Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Naan-Aval-Coffee!!

Advertisement

Charithraa.AR

Tamil Novel Writer
The Writers Crew
64 நான்.அவள்.காஃபி...

----------------------------(A True One)

என் அறையின் முழு இருளையும் துரத்த முயற்சித்த ஒற்றை ஜன்னலின் விளிம்பில் அமர்ந்திருக்கும் அவளோடு கதைத்துக்கொண்டிருந்தேன். "அவளோடு" என்பதை "ஆவலோடு" எனவும் கொள்ளலாம். காரணம், நான் எழுதத்தொடங்கிய சமகாலத்தில் தனது கர்நாடக சங்கீதத்தை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்திருந்தவள் அவள். பாரம்பர்ய இசையின் "Perfect Vocalist" ஆவதென்பது அவளவா! யாருக்கு முதலில் வெற்றி என்பது, எங்களுக்குள்ளான சில்லறைத்தனமான போட்டி.

என்னா Bestie? தங்களுடைய எழுத்துலகம் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது? அறியலாமா?..காபியை உறிஞ்சியபடி கேட்டாள்.
என்ன நக்கலா? கொஞ்சம் சாதாரணமான தமிழ்ல பேசலாமே?

சும்மா சொல்லு "டோலா" . ஓவரா சீன் போடாத..

நான் சீன் போடறது இருக்கட்டும். அதென்ன இந்த டோலா, டோலி, சகோ, சகி, உடன்பிறப்பே, உளுந்தவடையே னுக்கிட்டு? இந்த கண்றாவி Terms எல்லாம், எனக்கென்னவோ FB/Social Media-ல பசங்க பொண்ணுங்கள (or vice versa) கொக்கி போடறதுக்குனே கண்டுபுடிச்சா மாதிரி இருக்கு. something so weird. அதுவுமிந்த "தோழர்".. சுத்த அபஸ்வரம். காஸ்ட்ரோவும் கார்ல் மார்க்ஸும், மா.சே வும், கிம் சுங்கும் கம்யூனிசத்தால் வளர்த்தெடுத்த வார்த்தை, அதை கடலை போட..கருமம் ...இதுக்கு யதார்த்தமா பேரை சொல்லிட்டு போயிரலாம்.

ஸீ.. உன் சித்தாந்தத்தோட மல்லுக்கட்ட என்னால முடியாது. அதுக்கு நான் வரவுமில்லை. நீ போடற ஸ்பெஷல் Coffee குடிச்சு ஆறது ஒரு வருஷம்னு வந்தா....பொய்க்கோபத்திலும் அப்படிச்சிவந்தாள் அவள்.

ஹாஹாஹா...கழுதை அத விடு. உன்னோட மியூசிக் சேனல் எப்படி போயிட்டுருக்கு?

டேய்...தெரிஞ்சுட்டே கேக்கற பார்த்தியா? இன்னிவரைக்கும் 80 subscribers தான். அவாளும் புரிஞ்சுட்டுத்தான் பண்ணாளா இல்ல...தெரியாமா பண்ணிட்டாளானு ஒரு சந்தேகம் எனக்கு.

சிரித்தேன். என் சந்தேகம் அது இல்லடி... அப்சரஸ் மாதிரி இருக்க..அட்லீஸ்ட் ஜொள்ளு விடறதுக்காச்சும் நெறய பேர் subscribe பண்ணிருக்கணுமே..? after the beat ல தொடங்கற "இச்சு இச்சு இச்சு.. இச்சு கொடு" சாங் கரகரப்ரியாவா இல்ல காம்போதியா?"னு சங்கீத அசமஞ்சமா கேள்வி கேக்கற சாக்கில உன்கிட்ட பேசியிருக்கணுமே?

அடேய் எழுத்தாளப் புடுங்கி... கண்டவா மேல இருக்க உன் பொதுக்கோபத்தை என் விஷயத்துல ஏன் பொருத்தி பாக்குற? நான் ஏதோ பாவப்பட்ட ஜீவன், ஒரு ஓரமா கர்நாடக பாரம்பரிய இசையை வெச்சு சின்னதா ஒரு முயற்சி... சமஸ்க்ருத ஆலாபனை ஆண்டவனுக்கு மட்டுமே அர்ப்பணமில்ல, அதை வெச்சு நம்ம விவசாயிகளோட பெருமை, ரணம், உணர்வு.. இப்படி ஏதாவது.. இல்ல சின்ன குழந்தைகள அபாண்டமா சூறையாடறாளே அவங்க மேல இருக்க கோபம்..வலி.. இப்படி ஏதாவது.. அடித்தட்டு மக்களுக்கு போயி சேர்ற மாதிரி வெகுஜனப்படுத்த முடியுமான்னு Analysis பண்ணிண்டு இருக்கேன்....என்கிட்டே போயி...அது சரி...வாலி, சுஜாதானு இருவரங்கன் கொடுத்த திருவரங்கத்துகாரன் ஆச்சே..உன்கிட்ட அந்த எழுத்துத்திமிர் இல்லனாதான் ஆச்சர்யப்படணும். ..
திமிரெல்லாம் இல்லடி. யதார்த்தத்தை சொன்னேன். உன்னோட Content & Analysis மக்களுக்கு புரியுமாங்கறது சந்தேகம் தான். மூணு வருஷமா பாடற... வெறும் 80 Followers..அந்தவொரு வருத்தம்தான்.

Factually, நம்ம bet-ல நான் தோத்துட்டேண்டா....

அப்புறமென்ன..."Proceed for the punishment"... My Dear Lady!!

எனை நெருங்கி வந்தவளின் செல்போன் ஒலித்திட.. அணைத்தாள். போனையும்.. என்னையும்!!.

எடுத்து பேசிடு.. இல்லனா இந்த தொந்தரவு வேற..

ஹலோ...

அலோ..அந்த "அலோ" வில் இருந்த கிராமிய தன்மை கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்ததந்த குரல்.

கண்ணு...நீதான் "ராகசுதா"வா தாயீ?

ஆமா..சொல்லுங்க.. நீங்க?

அத விடு கண்ணு.. என்ற பேரன் நீ படிச்ச பாட்டு ஒன்னு போட்டு காமிச்சான்..
"நெல்லறுக்கும் பூமியிங்க காஞ்சு கெடக்க
உள்ளருக்கும் சாமியங்க சாஞ்சு கெடக்க... னு எங்க மண்ணு பாட்ட ஏதேதோ ராகமெல்லாம் சேர்த்து படிச்சியே.. கண்ணுல தண்ணி நிக்குது..நெறய பாடோணும் தாயீ நீ..

ரொம்ப சந்தோஷங்க..எப்பயாவது யாராவது இப்படி பேசும்போதுதான் நிறைவா இருக்கு..கண்டிப்பா பாடுவேன்...வெச்சுடறேங்க....

ஹ்ம்ம்.. Punishment Time!! என்று கண்ணடித்தபடியே..என் தோள்களை பற்றி, செருகிய கண்களும் குவிந்த இதழ்களுமாய் நெருங்கியவளை கொஞ்சம் தடுத்து நிறுத்தினேன்.

என்னாச்சு எழுத்தாளரே? திடீர் ஞானோதயம்?

ம்ம்..Actually Speaking, வெறும் Count,Reach, Follower ship தான் ஒருத்தரோட புகழையும் வெற்றியையும் குறிக்கும்னா, அப்படி சொன்ன நாயை செருப்பாலேயே அடிக்கலாம். உன் செயல் எதற்காக, எவர்க்காக என்றறிந்து செய்கையில், அது அதற்காக அவர்க்காக சென்று சேர்வதுதான் வெற்றினா, நீ எப்பவோ ஜெயிச்சுட்ட.

இரண்டடி பின்னோக்கி சென்றவள் கேட்டாள்... நிஜமாவாடா??

Ofcourse..உன்னோட ஆரம்ப கால முயற்சிகள் யாருக்கும் போயி சேராம இருக்கலாம். ஆனா அதெல்லாம் பின்னாளைய வெற்றிக்கான விதைகள்.

ஏன்னா.....

"நான் ஸ்ரீரங்கம் கழுதை மண்டபத்தில் யாருக்கும் தெரியாம எழுதி கசக்கி போட்ட எழுத்துகள்தான்..பின்னாளில் பெரும் வெற்றி பெற்ற என் பாடல்களுக்கான விதை. ஆக வெற்றியோ தோல்வியோ, முயற்சியை மட்டும் எப்போதும் கைவிடாதீர்”. இதை நான் சொல்லல. யாரோட ஊர்த்திமிரு எனக்கும் உண்டுன்னு சொன்னியோ... அந்த "வாலி" சொன்னது!
---------------------
#Charithraas
 

Attachments

  • 623b8281f057134edcf6f8c7964ab3d6 copy.JPG
    623b8281f057134edcf6f8c7964ab3d6 copy.JPG
    85.9 KB · Views: 6
:D:D:love:

சூப்பர்......
Social media பற்றி சொன்னது ரொம்ப கரெக்ட்.......
நல்ல விஷயங்கள் reach குறைவு தான்......

டோலா தோழா இன்னும் பல.....

அவன் அவள் dialogues சேர்ந்தே வருது..... gap இல்லை........
யார் பேசுறாங்கன்னு படிச்சப்புறம் தான் தெரியுது.......
தனி தனி லைன்ஸ் கொடுத்தால் better......
அது கொஞ்சம் பார்த்துக்கோங்க.......

Nice charithra.......
 
:D:D:love:

சூப்பர்......
Social media பற்றி சொன்னது ரொம்ப கரெக்ட்.......
நல்ல விஷயங்கள் reach குறைவு தான்......

டோலா தோழா இன்னும் பல.....

அவன் அவள் dialogues சேர்ந்தே வருது..... gap இல்லை........
யார் பேசுறாங்கன்னு படிச்சப்புறம் தான் தெரியுது.......
தனி தனி லைன்ஸ் கொடுத்தால் better......
அது கொஞ்சம் பார்த்துக்கோங்க.......

Nice charithra.......
Thanks for your honest review Bro. I will keep this in mind...
 
நான் சீன் போடறது இருக்கட்டும். அதென்ன இந்த டோலா, டோலி, சகோ, சகி, உடன்பிறப்பே, உளுந்தவடையே னுக்கிட்டு? இந்த கண்றாவி Terms எல்லாம், எனக்கென்னவோ FB/Social Media-ல பசங்க பொண்ணுங்கள (or vice versa) கொக்கி போடறதுக்குனே கண்டுபுடிச்சா மாதிரி இருக்கு. something so weird. அதுவுமிந்த "தோழர்".. சுத்த அபஸ்வரம். காஸ்ட்ரோவும் கார்ல் மார்க்ஸும், மா.சே வும், கிம் சுங்கும் கம்யூனிசத்தால் வளர்த்தெடுத்த வார்த்தை, அதை கடலை போட..கருமம் ...இதுக்கு யதார்த்தமா பேரை சொல்லிட்டு போயிரலாம்.
ஹா ஹா உடன்பிறப்பே உளுந்து வடையே வா...சூப்பர்..
I too hate சகோ...சகி எல்லாம்....So weird...agree with your Writer
and karl mark and caestro caestro my favorite person...and we have birthdays on same date too....what you said is right
அது சரி...வாலி, சுஜாதானு இருவரங்கன் கொடுத்த திருவரங்கத்துகாரன் ஆச்சே..உன்கிட்ட அந்த எழுத்துத்திமிர் இல்லனாதான் ஆச்சர்யப்படணும். ..
திமிரெல்லாம் இல்லடி.
Woww...and totally right..காவிரி கரையில கலைக்குப் பஞ்சமில்லை....இருவரம் கொடுத்த திருவரங்கம்...sema
ம்ம்..Actually Speaking, வெறும் Count,Reach, Follower ship தான் ஒருத்தரோட புகழையும் வெற்றியையும் குறிக்கும்னா, அப்படி சொன்ன நாயை செருப்பாலேயே அடிக்கலாம். உன் செயல் எதற்காக, எவர்க்காக என்றறிந்து செய்கையில், அது அதற்காக அவர்க்காக சென்று சேர்வதுதான் வெற்றினா, நீ எப்பவோ ஜெயிச்சுட்ட.
charithra....how come you come along with my opinions....count doesnt matter..quality matters...
யாரோட ஊர்த்திமிரு எனக்கும் உண்டுன்னு சொன்னியோ... அந்த "வாலி" சொன்னது!
வாலி..... :love: :love: :love: :love: :love: :love: :love:

dialouges மட்டும் inverted commas ல போடுங்க....it will be easy to read and neat

My best wishes to You charithra....keep writing...eager to read a big series from you...you ll definitely reach good heights...
 
பாருங்க டோலா தோழா சொல்லிட்டு இப்போ நீங்களே bro சொல்றீங்க......
நான் bro இல்லை.... அக்கா or ஜோ.....
அதே தான் அக்கா சொன்னேன்...நானும்..சேம் பிஞ்ச்

உங்களுக்கு அக்கா சொன்னா பிடிக்காதே...என்னை அக்காவாக்கா தானே உங்களுக்குப் பிடிக்கும்.
:LOL::LOL:
 
Top