
ஒரு பெண்ணின் பன்முகத் தன்மையை அழுத்தமாக காட்டிய கதை
அன்பான மகளாக
அதீத பாசமான தமக்கையாக
வேலை இடத்தில் கறார் பேர் வழியாக
தவறுக்கு தலை வணங்காதவளாக
முதலாளி ரேஷ்மாவின் மதியூகியாக
நாயகன் மீது நேசத்தை ஒளித்து வைத்திருக்கும் காதலியாக
அவனின் நலத்திற்காக தன் காதலை தியாகம் செய்ய கூட தயங்காதவளாக என்று பல பரிமாணங்களில் மிளிரும் நம் நாயகி மதுரா
மதுரா..... நம் கதையின் நாயகி இரண்டு தங்கைகளுக்கு அக்காவாக சிறு வயதிலேயே பெற்றோரின் வலிகளை மட்டுமே பார்த்து வளர்ந்தவள்
மதுராவின் பெற்றோர் குடும்பத்திற்காகவும் சுயநலம் மிகுந்த உடன் பிறந்தோருக்காகவும் உழைத்து ஓடாக தேயந்து
தங்கைகள் மட்டுமே தன் உலகமாக வாழ்பவளுக்குள்ளும் உலகமாக அவளின் ஊட்டி
சிறு வயதிலேயே பக்கத்து வீட்டிற்கு விடுமுறைக்கு தாத்தா பாட்டி வீட்டிற்கு வரும் நாயகன் மீது கொண்ட நேசம் மொட்டாக மலர்ந்து விருட்சமாக வளர்ந்து நிற்கிறது அவளுக்குள் காதலாக
ரேவந்த்.... நம் கதையின் நாயகன் அவனுக்கென இருக்கும் ஒரே உறவாக தங்கை ரேஷ்மா
நாயகி எப்படி தனக்குள்ளாக இவன் மீது நேசத்தை வளர்த்து கொண்டது போல
இவனும் அவள் மீது வெளியே சொல்லாத காதல் கொண்டு அவளையே தன் வாழ்க்கையாக எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவன்
இருவரின் வெளியே சொல்லாத காதல் வெளிவந்தது ஒரு குட்டி பெண்ணின் சுட்டி தனத்தால்
லக்கி.... மதுராவின் குட்டி தங்கை நாயகன் ரேவந்த்க்கு லக்கி சார்ம்
ரேவந்த்.... தன் குட்டி மச்சினியின் உதவி கொண்டு காதலில் வென்று
திருமணத்தில் கை சேறும் தருணம்.... சுயநலம் மிகுந்த உறவுகளின் சூழ்ச்சியால் திருமணம் தடை படுகிறது
மதுரா _ ரேவந்த்.... திருமணத்தில் இணைந்தார்களா
தன் நலம் மட்டுமே பெரிதென நினைத்து மதுராவின் குடும்பத்திற்கு வஞ்சகம் செய்த உறவுகள் திருந்தினார்களா
குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்ததா
என்பதை அழுத்தமாக கூறியுள்ளார் நம் கதாசிரியர்
அருமையான கதை
நிறைவான முடிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Last edited: