Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 7 - Weekend with Writers 3

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
பவிப்புள்ள இதெல்லாம் உனக்கு நியாயமா இருக்கா இந்த கேள்வி எல்லாம் நீ எங்க இருந்து பிடிச்சேன்னு தெரியலையே...


அக்கா...கேள்வி கேட்குறது ஈசின்னா தான் நானும் நினைச்சேன்...ஆனா எதுனாலும் செஞ்சாதானே கஷ்டம் தெரியுது.....ஹாஹா...

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:


heyyyyyyyyyyyyyy friendssssssssssssssssss....

:love::love::love::love::love::love:

ரொம்ப முன்னாடியே அக்கா கூட பேசனும்னு நினைச்சு.அவங்க abscond ஆனதால் சரயுக்காவை விட்டு பிடிச்சு....அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஅ...சவீதாக்காவை கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...


இதோ பவி அண்ட் சவீ talkss @saveethamurugesan :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love:

Letsssss Starttttttt..!!

என்னைப்பற்றி

---------------------------



பிறந்தது ராஜபாளையம், வளர்ந்தது படிச்சது எல்லாம் சென்னையில... கல்யாணத்துக்கு அப்புறமும் சென்னை வாசம் தான், கணவர்சொந்த தொழில், நானும் வேலை பார்க்கறேன், ஒரு பையன் ஒரு பொண்ணு... பையன் பேரு சிபிசரண், மூணாவது படிக்கறான், பொண்ணு பேரு அஷ்மிதா ஒரு வயசாகுது இதான் என்னோட சின்ன குடும்பம்.


1.சவீதாக்காவுக்கு வீட்ல என்ன response as a writer அஹ்


எங்கம்மா புக் படிப்பாங்க, அவங்ககிட்ட இருந்து தான் நான் படிக்கற பழக்கத்தை கத்துக்கிட்டேன்... responseன்னு பார்த்தா அவங்ககிட்ட இருந்து தான் எனக்கு கிடைச்சது, அம்மா, அக்கா அப்புறம் என்னோட ஆன்ட்டி (அம்மாவோட பிரண்ட் அவங்களும் அம்மா மாதிரி தான்)... எங்கம்மாபடிக்கறதோட நிறுத்தாம என் பொண்ணு எழுதறாஎழுதறான்னு என் சொந்தகளுக்கு எல்லாம் சொல்லி இப்போ அவங்களும் படிக்கறாங்க...


சூப்பர் மாம்...:love::love::love:

2.நீங்கள் ஒரு working woman,குடும்பம் பார்க்கனும் குட்டிப்பையன் பார்க்கனும் எப்போ எழுத ஆரம்பிச்சீங்க....முதலாக


குட்டிப்பையனை அப்போ அம்மா பார்த்துக்குவாங்க... ஆனாலும்நான் உடனேலாம் எழுதிடலை, என்னோட ஹஸ்பன்ட் தான் சும்மா கதை படிச்சுட்டே இருக்கியே இவ்வளோ படிச்சதுக்கு எழுதி இருக்கலாம்லன்னு சொன்னார்... அப்போ தான் தோணிச்சு நாம ஏன் எழுதக்கூடாதுன்னு அப்படி ஆரம்பிச்சது தான் எழுத்துப்பயணம்... 2012ல தான் என்னோட எழுத்துப்பயணம் தொடங்குச்சு...


3.எப்படி டைம் மேனேஜ் செய்றீங்க?


இப்போ கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு, பாப்பாதூங்கும் போது எழுதலாம்ன்னு உட்கார்ந்த கொஞ்ச நேரத்துல எழுந்திடுவா... நைட் டைம்ல தான் எழுத முடியுது, ஆனா யோசிச்சது உடனே எழுதிட்டா பரவாயில்லை, கொஞ்சம்லேட் ஆச்சுன்னாஎப்போ எழுத உட்காருவேனோ அப்போ புதுசா தான் யோசிக்க வேண்டி இருக்கும்...


இப்போதைக்கு வீட்டில இருந்து வேலை பார்க்கறேன், வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டா என்னோட டிராவல் டைம் தான் எனக்கு ஒரு அத்தியாயம் எழுதறதுக்கு யோசிக்கற நேரம்... முன்னெல்லாம் அப்படி தான் எழுதிட்டு இருந்தேன், அடுத்த ஜனவரில இருந்து வீட்டில இருந்து வேலை பார்க்க மாட்டேன், சோ கொஞ்சம் ஈசியாஇருக்கும்ன்னு நினைக்கிறேன் எழுதுறதுக்கு.


4.சவீதாக்காவுக்கு பிடிச்ச உங்க கதைமாந்தர்

சொட்டைத்தலையன் சுஜய் (அடிக்க வராதீங்க அவனை பட்டப்பேரு வைச்சு கூப்பிட்டேன்னு) அப்புறம் வீரா, பெண் கதாப்பாத்திரம்ன்னா மீனாட்சி



5.கண்டிப்பா எழுத வந்த பின் ஒரு சில மாற்றம் இருக்கும்...என்ன மாற்றம்?


நானும் ரவுடி தான் மாதிரி நானும் writer தானுங்க அப்படிங்கற மாற்றம், அப்புறம்ஒருமாற்றம்ன்னா அது என்னோட நட்புகள் தான், நிறைய உறவுகள், நட்புகள் எனக்கு கிடைச்சது இந்த எழுத்து மூலமா... எனக்கு நிறைய நட்புகள் எப்பவும் உண்டு, ஆனா இது ரொம்ப ஸ்பெஷல்ஆ இருந்துச்சு, இருக்கு, எப்பவும் இருக்கும்...

6.உங்க கதைக்கு வந்த முதல் comment ?யார் ?


என்னோடமுதல் கதை சட்டென்று மாறுது வானிலை நான் முதல்ல எழுதினது டைரில தான், நான் இப்படி ஒரு கதை எழுதப்போறேன்னு சொன்னதும் என்னோட ஆபீஸ்ல என்கூட வேலைப்பார்த்த ஹேமாவும், கலையும் தான் ரொம்பவே என்கரேஜ் பண்ணாங்க... அவங்க தான் என்னோட ஒவ்வொரு அத்தியாயமும் படிச்சுட்டு சொல்லுவாங்க... ஹேமா தான் முதல்ல படிச்சு கமென்ட் சொன்னது...



7.சமையல்ல முதன் முதலா சொதப்புன டிஷ்


என் சித்தப்பா எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க, அம்மா எங்கயோ போய்ட்டாங்க, அக்காவும் வீட்டில இல்லை... சித்தப்பாவும் மாமாவும் வந்திருந்தாங்க... நான் உங்களுக்கு தோசை சுட்டுத்தர்றேன் எனக்கு தெரியும்ன்னு சொல்லிட்டு எல்லாம் ரெடி பண்ணிட்டேன், சட்னி அரைக்கும் போது சீரகத்தை போட்டு அரைச்சிட்டேன்... எங்கம்மா எப்பவும் அதைப்போட்டு என்னை அரைக்க சொல்வாங்க ஆனா அது குழம்புக்கு ஊத்தன்னு அப்போ எனக்கு தெரியாது... அதனால நான் சட்னியை அப்படி அரைச்சு வைக்கா என் சித்தப்பாவோ மக மனசு நோகக் கூடாதுன்னு ரொம்ப நல்லாயிருக்குடான்னு சொன்னாங்க... நான் சொதப்பினதுனா அது மட்டும் தான்...

புது ரெசிபி சீரக சட்னி....:p


8.உங்களை பத்தி ஒரு புரளி கிளப்பனும்னா என்ன சொல்வீங்க?


நான் பாதியில விட்ட ரெண்டு கதையை முடிச்சிட்டேன்னு வேணா ஒரு புரளி கிளப்பலாம்...


இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன்...ஆமா....:ROFLMAO::ROFLMAO:

9.நம்ம என்ன தான் எழுதினாலும் ஒரு குறிப்பிட்ட தருணம் உங்களுக்கு உங்களை writer னு ஒரு உணர்வு கொடுத்து இருக்கும்.


எப்போ? எப்படி?:love:



என்னோட அம்மாவோட அண்ணன்அவங்க வக்கீல், சின்ன வயசுல இருந்தே அவங்களை வக்கீல் மாமான்னு கூப்பிட்டே பழக்கம் எங்களுக்கு. சின்ன வயசுல அவங்க என்னை ஒரு மூலையில போய் உட்காரு கையை கட்டு அப்படின்னு சொன்னா நான் பயந்துக்கிட்டே போய் உட்காருவேன் கையை கட்டிட்டு, அவங்களா எழுந்து வான்னு சொல்ற வரை அப்படியே இருப்பேன்... அந்த மாமா ஒரு அதட்டு போட்டா கண்ணுல தண்ணி குளம் மாதிரி கட்டிக்கும் எனக்கும்... அந்த மாமாகிட்ட இருந்து சமீபத்துல ஒரு பாராட்டு... அவங்க பொண்ணோட வீடு சிங்கப்பூர்ல இருக்கு... ரொம்ப நாளாச்சு அவங்களோட எல்லாம் பேசி, எதுவும் விசேஷ வீட்டுக்கு போனா பார்க்கறதோட சரி... திடிர்னு எனக்கு மெசெஜ் வந்துச்சு அவங்ககிட்ட இருந்து... சவீதா உன்னோட புத்தகம் இங்க இருக்க சிங்கப்பூர் லைபிரரியில பார்த்தேன், எனக்கு அவ்வளவு பெருமையா சந்தோசமா இருந்துச்சு, வாழ்த்துக்கள்மான்னு போட்டிருந்தாங்க... அந்த தருணம் எனக்கு அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு...

செம க்கா....சூப்பர்....அவ்வளவு பயந்த புள்ளையா நீங்க....:p

10.ஒரு ப்ரபலமா நீங்க வாழனும் ஒரு நாள் யாரை select செய்வீங்க?

(மை மைன்ட்வாய்ஸ்: சாய்ஸ்ல எல்லாம் விட முடியாதா, எல்லா கேள்விக்கும் நான் பதில் சொல்லியே ஆகணுமா... எக்ஸாம்ல கூட நான் இவ்வளவு கஷ்டப்படலையே இந்த பொண்ணு என்னை வைச்சு செய்யறாளே)

ஹி ஹி உங்களுக்கு skip option கொடுக்க மறந்துட்டேன் சிஸ்டர்...:ROFLMAO::ROFLMAO::p


இதுக்கு என்னோட பதில் அப்படி நான் வாழ ஆசைப்படலை, நமக்கு பிடிச்ச அந்த பிரபலமா அவங்க மட்டும் தானே இருக்க முடியும், நாம அவங்களா மாறணும்ன்னா அது நாமகிடுவோமே... நாம அவங்களானா நம்மோட குணம் தானே வெளிப்படும்... சோ அது வேணாம் எப்பவும்...

தெரியாமா கேட்டேன்...என்ன விளக்கம்:cautious:o_O:p

11.உங்க பெஸ்ட் கதை

இதை நான் சொல்றதைவிட நம்ம கதையைபடிக்கறவங்க சொன்னா தான் நல்லா இருக்கும்... நான் எனக்கு ரொம்பவும் பிடிச்ச கதையை வேணா சொல்றேன், எல்லா கதையும் பிடிக்கும் ஆனா ரொம்பவும் அனுபவிச்சு எழுதினது ஆத்தங்கரை மரமே, செவ்வந்தி பூவெடுத்தேன் இது ரெண்டும் எனக்கு எப்பவும் பிடிக்கும்...
 
Last edited:
12.ஒரு‌ சுவாரசியமான சம்பவம் உங்க லைஃப்ல...கொஞ்சம் dramatic ah அப்படி

சின்ன வயசுல நான் பண்ண ஒரு வேலை என்னால மறக்க முடியாது. பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து விளையாடிட்டு இருந்தோம் கண்ணாமூச்சி தான்,எல்லாரும் எங்க போய் ஒளிவாங்க படிக்கட்டு கீழே, கட்டில் அடியில, கதவுக்கு பின்னாலன்னு ஆனா நான் இருக்கனே ரொம்ப வாலு, பீரோல போய் ஒளிஞ்சுக்கிட்டேன், இன்னொரு பொண்ணுக்கிட்ட நீ பூட்டிரு யாரும் கண்டுப்பிடிக்க மாட்டாங்கன்னு சொன்னேன். புல்லா மூடலை மூடினாப்போல அந்த பொண்ணுவிட்டுட்டு போய்ட்டா... நான் நிறைய டைம் அப்படி ஒளிஞ்சு இருக்கேன் அதுக்கு முன்ன, ஆனா அன்னைக்கு நான் நல்லா மாட்டினேன்... வெளிய வர முடியலை டோர் நல்லா ஒண்ணோட ஒண்ணு சிக்கிருச்சு, நல்ல வேளையா அந்த பொண்ணு பக்கத்து வீட்டு அங்கிள்கிட்ட சொல்லி அவரை கூட்டிட்டு வந்தா, அவர் நல்லா ஹைட் எங்க பீரோவும் ரொம்ப பெரிசு அவர் மேல் பக்கமா பிடிச்சு இழுக்க கதவு திறந்திடுச்சு, அதுக்குள்ளே எனக்கு தான் மூச்சு முட்டிப்போச்சு, ரொம்ப நேரம் ஆகலைன்னாலும் நான் ரொம்பவே பயந்துட்டேன்... அன்னையோட பீரோவுல ஒளியற வேலையை விட்டேன்...

வாட் எ ஐடியா :p :cautious:கண்ணாமூச்சிக்கு ஏன் டா corporate காரன் ரேஞ்சுக்குப் ப்ளான்..


13.சில்லுன்னு ஒரு காதல் writer ,எஹ் ..உங்களின் பார்வையில் காதல் எப்படி...


இந்த கேள்வி எல்லாம் நீ எப்படிம்மா பிடிக்கிற... அழகான புரிந்துணர்வுடன் உண்டாகும் காதல் எப்பவும் நிலைத்திருக்கும்ன்னு நினைக்கிறேன்...

ஹாஹா....அதெல்லாம் தானா வருது...what to do akka..:ROFLMAO::ROFLMAO:

14.உங்களை பயங்கரமா கலாய்க்கிற ஆள் யாரு?

என்னோட பிரண்ட் ஸ்ரீதர், அப்புறம்இந்த சக்தி பொண்ணு, அப்புறம் மீரா இவங்கலாம் பாரபட்சமே பார்க்காம கலாய்ப்பாங்க...


:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:மீரான்னா நம்ம சேமியா அக்காவா...ஹி ஹி


15.அண்ணா உங்க கதை படிச்சிருக்காஙகளா?

இதுவரைக்கும் படிச்சதில்லை... இனியும் படிப்பார்ன்னு எல்லாம் எனக்கு தோணலை, அவங்களுக்கு அவ்வளோ பொறுமை எல்லாம் இருந்ததில்லை...

அண்ணா படிக்கிற மாதிரி speed அஹ் எழுதுங்க ககா...:p


16.உங்க கிட்ட உள்ள ஒரு strange வினோதமான பழக்கம்..


நகம் கடிக்கறது தான்... பஸ் வரலைன்னு பஸ் ஸ்டான்ட்ல நிக்கும் போது விரல்பாவம்ன்னு சொல்ற அளவுக்கு மொத்தமா கடிச்சிருவேன்... (அம்மா, என் கணவர் யார் சொல்லியும் அந்த பழக்கம் மட்டும் என்னைவிட்டு இன்னும் போகலை)

நான் கேட்டது வினோதமான பழக்கம்..கெட்ட பழக்கமில்லக்கா..:cautious::mad:


nail bitingggg i hateeee it...


17.பிடிச்ச பாட்டு...பாடகர்..பாடகி...இசையமைப்பாளர்


பிடிச்ச பாட்டு : முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் (ரிபிட்டட் மோட்ல கேட்டுடே இருப்பேன்...)

பாடகர்: நம்ம பாடும் நிலா பாலு தாங்க (வண்ணம் கொண்ட வெண்ணிலவே ரொம்ப பிடிக்கும் அவர் பாட்டுல)


எனக்கும் பிடிச்ச பாட்டு..அதை விட இதோ இதோ என் பல்லவி...வாவ்வ்வ்வ்வ்வ்வ்

பாடகி: நம்ம ஜானகிம்மா (இஞ்சி இடுப்பழகி)

இசையமைப்பாளர்: இசைஞானிவிட்டா வேற யாரா இருக்க முடியும்

18.உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பிடுற item



பிரியாணி,வெண்ணிலா ஐஸ்கிரீம், குலோப்ஜாமூன், காஜுகத்லி இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...

போதும் போதும்..லிஸ்ட் பெருசா போகுது...ஹாஹா
:ROFLMAO::p

19.உங்களுக்கு கதை எழுதுறதுல இது ல எது கஷ்டம்?


ஹீரோ ஹீரோயின் பெயர் வைப்பது.

கதை கரு செலக்ட் செய்ய

மத்த characters name choose பண்ண...

கதைக்கு பெயர் வைக்க


எனக்கு கதை பேரு கேரக்டர்ஸ் பேரு எல்லாம் செலக்ட் பண்றதுல எல்லாம் கஷ்டமே கிடையாது... லதா பைஜூ தான் என்னோட சில கதைக்கு டைட்டில் செலக்ட் பண்ணுறது, அதே போல கேரக்டர்ஸ், அப்புறம் சக்தி டைட்டில் செலக்ட் பண்ணி இருக்கா, சில கேரக்டர் பேரு எல்லாம் நானே நெட்ல தேடி எடுப்பேன்...


இதெல்லாம் எனக்கு கஷ்டமே இல்லை, கதைக்கரு கூட கஷ்டம் இல்லை, எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமானது கதையோட கிளைமாக்ஸ் எழுதுறது தான், ஏற்கனவே அதைப்பத்தி ஒரு ஐடியா இருந்தாலும், பினிஷிங் திருப்தி இல்லாம நிறைய டைம் மாத்தியிருக்கேன்... அதே போல கிளைமாக்ஸ் எழுத எப்பவும் ஒரு வாரம் பத்து நாள் கூட எடுத்து இருக்கேன்...

ஓ..ஓ....

20.இதை செஞ்சா உங்களை impress செய்யலாம்...என்ன விஷயம் அது?

அது ரொம்ப சூப்பர் கதைப்பா என்னம்மா எழுதியிருக்காங்கன்னு யாராச்சும் கதை பத்தி பேசினா நான் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிடுவேன்... எனக்கு படிக்கிறது தான் ரொம்பவே பிடிக்கும் சின்ன வயசுல இருந்து...

21.என்ன படிச்சி இருக்கீங்கா கா...என்ன பண்றீங்க?

M.Com., M.B.A., ஒருபிரைவேட் கம்பெனில operation manager ஆ இருக்கேன்...

டபிள்..பிஜி.அருமை....மேனேஜரே:love::love:


21.இது உங்க fellow writers உங்களுக்கு சொன்ன message.guesswho ?answer them


இது கொஞ்சம் கஷ்டம் தான் ஆனா முடிஞ்ச வரை கண்டுப்பிடிச்சு இருக்கேன்னு நினைக்கிறேன்...



"ஹாய் சவீ!


How are you?

உங்க வாசகர்கள் உங்களை ரொம்ப மிஸ் பண்றாஙக.எப்ப எழுத வரதா ப்ளான்?

பாப்பா வளரனும்..இது தவிர வேற காரணம் இருக்கா?"



ரொம்ப நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க... ஒரு குட் நியூஸ் சொல்றேன், நான் ஆல்ரெடி ஒரு முழுக்கதை எழுதி முடிச்சிட்டேன், அது நேரடி புத்தகமா வரும்... எப்போ வருதுன்னு தெரிஞ்சதும் உங்களுக்கு எல்லாம் சொல்றேன்... இப்போ நான் பாதியில விட்ட கதைக்கு வருவோம்... பாதியில விட்டதுல சிறு பூக்களின் தீயே முதல்ல முடிக்கறேன் பிறகுஆசைய காத்துல தூதுவிட்டு தொடரும்... உண்மையாவே எனக்கு பாப்பா வளர்ற வரை கொஞ்சம் எழுதுறது முன்னபின்ன தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்... ஆனா முடிஞ்ச வரை இவ்வளவு தாமதம் நிச்சயம் இருக்காது, இனி தொடர்ந்து பதிவுகள் வரும்...

யாருன்னு சொல்லவே இல்லையேக்கா..? @saveethamurugesan :rolleyes:

23."ஹைய் சவீ,


சக எழுத்தாளர் என்பதோடு நீங்க ஒரு நல்ல தோழியிம் கூட

உங்க நேரம் தவறாமை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

உங்களுக்கு எந்த மாதிரி கதைகள் படிக்க பிடிக்கும்?"


இது மல்லின்னு நினைக்கிறேன்... ஆஹா நேரம் தவறாமைன்னு சொல்லிட்டாங்களே நான் என்ன செய்வேன்... ஒரு வருஷமா ஆளே காணாம போயிட்டேன், ஒழுங்கா திரும்பி வந்து அதே நேரம் தவறாமையை கடைப்பிடிக்க பாக்குறேன் இனி...


எனக்கு இந்த கதை தான் பிடிக்கும் இந்த மாதிரி கதைகள் தான் படிப்பேன்னு ஒரு எல்லை கிடையாது, பேய் கதை, கிரைம் நாவல், ஆன்மீகம், சரித்திரம், சயின்ஸ் பிக்ஷன், குடும்ப நாவல்ன்னு எதையுமே நான் விடுறதில்லை எல்லாமும் படிக்க பிடிக்கும்... அத்தனையும் தமிழ் தான் படிக்க பிடிக்கும்...


இதுவும் தப்பு...ஆனா ஒரு clue..she is also in teaching line..மல்லிமா அல்லா...
 
Last edited:
24.இது எல்லாம் உங்க readersகேட்ட கேள்விகள்

காலேஜ் கட் அடிச்சு மாட்டின அனுபவம் உண்டா?


இருக்கு இருக்கு... அந்த கொடுமையை எப்படி சொல்றது... அது பைனல் இயர் எல்லா பிரண்ட்ஸ் வீட்டுக்கும் ஒரு நாள் போகணும்ன்னு பிளான், எல்லார் வீட்டிலையும் சொல்லியாச்சு... மீட்டிங்ஸ்பாட்டா நாங்க பிக்ஸ் பண்ணது காலேஜ் பக்கத்துல இருக்க பஸ் ஸ்டான்ட், மாட்டினது எங்க கிளாஸ் மேம்கிட்ட, அவங்க அங்கவே கூப்பிட்டு விசாரிக்க நாங்க கன்னாபின்னான்னு அசடு வழிஞ்சுட்டு அப்படியே எஸ்கேப் ஆக மறுநாள் போய் நின்னது HOD ரூம்ல... (இது உனக்கு தேவையா மொமென்ட் அது)

இதுக்குதான் நாங்க எல்லாம் இதை பண்ணினதே இல்லை..பண்ண முடிஞ்சதில்லையே கோபால்ல்ல்ல்ல்ல்ல்..கண்ணாமூச்சிக்கு அவ்வளவு யோசிச்ச நீங்க காலேஜ் கட் அடிக்க அடுத்த பஸ் ஸ்டாண்ட்ல நிக்கலாமா...? வாட்ஸ் திஸ் யா..?

:p


25.நீங்கள் பிரதமரனால் போடும் முதல்

கையெழுத்து எதற்கு..Need a funny as well as serious answer

ஸ்மார்ட்போன்க்கு தடை சொல்றதா தான் இருக்கும்...

funnyஆ சொல்லணும்ன்னா அது படுத்துற பாடு தாங்கலைடா சாமி, ஐஞ்சு நிமிஷத்துக்கு ஒரு முறை என்னை எடுத்துப்பாரு பாருன்னு என் மைன்ட் கண்ட்ரோல் பண்ணுது எனக்கு பிடிக்கலைப்பா

சீரியஸ்ஆ சொல்லணும்ன்னாலும் இந்த ஸ்மார்ட்போன் எந்த அளவுக்கு நல்லது பண்ணுதோ அதைவிட மோசமா கெட்டதும்பண்ணுது... சோ அதுக்கு தடா போட்டிறலாம்... (யாரும் இதுக்காக என்னை அடிக்க வரக்கூடாது, நீங்க போன் யூஸ் பண்ணலையான்னு கேட்கவும் கூடாது...)



மிகவும் நல்ல விஷயம்...I supportt


26.உங்களுக்கு உங்க கிட்ட ரொம்ப பிடிச்ச பிடிக்காத விஷயம் என்ன?


புத்தகம் படிக்கறது தான் சின்ன வயசுல இருந்து எனக்கு என்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம், பிடிக்காததுநகம் கடிக்கற பழக்கம், செய்யக்கூடாதுன்னு நினைப்பேன், எப்போ கடிப்பேன்னு எனக்கே தெரியாது மறந்து போய் கடிச்சிருவேன்...


27.சவீதாக்கா எப்ப return வருவீஙக?


எல்லாரும் இதை கேள்வியை என்ட்ட design designஅஹ் கேட்கறாங்க க்கா.


இந்த கேள்வி கேட்டது சக்தியா தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன், வந்துட்டே இருக்கேன்னு சொல்லு திரும்ப வந்துட்டே இருக்கேன்னு சொல்லுடா...

இல்ல..இது அவங்க இல்ல..இது எல்லாம் readers kaa..


28.மாட்டிக்கொண்டு அசடு வழிந்த சம்பவம்

அதெல்லாம் நினைவுல வைச்சுக்கிட்டா நல்லாவா இருக்கும், அப்படிஒண்ணு நடந்திருக்கான்னு வேற ஞாபகம் வர மாட்டேங்குதே!! ஹி ஹி மன்னிச்சு மக்களே


29.இரண்டு கதை முக்கியமான இடம் ல நிக்குதே?ஏன்?இதை ஆர்வமா தான் கேட்கிறேன்.எப்ப continue ஆகும்?


கண்டிப்பா சீக்கிரமே அதை முடிச்சு வைக்க வர்றேன், சிறு பூக்களின் தீயே கதையை சீக்கிரமே தொடருவேன், ஏன்னா அது முடிவை நெருங்கி இருக்கு... அது முடிக்கவும் ஆசையை காத்துல தூதுவிட்டு கதையை தொடருவேன்...

30.எந்த ‌கதை இன்னும் better அஹ் கொடுத்து இருக்கலாம்‌னு you think

என்னோட முதல் கதை சட்டென்று மாறுது வானிலை, அதை இன்னும் பெட்டரா கொடுத்து இருக்கலாம்ன்னு எனக்கு எப்பவும் தோணும்..


31.உங்க குணம் பத்தி..

என்னோட கேரக்டர்பத்தி நானே சொல்லணுமா... எனக்கு தெரிஞ்சதை சொல்றேன், எனக்கு கோபம் நல்லாவே வரும்... எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு, நட்பு எனக்கு மிகப்பிடிச்ச விஷயம், நட்புக்காகவும் நண்பர்களுக்காவும் நேரம் ஒதுக்கறதும் அவங்களோட இருக்கறதும் ரொம்ப பிடிச்ச விஷயம்... மீ ஈசி கோயிங் பழகினவங்களுக்கு மட்டும்.


32.ஒரு motivation story சொல்லுங்க.....either ur personal one or any other

எனக்கு ரொம்ப பிடிச்ச மோடிவேஷனல் ஸ்டோரின்னா அது மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்ல வர்ற இது தான் உலகம் இது தான் வாழ்க்கைங்கற கதை தான்...

அக்கா..மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்னா...என்ன? எனக்குத் தெரில..

"எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எனக்கு அந்த வரிகள் தான் ஞாபகம் வரும்... அந்த கதை


அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று காப்பாற்று என்று ஓர் அலறல்.
ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்றுசிறுவனைப்பார்த்துப் பரிதாபமாகக் கதறுகிறது. உன்னை வலையிலிருந்துவிடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் என்று முதலையைக்காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் என்னைக் காப்பாற்றுஎன்று கண்ணீர்விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்கஆரம்பிக்கிறான்... சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது.

பாவி முதலையே... இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க...
அதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை.
சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முதலையின் வாய்க்குள் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்தபறவைகளைப் பார்த்துக் கேட்டான் - முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ?

அதற்குப் பறவைகள்,

எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்...ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால்சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான்
ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்...

நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்கவைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடைதளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத்துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் இதுதான்வாழ்க்கை என்றது கழுதை.

சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான்.
இல்லை முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல... முதலைக்குக் கோபம் வந்து விட்டது.
சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது.

ஊஹும்... சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச்சரியாகப் புரியவில்லை என்றது முயல். பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாதமுதலையே.. உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓடமுயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிடமுடியுமே..., என்று நினைவுபடுத்த...
முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது.

அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ஓடிவிடு என்று கத்த..சிறுவன் ஓடுகிறான். முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான்அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியைவிடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்ததுசிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம்முயல் புன்னகையுடன் சொன்னது -
புரிந்ததா... இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை

சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர...அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய்அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி... சிறுவன் பதறி ஓடிச்சென்றுதடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..
சிறுவன் பெருமூச்சு விடுகிறான்.

"இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை" என்று சமாதானம் ஆகிறான்.
வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும்"




thankssssssssssssss sooooooooooo muchhhhhh akka.

and மிக்க நன்றி மக்களே....இது பார்க்க ரொம்ப ஜாலியா இருந்தாலும்...ரொம்ப நேரம் எடுத்து குழந்தை வைச்சிட்டு அக்கா நமக்காக பதில் சொல்லி இருக்காங்க..அண்ட் எனக்குமே நேரம் ஒதுக்கி செய்ய முடியுதுன்னா with all your support..thanksss for that friendss.

தூது செல்லும் சக்தியே ஹி ஹி..thankss @Sarayu kkaa



அடுத்த வாரம்...இன்னொரு சூப்பர் ரைட்டரோட சந்திக்கலாம்..பை பை...
 
Last edited:
இதுக்கு என்னோட பதில் அப்படி நான் வாழ ஆசைப்படலை, நமக்கு பிடிச்ச அந்த பிரபலமா அவங்க மட்டும் தானே இருக்க முடியும், நாம அவங்களா மாறணும்ன்னா அது நாமகிடுவோமே... நாம அவங்களானா நம்மோட குணம் தானே வெளிப்படும்... சோ அது வேணாம் எப்பவும்...
Sincere பதில்:rolleyes::rolleyes::oops:
 
:love: :love: :love:

இன்னைக்கு தான் சவீதா பற்றி நிறைய தெரிஞ்சுகிட்டேன்.........
ஏகப்பட்ட கேள்விகள்.........
uniform format (no of qns.) கிடையாதா பவி :p
நிறைய கேள்வி கேட்டிருக்க.......

சின்ன பசங்களை வச்சிக்கிட்டு சமையல் பண்ணுறதே பெரிய டாஸ்க்...... அதுல வேலைக்கு போயிட்டு கதையும் எழுதுறது கிரேட் தான் (பவி சீரிஸ்-ல நீங்க தான் 1st கைக்குழந்தையோடு எழுதுறது).......
Best wishes சவீ.......
 
Last edited:
எனக்கு சவீதா டியரின் எல்லாக் கதைகளுமே பிடிக்கும்
இருந்தாலும் கல்யாண் வைபவ் வரும் கதைதான் முதலில் பிடிக்கும்
அப்புறம் "சில்லென்று ஒரு காதல்" "உயிரைக் கொடுக்க வருவாயா" "ஆத்தங்கரை மரமே" "செவ்வந்திப் பூவெடுத்தேன்", etc., பிடிக்கும்
 
Top