Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 12.1

Advertisement

Admin

Admin
Member





பகுதி – 12

இந்தப் புத்தாண்டிற்கு விஜய் அவன் ரெஸ்டாரன்ட்ல் cake & sandwich க்கு என்றே தனிப் பிரிவை தொடங்க இருந்தான். அதற்கான வேலையில் தீவிரமாக இருந்ததால்.... அவனால் ஜெனியோடு கூட நேரம் செலவு செய்ய முடியவில்லை.

அவன் மாலையில் விளையாட கூடச் செல்வது இல்லை... வீட்டிற்கு வருபவன் டிபன் காபி சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பி விடுவான். இரவிலும் தாமதமாக வருபவன், ஹோட்டலில் இன்டிரியர் வேலை நடப்பதால்... காலையிலும் சீக்கிரமே சென்று விடுவான். அதனால் சரியான தூக்கம் இல்லாமல் பார்ப்பதற்கே களைப்பாகத் தெரிந்தான்.

ஜெனிக்கு போர் அடிக்காமல் செல்வராணி பார்த்துக் கொண்டார். அவளையும் லீனாவையும் அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த நண்பர்கள் வீடு, ஷாப்பிங் என்று சென்று நேரத்தை செலவு செய்தனர்.

ஸ்வீட்டி குட்டி நாய் என்பதால் அதைக் கட்டி போடவில்லை... ஜெனி வீட்டிற்குள் இருக்கும் போது... ஸ்வீட்டி வெளியிலும், ஜெனி தோட்டத்திற்குச் செல்லும் போது... ஸ்வீட்டி உள்ளேயும் இருக்கும்படி செல்வராணி பார்த்துக்கொள்வார். அதனால் ஜெனி தைரியமாக நடமாடிக் கொண்டிருந்தாள்.

ஸ்வீட்டி வெளி வராண்டாவில்தான் உட்கார்ந்திருக்கும். விஜய் வந்தால் மட்டும்தான் உள்ளே வரும். அன்றும் அது போல் மாலை வீட்டிற்கு வந்த விஜய்யுடன் சேர்ந்து ஸ்வீட்டியும் உள்ளே வந்தது. ஸ்வீட்டியை பார்த்ததும் ஜெனி சோபாவில் காலை மடக்கி உட்கார்ந்து கொண்டாள்.

அதைப் பார்த்ததும் விஜய்க்குச் சிரிப்பு வர... புன்னகைத்தபடி சென்று முகம் கழுவி விட்டு வந்தவன், ஜெனிக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.

எப்போதும் விஜய் வந்ததும் கையில் டிபன் தட்டுடன் வரும் செல்வராணியைக் காணாமல் விஜய் தேட..

“ஆன்டியும் எங்க அம்மாவும் ரெபேக்கா ஆன்டி வீட்ல ப்ரேயர்ன்னு போய் இருக்காங்க. ஹாட் பாக்ஸ்ல டிபன் இருக்கு... உங்களைச் சாப்பிட சொன்னாங்க.” ஜெனி சொன்னதும், விஜய் எழுந்து உணவு எடுக்கச் சென்றவன், உணவு அதிகமாக இருப்பதைப் பார்த்து...

“ஜெனி நீ சாப்ட்டியா...” என்று அங்கிருந்தே குரல் கொடுக்க... ஜெனி இல்லை என்றாள்.

தனக்கு எடுத்துக் கொண்டு... ஜெனிக்கும் ஒரு ப்ளேட்டில் கொண்டு வந்து விஜய் கொடுக்க...

“சாரி நான் போனா ஸ்வீட்டி என் பின்னாடியே வரும்.” ஜெனி தயக்கமாகச் சொல்ல...

“எனக்குத் தெரியும்... நீ சாப்பிடு.” என்ற விஜய் ஜெனியின் அருகில் அமர்ந்தான்.

விஜய் பக்கத்தில் உட்கார்ந்ததும், ஜெனிக்குப் பதட்டத்தில் உணவே செல்லவில்லை... அவள் டீவி பார்ப்பது போல் மெதுவாகச் சாப்பிட்டாள். விஜய்க்கு அது புரிந்தாலும் அவன் கண்டுகொள்ளவில்லை.

டிபன் சாப்பிட்டதும் விஜய் ஒரு பந்தை தூக்கி ஸ்வீட்டியின் அருகில் போட... ஸ்வீட்டி அதோடு விளையாட ஆரம்பித்தது. ஜெனி மெதுவாக எழுந்து சென்று கை கழுவி விட்டு “காபி போடவா விஜய் அத்தான்...” என்றதும் ,எழுந்து வந்த விஜய் “நீ இரு நான் போடறேன்.” என்றவன், ஸ்வீட்டி வருவதைப் பார்த்து ஜெனியை சட்டென்று தூக்கி சமையல் மேடை மேல் உட்கார வைத்தான்.

கண் இமைக்கும் நொடிக்குள் நடந்ததை நம்ப முடியாமல் ஜெனி அதிர்ந்து போய்ப் பார்க்க... இதழுக்கிடையில் சிரிப்பை அடக்கிய விஜய் “என்ன புதுசா தூக்கிற மாதிரி பார்க்கிற...” என்றதும், ஜெனிக்கு உணமையிலேயே அவன் சொல்லவருவது புரியவில்லை...

அதை உணர்ந்த விஜய் “மேடம்... அன்னைக்கு ஸ்வீட்டி துரத்தும் போது... உன்னை யாரு சோபா மேல நிற்க வச்சது...நீயாவேவா ஏறின...” கேலியாகக் கேட்க... யோசித்த ஜெனியின் முகம் அஷ்ட்ட கோணலாக... அதைப் பார்த்து விஜய் வாய்விட்டுச் சிரித்தான்.

பின்பு அவன் காபி போட... ஜெனி அவன் காபி கலக்குவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். முதலில் இரு கோப்பைகளில் காபி பொடியையும் சக்கரையையும் போட்டவன், அதில் சிறிது நீர் விட்டு கலக்கி மைக்ரோவேவில் வைத்தான். பின்பு அதை எடுத்து அதில் பால் சேர்த்து கலக்கி மீண்டும் மைக்ரோவேவில் வைத்தான்.

காபி போட இவ்வளவு மெனக்கெடனுமா... சூடானா பால்ல காபி பொடியும் சக்கரையும் கலந்தா பத்தாதா... இப்படி ஜெனி நினைக்க... விஜய் அவளிடம் காபி கப்பை நீட்ட... இன்ஸ்டன்ட் காபி என்றாலும் மிகுந்த மனமாக இருந்தது. சுவையும் அருமை... ஜெனி அதை ரசித்துக் குடிக்க... விஜய் அவளைப் பார்த்தபடியே தன் காப்பியை பருகினான்.

என்ன இருந்தாலும் குக்கிங் எக்ஸ்பெர்ட் இல்லையா... ஜெனி மனதிற்குள் விஜய்யை பாராட்டியவள், அவனைப் பார்க்க... விஜய்யின் பார்வை மாறி இருந்தது. அவன் பார்வை சொந்ததுடன் அவளை வருட... ஜெனியாலும் பார்வையைச் சட்டென்று திருப்ப முடியவில்லை...

ஜெனியின் அருகில் வந்த விஜய் அவள் கப்பை வாங்கிக் கழுவுமிடத்தில் வைத்தவன், அவள் இடையைச் சுற்றி கை போட்டு, அவளை இதமாக அனைத்துக் கொள்ள... ஜெனிக்குப் பதட்டமாக இருந்தாலும், விலகவில்லை... அதே சமயம் அவனை அணைக்கவும் இல்லை...



அவள் தோளில் தலைசாய்த்துக் கண் முடியவன் “சுகமா இருக்கு... இப்படியே விட்டா தூங்கிடுவேன். தூங்கட்டுமா...” என்றான் சோம்பலான குரலில்... உண்மையிலேயே அவன் அவ்வளவு களைத்துப் போய்த்தான் இருந்தான்.

“ம்ம்... இப்ப என்னோட அம்மாவும், உங்களோட அம்மாவும் வருவாங்க பரவாயில்லையா...” ஜெனி புன்னகையுடன் கேட்க... அவளிடமிருந்து விலகிய விஜய், அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டவன், அவளை அழைத்துக் கொண்டு ஹால் சோபாவிற்குச் சென்றான்.

“கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா என்ன? இப்படித் தூக்கத்தைக் கட்டுபடுத்திட்டு இருக்கனுமா... உங்களைப் பார்த்தா எனக்குத் தூக்கமா வருது...” ஜெனி சொல்ல...

அவள் சொல்வதைப் புன்னகையுடன் கேட்டிருந்த விஜய் “ஹோட்டல்ல இப்ப புதுச் செக்ஷன் ஆரம்பிக்கிறோம் இல்லையா... அதோட புது வருஷம் பிறக்க போது... அது தான் ரொம்ப வேலை...”
“இன்னும் ரெண்டு நாள் தான் அப்புறம் ப்ரீ ஆகிடுவேன். உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியலை... அதுதான் எனக்கு வருத்தம்.”

“நாளைக்கு உங்க அப்பாவும், என் அப்பாவும் வந்திடுவாங்க. அப்புறம் நீ இன்னும் ரெண்டு நாள்ல உங்க வீட்டுக்கு போய்டுவ... எனக்குத்தான் உன்னைப் பார்க்காம இருக்கக் கஷ்ட்டமா இருக்கும். நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிப்போமா....” விஜய் மனதை திறந்து பேச...

ஜெனிக்கு பேச்சே வரவில்லை.... அவளுக்கு எதோ எல்லாம் வேகமாக நடப்பது போல் இருந்தது. விஜய்யை போல் அவளால் சட்டென்று முடிவு எடுக்க முடியவில்லை.... அவர்கள் இருவருக்கும் திருமணப் பேச்சு இப்போதுதான் ஆரம்பித்தது... ஆனால் விஜய் அவளை இரண்டு ஆண்டுகளாகவே மனதில் நினைத்திருந்தானே... அதனால் அவனுக்கு ஜெனியோடு பேசுவதும் பழகுவதும் எளிதாக இருந்தது.

இவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே செல்வராணியும், லீனாவும் வந்து விட... விஜய் அவர்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவன் ஹோட்டலுக்குக் கிளம்பி சென்றான்.

அன்று இரவும் தாமதமாக வந்த விஜய், மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து தோட்டத்தில் இருந்த ஜெனியின் அருகில் வந்து உட்கார்ந்தவன், அப்படியே ஊஞ்சலில் சாய்ந்தபடி உறங்க... ஜெனிக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.

அவன் கையில் மெதுவாகத் தட்டி எழுப்பியவள் “எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எந்திருச்சீங்க... இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தான...” ஜெனி கேட்டதும்,


“நீ நாளைக்குப் போய்டுவ இல்ல... அது தான் உன்னோட இருக்கலாம்ன்னு....” விஜய் சொன்னதைக் கேட்டபடி வந்த செல்வராணி “ஆமாம் டா ! இது உனக்கு இப்பதான் தெரியும் பாரு... அவ இங்க இருந்த வரை அவளைக் கண்டுக்கலை... இப்ப அவ போகப் போறானதும், அவளுக்காக உருகிற மாதிரி நடிக்காத....” என்றவர்,

“ஜெனி இவன் உன்னை நல்லாவே ஏமாத்த பார்க்கிறான். நீ நம்பாத...” என்றார் பொய்யாகக் கோபம் கொண்டு....

தன் அம்மாவின் பேச்சை கேட்டு சிரித்த விஜய் “அம்மா ஏன் மா என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்றீங்க? உங்களுக்குத் தெரியுமா... நான் ஜெனியை கவனிக்கலைன்னு...” என்றான் முகத்தில் குறும்பு கூத்தாட....

“எங்க நான்தான் பார்கிறேன்னே நீ ஹோட்டலே கதின்னு இருக்கிறதை...” செல்வராணியும் விடாமல் வழக்கடிக்க...

“நான் உன்னை நேத்து கவனிக்கலை...” விஜய் ஜெனியை பார்த்துக் கண் சிமிட்டி கேட்க....

நேத்து அவன் அனைத்து முத்தமிட்டதைச் சொல்கிறான் என்று புரிந்த ஜெனி முகம் சிவந்து பதட்டமானாள். அவளையே செல்வராணி ஆர்வத்துடன் பார்ப்பதை உணர்ந்து “நேத்து காபி போட்டு தந்தாங்க ஆன்டி. அதைச் சொல்றாங்க.” என்றாள்.



“நீ என்ன இன்னும் என்னைப் பக்கத்து வீட்டுகாரங்க கூப்பிடுற மாதிரி ஆன்டின்னு கூப்பிடுற... இனி அத்தைன்னு சொல்லு...” என்றார் செல்வராணி. ஜெனி அதற்கு சரியென்று மண்டையை உருட்ட...

அவளையே பார்த்துக் கொண்டிருந்த விஜய் “அம்மா நாளைக்குப் புது வருஷத்துக்கு இன்னைக்கு நம்ம கடையில பிரம்மாண்டமா ஒரு கேக் செய்யப்போறோம். அதனால நான் ஜெனியை என்னோட கூடிட்டு போறேன்.” என்றான். செல்வராணியும் சரி என்றார்.

விஜய்யும் ஜெனியும் காலை உணவை வீட்டிலேயே முடித்துக் கொண்டு ஹோட்டல் சென்றனர். ஜெனி கருப்பு நிற உடையில் சந்தன நிற நூல்களால் வேலைப்பாடு செய்யபட்ட சுடிதார் அணிந்து, முகத்தில் லேசான ஒப்பனையிட்டு... கருப்பு நிற பொட்டும் வைத்திருக்க... அது அவளின் நிறத்தை இன்னும் எடுத்து காண்பிக்க... விஜய் அவளைப் பைக்கின் கண்ணாடி வழியாகச் சைட் அடித்துக் கொண்டே .... வாய்க்குள் ஒரு பாடலை ஹம்மிங் செய்தபடி வந்தான். அன்று அவன் மிகவும் உற்சாகமான மனநிலையில் இருந்தான்.

இருவரும் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர். ஹோட்டலுக்குப் பக்கத்தில் இருந்த காலி மனையை வாங்கி அதில் கேக் ஷாப்க்கு என்று தனியாகக் கட்டிடம் கட்டி இருந்தான். குளிர் சாதனம் செய்யப்பட்ட ஹால் மற்றும் வெளியேயும் காற்றோட்டமாக அமர்ந்து சாப்பிடும்படியும் அமைத்திருந்தான்.
 
:love: :love: :love:

நல்லா enjoy பண்ற விஜய் ஒரு நாய் குட்டி கொண்டுவந்து.........
மாமனார் வரப்போறார் நாளைக்கு....... அப்போ நீ யாரோ நான் யாரோ ஆகணுமோ???
 
Last edited:
Top