Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 11

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 11:

மகாலிங்கத்தை ஆப்பரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்று இரண்டு மணி நேரம் கடந்தது.ஆனால் யாரும் அவளுக்கு முறையான தகவலை சொல்லாத காரணத்தினால்... அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை சக்திக்கு.

மருதாணிகோ.. அவளின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தாலும் அது அவளால் முடியவில்லை. அவளிடம் இருந்து எந்த வகையான திட்டுக்க்கள் விழும் என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.

ஊருக்கு தகவல் சொல்லியிருக்க... வீட்டின் வேலையாட்கள் முதற்கொண்டு, குப்பாயி வரை அனைவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.பாப்பம்மாள் தட்டுத் தடுமாறி வர...அவரை அங்கே பார்த்த சக்தி...

“இப்ப எதுக்கு இங்க இப்படி கஷ்ட்டப்பட்டு வறிங்க...? பேசாம வீட்லயே இருந்திருக்க வேண்டியது தான...?” என்று எரிந்து விழ...அவளின் கைகளை சமாதானமாகப் பிடித்தாள் மருதாணி.

“வேண்டாம் சக்தி...அவங்க கிட்ட கோபத்தை காட்ட வேண்டாம்...! அவங்க என்ன செய்வாங்க..!” என்றாள் மருதாணி அமைதியாக.

மருத்துவர் வெளியே வர..”டாக்டர்..” என்றபடி அருகில் சென்றாள் சக்தி.

“ஆப்ரேஷன் முடிஞ்சது...! நார்மல் வார்டுக்கு மாத்தினதுக்கு அப்பறம் போய் பாருங்க..! ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாம பார்த்துக்கோங்க...!” என்றபடி அவர் நகர....சக்திக்கு தான் துக்கம் தொண்டையை அடைத்தது.இத்தனை வருஷத்தில்...அவள் அப்பாவுக்கு இப்படி நடப்பது இதுவே முதல் தடவை.

“எல்லாம் அவனால் வந்தது...! அவனை பார்த்த அன்னைக்கு இருந்து...எனக்கு எல்லாமே கெட்டது தான் நடக்குது..! எங்கப்பாவுக்கு மட்டும் ஏதாவது நடக்கட்டும்...இருக்கு அவனுக்கு..” என்று அப்பொழுதும் அவன் மீதே பழியைப் போட்டாள் சக்தி.

அருகில் இருந்த மருதாணிக்கோ...சக்தி தாலியைக் கழட்டி எரிந்தது தான் நியாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது.

“என்ன இருந்தாலும் சக்தி அப்படி பண்ணியிருக்க கூடாது..! ஐயா சரியாகி வந்து என்ன சொல்லுவார்..!” என்று அவள் யோசிக்க...
அவரை ஒரு நாள் கழித்து தான் நார்மல் வார்டுக்கு மாத்தினர்.அதற்கு பிறகு தான் சக்தியால் நிம்மதியான மூச்சை விட முடிந்தது.
வேகமாய் அவரைப் பார்க்க போக...சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்... மகாலிங்கம்.அந்த முகத் திருப்பலில்... உடைந்து போனாள் சக்தி.

“அப்பா..!” என்று அவள் அதிர...அங்கு நடந்த எதுவும் புரியாமல் இருந்தார் பாப்பம்மாள்.

அவர் அறிந்தவரை...”லிங்கம் தனது மகளிடம் ஒரு நாள் கூட முகம் திருப்பியது கிடையாது.ஒரு நாள் கூட அதிர்ந்து பேசியது கிடையாது.அப்படிப்பட்டவர்...இன்று ஏன் இப்படி முகத்தை திருப்பனும்...காலையில் நன்றாக இருந்தவருக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போக காரணம் என்ன..?” என்று அவர் யோசிக்க....

சக்தி வெளியே வந்து விட்டாள்.அப்பாவின் மவுனத்தின் பின்னால் தன் மேல் மிகப்பெரிய கோபம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டாள். ஆனால் அதை எப்படி அவரிடம் சொல்லி புரியவைப்பது என்று தெரியவில்லை.

வெளியே வந்த அனைவரும் சக்தியை பாவமாய் பார்க்க..அவர்களின் பார்வையின் பொருள் அறியாமல் முழித்தாள் சக்தி.

“ஐயா...உன்னை மட்டும் கூப்பிடுறாரு சக்தி..!” என்றாள் மருதாணி.

“என்னை மட்டும் ஏன்..?” என்று நினைத்தவள்...ஒன்றும் சொல்லாமல் உள்ளே செல்ல...அவளை தீர்க்கமாய் பார்த்தார் லிங்கம்.

“அப்பா..” என்று சக்தி சொல்ல...கையை அமர்த்தினார்.

“ஒன்னும் சொல்ல வேண்டாம்....நான் சொல்றதைக் கேளு..!” என்றார்.

“மன்னுச்சுக்கங்கப்பா...! நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு எனக்கு தெரியும்....நீங்க சந்தோஷமா இருக்கணும்ன்னா..நான் அவன் கூட போய் வாழனும்...இது உங்க கடைசி ஆசை..அப்படி இல்லைன்னா..இனி எப்பவும் உங்ககிட்ட பேசக் கூடாது..இதுதானப்பா..இப்ப நீங்க சொல்ல போறது..” என்றாள்.

அவர் அமைதியாய் அவளைப் பார்க்க...

“அது என்னால் கண்டிப்பா முடியாது...நீங்க என்னை எப்படி வேணுமின்னாலும் நினச்சுக்கோங்க...!என்னோட வாழ்க்கை மட்டுமே உங்களை நிம்மதியா வச்சிருக்காது..அதுல நான் எப்படி வாழ்வேன் அப்படின்ற விஷயம் தான் உங்களுக்கு நிம்மதியைத் தரும்...அப்படி தானப்பா..” என்று சிக்சர் அடித்தாள் சக்தி.

“அப்படிப் பார்த்தா...நீங்க சொல்ற மாதிரி..அவனோட போய் சேர்ந்து வாழ்ந்தால்...அது எனக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை...மகளை இப்படி பண்ணிட்டோமேன்னு நினச்சு நீங்க தினம் தினம் சாகுறதை என்னால் பார்க்க முடியாது..! அதனால..இந்த பேச்சு வேண்டாம்ப்பா..” என்று சரியாக அவள் சொல்லி அடிக்க...அவளை மெச்சும் பார்வை பார்த்தார் அவர்.

“நா..நான் எப்...எப்பம்மா அப்படி சொன்னேன்..!” என்று அவர் குண்டைத் தூக்கிப் போட...

“அப்ப நானா தான் அவசரப்பட்டு கற்பனை பண்ணி..பக்கம் பக்கம்ம்மா பேசிட்டேனா..?” என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க...
“உனக்கு பிடிக்காத எதையும்..நீ எனக்காக செய்ய வேண்டாம் சக்தி..ஆனா..எனக்கு கடமையை முடிக்கணும்..அதுக்கு நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிதான் ஆகணும்...அதுவும் நான் பார்க்குற மாப்பிள்ளையை..!” என்று அவர் அலுங்காமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட..அவளுக்கு வாரிப் போட்டது.

“என்ன சொல்றிங்கப்பா...?” என்றாள்.

“ஆமாம்மா...நடந்த எதையும் யாரும் பார்க்கலை...இந்த விஷயம் நாலு பேருக்கு தெரிஞ்சு..ஒரு வார்த்தை...நாக்கு மேல பல்லைப் போட்டு பேசுறதுக்கு முன்னாடி..நான் உனக்கு கல்யாணத்தை முடிச்சே ஆகணும்..!” என்றார் தீவிரமாய்.

கொஞ்ச நேரம் கண்களை மூடி யோசித்த சக்தி...”சரிப்பா..அதக்கு மேல உங்க விருப்பம்...நீங்க என்ன சொல்றிங்களோ...அதுப்படியே செய்யலாம்..ஆனா அதுக்கு முன்னாடி..உங்களுக்கு உடம்பு சரியாகட்டும்..” என்றாள் தீர்மானமாய்.

சக்தி சட்டென்று சம்மதம் சொல்வாள் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை.வேற ஒருவனைத் திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னால்..அவள் மனதில் உள்ளது வெளியே வரும் என்று நினைத்து அவர் போட்டு வாங்க...

அவளோ..அவருக்கு ஒரு படி மேலேயே போய்...சரி என்று சொல்ல.. அவருக்கு தான் சப்பென்று ஆனது.
 
அப்போ சக்திக்கு உண்மையாகவே..அப்படி ஒரு சம்பவம் நடந்தது வருத்தம் இல்லையா..?தாலியைக் கழட்டி எறிவது...ஒரு சாதாரண காரியமா..? அதையே செய்திருக்கிறாள் எனும் போது....அதற்கு மேல் அவர் யோசிக்க என்ன இருக்கு..?

நடப்பவை..நடந்தவை எல்லாம் அதன் போக்கில் நடந்து முடிந்திருக்க... எதையும் மாற்றும் சக்தி
யாரிடமும்....இல்லாமல் போனது தான் அங்கு விந்தையிலும் விந்தை.

ஆனால் சம்பந்தபட்டவனோ....

“சக்தியின் அப்பாவை...இறக்கியதோடு...நேராக...சென்னை சென்று விட்டான் அஜய்.அவனுக்கு யாரையும் பார்க்கும் மனநிலை இருந்திருக்கவில்லை. ஷூட்டிங் நடந்த இடத்திலும் ஒன்றும் சொல்லாமல்..அவன் கிளம்பி சென்று விட்டான்.

ஆனால் அதை அறியாத கண்ணன் தான் வெகுவாக குழம்பிப் போனான்.அவனுடைய திட்டம் பற்றி எல்லாம் கண்ணனுக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் அதே சமயம்..அவன் சொன்னதை மட்டும் கண்ணன் செய்தான்.

சென்னைக்கு வந்து அறைக்குள் அடைந்தவன் தான்...எதற்கும் வெளியே வரவில்லை...யாரிடமும் பேசவில்லை.
புலி பதுங்குவது எதற்காக என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. கிடைக்காத இரைக்காகவா..இல்லை..தவறவிட்ட இரைக்காகவா...

சக்தி தாலியை கழட்டி..அவன் முகத்தில் எறிந்த சம்பவம்..அவன் கண் முன் வந்து வந்து போக..அந்த நிமிடங்களில் எல்லாம்... வேங்கையாகவே மாறிப் போனான்.

தாலியைக் கட்டியவுடன்...உடனே அவள் தன்னுடன் வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.ஆனால் அதே சமயம் அவள் கழட்டி எறிவாள் என்றும் அவன் எதிர்பார்க்கவில்லை.

“எவ்வளவு திமிர் இருந்திருந்தா...இப்படி செஞ்சிருப்பா.....என்னை ஒரு தடவை நேர்ல பார்த்திட மாட்டோமான்னு எத்தனை பொண்ணுங்க.. ஏங்கிட்டு இருக்காங்க...அப்படி இருக்குறப்போ...நானா போயி..இந்த பட்டிக்காடு கிட்ட விழுந்தேன்ல...அதான் அவளுக்கு திமிர்.பெரிய இவ...இவ இல்லைன்னா இன்னொருத்தி..” என்று தனக்குத் தானே யோசித்தவனாய் நடைபோட்டுக் கொண்டிருந்தான் அஜய்.

அவளைப் பற்றி நினைக்கவே கூடாது என்று எண்ணியவனின் நினைவில்..மீண்டும் மீண்டும் அவள் நினைவுகளே வந்து போக நொந்து போனான் அஜய்.

“அவங்கப்பாக்கு எப்படி இருக்குன்னு தெரியலை..அவரோட நிலைமைக்கு நீயும் ஒரு காரணம்..ஆனா நீ பெரிய இவனாட்டம்...அப்படியே விட்டுட்டு வந்துட்ட...இது சரியா..?” என்று அவன் மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்க...

“நான் மட்டும் அங்க இறங்கியிருந்தா...அவங்க அப்பாவைப் பார்க்காம..எல்லாரும் என்னை சுத்தி கூடியிருப்பாங்க..! அப்பறம் அதுக்கும் நான் தான் காரணம்ன்னு சொல்லி முறைப்பா...எனக்கு தேவையா..?” என்று பதில் சொல்ல...

“சரிதான்...இப்பதான் அவளை அந்த பேச்சு பேசுன...இப்ப என்னடான்னா... அவ முறைப்பான்னு இந்த பயம் பயப்படுற..?” என்று மனசாட்சி நக்கல் அடிக்க...

“பயமா..?எனக்கா...? சான்சே இல்லை..” என்று தலையை சிலுப்பிக் கொண்டான் அஜய்.

கண்ணன் இல்லாமல் அவன் மட்டும் வந்ததிலேயே சந்தேகம் வந்தது சாந்தாவிற்கு.

அதிலும் அவன் வரும் போது...அவன் முகத்தில் இருந்த கோபம்...அவனின் பூட்டிய அறை..இதையெல்லாம் பார்த்த அவருக்கு...ஏதோ ஒன்று தப்பாக நடந்திருக்கும் என்ற வரையில் மட்டும் புரிந்தது.ஆனால் என்னவென்று தான் புரியவில்லை.

கண்ணன் வந்து சொன்னால் மட்டும் தான் தெரியும் என்று அவனுக்காக காத்துக் கொண்டிருந்தார் சாந்தா.
ஆனால் அஜய்யோ....அவனை அங்கு இரண்டு நாட்கள் இருந்து நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொண்டு வர சொல்லியிருந்தான்.கண்ணனும் அவ்வப்போது...அவனுக்கு தகவலை சொல்லிக் கொண்டிருந்தான்.

சக்தியின் அப்பா...உடல்நிலை சரியானது முதல்...வீட்டுக்கு வரப்போவது வரை..அனைத்தும் அவன் காதுக்கு வந்து கொண்டே இருந்தது.

ஏனோ அவனுக்கு அவளைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அதற்கு சரியான நேரம் இதுவல்ல..என அதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான்.

அதற்கு மேல் பொறுக்க முடியாத சாந்தா....

“அஜய்...உனக்கு ஷூட்டிங் இல்லையா..வீட்லயே இருக்குற மாதிரி இருக்கு..?” என்றார்.

“இல்லை...” என்றான் ஒரு வார்த்தையில்.

“ஏன்..?” என்றார்.

“ஏன்னா..அது என்னோட விருப்பம்...உங்களுக்கு என்ன வந்தது..?” என்றான்.

“நான் உன் அம்மா...இதைக் கூட கேட்க கூடாதா...?” என்றார்.

“நீங்க எனக்கு அம்மான்னு..நீங்களே ஒரு நூறு தடவை திரும்ப திரும்ப சொல்லிக்கங்க...இல்லைன்னா உங்களுக்கே மறந்துடும்..!” என்றான் கிண்டலாய்.
 
“ஷூட்டிங் போன இடத்துல எதுக்கு துப்னாவை அடிச்ச..?” என்றார்.

“அதான்..ஒன்னுவிடாம செய்தி வந்திருச்சுல்ல..பிறகு ஏன் தொனத்தொனன்னு வந்து ஏன் உசுர வாங்குறிங்க..?” என்று அவன் அறிந்து விழ..

“துப்னா நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு...!” என்றார்.

“இது எப்ப இருந்து..?” என்றான் அசால்ட்டாய்.

“இந்த விஷயம் உனக்கு முன்னாடியே தெரியும்...அப்பறம் ஏன் தெரியாத மாதிரியே கேட்குற..?” என்றார்.

“இங்க பாருங்க..! பெத்த கடமைக்காக இவ்வளவு நேரம் நின்னு பதில் சொல்லிட்டு இருக்கேன்...அதனால ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்காதிங்க..! யாரை.. எப்ப.. என்ன.. பண்ணனும்ன்னு எனக்கு தெரியும்...உங்களுக்கு விட்ட வேலையைப் பாருங்க..!இந்த ஜென்மத்துல உங்க ஆசையும்,அந்த துப்னா ஆசையும் நிறைவேறப் போறதில்லை... எனக்கான மனைவியை நான் தான் தேர்ந்தெடுக்கணும்..நீங்க இல்லை...” என்றான் கோபமாய்.

“ஒரு அம்மாவா என்னோடே கடமை இது..!” என்றார் அவரும் விடாமல்.

“நானும் இல்லைன்னு சொல்லலையே..! அந்த கடமையை நீங்க எல்லா விஷயத்திலும் காட்டியிருந்தா சரி...உங்களுக்கு பணம் வேணும்..அதுக்கு நான் வேணும்..என் மூலமா வர புகழ் வேணும்...இதுல உங்க தாய் பாசம் எங்க தெரியுது...தன்னலம் தான் தெரியுது...அதனால என்னைப் பத்தி கவலைப் படுறதை விட்டுட்டு....நீங்க எப்பவும் போல...உங்களைப் பத்தி மட்டுமே நினைங்க..!” என்றான் கட்டளையாய்.

அஜய் எப்பொழுதும் அப்படி பேசுபவன் தான் என்றாலும்..இன்று அதிக கோபத்துடன் பேசிவிட்டான்.ஆனால் அவன் பேசியது எதுவுமே காதில் விழாத மாதிரியே இருந்தார் சாந்தா.

“துப்னா தான் எனக்கு மருமகள்..! இதை யாராலும் மாத்த முடியாது..!” என்று அவர் மனதுக்குள் சபதம் எடுக்க...
அந்த சபதத்தை முறியடித்தவள் அங்கே கிணத்து மேட்டில் உட்கார்ந்து... கிணத்து தண்ணீரை வெறித்துக் கொண்டிருந்தாள்.

“நீ செஞ்சது ரொம்ப தப்பு சக்தி..!” மருதாணி.

“கொஞ்ச நேரம் பேசாம இரு மருதாணி..!” என்றாள் அடக்கப்பட்ட குரலில்.

“இன்னைக்கு என்னை நீ அடக்கிடலாம்..ஆனா விஷயம் நாளைக்கு வெளிய தெரிஞ்சா..இது வரைக்கும் உன்னை மரியாதையா பார்த்தவங்க...அப்பறம் பார்வையை மாத்திப்பாங்க...” என்றாள்.

“அதைப் பத்தி எனக்கு கவலையில்லை..!” என்றாள் சக்தி.

“எது சக்தி உன்னை இப்படி பிடிச்சு ஆட்டுது...என்ன குறை அவருக்கு.. அழகு இல்லையா...?வசதி இல்லையா?படிப்பு இல்லையா?நல்ல குணம் இல்லையா? இல்லை பணம் தான் இல்லையா..? எதுக்காக இவ்வளவு பிடிவாதம்..!” என்றாள்.

“என்னடி பேசுற நீ..என்ன தெரியும் அவனைப் பத்தி நமக்கு...நாலு படத்தில் நடுச்சா....அவன் அதே மாதிரி ஆகிடுவானா..? மருதாணி... சினிமா வேறு...நிஜம் வேறு..நாம எல்லாம்..ரொம்ப சின்ன ஆசைகளோட.. எதார்த்தமா ஒரு வாழ்க்கையை வாழணும்ன்னு நினைப்போம்..!

ஆனா...அவங்க அப்படி கிடையாது...அவங்க வாழ்க்கை ஒரு வழிப் பாதை..அதுல அவங்க திரும்பி வரவே முடியாது..அதே சமயம்..நம்மால அவங்க பாதையிலும் போக முடியாது...நடக்கவே நடக்காத ஒண்ணுக்காக...ஏன் வாழ்க்கையயே பணயம் வைக்கணும்..?” என்றாள்.

“நீ ரொம்ப யோசிக்கிற சக்தி..! அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்ன்னு நம்ம யாருக்கும் எதுவும் தெரியாது....இருக்குற நேரத்துல நிம்மதியா இருந்திடனும்..!” என்றாள்.

“அவன் ஹீரோயிசம் பார்த்த பிரமிப்பில் இருக்க நீ..அதைத் தாண்டி வெளிய வா..நிதானமா யோசி..உனக்கு புரியும்..!” என்றாள் சக்தி.

“இருந்தாலும்...தாலி கட்டிட்டு...” என்று மருதாணி இழுக்க...

“என்னமோ..நல்ல நாள் பார்த்து..ஐயர் வந்து அருந்ததி பார்த்து..அம்மி மிதித்து..கட்டிகிட்ட தாலியை கழட்டி எறிஞ்ச மாதிரி பேசுற...

ம்ம்ம்... தன்னோட அகம்பாவத்துக்காக ஒருத்தன் கட்டுன தாலி...அது எனக்குத் தேவையில்லை..” என்றாள்.

“உனக்கு நிஜமாவே அஜய் சாரை பிடிக்கலையா சக்தி..?” என்றாள்.

“ஏன் பிடிக்காம..பிடிக்கும்....திமிர காட்டுற கண்ணு...எப்பவுமே தீவிரத்தை காட்டுற முகம்...அவனோட ஆறடி உயரம்...இது எல்லாமே பிடிக்கும்..” என்றாள் சாவகாசமாய்.

“அடிப்பாவி..! பிடிக்கலை..பிடிக்கலைன்னு சொல்லிட்டு...விலாவரியா சொல்ற..?” என்று மருதாணி கன்னத்தில் கை வைக்க..

“இப்பவும் சொல்றேன்...ஒரு ஹீரோவா அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும்..ஆனா என்னோட வாழ்க்கைக்கு அந்த ஹீரோயிசம் தேவையில்லை... சில விஷயங்களை ரசிக்கிறதோட நிறுத்திக்கணும்..மீறி நெருங்குனா...ஆபத்து நமக்கு தான்..!” என்றாள்.

“என்னவோ சக்தி....! என்ன என்னமோ சொல்ற..? ஆனா எனக்கு ஒண்ணுமே புரியலை..ஆனா எனக்கு ரெண்டு பேரும் சேர்ந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுது.. அவ்வளவு தான்..!” என்றாள்.

“வேண்டாம் மருது....இனி அதை பத்தி பேசாத...ஏற்கனவே எனக்கு மனசு சரியில்லை...”

“சரிடி...ஆனா அப்பா சொன்னது...நீ எப்படி இன்னொரு கல்யாணம்..” என்று இழுக்க....

“கண்டிப்பா பண்ணிப்பேன்..” என்றாள் உறுதியாக.

“அது அவ்வளவு சுலபம் இல்லை சக்தி...!” என்றாள்.

“ஏன்..?”

“அஜய் சார் அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுக் குடுப்பார்ன்னு எனக்குத் தோணலை...அது மட்டுமில்லாம...அவர் முகத்துல...அப்படி ஒரு தீவிரத்தை......நான் அன்னைக்கு பார்த்தேன்....யப்பா சாமி..என்னா பார்வை...எனக்கு அப்படியே படபடன்னு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு..” என்றாள்.

“அதெல்லாம் சும்மா நடிப்பு..ஏற்கனவே அவன் மகா நடிகன்..அவனுக்கு நடிக்கவா சொல்லித் தரனும்..?” என்றாள்.

“எப்படியோ இந்த வரைக்கும் ஒத்துகிட்டியே..?” என்று மருதாணி சிரிப்புடன் பார்க்க...

“என்ன..?” என்றாள்.

“இல்லை..அவர் ஒரு மகா நடிகன்னு உன் வாயாலயே சொல்லிட்டியே..!” அதை சொன்னேன் என்றாள்.

“உன்னை எல்லாம் திருத்தவே முடியாது...போய்த் தொலை....” என்றபடி எழுந்து சென்றாள் சக்தி.

“இப்படி வெறுப்போட பேசுற நீ...சீக்கிரம் விருப்போட பேசுற நாள் வரும் சக்தி..” என்று நினைத்துக் கொண்டாள் மருதாணி.
 
Top