Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

strawberry kanne- Episode 1

Advertisement

Gayathri Ragavendra

Member
Member
வணக்கம் தோழிகளே !!!
இது தான் நாவல் எழுதுவதில் என் முதல் அத்தியாயம் இக்கதை முழுவதும் என் கற்பனையில் உருவானதே.தோழிகளே கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

ஸ்ட்ராபெர்ரி கண்ணே

மாலை நேரம் மலை தூவும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்


என்ற பாடல் , வானொலியில் ஒலித்துக்கொண்டிருக்க அதற்கேற்ப தன் வீட்டு பால்கனியின் கதவில் சாய்ந்தவாரே தேநீரை ருசித்து கொண்டிருந்தாள் அபி .

இயற்கை தான் எவ்வளவு அழகு , என்று நினைக்க தோன்றியவளுக்கு கண் முன்னே விரிந்தது தன் கடந்த கால வாழ்க்கை. தன்னையும் அறியாமல் தன் உதட்டில் உதித்தது சிறு புன்னகை .

எங்கோ சென்ற மனதினை ,கடிவாளமிட்டு சம நிலைக்கு கொண்டு வந்தாள் அபி. கடந்த இரு நாட்களாக , பெய்த கனமழையின் காரணமாக கோவை மாவட்டத்திலுள்ள, அனைத்து பள்ளிக்கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருத்தது .

அபி ,வயது இருபத்தி நான்கு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாள். அன்றும் பள்ளி விடுமுறை என்பதால், தனது பொழுதுப்போக்கான பேக்கிங் யில் களமிறங்கியிருந்தாள் அபி .

சிறு வயதில் இருந்தே பேக்கிங் யில் ஆர்வம் கொண்ட அபி ,புதுப்புது வகையான கேக், குக்கீஸ் போன்றவற்றை ஒரு வேலையாள் வைத்து ‘ஹோம் மேடு பேக்ஸ் ‘ என்ற பெயரில் விற்ப்பனை செய்து வந்தாள் .

அவள் குடியிருக்கும் அபார்ட்மெண்டில், வாட்ச்மேனாக பணிபுரியும் பழனியின் மனைவி வள்ளியம்மை , தான் அபிக்கு உதவியாக இருப்பது . மாலையில் ,மூன்று மணிநேரம் ,வார இறுதியில் முழு நேரமும் தேவையை பொருத்து வள்ளியை அழைத்துக்கொள்வாள்.அழைப்பு மணி அடிக்கவும் ,மணி ஆறு என்று காட்டவும் சரியாக இருந்தது . அன்று அவர்களுக்கு இரண்டு ஆர்டர் இருந்தது. அனைத்து வேலைகளையும் முடிக்க சரியாக எட்டு மணியாகியது ,அடுக்களையை சுத்தம் செய்து விட்டு வந்த வள்ளியம்மை அபியிடம் ,

கண்ணு நா கிளம்பறேன் டா என்க,

சரிங்க கா, நாளைக்கு சீக்கிரமே வந்துடுங்க என்றாள் அபி ,

தூக்கம் சொருக , படுக்கையறைக்கு வந்த அபி ,தன் கைபேசியை எடுக்கவும் மலர் அழைக்கவும் சரியாக இருந்தது , இருவரும் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் .

அதற்கும் மேல் இருவரும் நல்ல தோழிகள் இந்த மூன்று வருடமாகத்தான் மலரை அபிக்கு தெரியும் இருந்தும் பழகிய சில நாட்களிலே மிகவும் நெருக்கமானார்கள்.

ஒரு இருபது நிமிடங்கள், அவர்களின் உரையாடல் தொடர்ந்தது எப்போது உறக்கம் தன் கண்களை களவாடியது என்று அவளுக்கே தெரியவில்லை. காலை நேரம் , மணி ஏழு என்று காட்ட ,அபியோ இன்னமும் எழவில்லை தானாக எழுந்தவள் கடிகாரத்தை பார்க்க மணி ஏழரை என்று சிரித்தது .

நிஜமாகவே இன்று ஏழரை தான் ,என்று எண்ணியவள் அவசர அவசரமாக கிளம்பி, அவள் தயாரித்த புது வகையான குக்கிஸ்களில் சிலவற்றை எடுத்து தன் கை பையில் வைத்துக்கொண்டு கிளம்பினாள் .

அபி தங்கியிருக்கும் அபார்ட்மென்டில்ருந்து , சில குழந்தைகள் அப்பள்ளிக்கு சென்றனர்.ஒரு வழியாக பள்ளிக்கு வந்தடைந்தவள் ,ஆசிரியர் அறையில் உள்ள குறிப்பேட்டில் கையெழுத்திட்டு விட்டு, தன் இருக்கையில் அமர்ந்தாள் சிறிது நேரத்தில் மலரும் அங்கே வர ,

ஹே அபி !!!

உன் பஸ் இன்னிக்கு நேரமா வந்துட்டா ??

ஆமா மலர் பஸ் ல ஏர்றதுக்குள்ள ஒரு வழியாயிட்டேன் டா,

சரி உன்னோட ஸ்பெஷல் குக்கீஸ் எங்க??

என்று துவங்கி அன்று கட்டியிருக்கும் புடவை வரை டிஸ்கஸ் பண்ணி முடித்தனர் .

அநேரம் அபியை ,பிரின்சிபால் அழைப்பதாக அவரின் உதவியாளர் அழைக்க, அபி முதல்வரின் அறைக்கு சென்றாள்.

மேம் ,என்ற அபியை ,

வாங்க டீச்சர் உக்காருங்க என்றவர்

வரும் சனிக்கிழமை நம் பள்ளியில் ‘நிறுவனர் தினம்’ கொண்டாட உள்ளோம் அதில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் அவை எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கினார் சகுந்தலா.

நீங்க தான் அதன் ஒருங்கிணைப்பாளர் , என்று அபியிடம் கூறினார். எவெரி டே பங்க்ஷன் முடிற வரைக்கும் ,வந்து எனக்கு ரிப்போர்ட் பண்ணுங்க அபி என்றார் .

சென்ற வருடம் ,நடந்த ஆண்டு விழாவில் அபியின் பங்களிப்பை பார்த்த சகுந்தலா , இந்த வாய்ப்பினை அவளுக்கு அளித்திருந்தார் . அன்று முதல் விழாவின் வேளைகளில் ஈடுபட்டிருந்தாள்.மலரிடம் கூட சரியாக பேசமுடியவில்லை .

ஒரு வழியாக நிறுவனர் தினமும் வந்தது மாலை ஐந்து மணிக்கு விழா துவங்கும் என்பதால் . அபி தீயாய் வேலை செய்தாள் மதியம் ஒரு மணி வரைக்கும் பள்ளியில் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்தாள் அபி .

ஒரு வார ,வேலைப்பளு காரணமா இல்லை சரியான உறக்கம் இல்லாததா என்று தெரியவில்லை, உடல் மிகவும் சோர்வாக இருந்தது . அரைமணி நேர குட்டி தூக்கத்திற்கு பிறகு , குளித்து தயாராகி மாதுளை நிற பட்டுப்புடவை அணிந்து, கூந்தலை தளரப்பின்னி ,காதிலும் கழுத்திலும் சன்னமான நகைகளை அணிந்து தேவதைப்போல் காட்சியளித்தாள் அபி .

எப்பொழுதும் நேர்த்தியாக உடையணியும் அபியின் அழகு அன்று பேரழகாய் மிளிர்ந்தது .சரியாக நான்கு மணிக்கு பள்ளிக்கு வந்தடைதாள். குழந்தைகள் ,அவர்களின் பெற்றோர்கள் ,விருந்தினர்கள் என அனைவரும் வரத்தொடங்கி இருந்தனர் ,மணி ஐந்தரை ஆனதும் முதல்வர் அபியிடம் விழாவை துவங்கலாம், என்று சமிஞை செய்தார் .

விழா துவங்கிய சில மணித்துளிகளில் ,அபியின் இதயம் படபடக்க ஆரம்பித்தது ,என்ன காரணம் என்பதை அவள் அறியாள் . தொகுப்பாளரிடம் சில குறிப்புகளை கூறிக்கொண்டிருதாள்.

அப்பொழுதும் , தன்னை யாரோ துளையிட்டு பார்ப்பது போன்ற ஒரு உள்ளுணர்வு .சுற்றிமுற்றி பார்த்தாலும் அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை ஆனால் அபியின் மனம் கூறியது சரிதான்.

தன் இதயம் இவ்வளவு வேகம் துடிப்பதற்கான காரணம் ,அவளை கூட்டத்தில் முதல்வரிசையில் இருந்து நோக்கிய அந்த இரு கண்களே.
அனைத்து நிகழ்ச்சிகளும் ,நடந்து முடிய இரவு எட்டு மணியாகியது.

ஆனாலும் கூட அந்த படப்படப்பு குறையவில்லை.விழாவின் ஏற்பாடுகள் மிக சிறப்பாக இருந்ததால், அபியை பாராட்டுமழையில் நனைத்துவிட்டார் சகுந்தலா. வீட்டிற்கு செல்ல கிளம்பிய அபி, மலரை தேடிக்கொண்டிருந்தாள் .

ஆனால் அன்று மலரை அழைத்து செல்ல அவளது தந்தை வந்ததால் , அவருடன் செல்கிறேன் என்று அபிக்கு மெசேஜ் செய்திருந்தாள் ,அதை பார்த்தவுடன் ,ஓ கிளம்பிட்டாளா என்று மனதில் நினைத்துக்கொண்டு, வீட்டிற்கு செல்லமுற்பட்டாள்

அபி, மலரின் தந்தையை பற்றி நன்கு அறிவாள் மிகவும் நல்லவர் தான் அனால் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர்,அதனால் தான் சொல்லாமல் கூட கிளம்பியிருப்பாள் என்று அபிக்கு தெரியும்.

வழியெங்கும் அவரவர் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து சென்று கொண்டிருந்தனர்.ஆங்காங்கே மின் விளக்குகள் அணைக்கபட்டிருந்தது காய்ச்சலின் தாக்கமோ இல்லை உடல் சோர்வோ, தெரியவில்லை தன் கண்கள், எங்கோ செருகிக்கொண்டு செல்வதை உணர்ந்த அபி, தடுமாறி கீழே விழப்போக அபியை தாங்கியது இருக்கரங்கள் .


தொடரும் …..
 
Last edited:
உங்களுடைய "ஸ்ட்ராபெர்ரி
கண்ணே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
காயத்ரி ராகவேந்திரா டியர்
 
Last edited:
Top