Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 9.2

Advertisement

Admin

Admin
Member



“நீ ஒழுங்கா இருப்பேன்னு உறுதியா தெரிஞ்சாதான் என்னால நிம்மதியா இருக்க முடியும். நான் உன்னை வேவு பார்த்திட்டே இருக்க முடியாது. நீயே செஞ்சது தப்புன்னு உணர்ந்து திருந்தினாத்தான் உண்டு. நான் மேலும் யார் கிட்டயும் அசிங்கப்பட முடியாது.”

“நீ என்ன சொல்ற ஒழுங்கா இருப்பியா... இல்லை... நான் வேற முடிவு எடுக்கட்டுமா...” என்ற போது “சாரி ப்பா இனி ஒழுங்கா இருக்கேன். I promise....” என்றாள் ஜெனி குரலில் உறுதியுடன்.



ஜெனியின் தோற்றத்தை பார்த்து ஸ்டீபன்னுக்கே வருத்தமாக இருந்தது. ஜெனி குழந்தையாக இருக்கும் போது மிகவும் அமைதியாக இருப்பாள். அவள் வீட்டில் இருப்பதே தெரியாது... ஸ்டீபன் எதாவது வேலை செய்தால் பக்கத்தில் உட்கார்ந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பாள். அப்போது எல்லாம் அவர் அவளை ஆசையாகத் தூக்கி வைத்து கொஞ்சுவார்.

இருவருமே பெண் பிள்ளைகள் என்பதால்... அவர்கள் வளர வளர ஸ்டீபன் தள்ளி நின்று அவர்களை ரசிக்க ஆரம்பித்தார். கண்டிப்புடன் இருந்தால் தான் தவறான வழிக்குப் போகமாட்டார்கள் என்று அவர் அணிந்து கொண்ட கோபம் என்ற முகமூடி... பருவ வயதை எட்டிய போது அவர் பெண்கள் இருவரையும் முழுமையாக அவரிடமிருந்து விலகி நிற்க வைத்தது.

தான் இன்னும் அவர்களிடம் அன்பாக இருந்திருக்கலாமோ... மனதில் வைத்திருக்கும் பாசத்தை வெளிகாட்டததால்தான் தன் பெண் வேறு ஒருவனின் அன்பை எதிர்பார்த்ததாலோ என்று மனதிற்குள் அவர் தவிக்க... இதற்க்கு மேலும் அதை மறைத்து வைத்திருக்க முடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை.

ஜெனியை பார்த்துக் கை நீட்டி ஸ்டீபன் வா என்று அழைக்க... ஒரு நொடி புரியாமல் பார்த்தவள், தன் தந்தையின் கையை வேகமாகப் பற்றியபடி அவரின் அருகே சென்று அமர... ஸ்டீபன் அவளை அனைத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டார்.


பல வருடங்கள் தாண்டி கிடைத்த தந்தையின் அன்பு ஜெனியை நெகிழ செய்ய... அவள் கண்கள் கண்ணீரை பொழிந்தது.

“அப்பா எது செஞ்சாலும் உன் நல்லதுக்குத் தான்செய்வேன் ஜெனி... நீ அதை இன்னொரு நாள் புரிஞ்சிப்ப...” ஸ்டீபன் சொல்ல...

ஜெனி அதை அமோதிப்பதை போல் தலை அசைத்தாள். ஸ்டீபன் அவளின் தலையில் முத்தமிட... “I’m sorry pa… நான் உங்களை ரொம்பக் கஷ்ட்டபடுத்திட்டேன்.”



“Its ok da… இதெல்லாம் நமக்கு ஒரு பாடம்.” அந்த நொடி வீட்டினர் அனைவருமே மனதளவில் மிகவும் நெகிழ்ந்து போய் இருந்தனர். ஸ்டீபன் புனிதாவை அழைத்துத் தன் மறுபக்கத்தில் உட்காரவைத்து அவளையும் தன் மறுகரத்தால் அணைத்துக்கொண்டார்.

“God blessed me with two angels. நான் எப்பவுமே அப்படித்தான் நினைச்சுப்பேன்.” ஸ்டீபனின் குரலில் மகிழ்ச்சி, பெருமிதம் எல்லாமே இருந்தது. லீனா அவர்களை மகிழ்ச்சியுடன் கண்கலங்க பார்த்திருந்தார்.

அன்று மத்தியதிற்கு மேல் ஸ்டீபன் சென்று புனிதாவை அவள் புகுந்த வீட்டில் விட்டுவிட்டு வந்தார். ஜெனிதான் புனிதா இல்லாமல் தவித்துப் போனாள். அவள் மனதிற்கு ஒரு மாற்றமாக இருக்கட்டும் என்று நினைத்த ஸ்டீபன், குடும்பத்துடன் தன் சொந்த ஊரான நாகர்கோயிலுக்குப் பயணமானார். லீனாவுக்கும் அதே ஊர்தான்.

ஒரு வாரம் தன் பெற்றோர் இருவரின் வீட்டிலும் மாறி மாறி இருந்தது ஜெனிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. புனிதாவின் திருமணத்திற்கு வந்து விட்டு உறவினர்கள் அனைவரும் அன்றே திரும்பி இருந்தனர். இப்போது எல்லோரோடும் உட்கார்ந்து நிதானமாக அரட்டை அடிப்பது. அவள் மனதை லேசாக்கி இருந்தது.

ஸ்டீபன் விரும்பி அழைத்ததால்.... அந்த வார இறுதியில் ஜெப்ரி புனிதாவோடு நாகர்கோவில் வந்தான். புதிதாகத் திருமணமானவர்கள் என்பதால் உறவினர்கள் அவர்களுக்கு விருந்து வைத்து அசத்தினர். இரண்டு நாட்கள் சென்று எல்லோரும் ஒன்றாகச் சென்னை வந்து இறங்கினர்.



ஜெனிக்கு ஊரில் இருந்து வந்து இறங்கிய மறுநாள் கல்லூரி திறந்து விட்டது. அவள் கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த போது அவளருகில் வந்த ஸ்டீபன் “ஜெனி உன்னை வேற காலேஜ் மாத்தாதுக்குக் காரணமே யாருக்கும் உன் மேல எந்தத் தவறான அபிப்ராயமும் வரக் கூடாதுன்னு தான். பார்த்து இருந்துக்கோ... ப்ரிண்ட்ஸ் அதையும் இதையும் சொல்வாங்க... நீ உன் மனசை கட்டுபாடா வச்சிகிட்டா எந்தப் பிரச்சனையும் வராது.” என்று மகளுக்கு அறிவுரை சொல்ல... ஜெனி புரிந்தது என்பது போல் தலையசைத்தாள்.



ஸ்டீபன் அவர்கள் காருக்கு ஒரு டிரைவர் போட்டு ஜெனி அதில் கல்லூரிக்கு சென்று வர ஏற்பாடு செய்திருந்தார். கல்லூரிக்குச் சென்ற போது ராஜேஷின் நினைவு ஜெனிக்கு வராமல் இல்லை... ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும் போது... அவர்கள் இருவரும் அங்கு நின்று பேசிய அனைத்தும் நினைவுக்கு வந்து அவளைக் கூறுபோட்டது. ஆனால் சில நாட்களில் கொந்தளிக்கும் உணர்வுகளை அடக்கப் பழகிக்கொண்டாள்.

கல்லூரிக் காதலில் breakup என்பது சகஜமான ஒன்று என்பதலால்... அவள் தோழிகள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.ஜெனியும் அவர்களிடம் எதையும் விளக்கி சொல்லவில்லை.

ப்ரித்வியும் புனிதாவும் US கிளம்புவதற்கு முன் இருவரின் குடும்பமும் பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஸ்டீபன் வீட்டில் நடந்த விருந்துக்கு விஜய் தவிர மற்றவர்கள் அனைவரும் வந்திருந்தனர். விஜய் எதோ சாக்கு போக்கு சொல்லி வரவில்லை....

அதே போல் ஆரோக்கியசாமி விருந்து கொடுத்த அன்று ஜெனிக்கு கல்லூரி இருந்ததால்... அவளும் விருந்துக்குச் செல்லவில்லை.

ஒரு வழியாக ப்ரித்வியும் புனிதாவும் US கிளம்பும் நாளும் வந்து விட்டது. இரண்டு நாட்கள் முன்புதான் ஜெப்ரியும் ப்ரின்சியும் லண்டன் கிளம்பி சென்றிருந்தனர்.

அவர்களை வழி அனுப்ப... இரு குடும்பமும் விமான நிலையம் வந்திருந்தனர். பாண்டிச்சேரிக்கு பிறகு இன்றுதான் விஜய்யும் ஜெனியும் மீண்டும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கிறார்கள். அன்றைய நிலையில் தான் இருவரும் இப்போதும் இருந்தனர். ஒருவரை ஒருவர் பார்பதை இருவருமே தவிர்த்தனர். விஜய் ப்ரித்வியோடு லக்கேஜ் எடுத்து வைப்பதில் பிஸியாக இருந்தான்.

செல்வராணிக்கு தன் பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்து வருவதும் போவதும் சகஜமான ஒன்று. எப்போது அவர்கள் திரும்பி சென்றாலும்.... தனியாக இருப்பார்களே என்ற கவலை இருக்கும். இந்த முறை இருவரும் திருமணம் ஆகி தங்கள் மனைவியுடன் செல்வதால்... அவர் சந்தோஷமாக இருந்தார். ஆனால் லீனாவிற்கு மகளைப் பிரிவது இதுவே முதல்முறை என்பதால் அவர் பிரிவை தாங்க முடியாமல் அழுதார்.

“வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம்ன்னு நான் சொன்னா... உங்க அப்பா கேட்கவே இல்லை... பாரு இனி நான் உன்னை எப்ப பார்ப்பேன்?” என்று லீனா புலம்ப... அவர் பேசியது கேட்கும் தொலைவில் செல்வராணி இருந்ததால்... ஜெனி அவரைச் சங்கடமாகத் திரும்பி பார்த்தாள்.

அவளை அழைத்துத் தன் அருகில் அமரவைத்த செல்வராணி “உங்க அம்மா பேசுறதை நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். கவலைப்படாதே... நானும் என் பிள்ளைங்க கிட்ட உங்களைப் பார்க்காம இருக்க முடியலை... இங்கயே வந்துடுங்கன்னு நிறையத் தடவை சொல்லி இருக்கேன். அதனால என்னால அவங்க நிலைமைய புரிஞ்சிக்க முடியும்.” என்றார்.

விமானம் கிளம்ப இன்னும் நிறைய நேரம் இருந்ததால்... ப்ரித்வி தன் தந்தை மற்றும் மாமனாருடன் பேசிக்கொண்டிருக்க... விஜய் தனியாக நின்று கொண்டிருந்தான்.

அவனைக் ஜெனியிடம் காட்டிய செல்வராணி “எனக்கு என்னோட மத்த ரெண்டு பிள்ளைங்களைப் பத்தி கவலை இல்லை. இவனை நினைச்சாத் தான் கவலையா இருக்கு...” என்றார்.

விஜய்க்கு என்ன குறை அவனை நினைத்து கவலைப்பட.. என்ன இருக்கு? என்பது போல் ஜெனி பார்க்க...

“நீ நினைக்கிறது எனக்குப் புரியுது.... அதிகமா பாசம் வைக்கிறதும் நல்லது இல்லை ஜெனி. என்னோட மத்த ரெண்டு பிள்ளைங்களும் லீவ் விட்டா ஊருக்கு போவாங்க. விஜய் என்னை விட்டுட்டு இருக்கனுமேன்னு போக மாட்டேன். வீட்ல என்னையே சுத்தி சுத்தி வருவான்.”

“எனக்கு உடம்பு முடியலைனா ரொம்ப டென்ஷன் ஆகிடுவான்.அங்க இங்க நகரவே மாட்டான். என்னோடவே இருப்பான். இப்ப எப்படி மா இருக்கு? சரி ஆகிடுச்சான்னு நூறு தடவையாவது கேட்டுடுவான். அம்மாவுக்கு எதாவது ஆகிடுமோன்னு அவ்வளவு பயம் அவனுக்கு...”

“இப்ப இவ்வளவு பெரிசா வளர்ந்தும் அப்படியேதான் இருக்கான். மாறவே இல்லை... நான் என்ன என்னைக்கும் இளமையாவே இருக்க முடியுமா.... எனக்கும் வயசாகாதா... நாளைக்கு எனக்கு ஒண்ணுன்னா இவன் எப்படித் தாங்குவான்... இதே எனக்குப் பெரிய கவலை...”

அவர் சொன்னதைக் கேட்டு ஜெனிக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது. “ஏன் ஆன்டி அப்படிச் சொல்றீங்க உங்களுக்கு ஒன்னும் ஆகாது.” என்றாள்.

“ஆகதுன்னே வச்சுப்போம். ஆனா இன்னும் இவன் எத்தனை நாள் அம்மான்னு என் பின்னாடியே சுத்துவான் நீயே சொல்லு...”

“ஆஸ்திரேலியா போய் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கப் போகும் போது... நீயும் வான்னு ஒரே பிடிவாதம்... இவனை அனுப்பி விடுறதுக்குள்ள நான் பட்டபாடு எனக்குத் தான் தெரியும்.”

செல்வராணி சொன்னதைக் கேட்ட ஜெனிக்கு ஒரே சிரிப்பு “ஆன்டி அவருக்குக் கல்யாணம் ஆன பிறகு... அவர் உங்களைக் கண்டுக்காம இருக்கப் போறார்... நீங்க அப்ப பீல் பண்ண போறீங்க... பாருங்க.” என்றாள் விளையாட்டாக... செல்வராணி ஆரம்பத்தில் இருந்தே அவளிடம் நன்றாகப் பேசுவதால்.... ஜெனியும் மனதில் நினைப்பதை தயங்காமல் பேசிவிட்டாள்.

“அப்படி மட்டும் நடந்தா... நான் உன் வாய்க்கு சக்கரை போடுறேன். விடுதலை... விடுதலை... விடுதலை....” செல்வராணி பாவனையோடு பேசியதை பார்த்து ஜெனியின் புன்னகை மேலும் பெரிதாக... இவர்கள் இருவரும் பேசி சிரிப்பதை விஜயும் பார்காதது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

எதேச்சையாகத் திரும்பிய ஜெனி விஜய்யை பார்ததும் அதுவரை அவள் முகத்தில் இருந்த புன்னகை நொடியில் மறைய... பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள். விஜய்க்குக் கோபம் சுள்ளென்று ஏறியது....

அப்போது பயணிகளுக்கான அழைப்பு வந்ததால்... ப்ரித்வியும் புனிதாவும் விடைபெற ஆரம்பித்தனர். அவர்கள் இருவரும் உள்ளே செல்லும் வரை மற்றவர்கள் பார்த்திருக்க...

ஜெனி தன் அக்கா உள்ளே செல்லும் கடைசி நொடி வரை கையைத்தவள் கலங்கிய கண்களோடு திரும்ப... விழிகளில் நீர் திரண்டு இருந்ததால்... பார்வை சரியாகத் தெரியவில்லை... அதனால் யார் மீதோ மோதியவள், தடுமாற...தன் மீது மோதியவளை விழுந்துவிடாமல் பிடித்து நிறுத்தினான் விஜய்.

விஜய்யின் கரங்கள் ஜெனியின் தோளை பற்றி இருக்க... ஜெனி பயத்தில் கண்களை மூடி இருந்தாள். நல்ல வேளை விழவில்லை என்று நினைத்தபடி ஜெனி கண்களைத் திறக்க... எதிரில் விஜய் நின்றான். இருவரும் வேகமாக விலகி... ஒருவரிடம் மற்றவர் மன்னிப்பு கேட்டு.... அவரவர் பாதையில் சென்றனர்.

 
:love: :love: :love:

அக்னி நட்சத்திரம் கார்த்திக் பிரபு மாதிரி முறைச்சுக்கிறாங்க.........
பிரிவொன்றை சந்தித்தேன் யாரு பாடப்போறா???

விடுதலை விடுதலை விடுதலை :D:D:D
அவ்ளோ சீக்கிரம் அம்மாக்கள் சொல்லிடுவாங்களா என்ன???
 
Last edited:
Top