Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 7 - Weekend with Writers 3

Advertisement

பவிப்புள்ள இதெல்லாம் உனக்கு நியாயமா இருக்கா இந்த கேள்வி எல்லாம் நீ எங்க இருந்து பிடிச்சேன்னு தெரியலையே...


அக்கா...கேள்வி கேட்குறது ஈசின்னா தான் நானும் நினைச்சேன்...ஆனா எதுனாலும் செஞ்சாதானே கஷ்டம் தெரியுது.....ஹாஹா...

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:


heyyyyyyyyyyyyyy friendssssssssssssssssss....

:love::love::love::love::love::love:

ரொம்ப முன்னாடியே அக்கா கூட பேசனும்னு நினைச்சு.அவங்க abscond ஆனதால் சரயுக்காவை விட்டு பிடிச்சு....அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஅ...சவீதாக்காவை கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...


இதோ பவி அண்ட் சவீ talkss @saveethamurugesan :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love:

Letsssss Starttttttt..!!

என்னைப்பற்றி

---------------------------



பிறந்தது ராஜபாளையம், வளர்ந்தது படிச்சது எல்லாம் சென்னையில... கல்யாணத்துக்கு அப்புறமும் சென்னை வாசம் தான், கணவர்சொந்த தொழில், நானும் வேலை பார்க்கறேன், ஒரு பையன் ஒரு பொண்ணு... பையன் பேரு சிபிசரண், மூணாவது படிக்கறான், பொண்ணு பேரு அஷ்மிதா ஒரு வயசாகுது இதான் என்னோட சின்ன குடும்பம்.


1.சவீதாக்காவுக்கு வீட்ல என்ன response as a writer அஹ்


எங்கம்மா புக் படிப்பாங்க, அவங்ககிட்ட இருந்து தான் நான் படிக்கற பழக்கத்தை கத்துக்கிட்டேன்... responseன்னு பார்த்தா அவங்ககிட்ட இருந்து தான் எனக்கு கிடைச்சது, அம்மா, அக்கா அப்புறம் என்னோட ஆன்ட்டி (அம்மாவோட பிரண்ட் அவங்களும் அம்மா மாதிரி தான்)... எங்கம்மாபடிக்கறதோட நிறுத்தாம என் பொண்ணு எழுதறாஎழுதறான்னு என் சொந்தகளுக்கு எல்லாம் சொல்லி இப்போ அவங்களும் படிக்கறாங்க...


சூப்பர் மாம்...:love::love::love:

2.நீங்கள் ஒரு working woman,குடும்பம் பார்க்கனும் குட்டிப்பையன் பார்க்கனும் எப்போ எழுத ஆரம்பிச்சீங்க....முதலாக


குட்டிப்பையனை அப்போ அம்மா பார்த்துக்குவாங்க... ஆனாலும்நான் உடனேலாம் எழுதிடலை, என்னோட ஹஸ்பன்ட் தான் சும்மா கதை படிச்சுட்டே இருக்கியே இவ்வளோ படிச்சதுக்கு எழுதி இருக்கலாம்லன்னு சொன்னார்... அப்போ தான் தோணிச்சு நாம ஏன் எழுதக்கூடாதுன்னு அப்படி ஆரம்பிச்சது தான் எழுத்துப்பயணம்... 2012ல தான் என்னோட எழுத்துப்பயணம் தொடங்குச்சு...


3.எப்படி டைம் மேனேஜ் செய்றீங்க?


இப்போ கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு, பாப்பாதூங்கும் போது எழுதலாம்ன்னு உட்கார்ந்த கொஞ்ச நேரத்துல எழுந்திடுவா... நைட் டைம்ல தான் எழுத முடியுது, ஆனா யோசிச்சது உடனே எழுதிட்டா பரவாயில்லை, கொஞ்சம்லேட் ஆச்சுன்னாஎப்போ எழுத உட்காருவேனோ அப்போ புதுசா தான் யோசிக்க வேண்டி இருக்கும்...


இப்போதைக்கு வீட்டில இருந்து வேலை பார்க்கறேன், வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டா என்னோட டிராவல் டைம் தான் எனக்கு ஒரு அத்தியாயம் எழுதறதுக்கு யோசிக்கற நேரம்... முன்னெல்லாம் அப்படி தான் எழுதிட்டு இருந்தேன், அடுத்த ஜனவரில இருந்து வீட்டில இருந்து வேலை பார்க்க மாட்டேன், சோ கொஞ்சம் ஈசியாஇருக்கும்ன்னு நினைக்கிறேன் எழுதுறதுக்கு.


4.சவீதாக்காவுக்கு பிடிச்ச உங்க கதைமாந்தர்

சொட்டைத்தலையன் சுஜய் (அடிக்க வராதீங்க அவனை பட்டப்பேரு வைச்சு கூப்பிட்டேன்னு) அப்புறம் வீரா, பெண் கதாப்பாத்திரம்ன்னா மீனாட்சி



5.கண்டிப்பா எழுத வந்த பின் ஒரு சில மாற்றம் இருக்கும்...என்ன மாற்றம்?


நானும் ரவுடி தான் மாதிரி நானும் writer தானுங்க அப்படிங்கற மாற்றம், அப்புறம்ஒருமாற்றம்ன்னா அது என்னோட நட்புகள் தான், நிறைய உறவுகள், நட்புகள் எனக்கு கிடைச்சது இந்த எழுத்து மூலமா... எனக்கு நிறைய நட்புகள் எப்பவும் உண்டு, ஆனா இது ரொம்ப ஸ்பெஷல்ஆ இருந்துச்சு, இருக்கு, எப்பவும் இருக்கும்...

6.உங்க கதைக்கு வந்த முதல் comment ?யார் ?


என்னோடமுதல் கதை சட்டென்று மாறுது வானிலை நான் முதல்ல எழுதினது டைரில தான், நான் இப்படி ஒரு கதை எழுதப்போறேன்னு சொன்னதும் என்னோட ஆபீஸ்ல என்கூட வேலைப்பார்த்த ஹேமாவும், கலையும் தான் ரொம்பவே என்கரேஜ் பண்ணாங்க... அவங்க தான் என்னோட ஒவ்வொரு அத்தியாயமும் படிச்சுட்டு சொல்லுவாங்க... ஹேமா தான் முதல்ல படிச்சு கமென்ட் சொன்னது...



7.சமையல்ல முதன் முதலா சொதப்புன டிஷ்


என் சித்தப்பா எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க, அம்மா எங்கயோ போய்ட்டாங்க, அக்காவும் வீட்டில இல்லை... சித்தப்பாவும் மாமாவும் வந்திருந்தாங்க... நான் உங்களுக்கு தோசை சுட்டுத்தர்றேன் எனக்கு தெரியும்ன்னு சொல்லிட்டு எல்லாம் ரெடி பண்ணிட்டேன், சட்னி அரைக்கும் போது சீரகத்தை போட்டு அரைச்சிட்டேன்... எங்கம்மா எப்பவும் அதைப்போட்டு என்னை அரைக்க சொல்வாங்க ஆனா அது குழம்புக்கு ஊத்தன்னு அப்போ எனக்கு தெரியாது... அதனால நான் சட்னியை அப்படி அரைச்சு வைக்கா என் சித்தப்பாவோ மக மனசு நோகக் கூடாதுன்னு ரொம்ப நல்லாயிருக்குடான்னு சொன்னாங்க... நான் சொதப்பினதுனா அது மட்டும் தான்...

புது ரெசிபி சீரக சட்னி....:p


8.உங்களை பத்தி ஒரு புரளி கிளப்பனும்னா என்ன சொல்வீங்க?


நான் பாதியில விட்ட ரெண்டு கதையை முடிச்சிட்டேன்னு வேணா ஒரு புரளி கிளப்பலாம்...


இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன்...ஆமா....:ROFLMAO::ROFLMAO:

9.நம்ம என்ன தான் எழுதினாலும் ஒரு குறிப்பிட்ட தருணம் உங்களுக்கு உங்களை writer னு ஒரு உணர்வு கொடுத்து இருக்கும்.


எப்போ? எப்படி?:love:



என்னோட அம்மாவோட அண்ணன்அவங்க வக்கீல், சின்ன வயசுல இருந்தே அவங்களை வக்கீல் மாமான்னு கூப்பிட்டே பழக்கம் எங்களுக்கு. சின்ன வயசுல அவங்க என்னை ஒரு மூலையில போய் உட்காரு கையை கட்டு அப்படின்னு சொன்னா நான் பயந்துக்கிட்டே போய் உட்காருவேன் கையை கட்டிட்டு, அவங்களா எழுந்து வான்னு சொல்ற வரை அப்படியே இருப்பேன்... அந்த மாமா ஒரு அதட்டு போட்டா கண்ணுல தண்ணி குளம் மாதிரி கட்டிக்கும் எனக்கும்... அந்த மாமாகிட்ட இருந்து சமீபத்துல ஒரு பாராட்டு... அவங்க பொண்ணோட வீடு சிங்கப்பூர்ல இருக்கு... ரொம்ப நாளாச்சு அவங்களோட எல்லாம் பேசி, எதுவும் விசேஷ வீட்டுக்கு போனா பார்க்கறதோட சரி... திடிர்னு எனக்கு மெசெஜ் வந்துச்சு அவங்ககிட்ட இருந்து... சவீதா உன்னோட புத்தகம் இங்க இருக்க சிங்கப்பூர் லைபிரரியில பார்த்தேன், எனக்கு அவ்வளவு பெருமையா சந்தோசமா இருந்துச்சு, வாழ்த்துக்கள்மான்னு போட்டிருந்தாங்க... அந்த தருணம் எனக்கு அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு...

செம க்கா....சூப்பர்....அவ்வளவு பயந்த புள்ளையா நீங்க....:p

10.ஒரு ப்ரபலமா நீங்க வாழனும் ஒரு நாள் யாரை select செய்வீங்க?

(மை மைன்ட்வாய்ஸ்: சாய்ஸ்ல எல்லாம் விட முடியாதா, எல்லா கேள்விக்கும் நான் பதில் சொல்லியே ஆகணுமா... எக்ஸாம்ல கூட நான் இவ்வளவு கஷ்டப்படலையே இந்த பொண்ணு என்னை வைச்சு செய்யறாளே)

ஹி ஹி உங்களுக்கு skip option கொடுக்க மறந்துட்டேன் சிஸ்டர்...:ROFLMAO::ROFLMAO::p


இதுக்கு என்னோட பதில் அப்படி நான் வாழ ஆசைப்படலை, நமக்கு பிடிச்ச அந்த பிரபலமா அவங்க மட்டும் தானே இருக்க முடியும், நாம அவங்களா மாறணும்ன்னா அது நாமகிடுவோமே... நாம அவங்களானா நம்மோட குணம் தானே வெளிப்படும்... சோ அது வேணாம் எப்பவும்...

தெரியாமா கேட்டேன்...என்ன விளக்கம்:cautious:o_O:p

11.உங்க பெஸ்ட் கதை

இதை நான் சொல்றதைவிட நம்ம கதையைபடிக்கறவங்க சொன்னா தான் நல்லா இருக்கும்... நான் எனக்கு ரொம்பவும் பிடிச்ச கதையை வேணா சொல்றேன், எல்லா கதையும் பிடிக்கும் ஆனா ரொம்பவும் அனுபவிச்சு எழுதினது ஆத்தங்கரை மரமே, செவ்வந்தி பூவெடுத்தேன் இது ரெண்டும் எனக்கு எப்பவும் பிடிக்கும்...
உங்க கதையில் செவ்வந்தி பூவெடுத்தேன் எனக்கும் ரொம்ப பிடித்த கதை மேம் ?
 
Top