Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Epilogue புது மஞ்சள் புது தாலி

Advertisement

சம்பூர்ணா வாழ்க்கையில் பூர்ணத்தை உணர்ந்து நிம்மதியா சந்தோசமா இருக்கா வேலுவின் துணையோடு. அருமையான கதை .வாழ்த்துக்கள் மா
 
Raji சிஸ்டர் எழுதிய 'புது மஞ்சள் புது தாலி'
வாவ் அருமையான கதை 👏👏
தங்கவேலு.. சம்பூர்ணா...
இவர்களின் சிறுவயது நட்பும் இவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்வும் பின்பு வேலுவின் மகள் பவித்ராவிற்காக இவர்களின் இணைந்த வாழ்வும் என விறுவிறுப்பாக நகர்ந்தது கதை..
கெத்தான மாசான ஆளுமை பொருந்திய ஹீரோ இல்லை இவன்.. சாதாரண சாமானிய மனிதன்..தவறு செய்து விட்டு முழிப்பதும் வாக்கு தவறுவதும் அதற்காக மனைவியிடம் விளக்குமாறு அடி வாங்குவதும் வேற லெவல் 😀😀😀 காதலாக கைப்பிடித்த மனைவியின் மகிழ்விற்காக இவன் செய்ததும் அதிகம் பின்பு பிரிவுக்காக இவன் யோசித்த விதமும் சரியே.. 😔
பூர்ணா.. இவளின் மாமியார் சொல்வது போல சரியான பிள்ளை பைத்தியம் பிடித்தவள் 🥰 மகள் பவித்ராவின் மேல் இவள் கொண்ட பாசமும் அன்பும் அவ்வளவு அதிகம்.. மகளுக்காக மட்டுமே மற்றொரு வாழ்வை ஏற்க துணிகிறாள் தாயின் மரணத் தருவாயில் 😔 இவளின் நேற்கொண்ட பார்வையும் திமிரும் தெனாவட்டும் சூப்பர் 👏👏 வாழ்வில் இவள் பட்ட கஷ்டங்களும் ஒரு நிலையில் நண்பனின் பாராமுகமும் இவளை துவள செய்தாலும் அதையும் தாண்டி செல்கிறாள் மன உறுதியோடு.. சிறு வயது தோழியான தன் சம்முவிடமே மனதில் நினைக்கும் அனைத்தையும் ஒப்புவிக்கும் வேலுவின் நட்பும் நம்பிக்கையும் அருமை👏👏 யாருக்கும் பயப்படாமல் பேச வேண்டிய இடங்களில் பூர்ணா பேசுவது சிறப்பு 👏 கிராம பேச்சு வழக்கில் கதை நகர்வும் தாமரையிடம் பவித்ரா தன் மனதில் நினைப்பதை கூறும் இடங்களும் மிக அருமை 👏👏 சுவாரசியமாக நகர்ந்தது கதை எழுத்துப் பிழைகளை கொஞ்சம் தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
ஒரு எதார்த்தமான வாழ்வை மிக அழகாக சொல்லி இருக்கும் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள் 👏🥰
Good luck dear sis 🥰🎉❤️
Keep rocking 🌹🥰💐
 
Wow,semma writing, superb dialogues, everything was nice,i like sammu sammu,very nice work.. waiting for your next story
 
ஒரு கிராமத்து வாழ்வியலை, அதன் இயல்போடு, மொழியோடு கண்முன் நிறுத்திய நெகிழவைக்கும் கதை.:love::love::love::love:
வாழ்வின் நிறைந்த துன்பங்களை தாண்டி மன வலிமையோடு வருவதை தைரியமாக எதிர்கொண்டு, பவித்ராவுக்காக வேலுவை ஏற்று, பின் அவனுக்காக அவனை ஏற்று வாழ்வை அதன் போக்கில் வாழும் சம்பூர்ணம் ஒரு பூரணமான பெண். நீண்ட காலம் நினைவில் நிற்கும் கதா பாத்திரம்.:love::love:
 
Excellent story... நிறைய உணர்வு பூர்வமான விஷயம் எல்லாம் எதார்த்தமாக சொல்லினிருந்தீங்க.... முதல் கதை அப்படிக்கிற மாதிரி இல்லாம ரொம்ப முதிர்ந்த எழுத்து....

மென் மேலும் வளர வாழ்த்துகள்
 
Top