Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 4 - Unai Theendum Alaiyaai Naane

Advertisement

AshrafHameedaT

Administrator
அலை – 4

ரிஷிவந்த் நேத்ராவின் அருகில் வந்ததும் அவள் வாயை வைத்துக்கொண்டு அமைதியாக நில்லாமல்,
“ஹாய் பழம். எப்டி இருக்கீங்க? நீங்க இங்க எங்க? இந்த காலேஜ்ல உங்க ரிலேட்டிவ்ஸ் யாரையாச்சும் சேர்க்கனுமா?...” என தானாகவே இதுவாகத்தான் இருக்கும் என யூகித்து கேட்டவள்,

“ஒரு ப்ரீ அட்வைஸ் பழம். இந்த காலேஜ் வேண்டாம். இதை தவிர்த்து வேற எதாச்சும் காலேஜ்ல சேர்த்துவிடுங்க. இது ஒரு டப்பா காலேஜ்...”

பெரிய உண்மை விளிம்பி போல குரலை தாழ்த்தி அவனிடம் கூற அவனோ அக்கட்டிடத்தை ஒரு சுற்று பார்த்துவிட்டு அவளை பார்க்க,
“அச்சோ பழம் இது சும்மா பகட்டுக்கு. பாக்கத்தான் நல்லா இருக்கும். படிக்க...” என்றவள் கட்டைவிரலை கீழ் நோக்கி காண்பித்து முகத்தை சுருக்கி வேண்டாம் என்பது போல கூறினாள்.

பின்னே இங்கே அவன் அடிக்கடி வருவதை தடுத்தாகவேண்டுமே. ஏனோ அவனை பார்ப்பதை தவிர்த்துவிடு என அவளின் உள்மனது எச்சரித்துக்கொண்டே இருந்தது. தினமும் வரும் கனவின் தாக்கம் வேறு.

தன் அனுமதியின்றி தன் இதயத்தினுள் ஊர்வலம் வரும் அவனின் நினைவுகளை அறவே வெறுத்தாள் நேத்ரா.
அதற்குள் ப்யூன் தங்கராசு வந்துவிட, “ஹாய் ராசு அண்ணா. நீங்க என்ன இந்நேரம் கேண்டீன் பக்கம்? உங்களுக்கொரு சமோஸா சொல்லட்டுமா? சூப்பர் டீயோட...” என நேத்ரா கேட்க,

“அட நேத்ரா தங்கச்சி. கிளாஸ்க்கு போகலையாமா?...” என தணிந்த குரலில் இயம்ப,

“இது நம்ம கரண்ட் ஸார் கிளாஸ் ராசு அண்ணா. கட் அடிச்சுட்டோம்...” என பெருமையாக கூற,

“ஜஸ்ட் ஷட்அப்...” தாழ்ந்த குரலில் இரைந்த ரிஷிவந்தை ஆராய்ச்சியாக நேத்ரா பார்க்க,

“நீங்க நாலுபேரும் எந்த டிபார்ட்மென்ட்?...” கடுமையான குரலில் கேட்க,

“நாங்க மேத்ஸ் டிபார்ட்மென்ட் ஸார்...”
நீ எதற்கு கேட்கிறாய் என்பது போல நேத்ரா பார்க்க ராகினி தயங்கினாலும் கூறிவிட்டாள்.
“கிளாஸ் டைம்ல இங்க என்ன பன்றீங்க? உங்க ஹெச்ஓடி யார்?...” அவனின் தோரணையே அவர்களை பதில்கூற வைத்தது.

“கந்தன் ஸார்...” ரிஷியின் கடுமையில் அரண்டவளாக மலர் கூற ப்யூனை நோக்கி திரும்பியவன்,

“அவருக்கு கிளாஸ் முடிஞ்சதும் என்னை வந்து பார்க்க சொல்லுங்க ராசு...” என கூற,

“எங்க ஸார் எதுக்கு உங்களை வந்து பாக்கனும்?...” வீம்பாக நேத்ரா கேட்க அவளுக்கு பதில் கூறாமல் ப்யூனிடம்,

“காலேஜ் கரெஸ்பாண்டேன்ட் கூப்பிட்டேன்னு சொல்லி என்னை வந்து பார்க்க சொல்லுங்க...” என கூறிவிட்டு,

“நீங்க க்ளாஸ்க்கு போங்க. இதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங். நெக்ஸ்ட் இதே போல கிளாஸ் கட் பண்ணினா சிவியர் ஆக்ஷன் எடுக்கவேண்டியதாகிடும். கேர்ஃபுல்...” என மிரட்டல் குரலில் கூற அவனை அதிர்ந்து பார்த்தனர் நால்வரும்.

“கரெஸ்பாண்டேன்ட்டா?...” என நேத்ரா வாயை பிளந்தது ஒரு நிமிடமே. அதன் பின்பு,

“ஆமா கரெஸ்பாண்டேன்ட். பெரிய ஜேம்ஸ்பாண்ட்னு நினைப்பு. ப்ச்! யாரா இருந்தா என்ன?...” என முகத்தை திருப்பிக்கொண்டு நின்றாள்.

அவளின் அலட்சியபாவனை ரிஷியினுள் எரிந்துகொண்டிருந்த தீயை மேலும் தூண்டிவிட்டதை போல ஆனது.

“இன்னும் என்ன இங்க வேடிக்கை? ம்ம். க்ளாஸ்க்கு போங்க...” என அதட்ட அங்கிருந்து பொடிநடையாக நடந்தனர் நால்வர் அணியினர்.

“என்னடி இவர்தான் நீ திருச்சியில பார்த்தேன்னு சொன்ன பழமா? அவருக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை. ஆள் ரொம்ப கண்டிப்பா, விரைப்பா இருக்காரே?...” என ராகினி நேத்ராவிடம் முணுமுணுக்க,

“எனக்கும் அதேதான் சந்தேகம் கூழ்வண்டி. இவருக்கு போய் பழம்னு பேர் வச்சேன் பாரு...” என கருவிக்கொண்டே திரும்பி ரிஷியை பார்த்தாள்.

அவன் காட்டமாக கேண்டீன் நிர்வாகியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவனையே பார்த்து,

“மரம் மாதிரி நிக்கிறதை பாரேன். மரம் மரம் சரியான கட்டுமரம்...” திட்டிக்கொண்டே திரும்பியவள்,

“யாஹூ...” என மெல்லிய குரலில் கூவ,
“என்னாச்சுடி உனக்கு?...” மலர் பதற,

“கரஸ்க்கு கட்டுமரம் பேர் எப்டி இருக்கு?...” ஒற்றை புருவத்தை உயர்த்தி நேத்ரா கேட்க அவளின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள் ரோஷிணி.

“நீ அடங்கவேமாட்டடி...” என கூறி அவளை இழுத்துக்கொண்டு தங்கள் வகுப்பிற்கு செல்ல அங்கே கந்தன் இவர்களை பார்த்து முறைப்போடு தலையசைத்து உள்ளே அனுமதித்தார்.

மற்ற மூவரும் அமர்ந்துவிட நேத்ரா மட்டும், “ஸார் நாங்க வந்து...” விளக்கம் அளிக்க முயல அவளை கையமர்த்தி தடுத்தவர்,

“பேசாம உட்காரு. உன்னையெல்லாம் பேசவே விடக்கூடாது. பேசவிட்டா பெரிய பிரச்சனையில கொண்டுவந்து விட்டுடுவ...” என கோவத்தை அடக்கியகுரலில் கூறி பாடத்தை கவனிக்க ஆரம்பித்தார்.

நேத்ராவும் தோளை குலுக்கிவிட்டு அமர்ந்ததும் ராகினியின் பார்வை மொத்தமும் ஆனந்தின் மேல் இருப்பதை கண்டு அவளை பாடத்தை கவனிக்கும் படி காண்பித்து திசைதிருப்பினாள்.

ஆனாலும் ராகினி கேட்பதாக இல்லை. ஒரு முறையேனும் ஆனந்த் தன்னை பார்த்துவிடமாட்டானா என ஏக்கத்தோடு பார்த்தபடி இருந்தவள் திடீரென,

“உன்னை யாருடி அவனுக்கு பணம் குடுக்க சொன்னது? என்கிட்டே கேட்க சொல்லிருக்கவேண்டியது தானே?...”

சின்னக்குரலில் அத்தனை கோபத்தை கட்டியவளை கண்டுகொள்ளாமல் கந்தனின் பாடவிளக்கத்தில் தன்னை உட்புகுத்தியிருந்தாள் நேத்ரா.

எத்தனை கோபமாக தான் பேசினாலும் அவ்வளவு எளிதாக நேத்ராவிடம் எந்த வார்த்தைகளையும் வாங்கிவிடமுடியாதென்பது ராகினிக்கு தெரியும். ஆனாலும் மனம் தளராமல் போராடியபடியே தான் இருந்தாள்.

தவறு மொத்தமும் தன்னை சார்ந்தே இருக்கிறதே. தவறை திருத்தி ஆனந்தின் மனதை தன்புறம் திருப்ப எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டத்தையும் போராட்டத்தையும் சந்திக்க தயாராகவே இருந்தாள் ராகினி. இவ்விஷயத்தில் தோழிகள் யாரும் ராகினிக்கு உதவுவதாக இல்லை. வனமலரை தவிர.

ராகினியின் சார்பில் ஆனந்திடம் தூது போவதும் அப்படி செல்வதால் நேத்ராவிடம் வாங்கி கட்டிக்கொள்வதும் என மத்தளத்திற்கு இருபுறமும் இடி போல ஆனது அவளின் நாட்கள்.

ஆனாலும் சலிக்காமல் தன்னுடைய வேலையை செய்ய தவறுவதே இல்லை வனமலர். நேத்ராவும் அவளை கண்டிக்க தயங்குவதும் இல்லை.

கிளாஸ் முடிந்து அடுத்த வகுப்பு இல்லாததால் அனைவரும் கலைந்து செல்ல நேத்ராவை நோக்கி வந்தான் ஆனந்த்.

“நேத்ரா, உன்னுடைய ஹெல்ப்க்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். சரியான நேரத்துக்கு பணம் கிடைச்சதால அம்மாவுக்கு டயாலசிஸ் பண்ணமுடிஞ்சது. இன்னும் ரெண்டு நாள்ல பணம் கிடைச்சிடும் நேத்ரா. தந்திடறேன்...” ஆனந்த் கூற,

“ஏன் ஆனந்த், என்கிட்டே எதுவும் கேட்கிறதும் இல்லை. சொல்றதும் இல்லை. பணம் தேவைன்னா என்னை கேட்கவேண்டியது தானே? இன்னும் எவ்வளவு நாள் என்னை நோகடிக்கபோறீங்க?...”

ராகினியின் சத்தத்தில் முகம் இறுக அங்கிருந்து நகர்ந்தவனை மறித்த நேத்ரா,

“இப்போ எனக்கு எந்த அவசரமும் இல்லைப்பா. நீ மெதுவாவே கொடு. அம்மா இப்போ எப்படி இருக்காங்க?...” என,

“ஹ்ம் அம்மா நல்லா இருக்காங்க. உனக்கு ரொம்ப தேங்க்ஸ்னு சொல்ல சொன்னாங்க. நான் கிளம்பறேன் நேத்ரா...” என கூறி ராகினியின் பக்கம் கூட திரும்பாமல் சென்றுவிட்டான்.

அவனின் ஒதுக்கத்தில் அங்கேயே மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தாள் ராகினி. வனமலர் அவளின் தோளில் ஆதரவாக கை வைக்க,
“ஹே அமேஸான், வா, வா கேண்டீன் போகலாம். பாதிலையே அந்த கட்டுமரம் வந்து கவுத்திட்டு போய்டுச்சு. இப்போ போய் எதாச்சும் வாங்கிட்டு வருவோம். லேசா பசிக்கிற மாதிரி இருக்கு...”

மலரின் மறுப்பான முணங்கலை பொருட்படுத்தாமல் நேத்ரா நகர்ந்துவிட ரோஷிணி புக்கை பிரித்து பார்வையிட ஆரம்பித்தாள். தேற்றுவார் யாருமின்றி சிறிது நேரம் அழுதவள் பின் கண்ணீரை துடைத்துக்கொண்டு விசும்பலோடு அமர்ந்திருந்தாள்.

கேண்டீனில், “ஏன் நேத்ரா உனக்கு இன்னும் ராகினி மேல இருக்கிற கோபம் போகலையா?...” வனமலர் ஆற்றாமையோடு கேட்க,
“எனக்கென்ன அவ மேல கோபம்? ஒண்ணுமில்லையே...”

“கோவமில்லாமலா அவ அழும் போது கூட ஆறுதல் சொல்லவிடாம என்னை இழுத்துட்டு வந்த?. அவ நம்ம ப்ரெண்ட் நேத்ரா...”
“என்னைக்கும் அவ என்னோட ப்ரெண்ட் தான். அவ அழுகை அவளா இழுத்துவிட்டுட்டது. செஞ்சதுக்கு கொஞ்சமாச்சும் வருந்தனும்ல...”
வெகு சாதாரணமாக சொல்லிவிட்டு நேத்ரா செல்ல வனமலரால் பொறுக்கமுடியவில்லை.
 
Last edited:
“நீ பேசறது கொஞ்சமும் சரியில்லை நேத்ரா. அவளை அழவிட்டு நீ வந்துட்ட. என்னையும் அவக்கிட்ட பேசவிடலை. ரோஷி நிச்சயம் எதுவும் பேசபோறது இல்லை. உனக்கு ராகினியை விட அந்த ஆனந்த் முக்கியமா போய்ட்டானா?...”

அவளின் ஆவேசத்திற்கு கொஞ்சமும் முகம் மாறாத நேத்ரா,

“எனக்கு யார் முக்கியம்னு உனக்கே தெரியும். தெரிஞ்சும் கேட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை. நிரூபிக்கணும்னு அவசியமும் இல்லை. இந்த விஷயத்தை இத்தோட நிறுத்தினா நல்லது...”

திட்டவட்டமாக அழுத்தமான குரலில் நேத்ரா கூற வனமலர் பேசமுடியாமல் உள்ளுக்குள் குமுறினாள்.

“கொஞ்சமும் இளக்கம் காட்டாம எப்படி பேசறா? இவளுக்கு இருக்கிற திமிர் என்னைக்கும் குறையாது...”

மனதில் நினைத்தாலும் ஆனந்தை விட ராகினி தான் நேத்ராவிற்கு முக்கியம் என்பதில் வனமலருக்கு நிச்சயமே. ஆனாலும் அவள் மேல் வருத்தம் எழாமல் இல்லை.

“ராகினி செய்தது தவறுதான். அதை திருத்திக்க அவளுக்கொரு வாய்ப்பே கொடுக்காமல் தண்டிப்பது மட்டும் சரியா?...” தனக்குள் தான் கேட்டுகொண்டாள் வனமலர்.

தவறியும் இதே வார்த்தையை நேத்ராவிடமோ ரோஷிணியிடமோ கேட்டுவிடமுடியாது. ஆனந்த் விஷயத்தில் ராகினியை விடுத்து இருவரும் அவனிற்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.

ராகினியும் இவர்களிடம் போராடி போராடி ஓய்ந்துபோனது தான் போனாள். அறியாத தவறை அறிந்தே தானே செய்தாள்.
ஆனந்தின் இதயத்தை கத்தியால் கூரிட்டு குருதியும் கண்ணீரும் கொப்பளிக்கவைத்தவள் இன்று மரித்த மனதிற்கு மருந்திடுகிறேன் என வந்து நிற்பதை அவன் ஏற்றுகொள்ளாமல் இவளை அலைப்புற செய்கிறான்.

வனமலர் ராகினியை பற்றியே சிந்தனையில் நிற்க நேத்ரா அவளை அழைத்துக்கொண்டு வகுப்பறைக்கு சென்றாள்.

“ஹே கூழ்வண்டி இந்தா இதை குடி. ரொம்ப டயர்டா இருப்பல...” என ஒரு கூல்ட்ரிங்க்ஸ் டின்னை அவள் புறம் வைத்துவிட்டு ரோஷிணியின் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்துவிட்டாள்.

“ரோஸ் இந்த கட்டுமரம் பத்தின டீட்டயில்ஸ் கொஞ்சம் கலெக்ட் பண்ணனுமே. யார்க்கிட்ட விசாரிக்க சொல்லலாம்?...” என யோசனையாக பார்க்க,

“அதான் இருக்கவே இருக்காருல நம்ம ராசு அண்ணா...”என்று ரோஷிணியும் அவளுக்கு எடுத்துக்கொடுத்தாள்.

தன்னை கண்டுகொள்ளாமல் அவர்கள் அலட்சியம் செய்வதை ராகினி உணர்ந்தாலும் தனக்கு இது தேவைதான் என மனதினுள் நொந்துகொண்டு மௌனமாகி வேடிக்கை பார்த்தாள்.

ராகினியின் நிலை வனமலருக்கு வருத்தத்தை அளித்தாலும் ஒன்றும் பேசாமல் அவளின் கைகளை ஆறுதலாக அழுத்திக்கொடுக்க ராகினி மெல்ல புன்னகைத்தாள்.

அப்புன்னகையில் தான் எத்தனை வலிகள்?
கல்லூரியை ஒரு சுற்று சுற்றிவிட்டு தன்னறைக்கு வந்து அமர்ந்தவனின் மூச்சுக்காற்றில் கூட அத்தனை உஷ்ணம்.

“ஓ காட், டிஸ்கஸ்டிங்...” என தலையை அழுந்த தேய்த்துக்கொண்டவன் விழிகளுக்குள் நேத்ரா வந்து நிற்க,
“டாமிட். நான் யார்னு தெரிஞ்சும் கொஞ்சமும் பயமில்லாம எப்படி பார்க்கா? அவளை...” என கண்கள் சிவக்க நினைத்தவனுக்கு நேத்ராவை கொன்றுவிடும் வெறி பிறந்தது.

எந்த வாழ்க்கை வேண்டாம் என்று தனக்கென்று ஒரு அடையாளத்தை தேடிக்கொண்டிருந்தானோ அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்து வாழ்வின் திசையை மாற்றிவிட்டாளே!

நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. சுமங்கலியின் ஓங்கிய கைகள் நினைவடுக்கில் வலம் வர தாடை இறுகியது இவனுக்கு.

மொத்த ரத்தமும் சூடாகி அனலென கொதிக்க, “இவளை நான் பார்த்திருக்கவே கூடாது...” எத்தனை முயன்றும் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வரவே அவனால் முடியவில்லை.

அதே நேரம் நேத்ராவின் ஹெச்ஓடி கந்தன் வந்து நிற்கவும் காய்ச்சி எடுத்துவிட்டான் அவரை. பதில் பேசமுடியாமல் ரிஷியின் கோபத்திலும் சூடான பேச்சிலும் மிரண்டுதான் போனார் அவர்.

அப்படி என்ன அவளின் மேல் துவேஷம்? துரைச்சாமியிடம் காட்டமுடியாத கோபத்திற்கு வடிகாலாக நேத்ராவை கொண்டுவந்து நிறுத்தினான். அவளை வைத்துதானே தனக்கிந்த தண்டனை என பொங்கியது அவன் உள்ளம்.
இனி இந்த வாழ்க்கை தான் தனக்கு நிரந்தரம் என்ற எண்ணமே வேப்பங்காயாக கசந்தது.

சிறு பெண் மேல் இத்தனை வன்மம் கூடாது என ஒரு மனம் இடித்துரைக்க தன் நிலைக்கு நேத்ராவும் ஒரு காரணம் தானே என நேத்ராவிற்கு எதிராக அவனின் இன்னொரு மனம் வாதாடியது.

எத்தனை முயன்றும் ஆத்திரத்தை கட்டுக்குள் கொண்டுவரமுடியாமல் திணறியவன் அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் வேகமாக கிளம்பிவிட்டான்.

வெளியே வந்தவனின் கண்களில் நேத்ரா விழுந்தாள். வனமலரோடு வம்பிளுத்தபடி முகம் கொள்ளா புன்னகையோடு சலசலத்துக்கொண்டே அவனை கடந்தவளை எரித்துவிடுவது போல பார்த்தான் ரிஷி.

தன்னை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளாமல் தன் போக்கில் செல்பவளை பார்க்க பார்க்க பற்றி எரிந்தது உள்ளுக்குள்.
நேத்ராவோ அவனை கவனிக்கவே இல்லை. அவனானால் தன்னை அவமதித்து அலட்சியமாக அவள் சென்றுவிட்டதாகவே முடிவு செய்தான்.

“இவளுக்கு சரியான பாடத்தை நான் கத்துக்குடுக்காம விடப்போறதில்லை. இருக்குடி உனக்கு...” சூளுரைத்த மனதோடு தன் காரை எடுத்துக்கொண்டு காரைக்குடி நோக்கி சென்றான்.

வேக எட்டுக்களோடு புயலென வீட்டுக்குள் நுழைந்தவனை எதிர்கொண்ட சுமங்கலி,
“ரிஷி என்ன இவ்வளோ டென்ஷனா இருக்க? தலை வலிக்குதா?. பில்டர் காபி கொண்டுவர சொல்லட்டுமா?...”

வாஞ்சையாக கேட்டபடி எதிரே வந்து நின்ற தாயை கண்டவனின் வேகம் தடைபட பெற்றவளின் கனிந்த முகத்தை கண்டு அவனின் கொந்தளித்திருந்த மனம் கொஞ்சம் அமைதிப்பட்டது. சோபாவில் விக்ராந்தையாக அமர்ந்தவன் சட்டையின் முதல் இரண்டு பட்டன்ங்களை கழட்டி தளர்த்தியவன் தலையை அழுந்த கோதிக்கொண்டான்.

அவனருகில் அமர்ந்த சுமங்கலி, “காலேஜ்ல எதுவும் டென்ஷனா? ரொம்ப கோவமா இருக்கிறது போல தெரியுதே?...”

“நத்திங் ம்மா...” அவரின் தோளில் சலுகையாக சாய்ந்துகொண்டவன்,
“ரெண்டு நாளா தானே காலேஜ் பொறுப்பை எடுத்திருக்கேன். கொஞ்சம் பிக்கப் பண்ண டைம் எடுக்குமே. வேற ஒன்னும் இல்லை மாம்...”

தாய் வருந்த கூடாதே என்று சமாளித்தவன்,
“நான் போய் ப்ரெஷ் ஆகறேன். எனக்கு ஒரு டென்மினிட்ஸ் கழிச்சு காபி அனுப்புங்க. செல்லம்மாவை போட சொல்லுங்க மாம். ஒரு ஆர்வத்துல நீங்க போட்டுட போறீங்க...”

வேண்டுமென்றே குறும்பாய் கூறி சிரித்தவன் தாயின் முறைப்பில் வேகமாக மாடியேறிவிட்டான்.

சுமங்கலிக்கு தெரியும் அவனின் இந்த உற்சாகமும் குறும்பும் தனக்கே வரவழைக்கப்பட்டது என்று.

ஆனாலும் அவனின் போக்கில் விடமுடியாதே. விட்டால் பின் பிடிக்கவே முடியாது என்பது குடும்பமே அறிந்த உண்மை. அப்பேர்ப்பட்ட பிரசித்தி பெற்ற குணம் ரிஷியினுடையது.
ஒரு பெருமூச்சோடு செல்லம்மாவை தேடி சென்றார் சுமங்கலி.

அறைக்குள் வந்த ரிஷி முகத்தை கழுவிவிட்டு வேறுடை மாற்றி பால்கனியில் சென்று அமர்ந்தான்.
காலையில் இருந்து கல்லூரியில் நடந்த நிகழ்வுகளை வரிசையாக மனம் அசைபோட இறுதியில் தான் கோபமாக கிளம்பியதில் வந்து நின்றது அவனின் எண்ணங்களின் பயணம்.

“நேத்ரா சரியான ராட்சஸி...”வாய் முணுமுணுக்க.

எங்கே நேத்ராவை தான் விரும்பி இருப்போமோ, காதல் என்று வந்து நின்றுவிடுவேனோ என்று பயந்துதானே தாத்தா அவனை தன் கட்டுப்பாட்டில் வைக்க கல்லூரி பொறுப்பை ஒப்படைத்தது. அந்த நேத்ராவே தன் கல்லூரியில் தான் படிக்கிறாள் என்று அறிந்தால் துரைச்சாமியின் முகம் எப்படி இருக்கும்? நினைக்கும் பொழுதே ரிஷியின் முகம் புன்னகை பூசியது.

மறு நொடியே, “நானாவது அவளை விரும்புவதாவது?...” சிலுப்பிக்கொண்டவன் நொடியில் பாறையாக இறுகிப்போனான் ரிஷி.

என் கனவுகள் எல்லாத்தையும் தரைமட்டமாக்கியது அவளுடைய சந்திப்புதானே.

“இந்த ஜென்மத்துல அவ தான் என்னுடைய முதல் எதிரி. அவளை. சிக்கும் போது வச்சிக்கறேன்...”
எந்த நேரத்தில் நினைத்தானோ அவனின் எண்ணத்தை பொய்யாக்கிவிடாமல் அடுத்த பத்தாவது நாளே அவனிடம் வகையாக மாட்டினாள் நேத்ரா.

அலை தீண்டும் ...
 
nethra pavam, rishi nee thapa yosikira pa
 
Super.
 
Top