Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 12.2

Advertisement

Admin

Admin
Member



இருவரும் உள்ளே சென்றனர். அந்த ஹாலின் ஓரத்திலேயே ஒரு பெரிய டேபிள் போடப்பட்டு இருந்தது. விஜய் அவன் பாக்கெட்டில் இருந்து ஒரு தாளை எடுத்தான். அதில் அவன் ஒரு பெரிய கேக்கின் மாதிரியை பென்சிலில் வரைந்திருந்தான்.

அதைப் பார்த்த ஜெனிக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதைக் கேக்கா கொண்டு வர முடியுமா.... ஜெனி வியக்கும் போதே... விஜய் அங்கே வேலை செய்பவர்களிடம் எதையெல்லாம் தயார் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு... ஜெனியை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு துணி கடைக்கு சென்றான்.

இங்க எதுக்கு வந்திருக்கோம் என்று ஜெனி யோசிக்கும் போதே... விஜய் அவளுக்கு உடைகள் எடுத்து போட சொல்லி கடையில் இருந்த பெண்ணிடம் சொல்ல....

இப்ப எதுக்கு என்பது போல் ஜெனி பார்க்க... “நியூ இயர்க்கு என்னோட கிப்ட்...” என்ற விஜய், அவள் மறுப்பைக் காதிலேயே வாங்காமல் உடையைத் தேர்வு செய் ஆரம்பித்தான்.

பல நிறங்களில் உடை எடுத்து போட்ட கடைப் பெண்ணிடம் “ஸீ ப்ளூ மட்டும் காட்டுங்க.” என்றான். அவன் கேட்ட நிறத்திலேயே கற்களும் முத்துகளும் பதித்த நெட்டட் சுடிதார் கிடைக்க... விஜய் அதையே தேர்வு செய்தான்.

“போட்டு பார்கறீங்களா... மேடம்” கேட்ட கடை பெண்ணிடம் ஜெனி சரி என்று தலைஆட்ட... “வேண்டாம்... சரியா இருக்கும்.” என்ற விஜய் அவளை அழைத்துக் கொண்டு பில் போட செல்ல... அந்தப் பெண்ணுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை...

ஜெனிக்குச் சங்கடமாக இருந்தது. யாரையாவது எதாவது கேட்கிறான்னா பாரு... இவனே எல்லா முடிவும் எடுக்கிறான். அந்தச் சுடிதார் மட்டும் பத்தாம இருக்கட்டும். அப்புறம் இருக்கு... ஜெனி மனதிற்குள் புலம்ப...



அதை அவள் முகத்தில் இருந்தே உணர்ந்த விஜய் “கவலைப்படாதே உனக்குக் கரெக்டா இருக்கும். உனக்கு இதுக்கு முன்னாடி நான் வாங்கிக் கொடுத்தது சரியாத்தானே இருந்தது.” என்றதும், ஜெனி அதிர்ந்து போய்ப் பார்க்க....
“இப்ப எதுக்கு இந்த அதிர்ச்சி... ஜெப்ரி கல்யாணத்துக்கு உனக்குக் கொடுத்த டிரஸ்... நான் எடுத்தது தான்.” என்றான். இது வேற நடந்துச்சா... என்பது போல் ஜெனி பார்த்தாள்.



இருவரும் திரும்ப ஹோட்டலுக்கு வந்ததும், ஜெனியை அவனின் அறையில் உட்கார வைத்து விட்டு விஜய் மட்டும் அவன் வேலையைப் பார்க்க சென்றவன், சிறிது நேரம் சென்று வந்து அவளைக் கேக் செய்வதற்கு அழைத்தான். ஜெனிக்கு அவன் கேக் செய்வதைப் பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்தது.

ஜெனியை ஒரு சேரில் அமர வைத்த விஜய்... அவன் மட்டும் டேபிளின் முன்புறம் நின்று கொண்டான். அவன் கைகளுக்கு உரை... தலையில் தொப்பி எல்லாம் அணிந்து இருந்தான்.

முதலில் டேபிளின் மீது சில்வர் நிறத்தில் ஒரு அட்டையை விரித்து நடுவில் ஒரு போலை வைத்தனர். பிறகு போலுக்கு இருபக்கமும்.... முன்று அடுக்குக் கோபுரம் போல் ப்ளைன் கேக்கை அடுக்கினர். பிறகு அந்தப் போலின் உள்ளே நுழைத்து, ஐந்து அடுக்காகக் கோபுரம் போல் கேக்கை அடுக்கி விட்டு..... அதில் முழுவதும் க்ரீமை பூசினார்கள்.

விஜய் கோன்னில் இருந்த க்ரீமால் படம் வரைய... அழகான ஓவியம் அதில் உருவானது... வெகு நுணுக்கமான வேலை....விஜய்யின் கவனம் முழுவதுமே அதில் தான் இருந்தது. சிப்பி, கற்கள், வண்ண மீன்கள் என்று ஏற்கனவே நிறைய ஐசிங் செய்து வைத்திருந்தனர். அதையெல்லாம் எடுத்து அழகாக அங்கங்கே வைத்து க்ரீமால் கேக்கை சுற்றி வரைந்து கொண்டிருந்தான்.

ஓரளவு பேஸ் தயாரானதும் நேரத்தை பார்க்க மணி மூன்று . அப்போதுதான் விஜய்க்கு ஜெனி ஞாபகமே வந்தது. அவன் அவளைப் பார்க்க... அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சாரி டா... லேட் ஆகிடுச்சு சாப்பிடுவோமா...” விஜய் கேட்க...

“இருக்கட்டும் நீங்க கேக் முடிச்சிட்டு வாங்க...” என்றாள் ஜெனி.

“அது இப்ப முடியாது... வா சாப்டிட்டு வருவோம்.” ஜெனியை அழைத்துக் கொண்டு விஜய் சாப்பிட செல்ல... அப்போது எதிரில் ஹோட்டலில் வேலை செய்யும் ஆள் ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பா நிறைய உணவை வெளியில் கொண்டு சென்றார்.

விஜய் ஜெனியுடன் பேசிக் கொண்டே சாப்பிடுவதற்காக ஒரு குடிலுக்குள் சென்று உட்கார... அவன் எதிரில் அமர்ந்த ஜெனி “இப்ப ஒருத்தர் சாப்பாடு கொண்டு போனாரே... அவ்வளவு சாப்பாடும் வேஸ்ட்டா.... என்ன செய்வீங்க? கீழ போட்டுடுவீங்களா... ஏதாவது நாய்ங்களுக்காவது கொடுக்கலாமே...” வாய் இல்லாத ஜீவனாவது சாப்பிடட்டுமே... என்ற நல்ல எண்ணத்தில் ஜெனி சொல்ல...

விஜய் உடனடியாக எந்தப் பதிலும் சொல்லவில்லை... சர்வரை அழைத்து உணவு கொண்டு வர சொன்னவன், அவர் உணவுடன் வந்து பரிமாறிவிட்டுச் செல்லும் வரை எதுவும் பேசவில்லை....

ரொம்ப அதிகம் பேசிட்டோமோ என்ற கவலையில் ஜெனி சாப்பிட ஆரம்பித்தாள்.

“ஜெனி நீ நாய்க்கு சாப்பிட கொடுக்கலாமேன்னு நினைக்கிற... இங்க நிறைய மனுஷங்களுக்கு முதல்ல சாப்பாடு இல்லை... எத்தனை பேரு மூன்னு வேலை சாப்பாடுக்கு கூட வழி இல்லாம இருக்காங்க தெரியுமா...”

“இந்தச் சாப்பாடு ஹோட்டல்ல சாப்பிட்டவங்க, அவங்க தட்ல மிச்சம் வச்சது. அது எல்லாம் எடுத்து வச்சிருப்போம். இங்க பக்கத்தில ஒரு குப்பம் இருக்கு... அங்க இருக்கவங்க வந்து எடுத்திட்டு போவாங்க.”

கேட்கவே ஜெனிக்கு ஒரு மாதிரி இருந்தது. எச்சில் உணவை நாய்க்குக் கொடுத்தால் கூடப் பரவாயில்லை... அதைப் போய் மனிதர்களுக்கா என்று நினைத்தாள்.

அவள் நினைப்பது விஜய்க்குப் புரியாமல் இல்லை...

“ஜெனி நம்ம நாட்டில நிறையப் பேர் ஒரு வேலை உணவு கூடச் சாப்பிட வழியில்லாமதான் இருக்காங்க. எத்தனையோ குழந்தைகள் பசியில இறந்து கூடப் போறாங்க...”



“அதே மக்கள் இருக்கிற இந்த நாட்டிலதான் உணவு பொருட்கள் நிறைய மிஞ்சி வீணாகுது. நாம வீணாக்கிற ஒவ்வொரு வாய் உணவும் இன்னொருத்தரை சேர்ந்தது... உணவு பொருட்களை வீணாக்குவது கூடச் சர்வதேச குற்றம்தான். அதுவும் உணவில்லாம உயிரை விடும் மக்கள் இருக்கிற நம்ம நாட்டில கண்டிப்பா குற்றம் தான்.”

“ஒன்னு மிஞ்சாம சமைக்கணும் இல்லை... அப்படி மிஞ்சினா இல்லதவங்களுகாவது கொடுக்கணும். யாருக்கும் கொடுக்காம குப்பையில் போட்டு வீணாக்குவது குற்றம்தான்.”

“எதோ என்னால முடிஞ்ச போது... நான் இவங்களுக்குப் புது உணவை கொடுக்கிறேன். மத்த நேரம் மண்ணுல வீணா போற உணவை அவங்களுக்குக் கொடுக்கிறேன்.” என்று விஜய் சொன்னது போது... ஜெனிக்கு உண்மையிலேயே ஆச்சர்யமாக இருந்தது.



விஜய்யை பற்றி நினைத்த போது.... அவன் வீட்டிற்குச் செல்லப் பிள்ளை... இவனுக்கு எங்கே மற்றவர்களின் கஷ்ட்டம் தெரியப்போகுது... என்றுதான் நினைத்திருந்தாள்... உண்மையிலேயே அவனின் நல்ல குணம், மற்றவர்களைப் பற்றிச் சிந்திப்பது எல்லாம்... அவன் மேல் ஒரு தனிப்பட்ட மரியாதையை உருவாக்கியது.

சாப்பிட்டதும் இருவரும் மீண்டும் கேக் செய்யச் சென்றனர். எட்டு மணி வரை விஜய் அங்கிருந்து அசையவே இல்லை... நடுவில் ஒரு டீ குடித்ததோடு சரி....

கடலின் நடுவில்... ஒரு சின்ன அரண்மனை அதைத்தான் விஜய் கேக்கில் செய்திருந்தான். இள நீல நிறத்தில் அடுக்காடுக்காக இருந்த கேக்கில் ஒவ்வொரு அடுக்கிலும் கடல் தேவதை, மீன்கள் என்று க்ரீமால் அழகாக வரைந்திருந்தவன், உச்சியில் சாக்லேட் ஷீட்டில் ஒரு குட்டி அரண்மனை செய்திருந்தான். கீழே முழுவதும் சிப்பி... கொடி.. மீன்கள்... பாறை என்று பார்க்க... கடல் போல் தத்ருபமாக வந்திருந்தது.

“இந்த அரண்மனையில ஒரு இளவரசி இருக்க மாதிரி வச்சா நல்லா இருக்காது...” ஜெனி கேட்க...

“இளவரசி தான அவங்க நாளைக்கு வருவாங்க...” விஜய்யின் முகத்தில் ரகசிய புன்னகை...

கேக்கை பத்திரபடுத்த சொல்லிவிட்டு... விஜய் ஜெனியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான். வீட்டில் ஆரோகியராஜும், ஸ்டீபன்னும் வந்திருந்தனர்.



ஸ்டீபன் ஜெனியை ஆர்வமாகப் பார்க்க... ஜெனியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் புன்னகையும் அவருக்கு நிம்மதியை கொடுத்தது.

அன்று இரவு புத்தாண்டு பிறப்பதால்... குடும்பத்தினர் அனைவரும் தேவலாயத்திற்குச் சென்று வழிபட்டு விட்டு அதிகாலையில்தான் வீட்டிற்கு வந்தனர்.

அன்று காலை பத்து மணிக்குதான் கேக் ஷாப் திறப்பு விழா... அதனால் சீக்கிரமே எழுந்த விஜய் ஜெனியிடம் அவன் வாங்கிய உடையைக் கொடுத்து.. அதை அணிந்து கொண்டு வர சொல்லிவிட்டு ஹோட்டல் சென்றுவிட்டான்.

ஜெனி செல்வராணியிடம் அந்த உடையைக் காண்பித்து விஜய் வாங்கிக் கொடுத்தான் என்று சொன்னவள், அதே போல் லீனாவிடமும் சென்று காட்டினாள். இரு அம்மாக்களுக்குமே மகிழ்ச்சி.

ஜெனி விஜய் வாங்கிக் கொடுத்த உடை அணிந்து தயாராகி வர.... அவள் கழுத்தில் ஒரு வைர நெக்லஸ் அணிவித்த செல்வராணி அதற்க்கு பொருத்தமான காதணியையும் கொடுக்க... ஜெனி வேண்டாம் என்று மறுத்தாள்.


“என்னைக்கா இருந்தாலும் உனக்குச் சேர வேண்டியது தான். இந்த டிரஸ்க்கு ரொம்பப் பொருத்தமா இருக்கும் போட்டுக்கோ...” என்றார்.

ஜெனி தன் பெற்றோரை பார்க்க... அவர்களும் வைரநகை என்பதால் தயங்கினர்.

“வர்ற ஞாயிற்றுக் கிழமை நாங்க ஜெனியை விஜய்க்கு நிச்சயம் செய்ய வர்றோம்.” என்று அவர்கள் தயக்கத்திற்குச் செல்வராணி முற்றுப் புள்ளி வைக்க... ஸ்டீபன்னும், லீனாவும் மிகவும் மகிழ்ந்தனர். ஆரோக்கியராஜும் தன் மருமகளைச் சந்தோஷமாகப் பார்த்திருந்தார்.

இவர்கள் எல்லோரும் ஹோட்டல் சென்று சேர்ந்த போது விஜய் அவர்களை வாசலில் நின்று வரவேற்றான். எல்லோரிடமும் பேசினாலும் அவன் கண்கள் ஜெனியின் மீதுதான் இருந்தது. சுருளான கூந்தள் இருபக்க மார்பில் தவழ.... நீல நிற உடையில் இளவரசி போல்தான் இருந்தாள்.

நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களைத்தான் அழைத்திருந்தனர். செல்வராணி தான் ரிப்பன் வெட்டினார். அப்போதுதான் ஜோசபின் குடும்பம் உள்ளே நுழைந்தது. தன் அம்மாவின் கையால் ரிப்பன் வெட்டி கடையைத் திறந்த விஜய்... ஜெனியை அழைத்துக் கேக்கை வெட்ட சொல்ல...

“நான்னா...” ஜெனி ஆச்சர்யப்பட...

“நீ தானே நேத்து இளவரசி கேட்ட... நீதான் அந்த இளவரசி அதனால நீயே கேக் வெட்டு...” என்று விஜய் அவள் கைபிடித்து அழைத்துச் செல்ல...



அவன் ஏன் அவளுக்கு நீல நிறத்தில் உடை வாங்கினான் என்று ஜெனிக்கு இப்போது புரிந்தது. ஆனால் அவள் கேக் வெட்ட ஒத்துக் கொள்ளவே இல்லை...




“நீங்கதான் எல்லாம் கஷ்ட்டப்பட்டுச் செஞ்சீங்க... நீங்களே வெட்டுங்க ப்ளீஸ்...” ஜெனி மறுக்க... விஜய் அவளை விடவில்லை...

ஜெனி விஜய்யிடமே கத்தியை நீட்ட... விஜய் அவள் கைபிடித்துக் கேக் வெட்டினான். அது இன்னும் பார்க்க கவிதையாய் இருந்தது. அவர்களைப் பெற்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி... அவர்கள் இருவரையும் சேர்த்து பார்த்த மைகேல் மற்றும் மற்ற நண்பர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

லின்சி பொறாமையில் வெந்து கொண்டிருந்தாள்... அவள் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவேயில்லை... அவர் மனதில் நினைத்து வந்த திட்டம் தவிடுபொடி ஆனதில் மனதில் கோபம் கொந்தளிக்க விஜய்யையும் ஜெனியையும் வெறித்தபடி நின்றிருந்தாள்.

மறுநாள் வந்த தமிழ் ஆங்கிலச் செய்திதாள்களில்.. விஜய்யின் கடை திறப்பு விழாவை பற்றியும்... விஜய் ஜெனி சேர்ந்திருந்த புகைப்படமும் வெளியாகி இருந்தது. அதில் அவர்களை வருங்காலத் தம்பதிகள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
 
:love: :love: :love:

சூப்பர் விஜய்........ அசத்திட்ட போ.........
அடுத்த வாரம் நிச்சயமாம்.........

அதுக்குள்ளே இங்கே ஒன்னு வெந்து சாகுதே........
வருங்கால தம்பதிகள் போட்டோ ராஜேஷ் பார்த்துடுவானா???
 
Last edited:
Top