மண்ணில் பிறக்கும் போதே
தந்தைக்கும் தாயானாய் !
தாய்க்கும் உயிரானாய் !
கலைகள் பல கற்று
காவியதலைவி ஆனாய் !
கற்பிக்கும் ஆசிரியரானாய்!
சிறகடித்து வானில்
பறக்கும் விமானியானாய்!
உயிர் தரும் மருத்துவரானாய் !
நாட்டை ஆளும் அரசியானாய்!
வீட்டை காக்கும்
இல்லத்தரசியானாய் !
அன்பான தாயாய்!
மடி தாங்கும் மனைவியாய் !
தோள் தரும் தோழியாய்!
எத்தனை வடிவம் ஏற்றாலும்
அத்தனையிலும்
ஜொலிக்கும் வைரமே !
உங்கள் அனைவருக்கும்
இனிய மகளிர் தின
நல்வாழ்த்துக்கள்
Last edited: