Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 25 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 25

ஒரு முடிவெடுத்த பின், நம் மனம் அமைதிப்படுவது போல் ஒரு நல்ல உணர்வு ஆயிரம் பேர் சமாதானப்படுத்தினாலும் வராது. அவ்வழிலேயே அன்பரசியும் மனமும் எல்லையற்ற நிம்மதியை உணர்ந்தாள்.

அவளின் சலனமற்ற முகத்தை பார்த்து வினோத்தும் குழந்தைகளும் கூட குதூகலித்தனர். வினோத் மேலும் திருவினான். “என்ன முகத்துல தவுசன் வாட்ஸ் பல்ப் எரியுது?? என்ன விஷயம்?”

“ஒண்ணுமில்ல… எனக்கு வேலையிருக்கு கிளம்புபா நீ.”

நிஜமாலுமே அவளுக்கு வேலை அதிகமாக இருந்தது. திருமணம் குறித்து மலரின் தந்தைக்கு ஃபோன் செய்வது, வீட்டை ஒழுங்கு படுத்துவது, பொருள்களை அடுக்குவது எல்லாம் அவளே செய்தாள். இருந்தாலும், அவளின் மழுப்பலான பதிலை வினோத் நம்ப தயாராக இல்லை.

நெருடிய புருவத்துடன் இடத்தை காலி செய்தான். மூன்று நாட்கள், எப்படி சென்றது என தெரியாமல் ஓடியே போனது. இடையில் சில முறை ஜீவா அவளை அழைத்தான். குழந்தைகளிடம் பேசவே அவன் அழைத்தது என தெரிந்ததும், அன்பரசியின் மனம் சினுங்கியது!

சரி நாம் தான் நம் மனம் மாற்றத்தை அவனிடம் சொல்லவில்லையே என மனதை ஏற்றிக் கொண்டாள். இதில் திருமணத்துக்கு ஒரு நாள் முன், மாப்பிள்ளைக்கு நலங்கு வைப்பது, பந்தக்கால் நடுவது போன்ற நிகழ்வுகள் வரிசையாக அனைவரையும் சேர்த்தது.

காலையில் பந்தல் கால் நடும் நிகழ்வுக்கு, மலரின் வீட்டுக்கு அனைவரும் செல்ல தயாராயினர். முன் நாளே ஜீவா அழைத்த போது, “அன்பு நாங்க எல்லாரும் நேரா மலர் வீட்டுக்கு வரட்டுமா? இல்ல அங்க வந்து உன்னையும் பசங்களையும் கூட்டிட்டு போகட்டுமா?” என்று கேட்டான்.

“இல்ல நேரா அங்கயே வந்திருங்க. வினோத் வரேன்னு சொல்றான். அவன் கூட்டிட்டு வந்திருவான் எங்கள!”

ஆம், பந்தக்கால் நடுவதற்கு மாப்பிள்ளை வரக் கூடாது என அன்பரசி போர்கொடி தூக்க, எந்த கொடியும் நான் என் மலர்கொடியை பார்ப்பதை தடுக்க முடியாது, என வீர வசனம் பேசியபடி பிடிவாதம் பிடித்தான் அவள் ஆருயிர் தோழன். தலையிலேயெ அடித்துக் கொண்டு, “சரி வந்து தொலை. வந்து எதாவது எடாகுடமா பண்ணு அப்போ பேசிக்கறேன் உன்னை.” என எச்சரித்து சம்மதித்தாள்.

“டோன்ட் வொரி லவ்ஸ். எனக்கு வேற என்ன வேலை இருக்க போகுது? என்னோட ஃபிளவர பார்க்கறத தவிர?”

“அழகா தமிழ்ல பேர்வச்சா, வெறுப்பேத்தவே எதாவது லூசுத்தனமா பேர் வைடா புதுசு புதுசா!! உன் கூட…. மலர நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!!!”

“என்ன வேணும்னா திட்டிக்கோ… என் காது கேக்காது! எனக்கு ‘மலரே மலரே’ மோட் ஆன் ஆகி ரொம்ப நாள் ஆச்சு…”

சலித்தபடி தன் தலையில் அடித்து செல்வது அன்பரசியின் முறையாகிற்று. இப்படியே அடுத்த நாள், அதிகாலையே கிளம்பி மலர்விழியின் வீடு சேர்ந்தனர். இவர்களுக்கு முன்பே, ராகவன் தம்பதயினர் மற்றும் ஜீவா வந்திருந்தனர்.

தந்தையை பார்த்ததும் அவனிடம் ஒண்டிக் கொண்ட பசங்களை அவனிடமே விட்டுவிட்டு, பந்தக்கால் நடும் நிகழ்வில் சேர்ந்துக் கொண்டாள். பந்தக்கால் நட்டதும் மலருக்கு நலங்கு வைக்கும் வைபவம் நடைப்பெற்றது.

முதல் ஆளாக மலரின் அத்தை வைத்து முடித்தவுடன், அன்பு லட்சுமியம்மாவை வைக்கச் சொன்னாள். அவரும் மலர்ந்த முகத்துடன் நலங்கு வைத்து ஆசிர்வாதம் செய்து ஏற்கனவே எடுத்து வைத்திருந்த அழகிய பட்டு புடவை இருந்த தாம்பூல தட்டை மலருக்கு வழங்கினார். அடுத்து அன்பு வைத்தாள்.

அவள் கடைசியாக பூ தூவி ஆசிர்வாதம் செய்து, நகர முயலுகையில் ஜீவா இன்னொரு தாம்பூல தட்டை தூக்கி வந்து, அவளை கொடுக்கச் சொன்னான். அன்பரசிக்கு ஆச்சரியமாக போயிற்று.

அன்பரசி இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு இப்படி செய்ய வேண்டும் என்பதும் தெரியாது. ஆனால், கொடுத்து முடித்தப்பின் லட்சுமி அவளிடம் இப்படி புடவை கொடுப்பது முறை தான் என கூறினார்.

ஜீவாவிடம் அவர் தான் கூறினார் போல, இப்படி செய்ய வேண்டும் என… அன்பரசி நினைத்துக் கொண்டாள். புடவை அடங்கிய தட்டை கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது போல், ஜீவா குழந்தைகளுடனும் வினோத்துடனும் அமர்ந்துவிட்டான். அங்கெ மட்டும் இல்லை… மலரின் நலங்கு வைக்கும் வைபவம் முடிந்து, அனைவரும் மாப்பிள்ளை நலங்கு வைக்கவேன வினோத்தின் வீட்டிற்கு வந்தும் கூட இவள் பக்கம் திரும்பவில்லை.

‘என்னடா பேசவே மாட்டேங்கிறான்?’ என அன்பரசி தான் அவன் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தாள். கடைசியில் இவளே எதோ கேட்பது போல் பேச, அப்போதும் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் வந்தது. அவனின் இந்த செய்கையில் அன்பரசி தான் மிகவும் தவித்துப் போனாள்.

அவனால் தான் பெங்களூர் போவதாக இருந்தது என்று, குற்ற உணர்ச்சியில் இப்படி செய்கிறானா?? அல்லது தன் பின்னே வந்து வந்து வெறுத்துப் போய் விட்டதா??? இரண்டாவது காரணத்தை அவளின் நெஞ்சமே தாங்கமாட்டாமல் நிராகரித்தது!

இருக்காது… கண்டிப்பாக ஏதோ முக்கிய காரணம் இருக்கிறது! என்னவாக இருக்கும் என்று குழம்பிப் போனாள். இதை பற்றி யாரிடமும் வெளிப்படையாக கேட்கவும் முடியவில்லை. கிளம்பும் போது கூட தலையசைத்து விடை கொடுத்தான். அவ்வளவே!!!

‘ரொம்ப தான் ஹுக்கும்’ என மனதிலேயே அவனுக்கு குட்டு வைத்தாள் அன்பு. வீட்டிற்கு வந்தால் மறுநாள் மண்டபம் செல்வதற்கு தேவையானவற்றை கடைசி முறையாக சரிபார்த்து எடுத்து வைப்பதற்கே நேரம் பறந்தது. வினோத் முன்பிருந்த வீட்டை விட்டு, தனியே அவளின் ஃப்ளாடின் அருகிலேயெ குடிபெயர்ந்தான். புது வீடாக இருந்தாலும், தாறுமாறாக எல்லாவற்றையும் போட்டு வைத்திருந்தான். அதையும் அவனை திட்டிக் கொண்டே ஒழுங்குப்படுத்தினாள்.

இங்கே நிறைய வேலைகள் இருந்ததால், பசங்களை ஜீவாவிடமே கூட்டிச் செல்ல சொன்னாள். குழந்தைகளும் குதித்துக் கொண்டு சென்றன… “டுமாரோ பார்க்கலாம்மா. பை!” என முத்தமிட்டு ஓடினான் நிலேஷ். அவனே பரவாயில்லை என்று எண்ணும் அளவுக்கு, அவளின் மகளோ தந்தையின் கைகளிலிருந்தே அம்மாவுக்கு ‘பை’ காட்டி, ஃப்ளையிங் கிஸ்ஸை பறக்கவிட்டு சென்றாள்.

‘எங்க போகப் போதுங்க? வரட்டும் பார்த்துக்கலாம்!’ என இவளும் மறுவேலையை பார்க்கச் சென்றாள். அடுத்த நாள், காலை எழுந்தது முதற்கொண்டு வேலை வேலை வேலை தான்! பம்பரமாக அன்பரசி சூழல்வதை பார்த்து, ஹோட்டலில் உணவை வாங்கி வரச் செய்தான் வினோத்.

மதியம் மூன்று மணிக்கே மண்டபத்திற்கு கிளம்பினர். இவர்கள் வந்ததுமே பின்னேயே ஜீவாவின் காரும் வந்து சேர்ந்தது. அன்பரசியும் வரிசை வைக்கும் தட்டுகளை சரிபார்ப்பதும், ஆண்களை ரிசப்ஷனுக்கு கிளம்ப விரட்டுவதுமாக இருந்தார்கள்.

மாலை ஐந்து மணி ஆனதும், அன்பரசி ரூம்மை விட்டு வெளியே வந்தாள். அப்போது தான் ஜீவா நிக்கித்தாவை தூக்கிக் கொண்டு, “இவ என்கிட்ட எல்லாம் ரெடியாக மாட்டாளாம்! அம்மா, அம்மானு கத்திட்டெ இருக்குது வாண்டு. இந்தா அவ பேக்… அவளோடது எல்லாம் இருக்கு ரெடி பண்ணிடு.” என்று குறைப்பட்டுக் கொண்டு நிக்கித்தாவையும் அவளின் பொருள்கள் அடங்கிய பையும் கொடுத்தான்.

“ப்பா அம்மா மாதிரி உனுக்கு கிளிப்பு போடத் தெரியாது.”

நிக்கித்தா சொன்னதை கேட்டு, அன்பரசி நகைத்துக் கொண்டு இருக்க, ஜீவா செல்லமாக தன் மகளின் கன்னத்தை கிள்ளி, “இருக்குற நாலடி முடிக்கு கிளிப்பு கேக்குது பாரு! வாயாடி” என கூறிச் சென்றான்.

ஒரு வழியாக நிக்கித்தாவையும் தன்னையும் அலங்கரித்துக் கொண்டு, வெளியே வந்த போது மணி ஆறாகி இருந்தது. இருவரும் இளம் ஊதா நிறத்தில் பட்டுடுத்தி இருந்தனர். பார்ப்பவர் கண்களை பறிப்பது போல இருந்ததால், லட்சுமி அம்மா சுத்திப் போட வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது தான் நிலேஷும் ஜீவாவும் உள்ளே வந்தனர். அவர்களும் நீல வண்ணத்தில் சூயுட் அணிந்திருந்தனர். அன்பரசிக்கு தன் கண்ணே பட்டுவிடுமோ என பயந்து போனாள். அவ்வளவு பாந்தமாக பொருந்தி இருந்தது இருவருக்கும். நிலேஷ் தன் அம்மாவிடம் தன் உடையை காட்டி பெருமைப்பட, நிக்கித்தாவை தூக்கி பெருமைப்பட்டான் ஜீவா.

“குட்டி ட்ரெஸ் சூப்பரா இருக்கே!! பாப்பா செம அழகா இருக்கீங்க… செல்லம்” அவளின் கன்னத்தில் முத்தமிட, உடனடியாக துடைத்துக் கொண்டாள் நிக்கி, கன்னத்தை. வேண்டும்மென்றே மறு கன்னத்திலும் உதடுபதித்தான் ஜீவா. இதையெல்லாம் ஏக்கமாக பார்த்தபடி நின்றிருந்தாள் அன்பு.

தன் பெண்ணை பார்த்தே சிறு பொறாமையாக கூட இருந்தது. இதில் நிலேஷ் வேறு சும்மாயிராமல், “அப்பா போட்டோ… செல்பி எடுக்கலாம்!” என உசுப்பேற்ற மூவரும் செல்பி எடுக்க ஆயித்தமாகினர்.

பார்த்த அன்பரசிக்கு உடம்பெல்லாம் எரிந்தது ஒரு புறம்மென்றால், ஒரு புறம் கண்ணீர் இப்போவா அப்போவா என கபடியாடியது! திரும்ப அவளை பார்த்த ஜீவா, “வா போட்டோ எடுக்கறோம்ல?” என ஒரு மாதிரி குரலில் அதட்டினான். அது அதட்டலா இல்லையா என அன்பரசிக்கே புரியவில்லை.

இருந்தாலும் மந்திரத்துக்கு உட்பட்டவள் போல, அவர்கள் அருகில் சென்று நின்றாள்.

‘க்ளிக்’!! சிரித்த முகமாக அனைவரும் இருந்த போட்டோவை பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை, அன்புக்கு! அதன்பின் அங்கே வினோத் வந்துவிட, அவனை கிண்டல் அடிப்பதையே முதலாய வேலையாக எடுத்துக் கொண்டான் ஜீவா.
 
மிகவும் அருமையான பதிவு,
சிந்துலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Last edited:
Top