Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nee Enai Neengaathae Anbae 3

Advertisement

Admin

Admin
Member




பகுதி – 3

ராஜேஷ் அன்று வீடு செல்லும் போதே நேரம் இரவு பதினோரு மணி. கதவை திறந்து விட்ட அவனின் தந்தை பெர்னாண்டஸ் அவனைப் பார்த்து முறைத்து விட்டு உள்ளே செல்ல... இவரை வேற சமாளிக்கனுமே என்று நினைத்த ராஜேஷ் மூச்சை ஒரு முறை நன்றாக இழுத்துவிட்டு உள்ளே சென்றான்.

அவன் எதிர்பார்த்தபடி அவன் அப்பா உறங்க செல்லாமல் சோபாவில் அமர்ந்திருக்க... இன்னைக்கு என்ன பிரச்சனை வரப்போகுதோ என்ற கவலையில் அவனின் அம்மா சோபியா நின்று கொண்டிருந்தார்.

உள் அறையில் படித்துகொண்டிருந்த ராஜேஷின் அக்கா ரோசி படிப்பதை நிறுத்தி விட்டு இவர்களைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ராஜேஷ் அவனின் அப்பாவை கண்டுகொள்ளாமல் அறைக்குள் செல்ல...

“நினைச்ச நேரம் வர இது என்ன சத்திரமா...” என்று பெர்னாண்டஸ் ஆரம்பிக்க... சோபியா கவலையுடன் தன் மகனை பார்த்தார்.

ராஜேஷ் பதில் சொல்லாமல் தன் உடைகளை மாற்ற...

“கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்றான்னா பாரு. ஊர் சுத்திட்டு இவ்வளவு நேரம் கழிச்சு வந்தா வீட்ல கேட்க மாட்டாங்களா....” பெர்னாண்டஸ் சோபியாவை பார்த்து கத்த....

“அம்மா அவருக்குத் தெரியும் நான் ஊர் சுத்தலை... லைட் மியூசிக்ல
கீ - போர்ட் வாசிக்கத்தான் போறேன்னு... தெரிஞ்சும் தெரியாத மாதிரி கேட்டா நான் என்னமா பண்றது....” ராஜேஷ் களைப்பான குரலில் சொல்ல...

அவன் குரலில் இருந்தே அவன் இன்னும் சாப்பிடவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சோபியாவுக்கு, அவனைப் பார்த்தால் பாவமாக இருந்தது. வந்த பிள்ளைய சாப்பிட கூட விடாம... வந்ததும் சண்டைய ஆரம்பிச்சாச்சு...என்று நினைத்தபடி தன் கணவரை பார்க்க....



பெர்னாண்டஸ் விடுவதாக இல்லை... “இவனை யாரு அந்த வேலை எல்லாம் பார்க்க சொன்னது. இவன் கொண்டு வர்ற ஐநூறு ஆயிரத்துல தான் நாம எதோ குடும்பம் நடத்துற மாதிரி பேசுறான்...” என்றார் கிண்டலாக....

அவரின் பேச்சு ராஜேஷின் தன்மானத்தைத் தூண்டி விட... “உங்களுக்கு என்ன தான்ப்பா பிரச்சனை?... நான் வேலைக்குப் போறதா... இல்லை உங்க கையை எதிர் பார்க்காம நான் பணம் சம்பாதிக்கிறதா...”

“செலவுக்குப் பணம் கேட்டா திட்றீங்க... நீங்க ஒருத்தர் தான் நம்ம வீட்ல வேலைக்குப் போறீங்க... உங்க சம்பளத்தை மட்டும் வச்சு நம்ம குடும்பத்தை நடத்த முடியலை.....”



“நான் எதோ என் பாக்கெட் மணி செலவுக்குத் தான் சம்பாதிக்கிறேன். அதையும் கிண்டல் பண்றீங்க.... நான் எப்பவும் பணத்துக்கு உங்க பின்னாடியே சுத்தனும்ன்னு எதிர் பார்கறீங்க இல்லையா...” என்று ராஜேஷ் சூடாகக் கேட்டு விட.... பெர்னாண்டஸ் முகம் விழுந்து விட்டது.

தன் கணவரின் முகத்தைப் பார்த்த சோபியா “போதும் ராஜேஷ்.... அவர் உன் அப்பா... படிக்கிற வயசில நீ வேலைன்னு அலையறது பிடிக்காம தான் சொல்றார். உன் படிப்பு கெட்டுட கூடாது இல்லையா.... அந்த அக்கறையில சொன்னா... நீ தேவையில்லாம பேசுற....” என்று கோபபட....

“சாரி மா... நான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது. எதோ களைப்பில பேசிட்டேன்.” என்றவன், தன் தந்தையிடமும் “சாரி ப்பா...” என்றான்.

பதில் சொல்லாமல் பெர்னாண்டஸ் உள்ளே சென்று படுக்க... ராஜேஷ் அவன் அம்மாவை பாவமாகப் பார்க்க... “கொஞ்ச நேரத்தில சரி ஆகிடுவார் விடு.” என்றவர் மகனை அழைத்துக்கொண்டு சமையல் அறைக்குச் சென்றார்.

மகனுக்குத் தட்டில் சாப்பாடு போட்டு கொடுத்தவர் “நீ சாப்பிடு உங்க அப்பாவுக்கும் அக்காவுக்கும் இந்தப் பாலை கொடுத்திட்டு வரேன்.” என்று சென்றார்.

மகளுக்குக் கொடுத்து விட்டு தன் கணவரிடம் சோபியா பாலை நீட்ட.... “எனக்கு எதுக்கு இந்த வயசில பாலு? பிள்ளைங்களுக்குக் கொடு...” என்றதும், அவரின் அருகில் கட்டிலில் உட்கார்ந்த சோபியா “அவங்களுக்கு இருக்கு நீங்க குடிங்க...” என்று வற்புறுத்தி கொடுக்க...

அதை வாங்கிய பெர்னாண்டஸ் “நான் குடிச்சிக்கிறேன். நீ அவனைப்போய்ப் பாரு. சரியா சாப்பிடாம போய்ட போறான். அவனுக்கு ஒரு முட்டையாவது ஊத்திக் கொடு.” என்றார்.

தன் கணவரை பார்த்துப் பொய்யாக முறைத்த சோபியா “அவன் முன்னாடி எப்பவும் அவனைத் திட்றது... அப்புறம் பின்னாடி வருத்தபடுறது. இதே தாங்க உங்களுக்கு வேலை... அதனாலதான் அவன் எதோ வில்லன் மாதிரியே உங்களை நினைச்சிட்டு இருக்கான். அவன்கிட்ட மனசு விட்டுப் பேசினா தான் என்ன?...”

சோபியா சொன்னதற்குப் பெர்னாண்டஸ் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அவரைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டபடி சோபியா அங்கிருந்து சென்றார்.

நம் நாட்டில் அப்பாக்களுக்குப் பையன்கள் மேல் அதிகம் பாசம் இருக்கும். ஆனால் அதை வெளிபடுத்தவே அவர்களுக்குத் தெரியாது. அதனால் மகன்களும் தன் அப்பாவை எதிரியாகவே பார்ப்பார்கள். ஆனால் அவர்களுக்கும் உள்ளுக்குள் தன் அப்பாவின் மீது அதிகப் பாசம் இருக்கத்தான் செய்யும்.

தன் கணவர் சொன்னபடி மகனுக்கு முட்டையை ஆம்லெட் போட்டுக் கொண்டு வந்தவர், அவன் அருகில் அமர... ராஜேஷ் அவன் அம்மாவை பார்த்துப் புன்னகைத்தான். அப்போது அவன் அக்கா ரோஸியும் அங்கே வந்தாள்.

“நீ கல்யாண வரவேற்ப்புக்கு தான பாட போன... அங்கயே சாப்பிடலையா....” ரோசி கேட்க....

“உங்களை எல்லாம் விட்டுட்டு எனக்கு மட்டும் வித... விதமா சாப்பிட மனசு வரலை... அதோட அங்க ப்ரோக்ராம் பண்ணதான் போனோம். அதுக்குக் காசு வாங்கிட்டோம். அதுக்கு மேல அங்க சாப்பிட இஷ்டம் இல்லை...”

“நீ இவ்வளவு ரோஷக்காரனா இருக்கக் கூடாது டா... லைப் ஈஸியா எடுத்துக்கோ ராஜேஷ்.... இப்படி இருந்தா பின்னாடி ரொம்பக் கஷ்ட்டம். கொஞ்சம் வளைஞ்சு நெளிஞ்சு போக வேண்டிய பாதையில அப்படித் தான் போகணும். நேரா தான் போவேன்னா எங்கையாவது முட்ட வேண்டியது தான்.” தன் தம்பியின் குணம் தெரிந்து ரோஸி வருத்தப்பட...



“நீ இருடி...” என்று மகளைப் பார்த்து சொன்ன சோபியா மகனிடம் “அப்பாவை கொஞ்சம் புரிஞ்சிக்கோ ராஜேஷ்... அவர் உன் நல்லதுக்குத் தான் சொல்றார். படிக்கிற வயசில உன் கவனம் வேற எதுலையும் போகக் கூடாதுன்னு நினைக்கிறார்.” என்றார்.

“நான் நல்லாதான் ம்மா படிக்கிறேன். அதனால அந்தக் கவலைய விடுங்க. ப்ளீஸ் வேற பேசுங்கம்மா...” மகனின் விருப்பத்திற்கு இணங்கி அவனின் கல்லூரியை பற்றிக் கேட்க... ஜெனியின் நினைவில் ராஜேஷின் முகம் நொடியில் மலர்ந்தது.



அதைப் பார்த்து விட்ட ரோசி “அம்மா காலேஜ்னு சொன்னதும் உங்க மகன் முகத்தில பல்பு எரியுது.... எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. இப்ப கொஞ்ச நாளா காலேஜ் கிளம்பும் போது... இவன் ஒரு மார்கமா தான் இருக்கான். என்னன்னு விசாரிங்க....” என்றாள்.
ரோசி சொன்னதைக் கேட்டு சோபியா... மகனை பார்த்து “அப்படியா ராஜேஷ்...” என்று புன்னகைக்க...

“அம்மா அவ எதோ உளர்றா மா.... நீங்க வேற...” என்ற ராஜேஷ் ரோஸியை பார்த்து முறைத்தபடி அங்கிருந்து நழுவினான்.

பெர்னாண்டஸ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்கிறார். எப்படியோ கஷ்ட்டப்பட்டு இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு அபார்ட்மென்ட் வாங்க விட்டார். அவர் வருமானம் வீட்டு லோன் கட்டவும் பிள்ளைகளின் படிப்பிற்கு மற்றும் குடும்பச் செலவிற்குமே சரியாக இருந்தது.

ராஜேஷ் அவன் நண்பர்கள் சேர்ந்து நடத்தும் மெல்லிசை கச்சேரிகளில் கீபோர்டு வாசிக்கிறான். சில சமயம் பாடவும் செய்வான். அதில் கிடைக்கும் வருமானத்தைத் தன்னுடைய செலவுக்கு வைத்துக்கொள்வான்.

அவன் பேருந்து செலவிர்கோ.... வெளியில் சாப்பிடும் சாப்பாடிர்கோ வீட்டில் காசு கேட்பதில்லை. கல்லூரி கட்டணத்தை மட்டும் தன் தந்தையிடம் வாங்கிக்கொள்வான்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஜெனியை எப்படிப் பார்ப்பது என்று யோசித்த ராஜேஷ்... அவள் செல்லும் தேவாலயத்திற்குத் தன் சகோதிரி ரோஸியுடன் சென்றான்.



“டேய் நாம எப்பவும் இந்தச் சர்ச்க்கு வர மாட்டோமே....இங்க ஏன் டா வந்த?”

“சும்மா தொனத்தொனன்னு பேசாம வா...” என்றபடி ராஜேஷ் முன்னே நடக்க... ரோஸியும் அவன் பின்னே சென்றாள்.

ராஜேஷ் தேவாலையத்தின் உள்ளே பார்வையைச் செலுத்தியவன், இன்னும் ஜெனி வரவில்லை என்று தெரிந்ததும், ரோசியை மட்டும் உள்ளே அனுப்பி விட்டு அவன் வெளியே காத்திருந்தான்.
சரியாக ஆராதனை ஆரம்பிக்கும் நேரம் ஜெனி அவள் குடும்பத்துடன் காரில் வந்து இறங்கினாள். ஜெனி சுடிதார் அணிந்து இருந்ததால்... அந்தத் துப்பட்டாவையே எடுத்துத் தலையில் சுற்றி போட்டுக் கொண்டு ஆலயத்திற்குள் சென்றாள்.

அவள் குனிந்த தலை நிமிராமல் சென்றதால்... ராஜேஷை கவனிக்கவில்லை... ராஜேஷ் தவிப்புடன் ஜெனியை பார்க்க... அவள் பார்க்காமல் அவனைக் கடந்து உள்ளே சென்றுவிட்டாள்.

ராஜேஷுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவன் ஆசையாகப் பார்க்க வந்தால் ஜெனி அவனைப் பார்க்கவேயில்லை... ராஜேஷ் விடாமல் அவள் பின்னே ஆலயத்திற்குள் சென்றான்.

ஜெனி பெண்கள் பக்கம் தன் அம்மாவோடும், அக்காவோடும் சென்று அமர... ராஜேஷ் சென்று ஸ்டீபன் பக்கத்தில் அமர்ந்தான். ஜெனி பிராத்தனையில் தீவிரமாகி விட்டாள்.

ராஜேஷ்க்கு எங்காவது போய் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது. ஜெனி பிரத்தனையின் போது பாடிக்கொண்டே எதேட்சையாக தன் தந்தையைப் பார்த்தவள்... பக்கத்தில் இருந்த ராஜேஷை பார்த்து திடுகிட்டாள்.

ராஜேஷ் அவளைப்பார்த்து புன்னகைக்க... ஜெனிக்கு ராஜேஷை பார்ததும் சந்தோஷம் எல்லாம் வரவில்லை... பயம்தான் வந்தது. ராஜேஷ் தன்னைப் பார்ப்பதை ஸ்டீபன் பார்த்துவிட்டால் தொலைந்தோம் என்று நினைத்தவள், பயத்தில் தன் தந்தையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இது வேலைக்காகாது என்று நினைத்த ராஜேஷ் வேறு இடம் சென்று அமர.... ஜெனி அப்போதுதான் அவனைப்பார்த்து லேசாகப் புன்னகைத்தாள். ராஜேஷ்க்குச் சந்தோஷமாக இருந்தது.

பிரத்தனை நேரம் முழுவதும் இருவரும் ஒருவரோடு ஒருவர் விழிகளாலே பேசிக்கொண்டனர். ஜெனி அவ்வபோது தன் தந்தையையும் பாரத்துக்கொண்டாள். ப்ராத்தனை முடிந்து கிளம்பும் போது ஜெனி ஒரு சிறு தலையசைப்புடன் ராஜேஷிடம் விடை பெற்று சென்றாள்.

வீட்டிற்க்கு வந்த ராஜேஷையும் ரோசியையும் பார்த்து “சர்ச்ல நீங்க ரெண்டு பேரும் எங்க இருந்தீங்க? பார்க்கவேயில்லை...” பெர்னாண்டஸ் கேட்க...



தன் அக்கா பதில் சொல்வதற்கு முன் முந்திக்கொண்டு “அங்க தான் இருந்தோம். நாங்க உங்களைப் பார்த்தோமே...” என்ற ராஜேஷ் ரோசியைப் பார்த்துக் கண் சிமிட்ட... அவள் அவனைப் பார்த்து முறைத்து விட்டு சென்றாள்.

வீட்டிற்கு வந்த ஜெனி சந்தோஷமாக வளைய வந்தாள். புன்னகையுடன் ஒரு பாடலை வாய்க்குள் முனங்கியபடி இருந்த ஜெனியை ஒரு மாதிரி பார்த்துகொண்டிருந்தாள் புனிதா...

அவள் பார்வையை உணர்ந்த ஜெனி என்ன என்பது போல் தன் அக்காவை பார்க்க... புனிதா ஒன்றும் இல்லை என்று தலையாட்டி விட்டு சென்றாள்.

இரவு அவர்கள் அறைக்கு வந்ததும், எப்போதும் நன்றாகப் பேசும் புனிதா அன்று பேசவேயில்லை... ஜெனிக்கு முதுகு காட்டி கட்டிலில் திரும்பி படுத்துக்கொண்டாள்.

ஜெனி என்ன ஆச்சு இவளுக்கு என்று யோசித்தபடி இருந்தாள். அப்போது அவள் பக்கம் திரும்பிய புனிதா “யாரு ஜெனி அந்தப் பையன்? உன் கிளாஸ் படிக்கிறான்னா...” என்று கேட்டதும், ஜெனி படுத்திருந்தவள் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

“யாரை சொல்ற?” ஜெனி தெரியாதது போல் கேட்க...

“இன்னைக்குச் சர்ச்ல ஒரு பையனை பார்த்து சிரிச்சியே...அவனைத் தான் கேட்கிறேன்.” புனிதா ஜெனியை ஆராயும் பார்வை பார்க்க...

“என்னோட காலேஜ்தான் படிக்கிறாங்க. என் ஃபரண்ட் தான்.” என்றாள் ஜெனி தயக்கமாக...

“வெறும் ஃபரண்டா மட்டும் இருந்தா நல்லதுதான். ஆனா இதெல்லாம் அப்பாவுக்குப் பிடிக்காது ஞாபகம் வச்சுக்கோ.... இனி அந்தப் பையனை காலேஜ்ல பார்த்தா பேசாத...” சொல்லிவிட்டுப் புனிதா திரும்பி படுக்க....

“அவன் நல்ல பையன் புனி...” ஜெனி மனம் தாளாமல் சொல்லிவிட...

அவளைத் திரும்பி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த புனிதா “இருக்கட்டும். நம்ம வீட்டுக்கு ஒத்து வராதுன்னு தெரிஞ்சா விட்டு விலகறதுதான் நல்லது. வீணா அவன் மனசுல எந்த ஆசையும் வளர விட்டுடாத... உனக்கு நம்ம அப்பாவை பத்தி தெரியும்.” எச்சரித்த புனிதா கண்களை மூடிக்கொள்ள... ஜெனியும் அவள் அருகில் படுத்தாள்.

ஜெனிக்கு அழுகையாக வந்தது. புனிதா இருக்கிறாள் என்று அடக்கிக்கொண்டு இருந்தாள். ஜெனி, புனி இருவருமே தூங்கவில்லை. இரவு எப்போதும் வழக்கமாகத் தன் வருங்காலக் கணவனிடம் ஸ்கைப்பில் பேசிக்கொள்ளும் புனிதா அன்று பேசவில்லை....

“புனி இன்னைக்கு அத்தான்னோட பேசலையா....”


“ம்ம்... இல்லை தலை வலிக்குது தூங்க போறேன்னு மெசேஜ் பண்ணிட்டேன்.” சுரத்தே இல்லாமல் புனிதா பதில் சொன்னாள். தன்னால்தான் தன் அக்கா இப்படி இருக்கிறாள் என்று ஜெனி கவலைப்பட்டாள்.

மறுநாள் கல்லூரிக்கு சென்ற ஜெனி ராஜேஷிடம் சண்டை பிடித்தாள்.

“உங்களை யாரு நேத்து சர்ச்சுக்கு வர சொன்னது. எங்க அக்கா உங்களைப் பார்த்திட்டா... அவளுக்கு நம்ம மேல சந்தேகம்.”

“இருக்கட்டுமே ஜெனி... என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் தெரிய தான போகுது.....”

“உங்களுக்கு எங்க அப்பாவை பத்தி தெரியாது ராஜேஷ்... அவருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது என்னைக் கொன்னு போட்ருவாரு....”

“என்னைக்கு இருந்தாலும் ஒரு நாள் உங்க அப்பாகிட்ட சொல்லித்தான் ஆகணும் ஜெனி...இல்லை நீ உங்க அப்பாவுக்குத் தெரியாம கல்யாணம் பண் ணிக்கச் சொல்றியா...” ராஜேஷ் கேட்டதும் ஜெனி அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.

“சொல்லித்தானே ஆகணும்...” ராஜேஷ் ஆறுதலாக அவள் கையைப்பற்ற...

“ராஜேஷ் எனக்கு எங்க அப்பா ட்ட காதலிக்கிறேன்னு சொல்லவும் தைரியம் இல்லை... அதே சமயம் அவரை அவமானப்படுத்தி என்னால வீட்டை விட்டும் வர முடியாது. நீங்கதான் நம்ம கல்யாணம் பிரச்சனை இல்லாம நடக்க எதாவது வழி பண்ணனும்.” ஜெனி கவலையுடன் ராஜேஷை பார்க்க...

ராஜேஷ்க்கு ஜெனியை பற்றித் தெரியும். காதலை ஒத்துக்கொள்ளவே அவள் எவ்வளவு தயங்கினால் என்றும் தெரியும். அதனால் “அது பார்த்துக்கலாம் ஜெனி. நான் M.B.A., முடிச்சு நல்ல வேலையில் சேர்ந்திட்டா... எங்க வீட்ல இருந்தே உன்னைப் பெண் கேட்டு வர வைக்கிறேன்.” ராஜேஷ் நம்பிக்கையாகச் சொன்னான். நாளை நடப்பதை யார் அறிவார்.
 
:love: :love: :love:

புனிதா தான் விஜய்க்கு அண்ணியா? என்னாச்சு அவளுக்கு........ wouldbe கூட சண்டையா?
ஏன் ராஜேஷ் கூட பேசவேண்டாம் சொல்றா?

நாளை நடப்பதை யாரறிவார்னு ஒரு கொக்கி வேற இருக்குதே.......
 
Last edited:
Top