Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 7:

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே..? காதல் பிரிவின் ஏக்கம்தான் உனக்கு பாட்டா வெளிய வருதான்னு கேட்டேன்..!” என்றான்.

சில நிமிடங்கள் மிரட்சியுடன் பார்த்தவள்..”அப்படி இவனால் என்ன செய்து விட முடியும்..?” என்ற குருட்டு நம்பிக்கை மனதில் பிறந்தவுடன்..

“ஆமான்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசம்..? பாட்டு மட்டும் என்ன டான்ஸ் கூட ஆடுவேன்..! அதைப்பத்தி உங்களுக்கு என்ன கவலை..?” என்றாள்.

“எனக்கென்ன கவலையா..? பரவாயில்லையே தைரியம் கூடிப்போய்டுச்சு..” என்று சொன்னவன் இரண்டு எட்டு முன்னால் வைக்க...

அதில் அவளுக்கு லேசாக பயம் ஏற்பட..”இப்ப எதுக்கு முன்னாடி வரிங்க..? முதல்ல வெளிய போங்க..! இல்லைன்னா நான் கத்தி ஊரைக் கூட்டுவேன்..!” என்றாள்.

“உனக்கு தான் கவலை இல்லையே..? அப்பறம் ஏன் பயப்படுற..ஆங்.. அப்பறம் என்ன சொன்ன..? ஊரைக் கூட்டுவிங்களோ..நல்லா கூட்டு...நானா வேண்டாம்ன்னு சொன்னேன்..!”என்றான்.

“இப்படி தனியா இருக்குற பொண்ணுகிட்ட வந்து வம்பு பண்றது தப்பா தெரியலை..?” என்றாள்.

“தெரியலை..!” என்றான் மந்தகாசமாய்.

“என்ன இவன் எப்படி பேசுனாலும் மடக்குறான்..ஐயோ சுமதி வேற வந்துடுவாளே..இருக்குற பிரச்சனையில இப்ப இவன் வேற..” என்று மனதில் நினைத்துக் கொண்டவள்..

வரவழைக்கப்பட்ட கோபத்துடன்..”இப்ப வெளிய போறிங்களா இல்லையா..?” என்றாள்.

சிலுப்பிக் கொண்டிருந்த முடிகற்றைகளும்..ஒழுங்கின்றி கிடந்த துப்பட்டாவும்..அவனை வேறு உலகிற்கு அழைத்து செல்ல..அவள் சொன்னது அவன் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.

முத்துவை அழைக்கலாம் என்று அவள் பக்கத்து வீட்டைப் பார்க்க..அவள் நேரமோ என்னமோ..அவன் அங்கு இல்லை.

அவளின் பார்வை..முத்து வீட்டின் கொல்லைப் பக்கம் போனதை அறிந்த முகிலனுக்கு..எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை.

“ஏய்..!” என்றபடி அவளின் கழுத்தை நெறிக்க போனான்.எவ்வளவு தைரியம் இருந்தா உன் பார்வை அவன் வீட்டுப் பக்கமே போகும்..?” என்றான்.

“என் கண்ணு..நான் எங்க வேணும்ன்னாலும் பார்ப்பேன்...! அதைக் கேட்க நீயாரு...! போடா முதல்ல வெளிய..” என்று மதி ஏகத்துக்கும் சத்தத்தைக் கூட்ட...அவளை முறைத்தபடி அமைதியாக சென்றான் முகிலன்.

அவன் செல்வதைப் பார்த்தவுடன் தான் அவளுக்கு மூச்சே திரும்பியது.”சப்பா..ஒரு வழியா போய்ட்டான்..!” என்று மனதில் நினைத்தவள்...வீட்டின் கதவை தாள் போட...கொல்லைப் புறத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைய...சுவரோரம் சாய்ந்திருந்த முகிலன்..அவள் எதிர்பாரா வண்ணம்..முழு மூச்சாய் இழுத்து அணைத்தான்.

திடீரென்று நடந்த செயலில்...அதிர்ந்து விழித்தாள்.அவனின் அணைப்பு இறுகிக் கொண்டே போக...

“ஏய்..! விடு...விடுடா...” என்று திமிர....

“எவ்வளவு தைரியம் இருந்தா என்னை டா போட்டு பேசுவ..?” என்று ஆங்காரத்துடன் கூறியவன்..அதே வேகத்துடன்..அவள் இதழ்களை சிறை செய்தான்.சில நிமிடங்கள் அந்த முத்த யுத்தம் நீடிக்க...அந்த யுத்தத்தில் சில வினாடிகளில் மீண்ட மதி...அதிலிருந்து மீள அவனிடம் போராடிக் கொண்டிருந்தாள்.

அதோ பரிதாபம்..மலைப்போன்று இருந்த அவனிடம் இருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதில்லை..என்று அவனின் இறுகிய அணைப்பும்...விடாப்பிடியான கரங்களும் உணர்த்தின.

அவளின் இதழ்களின் தேன் சுவையில் சில நிமிடங்கள் மூழ்கியிருந்தவன் பட்டென்று அவளை விட்டான்.

அவன் சட்டென்று விட்டதில் தடுமாறி விழப் போன மதி...ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு நின்றாள்.கண்கள் கண்ணீரால் நிரம்பியிருக்க...அவனின் இதழ் பட்ட அவள் இதழ்கள், மிளகாயைத் தேய்த்ததைப் போல் எரிந்தது.

“நான் யாருன்னு கேட்டல்ல..போய் கண்ணாடியைப் பாரு..நான் யாருன்னு உனக்கு விலாவரியா சொல்லும்.போனா போகுதுன்னு கொஞ்சம் விட்டுப் பிடிச்சா..ரொம்ப ஓவரா போற..என்ன டீச்சர் ஆகிட்டோம்கிற திமிரா..இந்த திமிர் எல்லாம் வேற யார்கிட்டையாவது வச்சுக்க..இந்த முகிலன் கிட்ட..அதுவும் மணி முகிலன்கிட்ட வச்சுக்காதா...முகிலனா இருக்குற என்னைய பழைய மணியா மாத்திடாதா..!” என்று எச்சரித்தவன்...

தன் கைகளில் துவண்டிருந்த அவள் துப்பட்டாவை..அவள் மேல் எறிந்துவிட்டு சென்றான்.

அவன் சென்ற பின்..அப்படியே சுவரோடு சாய்ந்து அமர்ந்து அழத் தொடங்கினாள் மதி.முகிலனை நினைக்க நினைக்க அவளுக்குள் ஆத்திரம் பிறந்தது.

“நான் ஏன் அழனும்..அவனை அழ வைக்கணும்...அது தான் அவனுக்கு நான் குடுக்குற பெரிய தண்டனை...இந்த வண்ண மதி யாருன்னு உனக்கு காட்டுறேண்டா..” என்ற சபதமே மதியின் மனதிற்குள் பிறந்தது.

உடல் அளவில் மட்டுமே பெண்கள் பலவீனமானவர்கள் என்பது முகிலனுக்கு தெரியவில்லையோ..அல்லது தெரிந்தும் அப்படி நடந்து கொண்டானா..?

மதியின் வீட்டில் இருந்து முகிலன் வெளியே சென்றது...முத்துவின் கண்களுக்கு அச்சுப் பிசகாமல் விழுந்து வைக்க..அதிர்ந்தான் முத்து.

“இவன் எதுக்கு மதி வீட்டுக்கு வந்துட்டு போறான்..?” என்று யோசித்தவனுக்கு மண்டை காய்ந்தது தான் மிச்சம்.பதில் தெரியாத அந்த கேள்வியே அவனுக்குத் தலைவலியைத் தந்தது.

இதை அவளிடம் கேட்டே ஆக வேண்டும் என்று எண்ணியவன்...வேகமாக வீட்டிற்குள் சென்றவன்..பின்கட்டிற்கு சென்று...”மதி.....மதி..” என்றான்.
அவள் அமர்ந்திருந்த நிலையில் அவனின் குரல் மதியின் காதுகளை சென்றடையவில்லை.

ஆனால் முத்துவோ..மதி வேண்டும் என்றே தன்னைத் தவிர்க்கிறாள் என்று தவறாகப் புரிந்து கொண்டான்.ஏனோ மதியின் விஷயத்தில் மட்டும் அவன் மனம் அவனுடைய சொல் பேச்சைக் கேட்பதில்லை.

அங்கு தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்த முகிலனுக்கும் கோபம் கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை.அவனும் எவ்வளவு முயற்சித்தும் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது.

“என்ன முகிலா...எங்க போயிட்டு வர..?” என்று மலர் கேட்க..

“ம்ம்...ஆக்சிஜன் வாங்க போயிட்டு வரேன்..!” என்றான்.

“ஆக்சிஜன்னா..?” என்றாள் துர்கா.

“நீ இன்னும் இடத்தைக் காலி பண்ணலையா..?” என்பதைப் போல் பார்த்தவன்...

“ம்ம்..ஆக்சிஜன்னா காத்து...உயிர் காத்து...” என்றான் நக்கலாய்.

“அப்படியா மாமா...!” என்றாள் அதற்கும்.

“எல்லாம் என் நேரம்..!” என்று அவன் தலையில் அடித்துக் கொள்ள..

“தலை வலிக்குதா மாமா..?” என்றாள்.

“ம்மா..” என்று அவன் பல்லைக் கடிக்க..நீ வந்து சாப்பிடு துர்கா..!” என்று மலர் கூப்பிட..

“மாமாவையும் சாப்பிட கூப்பிடுங்க அத்தை...அவரும் பசியா இருப்பார்ல...!” என்று அவள் சொல்ல...

“நான் கொலைவெறி இருக்கேன்..பேசாம போய்டு..!” என்று முகத்தில் அடித்தார் போல் சொன்னவன்...வேகமாக தன் அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.

“ஏன் அத்தை...மாமா இம்புட்டு கோவமா இருக்காங்க..? என் கூட சரியா பேசக் கூட இல்லை..?” என்று துர்கா வருத்தபட..

“அவனுக்கு வேற ஏதாவது கோபமா இருக்கும் துர்கா..நீ வா..!” என்று மலர் சமாளிக்க..

“என்னவோ போங்கத்தை...நீங்களும் சொல்றிக..நானும் கேட்டுக்கிறேன்..!” என்றாள்.

துர்காவிற்கு அவர் ஒன்றுவிட்ட அத்தை.அதாவது மனோகரன்,மற்றும் அவர் அண்ணன் தம்பிகளுக்கு சித்தப்பா மகள் தான் மலர்.

அவர்களுடைய சித்தப்பாவிற்கு மலர் ஒற்றைப் பெண்.அதனால் தன்னுடைய ஒன்றுவிட்ட அண்ணன்களின் மேல் மலருக்கு அலாதி பாசம்.ஆனால் அவர்கள் இப்படி ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டிருப்பது,பகைமை பாராட்டுவது...இப்படி எதுவும் மலருக்கு பிடிக்கவில்லை.

ஒருத்தரிடம் மலர் ஒட்டுதலாய் இருந்தால்..இன்னொருவருக்கு அது பிடிக்காது.அண்ணன்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ..அண்ணிகளுக்கு பிடிப்பதில்லை என்பது தான் உண்மை.அதில் பார்வதி மட்டும் விதி விலக்கு.

இப்போது துர்காவை பெண் எடுப்பது சம்பந்தமாக அவர் யோசித்துக் கொண்டிருக்க...கடைசி தம்பியான..கோபி-லட்சுமி தம்பதியினர் இன்னமும் கதைக்குள் வரவே இல்லை...அவர்களின் மகள் ராணி வேறு போட்டியில் இருக்கிறாள்.ராணி என்ற பெயருக்கு ஏற்றார் போல்..சண்டி ராணியே தான் அவள்.

இதை எல்லாம் யோசிக்கும் போது மலருக்கே தலைவலி வந்தது.முகிலனுக்கு சொல்லவா வேண்டும்.பொதுவாக முகிலனுக்கு இவர்கள் குடும்பத்தில் யாரையும் ஆவதில்லை.

அண்ணன் தம்பி என்ற ஒற்றுமை இல்லாமல்..சொத்துக்காக காட்டு மிராண்டிகளைப் போல் அடித்துக் கொண்டிருக்கும் அவர்களைக் கண்டாலே அவனுக்கு ஆகாது.
 
அவர்கள் வீட்டில் அவனுக்கு பிடித்த ஒருவர் என்றால் அது பார்வதி மட்டும் தான்.அவருடைய பொறுமையும்,வைராக்கியமும் அவனை ஈர்க்கும் விஷயங்கள்.அந்த ஒரு காரணத்திற்காகவே..மதியின் பின்னால் திரிகிறான்.

இல்லை என்றால்..எப்போதோ..அவளை..”நீயும் வேண்டாம்,உன் சங்காத்தமும் வேண்டாம்..” என்று போயிருப்பான்.

ஆனால் சமீப காலமாக..பார்வதியும் கூட அவனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.அதற்கான காரணம் மட்டும் தான் அவனுக்குத் தெரியவில்லை.எங்கே தவறிழைத்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

ஆனால் ஏதோ ஒரு விதத்தில் தன்னால் அவர்கள் காயம் பட்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டான்.எவ்வளவு தான் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும்..அவனுக்கே உரிய முரட்டுக் குணத்தை அவனால் விட முடியவில்லை.

அந்த முரட்டு குணத்திற்கும் அவன் பார்க்கும் மருத்துவர் வேலைக்கும் கொஞ்சம் கூட ஒத்துப்போகவில்லை.இருந்தாலும் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே மருத்துவம் படித்தான்.அதே காரணத்திற்காக மட்டுமே....இன்று அந்த வேலையை செய்து கொண்டிருக்கிறான்.

வீட்டிற்கு வந்த சுமதிக்கு...தன் அக்காவின் முகம் சரி இல்லாததைப் போல் தோன்றியது.

“என்னாச்சுக்கா..?” என்றாள்.

சுமதியின் குரலில் கலைந்தவள்..”ஒண்ணுமில்லை சுமதி...அதுக்குள்ள போயிட்டு வந்துட்டியா..?” என்றாள்.

“இன்னைக்கு கூட்டமே இல்லக்கா..அதான் போன உடனே வாங்கிட்டு வந்துட்டேன்..!” என்றாள் சுமதி.

அவளைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது மதிக்கு.தன்னை விட ஏழு வயது சிறியவள்.ஆனால் அவளுக்கு இருக்கும் பொறுப்பைப் பார்த்து மதி வியக்காத நாளே இல்லை.எந்த வேலை சொன்னாலும் ஒரு சின்ன முகச்சுளிப்பு கூட இல்லாமல் செய்வாள்.அவளைப் பார்த்து தான் இன்னமும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பாள்.

சுமதியின் வருகை..அவளுடைய காயங்களை தற்காலிகமாய் ஆறப் போட்டிருந்தது.

அந்த விடுமுறை நாட்களை வீட்டின் உள்ளேயே இருந்து கழித்தால் மதி என்று சொன்னால் மிகையாகாது.அவளுக்கு வெளியே வரவே பிடிக்கவில்லை.வந்தால் எங்கே முகிலனின் முகத்தில் முழிக்க வேண்டி வந்து விடுமோ என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம்.

பார்வதி கூட இரண்டு முறை கேட்டு விட்டார்.”ஏன் மதி வீட்டுக்குள்ளயே இருக்க..?” என்று.

“என்ன சொல்வாள்...! இது தான் நடந்தது..இதனால் தான் வெளியே செல்ல பயம்..” என்று சொல்வாளா..?
நிச்சயமாக மாட்டாள்.அப்படி சொன்னால்..பார்வதி பயந்தே போவார்.அழுதே கரைவார் என்று அவளுக்குத் தெரியும்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா..” என்று சமாளித்து வைத்தாள்.

முகிலனும் அவனுடைய வேலைகளில் பிசியாக இருந்ததால் இவளைப் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.ஆனால் முத்துவின் கண்களுக்கு இந்த மாற்றம் பெரியதாய் பட்டது.

“இரண்டு நாட்களாக பின்புறம் அவன் காத்துக் கிடந்தது தான் மிச்சம்..மதியின் வரவு...இல்லவே இல்லை..சரி என்று விட்டவன்...வீட்டிற்கு முன்னாலும் காத்துக் கிடந்தது பார்த்துவிட்டான்.அப்படியும் அவளைப் பார்க்க முடியவில்லை.

“ச்சை...இத்தனை நாள் ஊர்ல இல்லாம இருந்து கொன்னா..இப்ப பக்கத்துல இருந்துகிட்டே கொல்றா..?” என்று முனங்கியவன்...அவளிடம் பேசும் வழி தெரியாமல் முழித்தான்.

விடிந்தால் திங்கட்கிழமை என்பது தான் அவனுடைய அப்போதைய சந்தோசம்.அவள் ஸ்கூலுக்கு போகும் போது கண்டிப்பாய் பார்த்து விட வேண்டும் என்று எண்ணினான்.

அன்று முகிலன் எதற்காக வந்துவிட்டு போனான் என்று தெரிந்து கொள்ளாவிட்டால் அவனுக்குத்தான் தலையே வெடித்து விடுமே.

இருக்கிற பிரச்சனையில் அவனுக்கு முகிலன் பிரச்சனை தான் பெரிதாக தெரிந்தது.அது முகிலன் கம்பீரத்தில் வந்த பொறாமையாகக் கூட இருக்கலாம்.

அவனை விட முகிலன் இரண்டு வயது பெரியவன்.ஆனால் அவனுக்கு இவனைக் கண்டால் ஆவதில்லை.இவனுக்கு அவனைக் கண்டால் ஆவதில்லை.

இதற்கும் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் பிரச்சனை என்பது கிடையாது.இவர்களுக்கு இடையில் பிரச்சனையின் மைய கருவாக இருப்பது மதி.

மறுநாள் காலை பள்ளிக்கு கிளம்பும் போதே..மதிக்கு மனது அடித்துக் கொண்டது.ஏதோ விரும்ப தகாதது நடக்க போவதைப் போன்ற ஒரு பிரம்மை..ஒரு அமைதியின்மை அவளுள்.

அடர் நீல வண்ண கட்டன் புடவை அவள் அழகுக்கு அழகு சேர்க்க..அவள் பின்னல் இடுப்பு வரை நீண்டு தொங்க..(கொண்டை போடுவது கட்டாயமில்லை போலும்..)பளிச்சென்று இருந்த அவள் முகத்தில் குழப்ப ரேகைகள்.

“கிளம்பிட்டியா மதி..! அப்பா வந்து பஸ் ஏத்தி விடுறேன்..!” என்றபடி மனோகரன் வர..அப்படி ஒரு நிம்மதி அவள் முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது.

அது தந்தையின் பின்னால் பாதுகாப்பிற்காக ஒளிந்து கொள்ளும் குழந்தையின் செயலே.அதற்காக அவள் குழைந்தை இல்லை.பாதுகாப்பை நாடும் குமரி.அவ்வளவே.

அப்பாவின் வண்டியில் அமர்ந்து செல்லும் மதியையே பார்த்துக் கொண்டிருந்தான் முத்து.அவனுடைய அன்றைய பிளானும் சொதப்பலாய் முடிந்தது.

“இப்ப எதுக்குடா அந்த சிறுக்கியவே பார்த்துட்டு இருக்க..?” என்று முத்துவின் தாய்,அவன் பார்வை கண்டு கோவத்துடன் கேட்க...

“அவளைப் பார்த்தேன்னு நீ பார்த்தியா..பேசாம போய் உன் வேலையைப் பாரு..!” என்று எரிந்து விழுந்தான் முத்து.
முத்துவிற்கு ஒரு மறு பக்கம் உண்டு.அந்த பக்கத்தை மதி மட்டுமே அறிவாள்.

பஸ் ஸ்டாப்பில் சென்று மதியை இறக்கி விட்ட மனோகரன்...”இன்னும் பஸ் வரலை போல மதி...!” என்றார்.
“வந்திடும்ப்பா..” என்றாள்.

எப்பவும்..”நான் போய்க்கிறேன்..நீங்க போங்கப்பா...!” என்று சொல்லும் மதி, அப்படி ஏதும் சொல்லாமல் அமைதியாய் இருப்பதைப் பார்த்து அவருக்கு யோசனையாகப் போனது.

“என்னம்மா மதி? எதுவும் பிரச்சனையா?” என்றார்.

தன் அப்பா எதையோ மாற்றம் கண்டுவிட்டார் என்பதை உணர்ந்த மதி..’அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா..நீங்க கிளம்புங்க..! நான் போய்க்கிறேன்..!” என்றாள் எப்பவும் போல்.

“இல்லம்மா..நான் இருந்து பஸ் வந்ததும் ஏத்தி விட்டுட்டே போறேன்!” என்றபடி நிற்க...ஆனால் பஸ் தான் வந்தபாடில்லை.
“எப்பா பஸ்சு பக்கத்து ஊருல பஞ்சர் ஆகிடுச்சாம்..வர நேரம் ஆகும்ன்னு சொன்னாக..!” என்று போற போக்கில் ஒருவர் சொல்லிவிட்டு செல்ல..

“இப்ப என்ன செய்றது..? நேரம் வேற ஆகுதே..?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் மதி.

“அடுத்த பஸ்க்கு போனா நேரம் போய்டுமே மதி..!” என்றார் மனோகரன்.

“ஆமாம்ப்பா..!” என்று அவஸ்தையாய் சாலையைப் பார்க்க..அவர்களின் பின்புறம் வந்து நின்றான் முகிலன்.

எதுவும் பேசாமல் வண்டியை உறுமவிட்டுக் கொண்டு நிற்க..மனோகரனுக்கு தான் என்ன செய்வதென்று புரியவில்லை.அவன் அவருடன் பேசுவதில்லை.

ஆனால் அவரையே முறைத்துப் பார்த்துக் கொண்டு நிற்க...”நீ இன்னைக்கு மணி கூட போய் இறங்கிக்கம்மா...அவரும் டவுனுக்கு தான் போறாரு..!” என்று சொல்ல..

“இல்லப்பா..! நேரம் ஆனாலும் பரவாயில்லை..நான் பஸ்லயே போய்க்கிறேன்” என்றாள்.

அவன் கடுப்புடன் கிளம்ப தயாராக..”அப்பா சொல்றேன்ல..போம்மா..இல்லைன்னா நானே வந்து விட்டுட்டு வரேன்..!” என்றார்.

“அவ்வளவு தூரம் அவரை அலைய வைக்க மதிக்கு விருப்பம் இல்லை.பரவாயில்லைப்பா...நான் அவரு கூடவே போறேன்..!” என்றபடி.. முகத்தைத் தூக்கியபடி அவனின் பின்னால் ஏறி அமர்ந்தாள்.

“சூதானம் மதி..!” என்று மனோகரன் சொல்ல..

“இல்லைன்னா கடிச்சு தின்னுடுவோம்..!” என்று மனதிற்கு நினைத்தவன்..அவரை முறைத்தபடி...வண்டியை எடுத்தான்.

அவன் வண்டியை எடுத்த உடன்..தடுமாறி லேசாக அவன் மீது மோதியவள்...பின் கடுப்புடன் கைப்பையை இருவருக்கும் நடுவில் வைத்துக் கொண்டாள்.

கருப்பு பேண்ட்டும்,வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தவன் ..முகத்தை இருக்கமாய் வைத்திருக்க..அதுவே அவனை அழகனாய் காட்டியது.

இரண்டு புறமும்..இயற்கையின் கைவண்ணத்தில் வயல்களும்,வாழைத் தோப்புகளும் பசுமையாய் காட்சியளிக்க...
தன் வண்டியில்...தன் மனதிற்கு பிடித்தவள்..சில்லென்று வீசி காற்று...இவையெல்லாம் சேர்ந்து முகிலனை...வேறு உலகத்திற்கு அழைத்து சென்றது.மனதினுள் இதுவரை உணர்ந்திடாத அமைதியை உணர்ந்தான்.

ஆனால் பின்னால் இருந்த மதி....?

காலத்தின் போக்கிலும்..கதையின் போக்கிலும்...நாமும் இவர்களைப் பற்றி..இனிதான் அறிந்து கொள்ள போகிறோம்..!

காதல் வளரும்..!
 
Top