Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 10.1

Advertisement

Admin

Admin
Member


பகுதி – 10

நாட்கள் வேகமாகச் செல்ல... ஜெனி இறுதி ஆண்டுப் படிப்பை முடித்திருந்தாள். ஸ்டீபன் புனிதாவை M.Phil., வரை படிக்க வைத்திருந்தார். அதே போல் அவருக்கு ஜெனியை படிக்க வைக்கும் விருப்பம் இருந்தாலும்... என்றாவது ராஜேஷ் திரும்ப வந்து பிரச்சனை செய்வானோ என்று அது வேறு அவருக்குப் பயமாக இருந்தது.

அதனால் அவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்த கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்த்துவிட்டவர். யார் கவனத்தையும் கவராமல் ஜெனிக்கு மாப்பிள்ளையும் பார்த்துக் கொண்டிருந்தார். நல்ல இடமாக வந்தால் திருமணத்தை முடித்து விடலாம் என்று நினைத்தார்.

லீனா விஜய்யை ஜெனிக்கு பார்க்கலாமே என்று சொன்னதற்கு. “அவங்களுக்கு விருப்பம்ன்னா அவங்களே கேட்டு வரட்டும். நாம போனா... ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு, இன்னொரு பெண்ணையும் நைஸா அங்கயே தள்ளிட்டாங்க அப்படின்னு யாரவது பேசுவாங்க. நம்மை விட வசதியானவங்க இல்லையா... அதனால விருப்பம் இருந்தா அவங்களே வரட்டும்.” என்று விட்டார்.

லீனா செல்வராணிக்கு அழைத்து ஜெனிக்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தைச் சொல்வோமா என்று நினைத்தவர், அவர் இப்போது US சென்றிருப்பதால்.... பிறகு சொல்வோம் என்று நினைத்தார்.

புனிதா கர்ப்பமாக இருப்பதால்... ஆரோக்கியராஜும், செல்வராணியும் அவளுக்குக் குழந்தை பிறக்க ஒரு மாதம் இருக்கும் போதே... சென்றவர்கள், குழந்தை பிறந்த பிறகு ஆறு மாதம் வரை இருந்து விட்டு தான் வருவார்கள். அதனால் முதலில் குழந்தை நல்லபடியாகப் பிறக்கட்டும் பிறகு பேசிக்கொள்வோம் என்று நினைத்தார்.

விஜய்க்கு அவன் அம்மா இல்லாமல் வீட்டில் இருப்பது அவ்வளவு கஷ்டமாக இருந்தது. ஹோட்டலே கதி என்று இருந்தான். செல்லில் அழைத்தாலும் செல்வராணி அவனோடு பேசமாட்டார். அவருக்கு அவன் மேல் கோபம்.


அவரும் கடந்த ஆறு மாதமாக... ஜெனி வீட்ல பேசட்டுமா என்று வித விதமாகக் கேட்டு பார்த்து விட்டார். விஜய் மழுப்பிக் கொண்டே இருந்தான்.

“டேய் என்ன தாண்டா சொல்ற? ஜெனி வேண்டம்ன்னா விடு. நான் வேற பொண்ணு பார்க்கிறேன்.” செல்வராணியும் மகனின் வாயில் இருந்து உண்மையை வரவைக்க... வேறு பெண் பார்க்க போவதாக மிரட்ட... விஜயும் அதற்க்கு சரி என்று சொல்லிவிட்டான்.

செல்வராணிக்குக் கவலையாக இருந்தது, ஏன் இந்தப் பையன் இப்படி இருக்கான்? இவன் தான ஜெனி ஜெனின்னு இருந்தான். இப்ப ஏன் மாறிட்டான்? என்று யோசித்தவர், வெளியில் விஜய்குப் பெண் பார்க்க ஆரம்பித்தார்.

விஜய்கு உண்மையிலேயே நல்ல நல்ல இடங்களில் இருந்து வரன்கள் வந்தது. ஒரு டாக்டருக்குப் படித்த பெண் கூட வந்தது. பெண் மிக அழகாக இருந்தாள். குடும்பமும் திருப்தியாக இருந்தது. சரி விஜய்க்கு இவள் தான் போல.... என்று முடிவெடுத்து செல்வராணி விஜய்யிடம் பெண்ணைப் பற்றிச் சொல்லி போட்டோவை கொடுக்க... விஜய்யும் வாங்கிப் பார்தவன் பிடித்திருப்பதாகச் சொன்னான்.

செல்வராணியும் பெண் வீட்டில் பேசுவோம் என்று நினைத்திருந்தார். ஆனால் அதற்குள் என்ன நினைத்தானோ.... மறுநாள் வந்து “அம்மா... அந்தப் பொண்ணு வேண்டாம். பிடிக்கலை... வேற பாருங்க.” என்றான்.

செல்வராணியும் வேறு பெண்களைப் பார்க்க... பிடிக்கலை... பிடிக்கலை... என்பதையே விஜய் மீண்டும் மீண்டும் படித்தான். செல்வராணி உண்மையிலேயே மனம் வெறுத்து விட்டார்.

அவருக்கு விஜய் மீது கட்டுக்கடங்காத கோபம். அவன் நினைச்சபடி என்னை ஆட்டி வைக்கப் பார்க்கிறானா.... என்று நினைத்தவர், அவனோட முற்றிலுமாகப் பேசுவதை நிறுத்த... விஜய்தான் தவித்துப் போனான்.

விஜய்க்கு ஜெனியை தவிர வேறு எந்தப் பெண்ணோடும் தன்னால் முழு மனதுடன் வாழ முடியாது என்று இந்தச் சில நாட்களில் புரிந்திருந்தது. ஜெனியையை விட அழகானவர்களைக் கூடச் செல்வராணி காட்டி விட்டார். ஆனால் அவன் மனம் ஜெனியை தவிர வேறு யாரையும் ஏற்க்க மறுத்தது. ஜெனியிடம் எதோ ஒன்று அவனுக்கு மிகவும் பிடித்தது. அது என்னவென்று அவனுக்கே தெரியாது.

ஜெனியின் விருப்பம் தெரியாமல்... அவளைத் திருமணம் செய்யச் சம்மதம் சொல்ல... அவன் மனசாட்சி ஒத்துக்கொள்ளவில்லை.என்னென்றால் புனிதா வெளிநாடு சென்றபிறகு... அவன் ஜெனியை இரு முறை குடும்ப விழாக்களில் பார்க்கும்படி நேர்ந்தது. அப்போதெல்லாம் ஜெனி விஜயை பார்த்ததும், மெளனமாகத் தலை குனிந்தபடி சென்று விடுவாள். அந்தக் கோபத்தில்தான் முதலில் வந்த டாக்டர் வரனுக்குச் சரி என்றான். ஆனால் அன்று இரவெல்லாம் அவனால் தூங்கவே முடியவில்லை.

தன்னால் தன் அம்மாவிற்கு மிகவும் துன்பம். சீக்கிரமே அதைச் சரி செய்யவேண்டும் என்று நினைத்தவன், திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று ஜெனியிடமே நேரில் கேட்டு விடுவோம் என்று இருக்க... அதற்குள் புனிதாவின் பிரசவத்திற்குச் செல்வராணி US சென்றுவிட்டார். சரி அவர் திரும்ப வரட்டும் பார்த்துக்கொள்வோம் என்று இருந்தான்.

அடுத்த மாதத்தில் சுகப் பிரசவத்தில் புனிதாவிர்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அண்ட்ரியா என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். லீனாவிற்குத் தன் மகள் பிரசவத்திற்குத்தான் உடன் இல்லையே என்ற வருத்தம் அதிகம் இருந்தது. ஆனால் அவரால் எப்படி ஜெனியை விட்டுவிட்டு செல்ல முடியும். அதனால் தான் அவர் செல்லவில்லை... அனைவரும் ஸ்கைப்பில் குழந்தையைப் பார்த்துக் கொண்டனர்.

குழந்தைக்கு நான்கு மாதம் சென்ற பிறகு... ஒரு நாள் புனிதாவுடன் பேசிக்கொண்டிருந்த லீனா, செல்வராணியிடம் போன்னை கொடுக்கச் சொன்னார்.

“என்ன அண்ணி நல்லா இருக்கீங்களா?”

“நல்லா இருக்கேன் லீனா. அண்ணா, நீங்க, ஜெனி எல்லாம் சௌக்கியமா....” செல்வராணி விசாரிக்க...

லீனா அவருக்குப் பதில் சொன்னவர் “என்னாலதான் வர முடியலை... ஆனா... நீங்க புனிதாவை என்னை விட நல்லா பார்த்தக்கிட்டீங்க.” என்றார் நெகிழ்ந்த குரலில்.

“என்னோட மருமகளை நான் பார்க்காம யார் பார்பா... அதோட எங்க குடும்பத்துக்கு முதல் பெண் வாரிசு...” செல்வராணியும் விட்டுக் கொடுக்காமல் பேச... லீனா மிகவும் சந்தோஷப்பட்டார்.

லீனா பேச்சோடு பேச்சாக “ஜெனிக்குக் கல்யாணம் முடிச்சிட்டா... நாங்களும் புனிதாவோட போய்க் கொஞ்ச நாள் இருக்கலாம். அதனால் ஜெனிக்கு இப்ப இருந்தே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டோம். நல்ல இடமா வந்தா முடிச்சிடலாம்ன்னு இருக்கோம்.” என்றார்.

நாம் சொல்வதைச் சொல்லிவிடுவோம் பிறகு அவர்கள் விருப்பம் என்று நினைத்தார். அவர் சொன்னதைக் கேட்ட செல்வராணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. விஜயை நினைத்து மிகவும் கவலைப் பட்டார்.

அன்று இரவு உறக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்த செல்வராணிக்கு, உடல் எல்லாம் வியர்த்துக் கொட்டி ஒரு மாதிரி இருந்தது. மறுநாள் எழுந்தவர் விஜய்யை அழைக்க... ரொம்ப நாட்கள் கழித்து, தன் அம்மா தன்னோடு பேசிவிட்ட சந்தோஷத்தில் விஜய் இருந்தான்.

செல்வராணி அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.... “விஜய் எனக்கு உடனே அங்க வரணும். டிக்கெட் போடுறியா....” என்றார்.

இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து வரவேண்டியவர், இப்போதே வருகிறார் என்றதும், விஜய்க்குச் சந்தோஷம் தாங்க வில்லை. அவன் உடனே டிக்கெட் பார்க்க ஆரம்பித்து, அடுத்த இரண்டு நாட்களில் இருந்த விமானத்தில் டிக்கெட்டும் போட்டு விட்டான்.

விஷயம் தெரிந்த ப்ரித்வி “என்னம்மா இது... இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு போறதுக்கு ஏற்கனவே டிக்கெட் போட்டிருக்கே... அப்படி இருக்கும் போது... இப்ப எதுக்கு மா முன்னாடியே கிளம்புறீங்க? நீங்க இன்னும் ரெண்டு மாசம் எங்களோட இருப்பீங்கன்னு சந்தோஷத்தில இருந்தேன்.” என்றான் வருத்தமாக...

“ஏன் அத்தை உங்களுக்கு இங்க பிடிக்கலையா... நான் எதாவது உங்க மனசு கஷ்ட்டப்படும்படியா நடந்துகிட்டேனா....” புனிதா அவள் பங்குக்கு அவளும் வருந்த...

“இல்லைடா... எனக்கு இங்க ஒரு குறையும் இல்லை. எனக்கு விஜய் லைப் சீக்கிரம் செட்டில் பண்ணனும். அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி அவன் மனைவியோட இருந்தாதான் எனக்கு நிம்மதி.”

“அவனுக்குக் கல்யாணம் பண்ண பிறகு... நான் இங்க வந்து ரொம்ப நாள் இருக்கேன். பாப்பாக்கு தான் இப்ப நாலு மாசம் ஆகிடுச்சே... இனி நீயே பார்த்துக்கலாம்.” என்றார் செல்வராணி.

அதற்க் மேல் அவரைப் பிடித்து வைக்க முடியாது என்பதால்... ஆரோக்கியராஜ் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்.

விமான நிலையத்தில் செல்வராணியைப் பார்த்ததும் விஜய் அவரை அனைத்துக் கொண்டு “என் மேல இருந்த கோபம் போயிடுச்சா.... சீக்கிரம் வந்துடீங்க. I’m so happy.” என்றான் முகம் நிறையப் புன்னகையோடு... மகனின் தோளில் சாய்ந்திருந்த செல்வராணியின் கண்கள் கண்ணீரை பொழிய.... அதை விஜய் பார்கும் முன் துடைத்தார்.

மகனிடம் இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்ட செல்வராணி “இங்க இருந்து பக்கம் தான புனிதா வீடு. புனிதா அவ அம்மாவுக்கும், தங்கைக்கும் நிறையத் திங்க்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கா.. போய்க் கொடுத்திட்டு வந்திடலாமா....” என்றார்.

ஆரோக்கியசாமி இப்பவா என்பது போல் பார்க்க... “இன்னொரு நாள் போகலாமே மா... இப்ப நேரா வீட்டுக்கு போவோம்.” விஜய் சொன்னதும், செல்வராணியின் முகம் வாடியது.

தன் மேல் வருத்தமாக இருக்கும் அன்னையை... மேலும் வருத்தப்பட வைக்க விஜய் விரும்பவில்லை. அதனால் சரி என்றான். அவனுக்கும் ஜெனியிடம் பேச வேண்டியது இருந்தது.
 
:love::love::love:

இவ்ளோ பார்க்கிற அம்மா பொண்ணு கேட்டுடவேண்டியது தானே.......
ஏன் பையனுக்காகன்னு wait பண்ணுறாங்க........

ஸ்டீபன் சொல்லுறது சரிதான்.......
இவங்களா போனால் அந்த பேச்சு வரும் தான்.....

பார்க்கலாம் செல்வராணி என்ன பண்ணுறாங்கனு........
 
Last edited:
Top