Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter eight

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 8

அவன் அழகனாம். அவனத் தேடி வர்ர விட்டில் பூச்சியாம் நான். தேவிக்கு கண்ணீரையும் மீறி எரிச்சல் வந்தது. தான் அந்த அளவு போய்விட்டோமோ. படிக்க வந்தால் படிப்பை பார்க்காமல்... சே! இந்த அவமானம் நமக்குத் தேவ தான். நல்ல வேள சாமி! மொதல்லேயெ தெரிஞ்சுருச்சு. தப்பிச்சேன். விழிகளில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த மரத்தின் அடியில் ஒரு நிமிடம் நின்றாள்.
கோபத்தில் வந்ததில் கூட வந்த சரசுவையும், வள்ளியையும் விட்டு விட்டு வந்து விட்டாள். பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவன். கெஞ்சும் முகத்துடன் வேக வேகமாய் வர வள்ளியும், சரசுவும் எப்படியும் வந்து விடுவார்கள். இவன் மூஞ்சிலேயே முழிப்பது பாவம் என்று நினைத்து விடு விடு என்று நடந்து வாசலுக்கு வந்து ரோடைக் க்ராஸ் செய்து வந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டாள்.
முன் பக்க ஜன்னல் ஓர சீட்டில் உட்கார இதயம் பட பட என்று அடித்தது. தனது காதலுக்கு ஈசல் போல் ஒரு நாள் தான் வாழ்வு என்று உணர்ந்ததும் கண்ணீர் பொங்கிக் கொண்டு வந்தது. கண்ணீர் வழிய மெதுவாய் காலேஜ் வாசலைப் பார்த்தாள். அங்கே சரவணன் தனது கேங்குடன் நின்று இவள் உட்கார்ந்திருக்கும் பஸ்ஸயே பார்த்தான். இவள் அவன் பக்கம் திரும்பியதும் அவன் முகம் லேசாய் மலர இவள் வெடுக் என்று திரும்பிக் கொண்டாள்.
சீக்கிரம் பஸ்ஸை எடுத்தால் பரவாயில்லை. பஸ் நகர்ந்தது. கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிக் கொண்டு ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டாள். ஜன்னல் வழியே மரங்களும், கட்டிடங்களும் சட சடவென ஓட, மனதிற்குள் அன்றைய பொழுது ரிவைண்ட் ஆனது.
காலையில் அவன் பஸ்ஸில் ஏறியதும், தேவி ஐ லவ் யூ என்ற பேப்பரைக் கிழித்ததும், அவனிடம் போய் அவள் ஐ லவ் யூ சொன்னதும், விட்டில் பூச்சி என்று அவன் இளக்காரமாய் சொன்னதும் அவள் மனதில் வர கண்ணீர் குபுக் குபுக் என்று கொட்டியது.
இனி இந்த காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம். வருவோம் படிப்போம் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டாள். ஆனாலும் உள் மனது இன்னொரு தடவ ரீகன்சிடர் பண்ணு என்று கெஞ்சியது. ஒனக்கு வேற வேல இல்ல என்று அதனை அடக்கி விட்டு கண்களைத் துடைத்து விட்டு தனது நிறுத்தம் வந்ததும் எழுந்தாள். இறங்கினாள். வீட்டினுள் நுழைந்தாள். காலேஜ் எப்படிடி இருக்கு என்ற அம்மாவிற்கு ஓகேம்மா என்று சொல்லி விட்டு பின் கட்டுக்கு சென்று கை கால் முகம் கழுவி விட்டு வேறு உடை மாற்றிக் கொண்டு வந்தாள். அம்மா தந்த டீயை வாங்கி அவள் சேரில் உட்காருவதற்கும், சரசு அங்கு வருவதற்கும் சரியாய் இருந்தது. சரசுவைப் பார்த்த அம்மா, 'நீ இப்பத்தான் வரியா? இவ வந்து பத்து நிமிஷமாச்சு. காலேல ஒண்ணாப் போனவங்க இப்ப தனித்தனியா வரிங்க. இந்தக் காலத்து பசங்களப் புரிஞ்சுக்கவே முடியலப்பா' என்று விட்டு உள்ளே சென்று இன்னொரு டம்ளரில் டீயோடு வந்து சரசுவிடம் தந்தாள்.
'டீ குடிம்மா. பின் கட்டுல வேல இருக்கு. நீங்க பேசிட்டு இருங்க'
அம்மா போய் விட டீயை உறிஞ்சுக் கொண்டே கேட்டாள் சரசு.
'ஏண்டி விட்டுட்டு வந்த?'
தேவி மௌனமாய் டீயை உறிஞ்சினாள்.
'சொல்லுடி. பாத்த ஒரெ நாள்ல காதலா? அது சாயந்திரமே முடிஞ்சிட்டுதா? ஏண்டி இப்படி சட் சட்னு முடிவு எடுக்கற? சரவணனும், ஷீபாவும் என் கிட்ட பேசினாங்கடி.'
கோபமானாள் தேவி.
'இங்க பாரு சரசு. அவங்களத் தவிர வேற எதனாலும் பேசு.'
'நீ கோபத்துல இருக்க. நான் நாளைக்கு வந்து ஒன் கிட்ட பேசிக்கிறேன். அம்மாட்ட சொல்லிரு. வரட்டுமா?'
'ம்ம்'
சரசு எழுந்து போக சிறிது நேரம் மௌனமாய் அமர்ந்திருந்தாள் தேவி.
மனது அவசரப்பட்டுட்டோமோ என்றது. அப்படில்லாம் ஒண்ணும் இருக்காது என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டு அன்றைய வீட்டு வேலைகளில் ஈடுபடத் துவங்கினாள்.
தூங்கும்போது கனவில் சரவணன் தான் வந்தான்.
'சாரி தேவி.'
இவள் முறைத்து திரும்ப அங்கு ஒரு சரவணன் 'சாரி தேவி' என்றான். ஐயோ என்று க்ளாசில் போய் உட்கார உட்கார்ந்திருந்த மாணவர்கள் எல்லோரும் சரவணனாய் மாறி சாரி என்றார்கள். அவள் எரிச்சலோடு பாடம் எடுக்க வந்த புரபசரைப் பார்க்க அவரும் சரவணனாய் மாறி 'சாரிம்மா' என்றார். எழுந்து கேண்டீன் சென்றால் அங்கே சர்வரும் சரவணனாய்த் தெரிய விடு விடு என்று வெளியில் வந்து ரோடைக் க்ராஸ் செய்யும்போது பைக் ஒன்றின் மீது மோதப் போக அவளைப் பின்னால் இழுத்த சரவணனைப் பார்த்து 'சே. என்ன சொன்னாலும் ஒனக்கு புத்தி வராதா?' என்று நடு ரோட்டில் கத்தினாள்.
அம்மா 'தேவி! தேவி!' என்று கிணற்றில் இருந்து கூப்புடுவது போல் கேட்க முழித்துக் கொண்ட அவள் மலங்க மலங்க விழித்தாள்.
'அச்சச்சோ! என்ன ஆச்சோ தெரியலியே'
எழுந்த அம்மா சுவற்றில் இருந்த பூஜா ஸ்டாண்டில் இருந்து விபூதி எடுத்து அவளது நெற்றியில் முருகனை நினைத்து பூசி விட, படுத்த தேவி சிறிது நேரத்தில் தூங்கிப் போனாள்.
மறு நாள் காலை.
அதே ரொட்டீன்.
அவசர அவசரமாய் பஸ்ஸை பிடிக்க, சரவணன் அவள் முன் வர, அவள் மூஞ்சைத் திருப்பிக் கொண்டு நின்றாள். பஸ்சில் வழக்கம்போல் புக்ஸ் தந்த அவனிடம் வாங்காது உர்ரென்று இருக்க சரசு வாங்கிக் கொண்டாள்.
காண்டீன், லைப்ரரி, என்று அவள் செல்லும் இடத்துக்கெல்லாம் சரவணனும் அவன் கேங்கும் வர அவள் முகம் கொடுத்து பேச வில்லை.
'போட்டும்டா. இவ பெரிய ரதி. ஒன் அழகுக்கு காலேஜே ஏங்கி நிக்குது. நீ இந்த ஒல்லிப் பிச்சானுக்காக தொங்கிகிட்டு இருக்க. ஆனாலும் ஒரு பொம்பளைக்கு இந்த கொழுப்பு ஆகாதுடி சாமி. என்ன சொல்றான்னு கேட்க வேண்டியது தான.' ஷீபா கத்துவது காதில் விழுந்ததும் கண்ணீர் திரண்டது.
'பரவால்ல. அவள அழ வைக்காத.' சரவணன் சொன்னான்.
'ஆமாம். அவ ஒன்ன அழ வைப்பாளாம். நான் அவள அழ வைக்கக் கூடாதாக்கும்.'
அவர்கள் குரல் கரைய அந்த இடத்தை விட்டு அகன்றாள் தேவி வள்ளி, சரசுவுடன்.
அந்த வாரம் முழுக்க இதே கூத்து தொடர்ந்தது.
அவன் வரவும் இவள் நகரவும் என்று.
அவன் தாடியுடன் வலம் வரத் துவங்கினான்.
இவள் இரங்கவே இல்லை.
அந்த வார இறுதியில் அவர்களது காலேஜில் இண்டெர் காலேஜியேட் காம்படிஷன் நடந்தது. எல்லோரும் ஆடிட்டோரியத்தில் குழுமி இருந்தனர். தேவி வீட்டுக்குப் போயிரலாமா என்று கேட்க வள்ளியும், சரசுவும் அவளை வற்புறுத்தி ஆடிட்டோரியத்திற்கு இழுத்து வந்தனர். அரங்கம் நிரம்பி வழிந்தது.
அவர்களுக்கு அடுத்த ரோவில் சரவணனும் அவனது கேங்கும் அமர்ந்திருந்தது. ஒரு முறை பார்த்த தேவி அதன் பிறகு அந்த சைடே பார்க்க வில்லை. ஸ்டேஜையே பார்த்தாள். ஒவ்வொரு டிப்பார்ட்மெண்டாய் தங்களது திறமைகளைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
தமிழ் டிப்பார்ட்மெண்டில் சாகுந்தலம் நாடகத்தை நடத்தினார்கள். மோதிரம் காணாமல் போனதால் தன்னை மறந்து போன துஷ்யந்தனை வலிய வலியப் போய் நியாபகப் படுத்தத் துடிக்கும் சகுந்தலையைப் பார்த்து எரிச்சல் வந்தது தேவிக்கு.
அடுத்த எக்கனாமிக்ஸ் டிப்பார்ட்மெண்டும் நாடகம் தான். சரவணனது கேங் மாடர்ன் ட்ராமா ஒன்று நடிக்க அனைவரும் அதனை வெகுவாக ரசித்தனர்.
காதில் கிசுகிசுத்தாள் சரசு.
'அன்னைக்கு இந்த ட்ராமால தான் நடிச்சிட்டு இருந்துச்சி ஒன் ஆளு. நீ ரீல் டயலாக்க ரியல் டயலாக்க நினச்சிட்ட. இதச் சொல்ல அந்த ஆளு வந்தா, நீ கேட்கத் தயாரில்ல. அந்த வசனத்த நல்லா கவனி. ஒனக்குப் பிடிக்கலன்னு நல்லா நடிச்சு ப்ரைஸ் வாங்கற ஒன் ஆளு நடிக்காம அந்த ரோல வேற ஒருத்தருக்கு குடுத்துருச்சு.'
தேவி சரசு என்ன சொல்கிறாள் என்று குழம்ப, அந்த டயலாக் மேடையில் பேசப்பட்டது.
'இது பாவம் இல்லயா?'
'பாவம் புண்ணியம் பாத்தால்லாம் இந்த காலத்துல வாழ முடியாது.என் அழக பாத்து மயங்கி விழற விட்டில் பூச்சு சாவறதுக்கு எல்லாம் வருத்தப் பட்டுட்டு இருக்க முடியுமா என்ன?'
நான் சொன்னேன்ல பாத்தியாடி என்று மனசாட்சி குதியாட்டம் போட தன் தவறு உரைக்க தேவி மெதுவாய் பக்கவாட்டில் திரும்பி சரவணன் இருந்த இருக்கையைப் பார்த்தாள். அவன் அவள் எப்போது இங்கு திரும்புவாள் என்று காத்திருந்தது தெரிந்தது. இரு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது போல் ஆக்ஷன் செய்ய, காதில் மறுபடியும் கிசுகிசுத்தாள் சரசு.
'இன்னைக்கு நேத்து இல்லயாம் தேவி ஒம் மேல லவ்வு. சின்ன வயசுல இருந்தே லவ்வாம். ஒங்க பக்கத்து வீட்டுக்கு சின்ன வயசுல விளையாட வருவானாம்ல. நீ கூட அவன் கூட சேந்து 'ஒரு குடம் தண்ணி எடுத்து.. ' விளையாண்டிருக்கியாம்' அப்போ எல்லோரும் செல்லப் பேரு வச்சு பாலசரவணன பாலான்னு தான் கூப்புடுவிங்களாம்.'
என்னது பாலாவா அவன்?
டக் என்று தன்னை மறந்து எழுந்தாள் தேவி.

(தொடரும்)

 
Top