👑யுகத்தின் தலைவன் 45 (final)

Advertisement

கதையை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துட்டீங்க. க்ளைமாக்ஸ் படிச்சிட்டு ஒரு இரண்டு மணி நேரங்கள் எனக்கு என்னோட ப்ளாஷ்பேக் ஞாபகம் வந்துடுச்சு. அதனால நேரம் கடந்து கமெண்ட்ஸ் பண்ண வந்திருக்கேன்.

நமக்கு உயிரில் கலந்த உறவுகளை இழந்துட்டா அவங்க முக்தியடையனும்னு நிச்சயம் நினைக்கவே தோனாது. பதிலாக அவங்க நம்ம கூடவே உணர்வால் கலந்து வழி நடத்தனும்னு தான் வேண்டிக்குவோம்.

கங்காவுக்கு கல்யாணம் ஆச்சா ஆகலையானு ஒரு எபிலாக் கொடுங்க சிஸ்டர். சிவராமன் கங்காவுக்கு பிள்ளையா பிறந்தாரானு தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கு.
 
ஒரு பொண்ணுக்கு எவ்வளவு பிரச்சனை கதை அதன் போக்கில் கொண்டு சென்றீர்கள் கதை களம் கணம் தான் படித்து முடித்தவுடன் கவலை கொள்ளும் ஒருத்தன் கூட நல்லவன் வரமாட்டான என்றுதான் நினைக்க தோன்றும் கங்கவிற்கு இந்த epiயில் நல்லது நடக்கும் அடுத்தில் அவள் சந்தோஷப் படுவாள் என்றால் கடைசி வரை அப்படியே கொண்டு சென்று முடித்து விட்டரர்கள்
 
சிஸ்டர்ஸ்,

உங்கள் அனைவரின் கருத்துகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. கங்கா ஏன் சல்மானிடம் நேரடியாக காதலை சொல்லவில்லை என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

ஏனென்றால் கங்கா சல்மானை வெறும் ஈர்ப்பால் தேர்ந்தெடுக்கவில்லை. அவள் வாழ்க்கையில் பலரை சந்தித்திருக்கிறாள்.இருந்தும் சல்மானிடம் அவள் கண்டது ஒரு வித்தியாசமான குழந்தைத் தனமான நட்பு.

அதே நேரத்தில் கங்காவிற்கு காதலை விட சுயமரியாதை முக்கியம். யாரையும் கட்டாயப்படுத்தியோ, பரிதாபப்படுத்தியோ, சூழ்நிலையை பயன்படுத்தியோ அவனை அடைய அவள் விரும்பவில்லை. சிவராமன் அவளை அப்படி வளர்க்கவில்லை.

கங்கா அவனை நினைப்பது போலவே, அவனும் தன்னை நினைக்க வேண்டும் என்பதே அவளின் விருப்பம். அதற்காகத்தான் அவள் காத்திருக்கிறாள்.

சல்மானின் நிலையிலும் யோசித்துப் பாருங்கள். அவனுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு உள்ளது. குடும்பப் பொறுப்புகள் உள்ளன. அந்த சூழலில் காதலை தேடி அவன் ஓட முடியாது.

சரி வேறு ஹீரோவை கொண்டு வந்து கங்காவை மகிழ்ச்சியாக காட்டலாம் என்றால்,என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.

கங்கா தனது நம்பிக்கையோடும் பிரார்த்தனையோடும் காத்திருக்கிறாள்...

அவன் திரும்பி வந்தால்....சுபம்💖❤️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top