Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 3:

தன்னை இரண்டு விழிகள் வெறித்துக் கொண்டிருப்பதை அறியாமல்... கொஞ்சம் லேசான மனதுடன் பின் வாசல் படியில் அமர்ந்திருந்தாள்.

“எழுந்து உள்ள போ..! அப்பறம் இதுக்கும் உங்க அம்மா திட்ட போகுது..?” என்று முத்து இன்னமும் ஜாடையில் பேசிக் கொண்டிருக்க...
அவன் சொல்வதும் சரி என்று எண்ணியவள்..”சரி” என்று தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

அவளுக்கு மனம் லேசாக...முத்துவிற்கு மனதில் பாரம் ஏறிக் கொண்டது. உண்மை தெரிந்தால் இவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்ற பயம் அவன் மனதை பிடித்து ஆட்டிப் படைத்தது.பத்து வருடங்களுக்குப் பிறகான அவள் வருகை..அவனின் மனதை ஏதோ ஒரு வகையில் அமைதிப் படுத்தியது என்றாள் அது மிகையில்லை.

“அடுத்து என்ன செய்யலாம்ன்னு இருக்க மதி?” என்றார் பார்வதி.

“நான் நாளைக்கு ஸ்கூல்ல ஜாயின் ப்ன்னனும்ம்மா..!” என்றாள்.

“எந்த ஸ்கூல்?” என்றார்.

“சேலம் போகணும்மா..! டவுனுக்குள்ள....(இடத்தின் பெயரைச் சொன்னவள்) இருக்குற கவர்மென்ட் ஸ்கூல்..!” என்றாள்.

அவளின் பதிலில் பார்வதியின் முகம் யோசனைக்குத் தாவியது.சரிப்பட்டு வருமா..? என்று யோசித்தார் போலும்.

“என்னாச்சும்மா..?” என்றாள் மதி.

“அது ஒண்ணுமில்லை மதி..! தினமும் சேலம் போகணும்ன்னா....மினி பஸ்ல தான் போகணும்.அதுவும் நேரத்துக்கு தான் இருக்கு..தினமும் போயிட்டு வந்துடுவியான்னு யோசிக்கிறேன்..!” என்றார்.

“அதெல்லாம் போயிட்டு வந்துடுவேன் ம்மா..நீங்க கவலைப்படாதிங்க..!” என்றாள்.

“இல்லைன்னா..நீ அங்கயே தங்குற மாதிரி ஏதாவது ஏற்பாடு பண்ணலாமா..?” என்றார்.

“அதெல்லாம் வேண்டாம்மா..! இத்தனை வருஷம் உங்களை விட்டு இருந்தது எல்லாம் போதும்..! இனி நான் இங்க தான் இருப்பேன்..!” என்றாள் உறுதியாக.

“இங்க இருக்கனும்ன்னு நீ நினைச்சா மட்டும் பத்தாது.யார் என்ன சொன்னாலும் எதையும் காதுல போட்டுக்காம இருக்க பழகணும்.ஆத்திரம் தான் ஒரு மனுஷக்கு புத்திக்கு எதிரி..அதான் சொல்றேன்..” என்றார்.

“கண்டிப்பாம்மா..நான் சரியா இருந்துக்கறேன்..!” என்றாள்.

“அவங்க வந்து கேட்டா...நீ சரின்னு சொல்லி தான் ஆகணும்.அதையும் மனசுல வச்சுக்க” என்றார் பார்வதி.

“அது முடியாதுமா..!” என்றாள்.

“இத்தனை வருஷத்துல..என்னைக்கும் நாங்க உன்னை கட்டாயப்படுத்தல. ஒரு விஷயத்தை தவிர.உன்னை படிக்க வச்சு..ஒரு நிலைமைக்கு கொண்டு வந்துட்டோம்...இனி பெத்த தாயா எனக்குன்னு சில கடமை இருக்கு. அதனால நான் சொல்றதை நீ கேட்டு தான் ஆகணும் மதி..” என்றார் பார்வதி.

“அம்மா..! அதுக்காக..?” என்று ஆரம்பிக்க....

“நான் முழுசா சொல்றேன் மதி.முதல்ல கேளு.உனக்கு இப்போ இருபத்தி அஞ்சு வயசாகுது.சுமதிக்கு பதினேழு வயசு முடியப் போகுது.உனக்கு அடுத்து அவளும் இருக்கா..அதை நீ நியாபகத்தில் வச்சுகிட்டா போதும்.

ரெண்டும் பொண்ணு..எப்படா எதுல சிக்குவாங்க..எதுல பழி போடலாம்ன்னு காத்துகிட்டு இருக்குற சொந்த,பந்தம்.அவங்க முன்னாடி தலை நிமுந்து நடக்கனும்ன்னா...என் பேச்சைக் கேளு மதி..” என்றார்.

“அது வந்து..ம்ம்மா...முத்து...” என்று ஏதோ சொல்ல வர...

“நான் தான் நேத்தே சொல்லிட்டேன்.அவனைப் பத்தி என்கிட்டே பேசாத.அவன்கூடவும் பேசாத.அந்த குடும்பத்தை பத்தின பேச்சு..இனி இந்த வீட்ல இருக்க கூடாது..” என்று காட்டமாய் சொல்லிவிட்டு செல்ல..

“என்னது முத்துவை ஒரேயடியாக மறக்கணுமா? அது எப்படி அவளால் முடியும்.மறக்க கூடிய,நினைக்காமல் இருக்க கூடிய நினைவுகளா அவை...?” என்று மனம் கேள்வி கேட்க..

“ஏன் மறக்க முடியாது..? பட்ட அவமானம் பத்தலையா..? இல்லை இன்னமும் படனுமா..? நேத்து கூட அவங்க அம்மா அவ்வளவு பேசு பேசுச்சே..அதை எல்லாம் நினைச்சா...தன்னால மறந்துடுவ..!” என்று மனம் சொல்ல...

“முடியவே முடியாது..” என்று அறிவு சொல்லியது.

“என்னக்கா யோசனை..?” என்றாள் சுமதி.

“நீ ஏன் சுமதி மேல படிக்க மாட்டேன்னு சொன்ன..?” என்றாள்.

“நான் எங்கக்கா சொன்னேன்.எனக்கு படிக்க ஆசைதான்.ஆனா படிப்புக்கு தான் என்னைக் கண்டாலே ஆகாதே...வரவே மாட்டேங்குது...சரி வராத ஒரு விஷயத்துக்காக எதுக்கு போராடனும்...? அதான் விட்டுட்டேன்..!” என்றாள்.

“ஏன் இப்படி சொல்ற சுமதி..?” என்றாள் புரியாமல்.

“உன்ன மாதிரி நடக்கவே நக்காத விஷயத்துக்காக எல்லாம் என்னால போராட முடியாதுக்கா..!” என்றாள் எதார்த்தமாய்.

முகத்தில் அடி வாங்கியதைப் போல் உணர்ந்தாள் மதி.அவள் எதார்த்தமாகத் தான் சொன்னாள்.ஆனால் இவளுக்கு தான் பட்டுக் கொண்டது.சுமதி சொல்வதும் உண்மை தான..? நடக்கவே நடக்காத விஷயத்துக்காக காத்துகிட்டு இருக்கிறதில் என்ன லாபம்..? என்று தனக்குத் தானே சமாதானமும் செய்து கொண்டாள்.

“அக்கா..! பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்த எதுவும் எனக்கு தெரியாது.ஏன்னா அப்போ எனக்கு ஒரு ஏழு வயசு தாண்டி தான் நடந்துகிட்டு இருந்தது.

ஆனா இப்போ அப்படி இல்லை..எனக்கும் கொஞ்சம் விவரம் தெரியும்... அதை வச்சு சொல்றேன்..முத்து மாமா ரொம்ப பாவம்க்கா..இந்த அம்மா ஏன் இப்படி நடந்துக்குதுன்னு தான் தெரியலை.

“என்ன பாவம்..?” என்றாள் புரியாமல்.

“என்னக்கா இப்படிக் கேட்குற...என்ன நடந்துச்சுன்னு தெரியுமா தெரியாதா..? அம்மா உன்கிட்ட சொல்லவே இல்லையா..?” என்றாள்.

“இல்லை”என்பதைப் போல் தலையை ஆட்டினாள் மதி.உண்மையும் அதுதான்.இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த எதுவும் அவளிடம் பார்வதி சொல்லி இருக்கவில்லை.பார்வதியின் தங்கை மெட்ராசில் இருக்க..அவர் வீட்டில் இருந்து தனது படிப்பை முடித்தாள் மதி.

அவளைப் பார்க்க போகும் போது எதற்காகவும் ஊர் விஷயங்களைப் பேச மாட்டார் பார்வதி.தங்கையின் மூலம்..கொஞ்சம் நாகரிகத்தையும் கற்றுக் கொண்டார் பார்வதி.அதுவே அந்த கிராமத்தில் மற்ற பெண்கள் போல் அல்லாமல்..அவர் தனித்து நிற்க காரணம்.

“முத்துவுக்கு என்னாச்சு..? சொல்லுடி..” என்றாள்.அதற்குள் மனோகரன் வர..அவர்களின் பேச்சுத் தடை பட்டது.

“நாளைக்கு வீட்ல இருந்து எத்தனை மணிக்குமா கிளம்பனும்..?” என்றார்.

“7.30 பஸ்க்கு கிளம்புனா சரியா இருக்கும்ப்பா...!” என்றாள்.

“சரிம்மா...! நான் சேலம் வரைக்கும் வரணுமா..? இல்லை பஸ் ஏத்தி விட்டா போதுமாமா...?” என்றார்.
“இல்லப்பா...நானே போய்க்கிறேன்...!” என்றாள்.

“சரிம்மா...! அப்ப நான் காலைல வெள்ளனா (சீக்கிரமா) தோட்டத்துக்கு போகணும்..! போயிட்டு வந்திடுறேன்..! வந்து கூட்டிட்டு போறேன்ம்மா... இங்க இருந்து நடக்கவெல்லாம் வேண்டாம்..” என்றார்.

“சரிப்பா..!” என்றாள்.

“செலவுக்கு பணம் வேணும்ன்னா அம்மாகிட்ட வாங்கி வச்சுக்கமா... எப்பவும் பையில் கொஞ்சம் பணம் வச்சுக்க...ஆத்திர அவசரத்துக்கு உதவும்..” என்றார்.

“சரிப்பா..” என்றாள்.
 
எந்த ஒரு விஷயத்துக்கும் முதல் நாள் இருந்தே அறிவுறுத்திக் கொண்டே இருப்பது அவர்கள் குடும்ப வழக்கமாகிப் போனது.

மனோகரனின் முதல் அண்ணன் வடிவேல் வீட்டில்...

‘செய்தி தெரியுமா உங்களுக்கு?” என்று அரசி கேட்க..

“என்னடி விஷயம்..?” என்றார் வடிவேல்.

“உங்க தம்பி மக...அதான் அந்த வண்ண மதி வந்துட்டாளாமே..?” என்றார் அரசி எரிச்சலாய்.

“அதுக்கு என்னைய என்ன பண்ண சொல்ற..?”

“ம்ம்..நல்ல கேளுங்க என்கிட்டே..? ஒழுங்கா எல்லாரையும் கூட்டி ஒண்ணா வச்சு பேசி முடுச்சு,சொத்த பிரிக்கற வழியைப் பாருங்க..! இல்லைன்னா இந்த ஜென்மத்துக்கு பிரிக்க முடியாது...” என்றார் சூசகமாய்.

“எப்படி பிரிக்க சொல்ற..? பொம்பளைங்க நீங்க தலையிடாம இருந்திருந்தா...நாங்க எப்பவோ பிரிச்சிருப்போம்...எங்க விட்டிங்க நீங்க..?” என்று வடிவேல் சொல்ல...

“ஹோ..அப்ப பொம்பளைங்க நாங்க தான் உங்க குடும்பத்தை பிரிச்சுட்டோமா...அதுக்கு முன்னாடி நீங்க எல்லாரும் ராமர்-லட்சுமணன் மாதிரி இருந்திங்களாக்கும்...”என்றார் அரசி.

“இப்ப எதுக்கு பழசை பேசிட்டு இருக்க..? இப்ப என்னதான் பண்ணனும்..?” என்றார்.

“அதான் உங்க தம்பி மக டீச்சர் ஆகிட்டாளாமே..? அப்பறம் என்ன..? அவளுக்கு என்ன அண்ணனா தம்பியா...கூப்பிட்டு நாலு பேர வச்சு பேசி முடிச்சு கையெழுத்தை வாங்கிட்டு...சொத்தைப் பிரிக்க பாருங்க...” என்று சொல்ல..

“விவரம் தெரியாதப்பவே....எங்கப்பா பங்க நாங்க யாருக்கும் குடுக்க மாட்டோம்ன்னு சட்டமா சொன்ன புள்ளடி அது.இப்ப படிச்சு டீச்சரா வேற ஆகிடுச்சு..இப்ப எப்படி கையெழுத்துப் போடும்..போடி புத்தி கெட்டவளே..!” என்று திட்ட...

“போதை ஏறிப் போச்சு...புத்தி மாறி போச்சு...” என்று பாடிக் கொண்டே வீட்டினுள் தட்டுத் தடுமாறி நுழைந்தனர் தங்கபாண்டியும்,குணப்பாண்டியும்.

“டேய்...!எங்க..? இங்க இருந்த வீட்டை காணோம்..!” என்று தங்கப்பாண்டி தேட...

“நம்ம அப்பன் வித்துருப்பார்டா...” என்றார் குணப்பாண்டி.

“அதை ஒன்னதாண்டா செய்யலை..அதையும் சீக்கிரம் செய்யுறேன்..” என்று கோபமாக உரைத்தார் மகன்களின் நிலை பார்த்து.

“ஹேய்..! இங்க பாரடா...அப்பா இங்க இருக்கார்...அப்ப அவர் பின்னாடியே அம்மா இருக்கணுமே..!” என்று சொல்லி தேடுவதைப் போல் நடித்தவன்..

“ஹாங்..இந்தா இருக்காங்கள்ள...என்னை பெத்த மகராசி..” என்று தங்கப்பாண்டி நெட்டி முறிக்க....

“பிள்ளையாவாடி வளர்த்து வச்சிருக்க இவனுங்களை...இப்படியே குடிச்சு குடிச்சு இவனுக குட்டி சாம்பலா போனது தான் மிச்சம்..” என்று வடிவேல் எகிற..

“நான் மட்டுமா வளர்த்தேன்...ஏன் நீங்க திருத்தமா வளர்த்திருக்க வேண்டியது தான..?” என்று அரசி சத்தத்தை கூட்ட..

“தெய்வமே...ஏறுன போதை இறங்கிடும்...தயவு செஞ்சு கத்தாத..” என்று இருவரும் கையெடுத்து கும்பிட...

“முதல்ல வந்து சாப்பிடுங்கடா..” என்று தள்ளிக் கொண்டு சென்றார் அரசி.

“இவனுக எங்க திருந்தி..?” என்று அவர் வெளியே போடப்பட்டிருந்த கட்டிலில் படுக்க செல்ல..

“உன் புருஷன்ட்ட சொல்லி..எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்ல..” என்று தங்கப்பாண்டி தட்டுத் தடுமாறி சொல்ல...

“ஆமாடா...இப்படி குடுச்சுட்டு ஊரை சுத்துங்க..ஒரு பய பொண்ணு தர மாட்டான்.அங்க பொட்ட புள்ளை படிச்சு ஒரு நிலைமைக்கு போய்ட்டா.. ஆனா நான் பெத்த நீங்க ரெண்டு பெரும் ஏண்டா இப்படி தறுதலையா போனிங்க..?” என்று புலம்ப...

“டேய் குண பாண்டி..”

“சொல்லுடா தங்கபாண்டி..”

“அம்மா புலம்பல் ரேடியோவ ஆரம்பிச்சிருச்சு....நாம பேசாம போய் படுத்துடுவோம்..” என்றபடி அவர்கள் தடுமாறி செல்ல...அரசிக்கு தான் சுவத்தில் முட்டிக் கொள்ளாலாம் என்று வந்தது.

வடிவேல்-அரசியின் செல்வா புதல்வர்கள் இவர்கள்.ஆம்பிளை பிள்ளை பிறந்திருக்கு..என்று கொண்டாடிய நாள் முதல்...எதுக்கெடுத்தாலும்..அவன் ஆம்பிளை பிள்ளைடி..அவனுக்கென்ன...நாலு பொண்டாட்டி கூட கட்டுவான்....என்று உசுப்பேற்றியது எல்லாம் அரசி தான்.

அதனால் தானோ என்னவோ..இன்று ஒரு பொண்டாட்டி கூட கட்டாமல்... மதுவிற்கு அடிமையாகி...மாது கிடைக்காமல் அலைகின்றனர்.

அரசியும் அவர்களுக்கு பெண் பார்த்து சலித்து விட்டார்.ஆனால் அமைந்த பாடில்லை.எங்கு போனாலும்...பையன் வேலை,படிப்பு என்று கேட்க... அடித்த பந்து திரும்பி வருவதைப் போல் ஆனது அவர்களின் கதை.

இந்த ஒரு காரணமே..அவர்கள் மேலும் குடிக்க காரணமாக அமைந்தது. போதையில் இருந்த அவர்கள்..வண்ண மதியின் விஷயத்தை காது கொடுத்து கேட்கவில்லை.

காலையில் கோழி கூட தாமதமாய் கூவியது.(சேவல் தான் கூவுகிறது என்றாலும்..என்னவோ இப்படி சொல்வது தான் வழக்கம்.)

கொஞ்சம் நேரம் தவறி எழுந்தாலும்..அரக்க பறக்க(அவசரமாய்) கிளம்ப வேண்டிய அவசியமில்லை மதிக்கு.மெதுவாகவே கிளம்பினாள்.

“ஏதாவது வேணுமாக்கா..!” என்றாள் சுமதி.

“இல்ல சுமதி எதுவும் வேண்டாம்..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க...

“நிஜமாவே நம்ப முடியலை க்கா..ஆனா எங்கக்கா ஒரு டீச்சர்ன்னு சொல்லும் போதே ரொம்ப கெத்தா இருக்குக்கா..” என்றாள்.
அவளுக்கு புன்னகையை பதிலாய் தர..

“நானும் படிச்சிருந்தா உன்னைய மாதிரி டீச்சர் ஆகியிருப்பேன்ல...?” என்று ஏக்கமாய் சொல்ல....அதைப் பார்த்த வண்ண மதிக்கு தான் ஒரு மாதிரி போய் விட்டது.

“இப்ப கூட ஒன்னும் ஆகலை.இப்பவும் நீ படிக்கலாம்..படிக்கிறியா..?” என்றாள்.

“எக்கோவ்..நான் ஒரு பேச்சுக்கு சொன்னா..? உடனே அதை பிடுச்சுக்குவியே..! ஆளை விடுங்க சாமி..நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது..!” என்றபடி அவள் எஸ்கேப் ஆக...

குளிப்பதற்காக கொல்லைப் புறத்திற்கு சென்றாள் மதி.கண்கள் அவளையும் அறியாமல் பக்கத்து வீட்டைப் பார்க்க...அவள் எதிர்பார்த்த முத்துவோ அங்கு இல்லை.அவன் அம்மா தான் உக்கிரமாய் முறைத்துக் கொண்டிருந்தார்.

“ஆத்தி..” என்று மனசுக்குள் நினைத்தவள்...படக்கென்று கொல்லைக்குள் (பாத்ரூம்) நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள்.
குளித்து முடித்து...மஞ்சள் நிற காட்டன் புடவையில் தயாராக....அவளைப் புடவையில் பார்த்த சுமதி வாயைப் பிளந்தாள்.

“ஐயோ அக்கா..!” என்று கத்த...

“என்னடி..” என்றாள் பதறி..

“ஐயோ அக்கா...சூப்பருக்கா..செம்ம அழகாயிருக்கக்கா...” என்று அவளைக் கட்டிக் கொண்டு ஆட..

“ஹேய் விடுடி..புடவை கசங்க போகுது..” என்று விலகினாள் மதி.

“மதி..! இந்தாம்மா மதிய சாப்பாடு..!” என்றபடி வந்த பார்வதியும் திகைத்து தான் நின்றார்.பல வருடங்களுக்கு பிறகு மகளை சேலையில் பார்க்கிறார். முன்பு பார்த்திருந்தாலும்...அது பருவம்.ஆனால் இப்போது..அவள் முகத்தில் தெரியும் கம்பீரம்,அறிவுக்கலை என அனைத்தும் அவளை அத்துணை அழகாய் காட்ட...கலங்கிய ஆனந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு...

“எல்லாத்தையும் சாப்பிட்டுடனும்..” என்றார்.
 
“சரிம்மா..! அப்பாவை இன்னமும் காணோம்..! “ என்றாள் வாசலைப் பார்த்து.

“இந்த மனுஷனுக்கு கொஞ்சமும் நினைவே இருக்காது..!” என்று பார்வதி புலம்ப..

“பரவாயில்லம்மா..நான் அப்படியே மெதுவா நடக்குறேன்..அப்பா வந்தா வர சொல்லுங்க..!” என்றபடி...கிளம்பிவிட்டாள் மதி.

“சூதானம்(பத்திரமாக) கண்ணு...” என்று பார்வதி ஆயிரம் சூதானம் போட்டார்.எல்லாத்துக்கும் சரி சரி என்று தலையை ஆட்டிக் கொண்டே நடந்தாள் மதி.

இரண்டு புறமும்..தோட்டம் துறவுகள் இருக்க..அதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தாள் மதி.அவள் அப்பாவுடன் வண்டியில் சென்றிருந்தால் கூட இத்தனை இன்பமாய் இருந்திருக்காது...என்று எண்ணியபடியே நடக்க...எதிரே வந்த அவளின் இரண்டாவது பெரியம்மா திலகா...அவளின் நடை உடை கண்டு உள்ளுக்குள் எறிய...

“இதெல்லாம் ஒரு பொழப்பு...! ஹா..த்தூ..” என்று அவள் காது பட...பார்வைக்கு நேராக துப்ப...அதை கண்டு கொள்ளாமல் முன்னே சென்றாள் மதி.

இருந்தாலும் மனதில் ஏதோ ஒன்று தடுக்க... திரும்பியவள்.. சொடக்கிட்டு அழைத்தாள் அவரை..

“என்னோட பொழப்புக்கு என்ன குறைய கண்டிங்க...? உங்க பொழப்புக்குத்தான் ஊரே சிரிக்குது போல...தேவையில்லாம என்னை சீண்டுற வேலை வேண்டாம்...பழைய மதி மாதிரி ஊ..ஊன்னு அழுதுட்டே போய்டுவேன்னு கனவுல கூட நினைக்காதிங்க..!” என்று சொன்னவள்...முறைத்துக் கொண்டு பட்டென்று திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டாள்.

திலகாவிற்கு உள்ளே பற்றிக் கொண்டு வந்தது.அது மதியின் முன்னேற்றத்தால் வந்ததா..? இல்லை அவளின் மாற்றத்தால் வந்ததா என்று தெரியவில்லை.

மனதில் இருந்த இனிமை..இருந்த இடம் தெரியாமல் மறைய..எதையோ யோசித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள்.

யோசனையுடன் நடந்து கொண்டிருந்தவளின் அருகில்...சரட்டென்று ஒரு வண்டி வந்து நிற்க..எதிர்பாரா சத்தத்தில்..”ஆஆ...அம்மா...” என்று பதறி விலகி நிமிர....அங்கே நின்றிருந்தான் அவன்.

அவளுக்கு அருகில்..ஆனால் அவளைப் பார்க்கவில்லை. கண்கள் நேராக ரோட்டைப் பார்த்துக் கொண்டு இருக்க...கைகள்..பைக்கை ரைஸ் செய்து கொண்டிருந்தது.வண்டியின் உறுமலோடு அவனின் மனமும் போட்டி போட்டதோ என்னவோ....முகமும் ரௌத்திரமாய் இருந்தது.

முன்னுச்சியில் ஆங்காரத்துடன் வந்து விழுந்த முடிகள்..பாறை போல் இறுகி இருந்த முகம்..முறுக்கேறியிருந்த கைகள்..வண்டியை மேலும் முறுக்க...

“வண்டியில் ஏறு” என்பதற்கு அடையாளமாய் அவன் நகராமல் அப்படியே நின்றான்.

அவனைக் கண்டு ஒரு நிமிடம் பயந்து விழித்தவள்...வரவைத்துக் கொண்ட தைரியத்துடன்...விலகி நடக்க ஆரம்பித்து விட்டாள்.ஆனால் மனதில் பயம் தலை விரித்தாடியது.

அவள் செல்ல செல்ல..அவன் வண்டியும் உறுமிக் கொண்டே செல்ல...ஒரு கட்டத்திற்கு மேல்..பொறுமை இழந்தவன்...விருட்டென்று கிளப்பிக் கொண்டு போய்விட்டான்.

அவன் வண்டி ஏற்படுத்திய புழுதி மறைய சில நிமிடங்கள் ஆனது.

கடவுளே...நீதான் கூட இருந்து காப்பத்தனும்..என்று வேண்டிக் கொண்டே நடக்க..

“ஹேய் மதி..! என்ன நடந்து போற..? வா...நான் இறக்கி விடுறேன்..” என்றான் முத்து.

அவனை தவிர்க்க நினைத்தவள்..”தேவையில்ல..அப்பா வருவார்..!” என்றாள்.

“உங்கப்பா வண்டி..அங்க தெற்கு தோட்டத்துல பஞ்சர் ஆகி நிக்குது...அவர் எப்ப வரது..?நீ எப்ப போறது..? இன்னும் அஞ்சு நிமிஷத்துல பஸ் வந்துடும்..” என்று சொல்ல...

“இல்லை..வேண்டாம்..!” என்றாள்.

முத்து அவனை ஆழ்ந்து பார்க்க...அதற்கு மேல் முடியாதவளாய்...அவன் பின்னால் ஏறினாள்.

“ரொம்ப பெருமையா இருக்கு மதி..உன்னைப் பார்க்கும் போது...ஆனா ரொம்ப மாறிட்ட..!” என்றபடி வண்டியை ஓட்டினான்.
அவள் அமைதியாகவே வர..பஸ் வருவதற்கு முன்பே..அவளை நிறுத்தத்தில் இறக்கி விட்டான் முத்து.

“தேங்க்ஸ்..” என்றாள்.

“நமக்குள்ள என்ன தேங்க்ஸ் எல்லாம்...”என்று அவன் பார்க்க...அவள் தலையை குனிந்து கொண்டாள்.

“அப்ப நான் கிளம்புறேன்..! யாராவது பார்த்தா உனக்கு தான் பிரச்சனை..!” என்றபடி கிளம்பிவிட்டான் முத்து.

அவன் சென்ற பின்பு நிமிர்ந்தவள்....அங்கே அவனைக் கண்டு அதிர்ந்தாள்.ஆம்..விழிகள் இரண்டும் கோவைப் பழமாய் சிவக்க நின்றிருந்தான் அவன்.அவன் தான் மணி முகிலன்.

அவன் பார்த்துக் கொண்டே நிற்க..அவளுக்கு உடல் பயத்தில் நடுங்கியது.அவளை காப்பாற்ற...கடவுளாய் பார்த்து பஸ்சை அனுப்பி வைக்க...அவசர அவசரமாய் ஏறியவள்..ஒரு ஜன்னலோர சீட்டைப் பிடித்து அமர்ந்தாள்.நடுக்கம் குறையவில்லை.

சில வினாடிகளில்..பேருந்து கிளம்ப...”சப்பா...” என்று அவள் பெருமூச்சு விட...

அவ்வளவு சீக்கிரம் உனக்கு நிம்மதியா..? என்பதைப் போல்...அவள் அருகில் தோளோடு தோள் உரச.. பொத்தென்று அமர்ந்தான் மணி முகிலன்.

தன் அருகில் அமர்ந்தவனை இமைக்காது பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மதி.ஆனால் அவனோ அவளை சட்டை செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
 
Super episode
 
Top