Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 10.2

Advertisement

Admin

Admin
Member

காரில் ஏறி ஜெனியின் வீடு சென்றனர். சனிக்கிழமை என்பதால் ஸ்டீபனும் ஜெனியும் வீட்டில் தான் இருந்தனர். திடிரென்று இவர்களைப் பார்த்ததும் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை... வந்தவர்களை உபசரித்தனர்.

லீனா அவசரமாகத் தயாரித்துக் கொடுத்ததை ஜெனிதான் பரிமாறினாள். இன்றும் ஸ்கர்ட் டாப் தான் அணிந்து இருந்தாள். விஜக்கு என்ன முயன்றும் ஜெனியின் மீது இருந்து பார்வையைத் திருப்ப முடியவில்லை... செல்வராணியும் அவனைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.

புனிதா அவர்களுக்காக வாங்கிக் கொடுத்திருந்த பொருட்களைச் செல்வராணி எடுத்துக் கொடுக்க... லீனா மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

சிறிது நேரம் US ல் இருந்த நாட்கள் பற்றியும், அவர்கள் பேத்தி அண்ட்ரியா பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். செல்வராணி இன்றே விஜய் ஜெனி திருமணம் குறித்துப் பேசுவோமா... இல்லை பிறகு பேசுவோமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்.

அவர் இனியும் விஜயை நம்புவதாக இல்லை.... இவன் இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால்... ஜெனி வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு சென்று விடுவாள். மற்ற பிள்ளைகளுக்கு அவர்தான் பெண் பார்த்துத் திருமணம் செய்தார். அதே போல் விஜய்க்கு தான் பார்த்த பெண் ஜெனியாக இருக்கட்டும் என்று நினைத்தார்.

விஜய்க்கு ஜெனியிடம் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் வரவில்லை. அதனால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்வோம் என்று நினைத்தவன் செல்வராணியைப் பார்த்து போவோமா என்று கேட்க...

செல்வராணிக்கு போகவும் விருப்பம் இல்லை... விஜய்யையும் ஜெனியையும் வைத்துக் கொண்டே திருமணப் பேச்சை ஆரம்பிக்கவும் யோசித்தார். வேறு வழியில்லாமல் எழுந்தவர், திடிரென்று மயங்கி சரிய....

விஜய் அந்நேரம் அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் என்பதால்... வேகமாகச் சென்று தன் அம்மா தரையில் விழாமல் தாங்கி பிடித்தான். என்ன நடந்தது என்று உணர்வதர்க்கே எல்லோருக்கும் ஒரு நிமிடம் ஆனது....

அதற்குள் அம்மா அம்மாவென்று விஜய் பதறி தவித்து விட்டான். ஜெனி தண்ணீர் கொண்டு வந்து செல்வராணியின் முகத்தில் தெளிக்க... அப்போதும் அவருக்கு மயக்கம் தெளியவில்லை.... விஜய் அதைப் பார்ததும் மிகவும் பயந்து விட்டான்.

செல்வராணிக்கு இதயத் துடிப்பு இருக்கிறதா என்று பார்த்த நிமிடம் விஜய் செத்துப் பிழைத்தான். எல்லோருமே பதற்றமாக இருந்தனர். விஜய் வேகமாகத் தன் அம்மாவை தூக்கிக் கொண்டு காருக்கு செல்ல... ஆரோக்கியசாமியும் அவன் பின்னே வேகமாகச் சென்றார். அவர்களோடு ஸ்டீபனும் லீனாவும் காரில் ஏறிக் கொண்டனர்.

ஸ்டீபன் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய மருத்தவமனையின் பெயரை சொல்லி அங்கே செல்ல சொன்னார். அவர்கள் சென்றதும் வீட்டிற்குள் வேகமாக வந்த ஜெனி உடை மாற்றி விட்டு, அந்த மருத்துவமனை அருகில்தான் என்பதால்.... ஓட்டமும் நடையுமாக மருத்துவமனைக்கு விரைந்தாள்.

அவளுக்கு அப்பாவிடமோ, அம்மாவிடமோ வரட்டுமா என்று கேட்டுவிட்டு செல்ல எல்லாம் தோன்றவில்லை... செல்வராணிக்கு எதுவும் கெடுதலாக நடந்து விடக் கூடாது. அவர் நன்றாக ஆகி விட வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அப்போது.

ஜெனி மருத்துவமனை சென்ற போது.... செல்வராணி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். மற்றவர்கள் வெளியே இருந்தனர். விஜய் தன் தந்தைக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை.... அவன் கண்கள் கண்ணீரை பொழிந்த வண்ணம் இருந்தது.

அவன் மற்றவர்கள் தன்னைப் பார்ப்பார்களே என்று எல்லாம் கவலைப் படவில்லை.... அவனுக்குத் தன் அம்மா இப்படி இருப்பது தாங்க முடியவில்லை.

ஜெனி வளர்ந்த ஆண் அழுது நேரில் பார்பது இதுவே முதல் முறை. அவளுக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. அவள் விஜயையே கவலையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஸ்டீபன் ஆரோக்கியராஜ்க்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார். ஜெனி அவளாகவே விஜயிடம் சென்று “அத்தான் அத்தைக்கு எதுவும் இருக்காது. இன்னைக்குத் தான ஊர்ல இருந்து வந்தாங்க. அதனால டயர்டா இருந்திருப்பாங்க. வேற ஒன்னும் பெரிசா இருக்காது.” என்றாள். அவள் அப்படி சொன்னது உண்மையிலேயே விஜக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

விஜய் எதுவும் பதில் சொல்லவில்லை. ஆனால் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டான்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வந்த மருத்துவர் “அவங்களுக்குப் பிரஷர் ரொம்ப அதிகமா இருக்கு.... அதனாலதான் மயக்கம் வந்திருக்கு. பயப்பட ஒன்னும் இல்லை... எதுக்கும் வேற எதாவது ப்ராப்லம் இருக்கான்னு செக் பண்ணிக்கிறோம்.” என்று திரும்ப உள்ளே சென்றார்.

செல்வராணிக்கு இதற்கு முன்பு ரத்த அழுத்தம் இல்லை... ஆனால் திடிரென்று எப்படி இவ்வளவு அதிகம் ஆனது என்ற குழப்பத்தில் விஜய் இருந்தான்.

செல்வராணிக்கு உடனடியாக எடுக்கப்பட வேண்டிய அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு அவருக்கு வேறு எதுவும் இல்லை... என்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகே விஜய் நிம்மதியாக மூச்சு விட்டான்.

செல்வராணி மயக்கத்தில் இருந்தார். அவருக்கு ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு இருந்தனர். மாலையில் வருவோம் என்று ஆரோகியசாமியை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு ஸ்டீபன் வீட்டிற்குச் சென்றார். விஜய் மட்டுமே மருத்துவமனையில் இருந்தான்.

இரண்டு மணி நேரம் கழித்துக் கண் விழித்த செல்வராணி, கண் திறந்ததும் அவரையே பார்த்துக் கொண்டிருந்த விஜய்யை தான் பார்த்தார். அவன் எவ்வளவு பயந்திருப்பான் என்று அவருக்குத் தெரியும். இவனைத் தனியாக விட்டுவிட்டு சென்று விடுவோமோ என்று கவலைப் பட்டார். அது அவரின் உடல் நிலையை மேலும் பாதித்தது.

அவரைப் பரிசோதனை செய்ய வந்த மருத்துவர் “என்ன ஆச்சு இவ்வளவு நேரம் நல்லா தான இருந்தீங்க. அதுக்குள்ள என்ன? மனசை ரிலாக்ஸா வச்சிக்கோங்க.... இப்படி ப்ரஷர்ர ஏத்த விட்டா ரொம்ப டேஞ்சர்.” என்று எச்சரிக்க... அப்போது ஜெனி அவள் பெற்றோருடன் உள்ளே நுழைந்தாள்.

எல்லோரையும் பார்த்ததும் செல்வராணி பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் எதோ சரி இல்லை என்று விஜய்குப் புரிந்தது. ஆனால் அவர் அவனை நினைத்துக் கவலைப்பட்டுத்தான் உடம்பை கெடுத்து கொள்கிறார் என்று அவனுக்குத் தெரியவில்லை.

சிறிது நேரம் சென்று இரவு உணவை கொண்டுவருவதாகச் சொல்லி லீனா கிளம்ப... செல்வராணி ஜெனி என்னோடு இருக்கட்டும் என்றார். அதனால் அவரும் ஸ்டீபன்னும் மட்டும் சென்றனர்.

ஜெனி உள்ளே செல்வராணியோடு இருக்க... விஜய்யும் ஆரோக்கியசாமியும் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.

ஜெனி செல்வராணியிடம் “என்ன ஆச்சு ஆன்டி? ஏன் திடிர்ன்னு உங்களுக்கு உடம்பு முடியலை?” என்று விசாரிக்க...

அவளையே பார்த்த செல்வராணியின் கண்கள் கலங்கியது. “ஆன்டி நீங்க டென்ஷன் ஆகாதீங்க.” ஜெனி பதற....

“ப்ரித்வி வீட்ல இருக்கும் போதே எனக்கு உடம்பு முடியலை.... திடிர்னு விஜய்யை விட்டு போயடுவோம்ன்னு பயம் வந்துடுச்சு....எனக்கு அப்புறம் அவனை யார் பார்த்துப்பா?... அவன் அண்ணனுங்க இருந்தாலும்.... இவனுக்குன்னு ஒரு குடும்பம் வேண்டாமா....”

“இதுக்கு ஏன் ஆன்டி டென்ஷன் ஆகுறீங்க? அவருக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடுங்க.” ஜெனி எளிதாகச் சொல்ல....

“அதுக்கு நான் இதுவரை முயற்சி பண்ணலைன்னா நினைக்கிற.... எந்தப் பொண்ணு பார்தாலும் வேண்டாம்ன்னு சொல்றான்.” செல்வராணி சொன்னதைக் கேட்ட ஜெனி அமைதியாக இருந்தாள்.

ஜெனி நான் உன்னை நேரடியாவே கேட்கிறேன் “விஜய்க்கு உன்னைத்தான் பிடிச்சிருக்கு. எனக்குத் தெரியும்... ஆனா கொஞ்ச நாள்ளா ஒரு மாதிரி இருக்கான். நீ எதாவது அவனை வேண்டாம்ன்னு சொன்னியா....” என்றதற்கு, ஜெனி இல்லை என்று தலையாட்டினாள்.... அவளுக்குச் செல்வராணி சொன்னதைக் கேட்டு பேச்சே வரவில்லை....

“ஜெனி கடவுள் எனக்கு எந்தக் குறையும் வைக்கலை... அன்பான கணவரையும், மூன்று பிள்ளைகளையும் கொடுத்திருக்கார். இதைவிட எனக்கு வேற என்ன வேண்டும் சொல்லு. அவங்க சந்தோசம்தான் எனக்கு முக்கியம். ஆனா... இந்த விஜய்தான் என்னை ரொம்ப நோகடிகிறான். அவன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்னே புரியலை...” என்றவர்,

“உனக்கு விஜய்யை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதமா....” செல்வராணி மனதில் நினைத்ததைக் கேட்டே விட... ஜெனி மௌனமாக இருந்தாள்.

அவளது மௌனத்தை பார்த்து “உனக்கு விஜய்யை பிடிக்கலையா... கலர் கம்மின்னு நினைக்கிறியா...” செல்வராணி தயக்கமாகக் கேட்க.... ஜெனி இல்லை என்று தலை அசைத்தாள்.

பிடிக்கும் பிடிக்காது என்று இல்லை... முன்பு ராஜேஷை விரும்பியதால் ஜெனி விஜய்யை தவிர்த்தாள். அதன் பிறகும் விஜய் மனதில் இருக்கும் எண்ணம் தெரியும் என்பதால்... அவனுடன் சாதாரணமாகப் பேச வரவில்லை. இப்போது அவன் அம்மாவுக்காக அவன் படும் வேதனையைப் பார்த்தவள், அவளே சென்று பேசினாள்.

அவளுடைய திருமணத்தை அவள் பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் அவளுடைய விருப்பு வெறுப்புக்கு இடம் இல்லை. ஏற்கனவே அவள் விரும்பிய ராஜேஷ் இல்லை என்று ஆகி விட்டது. இனி அவள் திருமணம் செய்வது யாராயிருந்தா என்ன என்பதுதான் அவளது எண்ணம். எப்படியும் அவளுக்குத் திருமணம் செய்யாமல் அவள் பெற்றோர் விடப்போவது இல்லை....

அதோடு விஜய்யின் மீது செல்வராணி வைத்திருக்கும் அன்பும் அவளுக்குத் தெரியும். விஜய்யை பற்றிக் கவலையிலேயே இவர் உடம்பை கெடுத்துக் கொள்வார் என்று நினைத்தவள் ,

“நீங்க எங்க அப்பா அம்மாகிட்ட பேசுங்க ஆன்டி. அவங்க விருப்பம்தான் எனக்கும்.” என்றாள். இவ்வளவு நேரம் என்ன சொல்வாளோ என்று தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த செல்வராணி முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.... ஜெனியை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டார்.

அவருக்கு இருக்கும் சம்பந்தி என்ற உரிமைக்கும், வசதிக்கும், அவர் அதிகாரமாகவே ஜெனியை பெண் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் ஜெனியின் விருப்பத்தை மதித்தார். ஜெனிக்கு அவரின் அந்தக் குணம் மிகவும் பிடித்தது. அவருக்காகவே ஜெனி திருமனத்திற்க்கு சம்மதித்தாள்.

அப்போதும் அவள் விஜய்யை பற்றி நினைக்கவில்லை... செல்வராணி பற்றித் தான் யோசித்தாள். அவன் மீது விருப்பமோ... காதலோ இல்லாத திருமணத்தை விஜய் விரும்புவான்னா என்பதையும் யோசிக்க மறந்தாள்.
 
:love: :love: :love:

ஜெனி ராணிக்காக ஓகே சொல்லியாச்சு........
வீட்டுலயும் ஓகே தான்.......
விஜய் என்ன சொல்ல போறான்???

ராஜேஷ் விட்டுடுவானா ஜெனியை???

யாருடா அந்த Mr ஜெனி :unsure::unsure::unsure:
 
Last edited:
[COLOR=(85, 57, 130)][/COLOR]

Super sis
 
Top