧
அவர்களின் மகிழ்வுக்கு ஆயுள் குறைவு என்பதாக பார்கவியின் பதில் மொழி தன் மகளின் திருமண நிச்சயத்தை பற்றி கூற... வசீகரனின் குடும்பமே ஆடித் தான் போகிறது 😰😰😱😱


இழையின் நிச்சயம் நின்று விடுகிறது... காரணம் பார்கவி மகளுக்காக பார்த்த மாப்பிள்ளை கிரிமினல் என்று தெரிய வர 😱😱 வசீகரன் தகுந்த ஆதாரங்களுடன் சட்டத்தின் பிடியில் பிடித்துக் கொடுக்கிறான் பிறகென்ன...
வசீ_ இழையின் நிச்சயம் இனிதே நடைபெறுகிறது 🥰🥰🥰

பெற்றோர் நிச்சயித்த திருமணம் என்று நாம் நினைத்துருக்க... தன் தோழி ஜீவிதாவிடம் வசீகரன் மீது அரும்பிய காதலை இழையாள் விவரித்த வதம் அழகோ அழகு 🥰🥰🥰 அவளின் காதல் கதையை கேட்ட நமக்கு ஆனந்த அதிர்ச்சியாக❤️❤️❤️

இழையின் காத்திருந்த காதலுக்கு.....👇👇👇👇


பெற்றோரின் விருப்பத்துடன் இழையின் மகத்துவமான காதலுடன் வசீகரன் _ இழையாள் திருமணம் அனைவரின் மகிழ்ச்சியுடன் இனிதே நடந்தேறுகிறது ❤️❤️❤️

இழையின் காதலை வசீகரன் அறியும் தருணமும் பார்கவி உதவியுடன் அமைகிறது 😚😚😚
இழையின் அறையில் ஒரு பெட்டியில் வசீயின் சில பொருட்கள், புகைப்படம், அவளின் அழகான காதலை சொல்லும் காணொளி என்று வசீகரன் இன்பமாக அதிரவவும் செய்வதாய் தான் அவள் மீது கொண்ட காதலை விட அவளின் காதல் உயர்ந்தது என்று எண்ணவும் செய்வதாய் 😍😍😍

தன் காதலுக்காக மட்டுமல்லாமல் தன் நண்பன் சர்வஜித் தன் தோழி ஜீவிதா மீது கொண்ட காதலுக்காக.... திருமணத்தின் மீது விருப்பம் இல்லாத தோழியிடம் போராடி அவர்களின் திருமணத்தையும் இனிதே நடத்தி வைக்கிறாள் நம் நாயகி இழையாள் 🥰🥰🥰

வசீகரன்_ இழையாள் அளப்பரிய காதலுக்கு பரிசாக மகளின் வரவு 🥰🥰🥰 மற்றும் பெண் பிள்ளை இல்லாத குறையை நிவர்த்தி செய்ய வந்த மருமகளின் மீது வசீயின் பெற்றோர் கொண்ட பாசமும் நாம் எதிர்பாரதவர்களின் வரவுமாக கதையை நிறைவாக முடித்திருக்கிறார் நம் எழுத்தாளர் 🥰🥰🥰

வசீகரனின் காதலை சொல்ல கண்ணதாசனை துணைக்கு அழைக்க தோன்றுகிறது...👇👇👇

உள்ளத்தின் கதவுகள் கண்களடா...❤️❤️❤️
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா...❤️❤️❤️
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்து விடு...❤️❤️❤️
அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு...❤️❤️❤️
காதல் என்பது தேன் கூடு...அதை கட்டுவது என்றால் பெரும் பாடு... காலம் நினைத்தால் கைக் கூடும்.... கனவாய் போனால் மனம் வாடும்...❤️❤️❤️

வசீ_ இழையின் சிறு வயது ஈர்ப்பு காதலாக மலர்ந்து காலம் கனிந்து அவர்களின் நினைவாக உருமாறி திருமண பந்தத்தில் இணைந்து சுபமாக முடிகிறது கதை ❤️❤️♥️♥️💓💓💞💞💕💕💖💖💝💝💗💗❣️❣️💘💘

அருமையான கதை 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🥰🥰
 
மச்சீஈஈஈ 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.thankful-thursday.gif
சாங் சூப்பர் 💞💞💞💞💞💞💞💞
பிக்சர் சூப்பரோ சூப்பர்.🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 அதுவும் என்னை கட்டிக்கிறியான்னு கேக்கற நயன்தாரா மீம்ஸ் பொருத்தமோ பொருத்தம்.
 
எல்லாம் ஓகே 😃😃😃😃 ஆனால் உங்கள் ஹீரோயினுக்கு கொடுத்திருக்கிற இன்ட்ரோ தான் ஹீரோயின் உருட்டை விட பெரிய உருட்டா இருக்கு 🤣🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

ஜீவிதா கிட்ட அவ காதலை சொல்லும் போது ஜீவியோடு சேர்ந்து ரீடர்ஸுக்கும் பைத்தியம் பிடிச்சுது 😣😣😣😣😣அது ஆனந்த அதிர்ச்சி எல்லாம் ஆகல 🤭🤭🤭 வெறும் அதிர்ச்சி மட்டும் தான் ஆனோம் 😨😨😨😨😨 இந்த பைத்தியம் கிட்ட எங்க ஹீரோ வாழ்க்கை சிக்க போகுதே என்று 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஹுரோயினை பத்தி பொய்யா ரிவ்யூ கொடுத்தாலும் 🤓🤓🤓🤓 எங்க ஹீரோ பத்தி உண்மைய சொல்லி இருக்கலாம் 😃😃😃😃😃 வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐
 
அட்ராசக்கை 😘😘😘😘😘😘😘
அட்ராசக்கை 🥰🥰🥰🥰🥰🥰🥰
அட்ராசக்கை 🥳🥳🥳🥳🥳🥳🥳

என் தலைவனோட காதலை கண்ணதாசன் வரிகளால வர்ணிச்சது 👌👌👌கவர் பிக், சாங் சூப்பர் 🥰🥰 ஹீரோயினோட உருட்டை உருட்டாவே தெரியாத மாதிரி உருட்டிவிட்டது செம ஜி 😜😜😜😜😜 செமயா எழுதி இருக்கீங்க அருமையான விமர்சனம் 👏👏👏👏
 
அட்ராசக்கை 😘😘😘😘😘😘😘
அட்ராசக்கை 🥰🥰🥰🥰🥰🥰🥰
அட்ராசக்கை 🥳🥳🥳🥳🥳🥳🥳

என் தலைவனோட காதலை கண்ணதாசன் வரிகளால வர்ணிச்சது 👌👌👌கவர் பிக், சாங் சூப்பர் 🥰🥰 ஹீரோயினோட உருட்டை உருட்டாவே தெரியாத மாதிரி உருட்டிவிட்டது செம ஜி 😜😜😜😜😜 செமயா எழுதி இருக்கீங்க அருமையான விமர்சனம் 👏👏👏👏
👏 👏 👏😍😍😍
 
Wow what a surprise baby !! never expected but you filled my heart ❤️❤️❤️❤️❤️❤️ Such an astonishing review and fantastic song selection literally speaks Izhai's mind.. one of my favourite too 🥰🥰🥰 Meme is just ultimate 🤣🤣🤣🤣 really you take me to those funfilled days... Cover pic is sooo cute 💞💞💞💞 Thank you so much for spending your precious time and effort.. You just made my day .. Loads of love and hugs dear 😍😍😍😍😍
 
Wow what a surprise baby !! never expected but you filled my heart ❤️❤️❤️❤️❤️❤️ Such an astonishing review and fantastic song selection literally speaks Izhai's mind.. one of my favourite too 🥰🥰🥰 Meme is just ultimate 🤣🤣🤣🤣 really you take me to those funfilled days... Cover pic is sooo cute 💞💞💞💞 Thank you so much for spending your precious time and effort.. You just made my day .. Loads of love and hugs dear 😍😍😍😍😍
ரைட்டர் ஜி.....விமர்சனம் உங்களுக்கு பிடிச்சது ரொம்ப சந்தோஷம் மா 😍😍🥰🥰
09169b185440714d1d9060cd3e2684bc.gif
 
Top