Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

9 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!

Advertisement

ILANTHALIR VENBA

Member
Member
9 - சர்க்கரை மட்டும் கலப்போம் நாம் ..!!
நாட்கள் நகர நகர அவன் முழுநேரமும் எதாவது கைவினை பொருட்கள் செய்வதிலேயே குறியாக இருந்தான் . ராஜாவிற்கே சிறிது ஆச்சரியமாக இருந்தது அவன் செய்த பொருட்களை எல்லாம் பார்த்து .. ஒரு நாள் மிகவும் நேர்த்தியான ஒரு பட்டு நூல் வளையல் செட் செய்திருந்தான் . அதையே அவன் வைத்துக்கொண்டு வெகு நேரம் ரசித்திருந்தான் . பின்பு அதனை தனியாக எடுத்து ஒரு கவரில் மடிப்பதை பார்த்த ராஜா அவன் ஆரூவிற்காக எடுத்துவைப்பதாக பெருமையாக நினைத்துக்கொண்டார் .

image


அவன் சற்று நேரத்தில் உறங்க சென்றுவிட , இவரும் அவனது முன்னேற்றத்தில் மனம் மகிழ்ந்து படுக்கையில் சரிந்தார் . அடுத்தநாள் அவர் மொத்தமாக நிம்மதியை இழக்கப்போகிறார் என்பது தெரியாமல் ..
அடுத்த நாளும் வந்தது .. அன்று துர்கா பூஜை ..
காலை முதல் அந்த பெரிய வீடே கோலாகலமாக தயாராகி கொண்டிருந்தது . அங்கிருந்த வேலைக்காரர்கள் முதற்கொண்டு அனைவரும் புத்தாடை உடுத்தி , அன்று மாலை இவர்கள் வீட்டில் நடக்கும் பூஜைக்கு எல்லா ஏற்பாட்டையும் செய்து கொண்டிருந்தனர் .
" அயிகிரி நந்தினி .. நந்தித மேதினி ..
விச்வ வினோதினி .. நந்தநுதே .. !
கிரிவர விந்த்ய சிரோதி .. நிவாஸினி .. !
விஷ்ணு விலாஸினி .. ஜிஷ்ணுநுதே .. !
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி ....
பூரிகுடும்பினி .... பூரிக்ருதே .. !
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ....
ரம்ய கபர்தினி சைலஸுதே .... "

என்று ஆரம்பித்த அன்றைய துர்கா பூஜை விழா இனிதாக நிறைவுற்றது .. ஆதர்ஷ் 10 மாதங்களுக்கு பிறகு வெளி உலகத்தை பார்க்கிறான் . வந்திருந்த விருந்தினர் அனைவரிடமும் பேசி சிறிது பொழுதை ஒட்டியவன் ஒவ்வொருவராக விடைபெற துவங்கவும் , ராஜா மற்றும் ரோஜாவிடம் சொல்லிக்கொண்டு அறைக்கு சென்று அடைந்துகொண்டான் .
அனைவரும் அங்கிருந்து விடைபெற்ற சென்றவுடன் , ராஜா மாடியிலுள்ள தனது அறைக்கு சென்று குளித்து இரவு உடைக்கு மாறியவர் , இன்று ஆதர்ஷின் நிர்மலமான முகம் நினைவு வர , லேப்டோபை உயிர்ப்பித்து அவன் என்ன செய்கிறானென பார்த்தார் . அதை பார்த்தவர் அதிர்ந்துவிட்டார் .
அங்கு அவர் கண்ட காட்சி ,
ஆதர்ஷ் ஆருவின் பாவாடை தாவணி உடுத்தி , முன்தினம் அவன் செய்த அழகான பட்டுநூல் வளையல்களை அவனது கையில் போட்டு கண்ணாடி முன்பு நின்று அழகு பார்த்திருந்தான் . நளினகமாக கையை வளைத்து மற்றோரு கையிலிருந்த வளையலை வருடிக் கொடுத்தான் . இதனை அதிர்ந்து பார்த்திருந்தவர் காதில் தொப்பென ஏதோ கீழே விழும் சத்தம் .. சட்டென பின்னால் திரும்பி பார்க்க , அங்கு ரோஜா மயங்கி விழுந்திருந்தார் .
இதனையெல்லாம் இவருக்கு பின்னே இவருக்கான மாத்திரையை எடுத்துக்கொண்ட வந்த ரோஜா பார்த்திருந்தார் . இவர் விழுந்ததில் செய்துகொண்டிருந்த வேலையை மறந்தவர் ,
"அக்ஷய் ... அக்ஷய் .... அர்ஜுன் , ஆரூ ..... யாரவது வாங்க ... " என்று கத்திகொண்டே அருகிலிருந்த ஜாடியிலிருந்து தண்ணீர் எடுத்து ரோஜாவின் முகத்தில் தெளிக்க அவருக்கு லேசாக நினைவு திரும்பிய அறிகுறி தெரிந்தது . அதற்குள்ளாக அங்கு வந்த அர்ஜுன் , அக்ஷய் , ஆரூ ஏன் அங்கிருந்த வேலைக்காரர்கள் சிலர் கூட அங்கு வந்துவிட ... அனைவரும் ஆதர்ஷ் செய்திருந்த வேலையை அந்த கம்ப்யூட்டர் திரையை பார்த்து அதிர்ந்துவிட்டனர் ..
முதலில் சுதாரித்த அர்ஜுன் , அங்கிருந்த வேலையாட்களை எல்லாம் ஹாலில் காத்திருக்க சொன்னான் . சொன்னவன் , நன்றாக அந்த லெப்டோபை பார்க்க அவனுக்கு அனைத்தும் புரிந்தது . அடுத்து என்ன செய்ய போகிறோம் " இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நம் பரம்பரைக்கே அவமானம் .. கீழே உள்ளவர்கள் எப்படி இருந்தாலும் இந்த ஊரில் பரப்பாமல் இருக்க போவதில்லை .. " என்று மனதினுள் யோசித்து அடுத்து என்ன என்று முடிவெடுத்தவன் ..
அவனது தாயின் நிலைகுறித்து ஒரு நிமிடம் யோசித்தான் . எப்படியாவது ரோஜாவை தேற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் .. அவரது தாய் தந்தையிடம் பேச துவங்கினான் . அப்பொழுதுதான் மயக்கம் தெளிந்திருந்த ராஜாவிற்கு அர்ஜுன் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . கடைசியில் இந்த குடும்ப கௌரவம் என்று அவரை அச்சுறுத்தி சம்மதிக்க வைத்தான் . அதை செயல்படுத்துவதற்காக கீழே ஹாலை நோக்கி சென்றான் . அங்கு வேலைக்காரர்கள் அனைவரும் அவர்களுக்குள் சலசலத்தவாறு நின்றிருந்தனர் . இவர்கள் அனைவரும் கீழே இறங்கி வருவதை பார்த்து அவர்கள் அனைவரும் அமைதியாகி நிற்க ... அந்த இடமே குண்டுஊசி விழுந்தால் கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது . ரோஜாவை ஆரூ தாங்கிப்பிடித்து அங்கிருந்த சோபாவில் அமர வைக்க , அர்ஜுன் ஆதர்ஷ் அறைக்கு வெளியே சென்று கதவைத் தட்டினான் .
சில நிமிடங்களில் ஆதர்ஷ் எப்போவும் போன்ற உடையுடன் கதவை திறக்க .. " ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ஆதர்ஷ் .. கொஞ்சம் ஹால் வரைக்கும் போலாம் வா ... " என்று அவனது கையை பிடித்து அழைத்துச்சென்றான் அர்ஜுன் .
இருவரும் அங்கு சென்றதும் ஆதர்ஷிற்கு அனைவரது கண்களும் தன்மேல் பதிந்திருப்பதை போன்றொரு உணர்வு .
அர்ஜுன் அங்கு சென்று இவனது கையை படாரென விசிறி விட்டவன் .. " இவ்ளோ நேரமா என்ன பண்ணிட்டு இருந்த ஆதர்ஷ் ?? " என்று நேரிடையாக விசயத்திற்கு வர .. " நான் ஒன்னும் பண்ணலையே .. " என்று ஆதர்ஷ் பதிலளித்தான் . இவர்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று மட்டும் அவனுக்கு உறுதியாக புரிந்தது .
" போதும் ஆதர்ஷ் .. நீ நடித்தது . உன்னோட சுய ரூபம் என்னனு எங்களுக்கு தெரிஞ்சிருச்சு . எங்களுக்கு மட்டும் இல்லை இங்க இருக்க எல்லாருமே பாத்துட்டு தான் பேசுறோம் . உனக்கு ஏன் இப்படி போச்சு அறிவு ???? கொஞ்சமாவது குடும்பத்தை பத்தி யோசிச்சியா ??? " என்று கேட்க ..
ஆதர்ஷிற்கு ஜன்னல் கதவு எல்லாவற்றையும் நன்றாக பூட்டிய நினைவு இருந்தது . அவன் எதுவும் நடவாதது போலவே சமாளிக்க முயல , நேராக தந்தையின் அறைக்கு சென்ற அர்ஜுன் , அங்கிருந்த அவரது லேப்டோபை எடுத்துவந்து பதிவாகிரியிருந்த அனைத்தையும் போட்டுகாட்டிட்ட ..
ஆதர்ஷ் தனது குட்டு வெளிப்பட்ட சூழ்நிலையில் , தலை குனிந்து நின்றான் .
அர்ஜுன் : " இப்போ பேசு . என்னவோ முன்ன சொன்னியே இப்போ பேசு . எப்படி டா இப்படி ஒரு அசிங்கத்தை பண்ண உனக்கு மனசு வருது . "
ஆதர்ஷ் : " நான் என்னனா பண்ணேன் ??? இது என்னோட இயற்கையான உணர்வு அண்ணா . அதுக்கு நான் என்ன பண்ண முடியும் ?? நீங்களே சொல்லுங்க .. "
அர்ஜுன் : " அப்படி என்னடா உனக்கு அடக்க முடியாத உணர்ச்சி .. ?? இது எல்லாம் உணர்ச்சினு நீ சொல்லாத ஆதர்ஷ் .... "
ஆதர்ஷ் : " வேற என்னனு சொல்ல சொல்ற ?? நான் என்னவோ வேணுன்னு நடந்துக்கிற மாதிரி பேசாத அண்ணா .. "
அர்ஜுன் : " உனக்கு இது எப்போ இருந்து தெரியும் ??? எப்போ இருந்து இதை பண்ணிட்டு இருக்க நீ ?? "
ஆதர்ஷ் : " காலேஜ் முதல் வருஷத்துல இருந்து .. " என்று அவன் கூறியதை கேட்டு அதிர்ந்துவிட்டனர் அங்கிருந்த அனைவரும் .
அர்ஜுன் : " சரி பரவால்ல ... இதோட இதை எல்லாம் நிறுத்திக்கோ .. " என்று ஒரு பந்தை எரிந்து பார்த்தான் .
ஆதர்ஷ் : " என்னால் முடியாது அண்ணா .. இதுகுமேலயும் மறைக்க நான் விரும்பல . என்ன ஆனாலும் சரி . இனிமேல் நான் என்னோட வாழ்க்கையை எனக்கு பிடிச்ச மாதிரி மட்டும் தான் வாழப்போறேன் . என்னை தயவு செஞ்சு தடுக்காதீங்க . " என்று அர்ஜுன் எதிர்பார்த்த அதே பதில்தான் ஆதர்ஷிடம் இருந்து வந்தது .
அர்ஜுன் : " அப்படி உன் இஷ்டத்துக்கு இருக்க இது ஒன்னும் சாவடி சத்திரம் இல்ல . இது வீடு . சாதாரண வீடு இல்லை ... இந்த ஊரே மதிக்குற பெரியவீடு .. இந்த வீட்டுக்குனு இருக்க மரியாதையை நீ கெடுக்குறதை இங்க யாரும் வேடிக்கை பாக்க மாட்டோம் .. அதை மனசுல வெச்சுட்டு வார்த்தையை விடு ஆதர்ஷ் .. "
ஆதர்ஷ் : " நான் உங்க எல்லாரையும் புரிஞ்சிதான் பேசுறேன் . நீங்க கொஞ்சமாவது என்னை நினைச்சு பாருங்க . என்னோட உணர்வுகளை புரிஞ்சிக்க முயற்சி செய்ங்க .. " என்று வெறிகொண்டவன் போல கத்தினான் ஆதர்ஷ் .
இடையில் அவனது அன்னை அவனை எவ்வளவு கெஞ்சியும் அவன் விட்டுக்கொடுக்காமல் இருக்க , அவரும் வேறு வழியின்றி துவண்டு ஒரு ஓரமாக நின்றுகொண்டார் .
அர்ஜுன் : " சும்மா உணர்வு உணர்வுன்னு சொல்லாத . எல்லாத்தையும் கட்டுப்படுத்தனும் .. "
ஆதர்ஷ் : " அப்டி கட்டுப்படுத்துறதுக்கு இது இன்னைக்கு நேத்து வந்தது இல்லை . நான் பொறக்கும்போதே இந்த துர்காதேவி எனக்கு பரிசா கொடுத்திருக்கா ... அதை நான் இதுக்கு மேலயும் மறைக்க மாட்டேன்னா . என்ன ஆனாலும் சரி .. என்னாலே மறைக்க முடியாது . இது மறைக்குற தப்பும் இல்லை . இதுல என்னோட தப்பு என்ன இருக்கு ?? போய் அந்த துர்க்கா தேவிகிட்ட கேளு ... ஏன் என்னை இப்டி படைச்சாங்கன்னு .. என்கிட்ட நீ எப்போ கேட்டாலும் என்னுடைய பதில் இதுதான் . இதுக்குமேல இதைப்பத்தி பேசாத ... "
அர்ஜுன் : " ஓஹ் என்னையவே பேசவேண்டான்னு சொல்ற அளவுக்கு ஆகிட்டியா ???? எங்க போச்சு நாங்க உனக்கு சொல்லிக்கொடுத்த மரியாதை எல்லாம் . இதுதான் நீ பெரியவங்களுக்கு கொடுக்கும் மரியாதை இல்ல ???? இந்த குடும்பத்துக்கு கெட்ட பேர் வாங்கிகொடுக்கிற நீ எல்லாம் என்னை குறை சொல்லாத . முதல்ல இங்கிருந்து வெளியே போடா நாயே ... " என்று அவனை வீட்டை விட்டு வெளியே தள்ளினர் அக்சயும் , அர்ஜுனும் ..
அங்கிருந்த வேலைக்காரர்கள் அதிர்ந்துவிட்டனர் . இந்த செயலில் ..
ரோஜா ஒருபக்கம் அழுது கொண்டிருக்க , ராஜா நடந்தது எதையும் நம்ப முடியாமல் சிலையாக அமர்ந்திருந்தார் . ஆனால் , அப்படி அமர்ந்திருந்ததால் தனது பிள்ளைகளில் ஒருவனை இழந்து வருங்காலத்தில் அவர்கள் சந்திக்கப்போகும் பிரச்சனைகளை அவர் அறியவில்லை .
" விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு ....
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு ....
பாட்டு படிச்சா .... சங்கதி உண்டு .... !
என் பாட்டுக்குள்ளையும் ..... சங்கதி உண்டு ... கண்டு பிடி ... !

பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேலை ....
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை ....
பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேலை ....
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை ....
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே .....
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே .... ! !
தலை எழுத்தென்ன ... ? என் மொதல் எழுத்தென்ன .... ? ?
தலை எழுத்தென்ன .... ? ? மொதல் எழுத்தென்ன ... ? ? சொல்லுங்கள்ளேன் ...... !

நான் ஒரு சிந்து .... காவடிச்சிந்து ....
ராகம் புரியவில்ல... உள்ள சோகம் தெரியவில்ல ...
தந்தை இருந்தும் .... தாயும் இருந்தும் ....
சொந்தம் எதுவும் இல்ல .... அத சொல்ல தெரியவில்ல .... ! ! "

அடுத்த பகுதி :
" ஏன் பா ... பாக்க அமுல் பேபி மாதிரி இருந்துட்டு இங்க எதுக்கு வேலை வேணுன்னு கேட்டு வந்தருக்க ??? " என்று அவர் சாதாரண தமிழில் பேச , தனது தாயுடன் மட்டுமே தமிழில் கலந்துரையாடி பழகிய அடர்ஷிற்கு அவர் சொல்வதை கிரகிக்க மிகவும் கஷ்டமாக இருப்பதாக உணர்ந்தான் . " எப்படி சமாளிக்க போகிறோம் " என்ற பயமும் மனதில் எழுந்தது .
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
இளந்தளிர் வெண்பா டியர்
romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba thanks sis ... !
 
அருமை.... ஆனா அந்த acident நடந்தது 9th அப்போ இருந்து யாரு கிட்டயும் பேசல தனி ரூம் வெளி உலகம் பாக்கலை.... ஆனா இப்போ சொல்லும் காலேஜ் 1yr இருந்து இப்படின்னு சொல்லுறான்... அதுவும் இல்ல எல்லாரும் குரு குல கல்வி படிச்சவுங்க தான் ....
 
thanks pa ... !
அருமை.... ஆனா அந்த acident நடந்தது 9th அப்போ இருந்து யாரு கிட்டயும் பேசல தனி ரூம் வெளி உலகம் பாக்கலை.... ஆனா இப்போ சொல்லும் காலேஜ் 1yr இருந்து இப்படின்னு சொல்லுறான்... அதுவும் இல்ல எல்லாரும் குரு குல கல்வி படிச்சவுங்க தான் ....
actual ah athu 11th sis .... maathiren .... munna maathanunu ninachen .....
 
romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba thanks sis ... !
ஹா ஹா ஹா
எதுக்கு இத்தனை romba, வெண்பா டியர்?
 
Top