THE RESULTS - PHASE II

Advertisement

டியர் பிரண்ட்ஸ்,

நீங்கள் ஆவலாக எதிர்பார்த்த எதிர்பார்த்த கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest 2023 யின் முடிவுகள்

போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகள்

நிஷாகந்தி – இரவோடு காயும் வெயிலே

கோமதி அருண் – நினைவே சுவாசக் காற்றாய்

சங்கீதா ராஜா – ஜிமிக்கியின் ஜனனம்

அனு ஜெய் – நேசமிட்ட மையலே

தேவி கண்மணி – ககனம் சேர்வாயா பௌர்ணமியே

சித்ரா வே – இதய வாசியே

ஆராதனா துரை – வருவதோ புது வசந்தம்

ஜெனிஷா தீன் – விழிகள் வழி மாறியதோ

கதைகள் அவர்கள் முடித்த நாளைக் கொண்டு வரிசைப்படுத்த பட்டுள்ளது.

எட்டு கதைகள் இந்த முறை.... மூன்று கதைகள் சரிவிகிதத்தில் நின்றன... அதனால் ஒன்றை தூக்காமல் மூன்றும் இருக்கட்டும் என்று விட்டு விட்டோம்

எப்பொழுதும் போல சிறந்த கதைகள் சில தேர்வாகவில்லை, அதற்காக தேர்வான கதைகள் சிறந்தவை அல்லாமல் இல்லை, இரண்டுமே நிஜங்கள்..

கதைகளை கொண்டே தேர்வு, எழுதியவர் கொண்டு அல்ல...

தோழமைகள், தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர், அறியாதவர், பிடித்தவர், பிடிக்காதவர் என்ற எந்த பாரபட்சமும் இன்றி, இந்த முடிவு...

வாசகர் வாசிப்பு, வாசகர்களை கதைகள் பிடித்த வைத்த விதம், வாசகர்களின் வாக்குகள், கதைகளின் ஆரோக்கியம், காதலின் கதைகள், ஒரு சிறு பொறி, ஒரு வித்தியாசம், இல்லை எப்பொழுதும் எழுதும் பாங்கே ஆனால் அதில் ஏதோ ஒரு கோர்வை இப்படி எண்ணிலடங்கா கலவைகள் கொண்டு, இவைகளின் பங்களிப்பை கொண்டு, இந்த முடிவுகள்...

எழுதப்பட்ட கதைகள் அனைத்தும் சிறந்தவையே ஆனாலும் சில கதைகளுக்கு மட்டுமே முன்னுரிமை என்பதால் இந்த முடிவுகள்.

செப்டம்பர் மாத இறுதியில் கதைகள் பதிப்பிக்கப் படும்.

பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அடுத்த போட்டி அறிவிப்பு நாளை தமிழ் புத்தாண்டு தினத்தன்று.

வெற்றி என்பது ஒரு அங்கீகாரம்... எழுதுதல் என்பது ஒரு அடையாளம்.... அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும், எழுதுதல் என்பது இயற்கையின் செயல் போல... சூரியன் உதிப்பது போல், மலர் மலர்வது போல், தென்றல் வீசுவது போல்,மழை பொழிவது போல் தொடரவேண்டும் என் அன்பு படைப்பாளர்களே... உங்கள் எழுத்து உங்கள் அடையாளம்... அதை தொடருங்கள்... எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்..
 
போட்டியில் பங்குப்பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாசித்த வாசகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏
 
போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐🥳🥳🥳🥳.

போட்டியில் பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்களும் வெற்றியாளர்களே! சில கதைகள் எதிர்பார்த்தேன் பரவாயில்லை அவர்கள் கதையும் எங்கள் மனதை வென்றவையே ☺️☺️☺️☺️.
 
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்... 💐💐💐💐💐🎊🎊🎊🎊
 
போட்டியில் வெற்றிபெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்💐💐
 

Advertisement

Advertisement

Back
Top