Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 6

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 6:

தூங்கிக் கொண்டிருந்த அஜய்க்கு திடீரென்று விழிப்பு தட்ட...பட்டென்று எழுந்து அமர்ந்தான்.எண்ணங்களில் அவள் நியாபகம்....எதிலும் அவள் நியாபகம்...நேரத்தைப் பார்க்க..அது இரவு ஏழு மணியைக் காட்டியது.மாலையில் உறங்கி..இரவு எழுந்துவிட்டான்.

விடாத அலைச்சல்...ஓய்வு இல்லாத படப்பிடிப்பு...இதையெல்லாம் தாண்டி..ஏனோ நன்னியியூருக்கு வந்ததில் இருந்து அதிகமாக..அதே சமயம் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.அவனை நினைத்து அவனுக்கே ஆச்சர்யம்...இந்த ஊரில் அப்படி என்ன இருக்கிறது..? என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்ள...

“என்ன இல்ல இந்த ஊரில்..? அமைதி இல்லையா..?பசுமை இல்லையா..?குளிர்ச்சி இல்லையா...? விவசாயம் இல்லையா..? சிட்டுக் குருவிகள் இல்லையா..?தண்ணீர் இல்லையா..? இயற்கை இயற்கையாக இல்லையா...? எல்லாமே இருக்கு..நிறைவா இருக்கு..!” என்று அவனின் மனம் அவனுக்கு பதில் சொல்ல...

உதட்டில் தவழ்ந்த புன்னகையுடன் வெளியே வந்தான்.குளிர்ச்சியான காற்று...முகத்தில் வந்து மோத...அந்த தென்றலின் தீண்டலில் தன்னை மறந்து நின்றான்.சற்று தூரத்தில்...அகல் விளக்கு ஒளிகள் கண்ணில் பட...பெண்கள் கூட்டமும் கண்ணில் பட்டது.

அதிலும் சில பெண்கள்..இவர்கள் டென்ட் போட்டிருந்த பகுதியை அதிசயமாய் பார்ப்பதைப் போன்று பார்த்துக் கொண்டிருந்தனர்.சிலர் பக்தி பழமாய் மாறி சாமி கும்பிட்டு கொண்டிருக்க...அதைப் பார்க்கவே அவனுக்கு புதுமையாய் இருந்தது.

“கண்ணன்..!”

“சார்..!” என்று ஓடி வந்தான்.

“நாளைக்கு என்ன ஷாட்..?” என்றான்.

“நாளைக்கு சாங் சார்...!” என்றான்.

“எவ்விரி திங்க் இஸ் ஓகே...?” என்றான்.

“ஓகே தான் சார்..ஸ்பாட் கூட பார்த்து பெர்மிசன் வாங்கிட்டாங்க சார்..” என்றான்.

“ஓகே..! நீங்க போங்க..!”

“சார்..நீங்க..!” என்றான் கண்ணன்.

“நான் இப்படியே கொஞ்சம் காத்து வாங்கப் போறேன்...!” என்றான்.

“சார்..நானும் கூட வரேன் சார்..!”

“நான் பச்ச புள்ளையா..? அதுவும் இல்லாம இன்னைக்கு பவுர்ணமி ...சோ...எந்த தொல்லையும் இல்லாம...அந்த நிலவை ரசிக்கலாம்..!” என்றான்.

“ஓகே சார்..!” என்று அவன் நகர்ந்து விட...

அந்த முழு பவுர்ணமி நாளில்...நிலவு மகளை..ஆற்றின் கரையோரத்தில் நின்று ரசித்துக் கொண்டிருந்தான்.

சென்னை சென்று விட்டால்..இந்த அமைதியும்,ஏகாந்தமும் எனக்குக் கிடைக்குமா..? என்று யோசித்தபடி...நிலவை ரசித்துக் கொண்டிருக்க....

“இவங்க ஏன் இந்த டைம்ல சாமி கும்பிடுறாங்க..?” என்று எண்ணியவன்..

”சரி அவங்க வழக்கமா இருக்கும்..!” என்று அவனே பதிலும் சொல்லிக் கொண்டான்.

எல்லாமே இருந்தும்..எதுவுமே இல்லாத மாதிரியான ஒரு மனநிலை அவனுக்கு.எனக்கு எதில் திருப்தி..என்னுடைய முழுமை பணத்தில் இல்லை..அது தான் முழுமை என்றால்..நான் அதை எப்பொழுதே அடைந்து விட்டேனே..? பிறகு எதில் இருக்கிறது என் நிம்மதி..? என்று நிலவினைப் பார்த்துகேட்டுக் கொண்டிருக்க...

“என்னடி சொல்ற சக்தி..?” என்ற மருதாணியின் அதிர்ந்த குரல் அவனுக்குக் கேட்டது.

“சக்தி..” என்ற பெயரில் கவனம் வந்தவனாய் அமைதியாய் இருக்க...இவன் இருந்ததை கவனிக்காமல்...இவனுக்கு சற்று தள்ளி மரத்திற்கு பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும்.

“ஆமாம்டி...உண்மைதான்..ஆனா அவன் யாருன்னு எனக்கு தெரியலை..முகம் முழுசா ஒரே சேறு...” என்று சக்தி ஆழ்ந்த குரலில் சொல்ல...

தன்னைப் பற்றிதான் சொல்லுகிறாள்......என்பதைப் புரிந்து கொண்ட அஜய்.....தன் காதுகளை கூர் தீட்டிக் கொண்டான்.

“எப்புடி டி...இப்படியெல்லாமா நடக்கும்..நம்ம ஊருக்குள்ள மட்டும் இது தெரிஞ்சது..?” என்று பேயறைந்தவள் போல மருதாணி நிற்க...

“ஒரு நிமிஷம் நான் யோசிக்கவே இல்லடி மருதாணி.ஆனா அவன் டிரஸ்ஸைப் பார்த்தா..கண்டிப்பா நம்ம ஊரா இருக்காது...சினிமா ஷூட்டிங் வந்தவங்கள்ல ஒருத்தனாதான் இருக்கணும்..” என்று சொல்ல..

அவளின் யோசனையை மெச்சிக் கொண்டான் அஜய்.

“அவனை எப்படியாவது கண்டுபிடிக்கணும் டி...” என்று சக்தி சொல்ல..

“ஏய் விளையாடுறியா..?பேசாம விடு..இது வெளிய தெரிஞ்சா அவ்வளவு தான்..உனக்கு வேற உங்கப்பா மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கார்...தேவையில்லாத பிரச்னையை இழுத்து விட்டுக்காத..” என்று சொல்ல...

“இல்லடி கண்டு பிடிக்கணும்...!” என்றாள் தீவிரமான குரலில்.

“கண்டுபிடிச்சு..?”

“ஒரே அடி..செருப்பால அடிக்கணும்...!” என்று தீவிரமாய் சொல்ல...அதைக் கேட்ட மருதாணி அதிர்ந்தாள் என்றால்...

அஜய்க்கோ...அந்த நிமிடமே செருப்பால் அடிவாங்கிய உணர்வு.

“முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை தொடுறதுக்கு அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்...கிராமம்னா கண்ணைக் கசக்கிகிட்டு நிப்பாங்கன்னு நினச்சிருப்பான்.வாங்குற அடில..இனி எந்த பொண்ணு மேலயும் கையை வைக்க கூடாது...” என்று சக்தி சொல்லிக் கொண்டே போக...

“வேண்டாம் சக்தி..விட்டுடு..இதை பெரிசு பண்ணாத....உன் பேரும் சேர்ந்து தான் கெடும் சக்தி...” என்றாள் மருதாணி.

“என்னோட எண்ணத்தில் மாற்றமே இல்லை.என்னைக்கு அவன் சிக்குறானோ..அன்னைக்கு இருக்கு..!” என்று சூளுரைத்துக் கொண்டாள்.

“நிலவாய் ஜொலித்த அவள் முகத்தில் தெரிந்த கோபத்தில்..சற்று அதிர்ந்து தான் போனான் அஜய்.ஆனால் ஒரு பெண்ணிடம் தோற்றுப் போனால் அவன் அஜய் இல்லையே...”

“சரி..நாளைக்கு நம்ம ஷூட்டிங் பார்க்க வரலாமா..?” என்றாள் மருதாணி.

“இல்லை..நாளைக்கு வயல்ல வேலையிருக்கு..!” என்றாள்.

“உனக்கு என்னைக்குத்தான் வேலையில்லை.....” என்று மருதாணி சிலுப்பிக் கொள்ள..

“சரி விடு..வேலை சீக்கிரம் முடுஞ்சும்...அப்பறம் உன் கூட வரேன்...சரியா..?” என்றாள்.

“அப்படியா சூப்பரு..” என்று மருதாணி சந்தோஷப்பட...

“அப்பதான அவன் யாருன்னு கண்டு பிடிக்க முடியும்....!” என்று அவள் தீர்க்கமான குரலில் சொல்ல...

“மறுபடியும் முதல்ல இருந்தா..?” என்பதைப் போல பார்த்து வைத்தாள் மருதாணி.

“நான் கூட அஜய் சார பார்க்க வறியோன்னு..ஒரு நிமிஷம் தப்பா நினச்சுட்டேன் டி..” என்று சொல்ல..

“எனக்கு வேற வேலை இல்லை பாரு...!” என்று சிலுப்பிக் கொள்ளுவது சக்தியின் முறையானது.

“சும்மா சொல்லாத..உனக்கு அந்த ஹீரோ சார பிடிக்கும் தான..?”

“மண்ணாங்கட்டி..! பேசாம வாடி போகலாம்..!” என்றபடி நகர....

“ஏம்மா..தீப்பெட்டி இருந்தா குடுங்க..!” என்று ஒரு பெண்மணி கேட்க...

“இந்தாங்கம்மா...” என்றபடி மருதாணி நகர...

சக்தியை மரத்தின் பின்னுக்கு இழுத்த அஜய்....அவளை பின்னிருந்து இறுக்கமாக அணைத்தான்.திடீரென்று நடந்த நிகழ்வில்...சக்தி கத்த போக..அவளின் வாயை கையால் மூடியவன்..பின்னால் இருந்து அணைத்தபடியே..அவள் காது.....கண்ணம் என்று இதழ் ஒற்றி எடுக்க....அவள் திமிர..அவன் பிடியோ இரும்புப் பிடியாய் இருந்தது.

“செருப்பால அடிப்பியா..அடிச்சுதான் பாரேன்...இப்ப சொல்றேன் கேட்டுக்கோ..என்னைக்கா இருந்தாலும் நீ எனக்குதான்..உன்னை தேடித்தான நான் இங்க வந்ததே..!” என்று அவள் காதுமடலில்...தன் உதடுகள் உறச விட்டுக் கொண்டே..ஹஸ்கி குரலில் சொன்னவன்.. முடுஞ்சா கண்டுபிடி..” என்றவன்..இறுதியாக..அவள் கன்னத்தில் நச்சென்று ஒரு இச்சை வைத்தவன்..காற்றாய் மறைந்து போக..

“அடியேய் சக்தி...சக்தி...” என்று மருதாணி கத்த...”ஹான்..” என்று குரலே வராமல் சக்தி குரல் கொடுத்தாள்.

“வாடி..அங்க என்ன பண்ற..?” என்றபடி அவளை இழுத்துக் கொண்டு நடக்க...சக்திக்கோ..”ஐயோ..” என்று இருந்தது.

அவன் தீண்டிய இடங்கள் தீயாய் தகிக்க...இப்பொழுதும் தன்னுடைய இயலாமையை எண்ணி கண்ணீர் சுரந்தால் சக்தி.

“யாரா இருக்கும்..? எனக்கு யாரையும் தெரியாதே..? யார் வம்புக்கும் நான் போனது இல்லையே..? என்னைத் தேடி வரும் அளவிற்கு நான் என்ன செய்தேன்..!” என்று எண்ணியவளுக்கு பதில் என்னவோ பூஜ்யம் தான.

எப்படி யோசித்தாலும்..ஆரம்ப புள்ளிக்கே வந்து நின்றது மனம்.சோர்ந்து விட்டாள் சக்தி.

அஜயோ....வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.மீண்டும் மீண்டும் அவள் அருகாமை வேண்டும் என்று அடம் பிடித்த மனதை அடக்குவது அவனுக்கு பெரும் பாடாய் போனது.

“என்னடா இது எனக்கு வந்த சோதனை..?” என்று தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

“நான் எவ்வளவு பெரிய ஹீரோ....எனக்காக எத்தனை பொண்ணுங்க கனவு கண்டுட்டு இருக்காங்க..ஆனா நான்..இங்க இவ பின்னடி சுத்திட்டு இருக்கேன்..இது மட்டும் மீடியா காரன் கண்ணுக்கு பட்டது..அவ்வளவு தான்...” என்று தன் பின்னந்தலையை தடவிக் கொண்டவனின் முகத்தில் அத்தனை ஜொலிப்பு.

நிலவொளியில் கம்பீரமாய் தெரிந்த அவன் முகத்தில்....அப்படி ஒரு செம்மை.ஆண்களின் வெட்கம் அதீத அழகு.
 
“டேய் அவ உன்னை செருப்பால அடிக்க நேரம் பார்த்துட்டு இருக்கா..நீ என்னடான்னா..இங்க கனவுல மிதந்துகிட்டு இருக்க..?” என்று மனம் எக்களிக்க...

“அதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம்..” என்பதைப் போல் நின்றிருந்த அவன் மனதிற்குள்...

“உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க..!” என்ற மருதானியின் குரல் வந்து வந்து போனது.

ஏனோ அந்த வார்த்தைகள் மட்டும் அவனுக்கு உவப்பாக இல்லை.என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்தான்.

அவள் மேல் அவ்வளவு வெறியில் இருந்தவனுக்கு ...இந்த நினைப்பு எப்படி வந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை.அவனுக்கு விரோதியாக அவளை நினைப்பது அவனுக்கே சிறுபிள்ளைத் தனம் என்று தோன்றியதோ... என்னவோ..?

பிரச்சனை என்று பார்க்க போனால்..அவனுக்கும்,அவளுக்கும் ஒன்றும் கிடையாது. அதுமட்டுமின்றி அவனைப் பற்றி எதுவுமே அவளுக்குத் தெரியாது என்றால் அது தான் உண்மை.

ஒரு வருடத்திற்கு முன்னால் நடந்த நிகழ்வுகள் கண் முன்னால் வர....அதை இப்போது நினைத்தவனுக்கு ஒரே சிரிப்பாக இருந்தது.அப்போதைய தன்னுடைய மன நிலையை எண்ணியவனுக்கு.,.அது தன்னுடைய தற்காலிக கோபம் என்பதை இப்போது அறிந்தான்.

எல்லா கோபமும்..அவளை நேரில் பார்க்கும் வரைதான் தொடர்ந்தது.எப்போது அவளை நேரில் பார்த்தானோ...அப்போதே.. அவனுடைய மன உணர்வுகள் குத்தாட்டம் போடத் தொடங்கியது.தன்னை சுற்றி.... தானே பின்னியிருந்த மாய வலையிலிருந்து...தானே வெளியே வரத் தொடங்கினான்.

அந்த சமயம்...அஜய்யின் புதிய படத்திற்கான டீசர் வெளியாகியிருந்தது. அந்த படத்தில் அவன் ரியல் எஸ்டேட் அதிபராக நடித்திருக்க...அதே சமயத்தில்...

”விவசாயத்தில் இளம்பெண் சாதனை..இயற்கை விவசாயத்தில் புதிய ரக நெல் வகைகளை விளைவித்து..சாகுபடி செய்து சாதனை...”என்று சக்தியை பாராட்டி எடுத்த வீடியோவும் வெளியாகி இருந்தது.

அது அஜய் படத்தின் டீசரை விட அதிக அளவில் மக்களை சென்றடைய....

“அஜய்யை வீழ்த்திய இளம்பெண்...!”என்னும் தலைப்பில்.. வீடியோக்களும்..கருத்துக்களும்..மீடியாவின் வாயில் அவல் ஆகிக் கொண்டிருக்க...

ஒரு சிறு பெண்..., தன்னை பின்னுக்கு தள்ளி விட்டாளா...? என்ற ஆத்திரத்தில்..அஜய்யும் அவளைப் பற்றிய வீடியோவைப் பார்த்தான்.

ஆனால் பார்க்கத் தொடங்கிய நிமிடம் முதல்..அவளின் கள்ளமில்லா அந்த முகமா..?, இல்லை..அந்த அளவான சிரிப்பா..,இல்லை..அவளின் தீர்க்கமான முகமா..?, ஏதோ ஒன்று அவனை அவளின் பால் சரித்திருந்தது.

“தான் பெரிய ஹீரோ..” என்ற மாயையிலிருந்து அவனை....அவள் முகம் வெளியே எடுத்துக் கொண்டிருந்தது.

அவளின் வீடியோவை..எத்தனை முறை பார்த்தான் என்றால்..அவனால் சொல்ல முடியாது.ஆனால்...எல்லாரும் அதையே ஒப்பிட்டு பேசவும்..இவள் எனக்கு நிகரில்லை..என அனைவரிடம் நிரூபிக்க வேண்டும் என்ற திண்ணக்கம்...

ஆனால்..இறுதியில்...நிகரில்லை என்று நினைத்தவளை...இணையாக நினைக்கத் தொடங்கியது அவன் மனம்..அவன் அறியாமல்.

அதனால் தான் நன்னியூர் என்றவுடன்...உடனே சரி என்றதுடன் நின்று விடாமல்...கிளம்பியும் வந்து விட்டான்.

வந்த பிறகு ..அவளைப் பார்த்த பிறகு தான் தெரிகிறது அவனுக்கே..தன் மனதில் உள்ள ஆசை...

ஆனால் சக்தியோ...”அவனெல்லாம் ஒரு ஆளா..?” என்று பேசி..மீண்டும் இவனை முருங்கை மரத்தில் ஏற்றி விட்டிருக்கிறாள்.இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

“நீ எனக்குத்தான்...!” என்ற குரல் காதுமடல் அருகே கேட்க...

“இல்ல....இல்லை...” என்று கத்தியபடி எழுந்து அமர்ந்தாள் சக்தி.

“சக்தி..சக்திமா...என்னடா ஆச்சு....?” என்று மகாலிங்கம் வேகமாய் வர...தந்தையின் குரலில் நினைவுக்கு வந்தவள்..நேரத்தைப் பார்க்க..அது காலை மூன்று மணியைக் காட்டியது.

“ச்ச்ச...கனவா..?” என்று தன் வியர்த்த முகத்தை துடைத்தவள்...

“அது..ஒண்ணுமில்லைப்பா..ஏதோ கெட்ட கனவு...!” என்று சொல்ல...

“சரிமா..அதெல்லாம் ஒன்னும் இருக்காது..எதையும் நினைக்காம தூங்கு..!” என்று சொல்லிச் சென்றார் அவர்.

“என்ன இது....காலையில் இப்படி ஒரு கனவு...! எதை காட்ட இந்த கனவு..அதிகாலை கனவு பலிக்கும்ன்னு சொல்வாங்களே...அப்படின்னா..?” என்று யோசித்தவளுக்கு....அதற்கு மேல் யோசிக்க மனம் இடம் கொடுக்கவில்லை.

அதற்கு மேல் அவளுக்கு ஒரு பொட்டுத் தூக்கம் வரவில்லை.கடமைக்கே என்று படுத்திருந்தவள்....மனதை ஒருநிலைப் படுத்த..ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது.

விடிந்தும் விடியாமல்....சக்தியின் வயலுக்கு வெளியாட்கள் வந்து வேலையை ஆரம்பிக்க...

சிறிது நேரத்தில் ஷூட்டிங் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளுடன் வங்கே வந்து சேர்ந்திருந்தனர் படக் குழுவினர்.

சக்தியும் அவர்களுடன் சேர்ந்து கைக்களை எடுத்துக் கொண்டிருக்க...

“ஏன் சக்தி...நீயும் ஏன் எங்களோட வேலை செய்யுற..பேசாம போய் வரப்புல உட்கார வேண்டியது தான....ஐயா எங்களை சத்தம் போடுவாரு...” என்று சொல்ல...

“போங்கக்கா..எவ்வளவு நேரம் தான்..வெட்டியா உட்கார்ந்து உங்களைப் பார்த்துட்டே இருக்குறது..அதான் களத்துல இறங்கிட்டேன்..” என்றாள்.

“ஏன் சக்தி அங்க பாரு எவ்வளவு பேருன்னு...! எல்லாரும் இங்க வர மாதிரி தான் தெரியுது..” என்று சொல்ல...

அவர்கள் சொன்ன திசையைப் பார்த்தாள் அவள்.அவளுக்கும் அப்படிதான் தோணியது.

“தெரியலையேக்கா...?” என்று யோசனையுடன் பார்க்க...

அதற்கு அவர்கள்...மேலே உள்ள வயலில்...கேமரா...இன்ன பிற கருவிகளையும் ரெடி பண்ண....அதிர்ந்தாள் சக்தி.

அதிலும் அவர்கள் செருப்புடன் வயலுக்குள் இறங்கியதை பார்த்தவள்...உக்கிர காளியாக மாறிப் போனாள்.

“நீங்க வேலையைப் பாருங்க..!” என்றபடி இழுத்து சொருகியிருந்த தாவணியை இறக்கி விட்டவளாய் செல்ல...

“இரு சக்தி..நானும் வரேன்..அங்க ஒரே ஆம்பிள்ளைங்களா இருக்காங்க..!” என்று ஒரு பெண் துணைக்கு வர..

“சரி வாங்கக்கா..” என்றபடி சென்றாள்.

சக்தியை கண்ட மகேஷ் வாயெல்லாம் புன்னகை முகமாக..”வாங்க..!” என்று சற்று குழைவுடன் அழைக்க...

“வயலுகுள்ள செருப்புக் காலோட என்ன பண்றிங்க..?” என்றாள் கடுமையாய்.

அவளிடம் இப்படி ஒரு கடுமையை எதிர்பார்க்கவில்லை....என்பது அவனின் அதிர்ந்த முகத்தில் தெரிய....அதை சட்டை செய்யும் நிலையில் அவள் இல்லை.

“சாரிங்க..!” என்றவன்....வரப்பில் அதை கலட்டி வைக்க...அவனை முறைத்தாள்.

“நீங்க மட்டுமில்லை...எல்லாரும் தான்...” என்று அவள் சொல்லவும் தான் அவனுக்கு தெரிந்தது..

அனைவரும் செருப்புடன் இருந்தது.......

“அது சரி...இங்க என்ன பண்றிங்க..?” என்று அலுங்காமல் ஒரு கேள்வியைக் கேட்க..

“என்னடா இது..? நேத்து அவங்க வீட்டுக்கு போய் அனுமதி வாங்குனோமே...இவங்களும் சரின்னு சொன்னாங்களே..?” என்று மனதிற்குள் எண்ணியவன்..அதை வாய் வார்த்தையாகவும் அவளிடம் சொல்ல..

அதிர்வது இப்போது அவள் முறை ஆனது.அவளுக்கும் அப்போது தான் நியாபகம் வந்தது..நேற்று அவர்கள் தன் வீட்டிற்கு வந்தது.

“ஆனால் நான் எப்ப சரின்னு சொன்னேன்..?” என்று அவள் யோசிக்க....

“உங்கப்பா உங்ககிட்ட கேட்டார்..நீங்க சரிப்பான்னு சொன்னிங்க..!” என்றான் அவள் மனதில் ஓடுவதை அறிந்தவனாய் மகேஷ்.

“அதெல்லாம் முடியாது..நீங்க வேற இடம் பாருங்க..!” என்றாள்.

“என்னாது..?” என்றவனுக்கு பேச்சே வரவில்லை.

“ஏற்கனவே அஜய் முதற்கொண்டு துப்னா வரை ஒவ்வொன்றாய் சரி கட்டி...ஒரு வழியாய் லொக்கேசனும் பார்த்து..பெர்மிசன் வாங்கி...இப்ப வந்து வேண்டம்ன்னா..?” என்றவனுக்கு சிறு கோபம் கூட வந்தது மனதில்.

“நீங்க என்ன சொல்றிங்க..?” என்றான்.

“சொல்றது புரியலை...இங்க அதையெல்லாம் எடுக்க வேண்டாம்ன்னு சொல்றேன்..!” என்றாள் கறாராய்.

“என்னாச்சு..? என்ன பிரச்சனை..?” என டைரக்டர் வர...நடந்ததை சொன்னான் மகேஷ்.

“நீங்க சரின்னு சொன்னதா நியாபகம்..!” என்றார் கோபமாய்.

“இப்ப நான்தான் வேண்டாம்ன்னு சொல்றேன்..!” என்றாள் அவளும் கோபமாய்.

“இதை நீங்க நேத்தே சொல்லியிருக்கணும்..நாங்க வேற சாய்ஸ் தேடியிருப்போம்...இப்போ எங்களுக்கு ஒரு நாள் வீணாகும்..” என்றார் அவர்.

“உங்களுக்கு ஒரு நாள் தான் வீணாகும்..! ஆனா எங்களுக்கு...இத்தனை நாள் பட்ட உழைப்பெல்லாம் வீணாகும்..அதுவும் இல்லாம..இது அன்னப் பூரணி...இதை அழிக்க..எங்களுக்கு கிறுக்கா பிடிச்சிருக்கு..?” என்றாள் கோபமாய்.

“அதுக்கு என்ன பணமோ..அதை நாங்க கொடுத்துடுறோம்..!” என்றார்.

“அதே பணத்தை வச்சு..வேற இடத்தைப் பார்த்துக்கோங்க..! “ என்று அவள் கறாராய் சொல்ல..

அப்போது அங்கு வந்து சேர்ந்தான் அஜய்.

“இங்க என்ன பிரச்சனை..?” என்றான் கம்பீர குரலில்.அந்த குரலில் ஒரு நிமிடம் திகைத்து தான் போனாள் சக்தி.

“ஆங் சார்...அது வந்து..” என்று மகேஷ் இழுக்க...

இன்றுதான் அஜய்யை முதன் முதலில் நேரில் பார்க்கிறாள் சக்தி.

திரையில் மட்டுமே பார்த்த கம்பீர உருவம்...திரையில் மட்டுமே பார்த்த ஆளுமைக் கண்கள்...திரையில் மட்டுமே பார்த்த தீர்க்கம்...இப்போது நேரில்..அவள் கண் முன்னால்....

தன்னைத் தீண்டியவன் அவன் தான் என அறியாமல்..முதன் முதலில் பார்த்த பிரம்மை.சக்தியின் அருகில் நின்றிருந்தவளுக்கோ....அதிர்ச்சி, ஆச்சர்யம்..என எல்லாம் கலந்து கொள்ள...

“ஏய் சக்தி...இவரு அஜய் தான..?” என்று கேட்க..அவளை முறைத்தாள் சக்தி.

அவனும் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை.வெங்காய சருகு கலர் தாவணி..அவள் நிறத்திற்கு எடுப்பாய் தெரிய...ஒப்பனையில்லாமல்..சிறிது வியர்த்து..அவை..அவள் நெற்றியில் இருந்து காதோரமாய் வலிந்து கொண்டிருக்க...அவளுடைய இமைகள் என்னையும் பாரேன் என்று நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தது.

“சப்ப்பா...இப்பவே இப்படி இருக்காளே...மேக்கப் எல்லாம் போட்டா...சுத்தம் எல்லாரும் பிளாட்..” என்று மனசுக்குள் நினைக்க...

“பரவாயில்லை..படத்துல பார்க்குறதை விட நேர்ல அழகாத்தான் இருக்கான்..அந்த கம்பீரம் நடிப்புக்காக இல்லை போல..கூடவே பிறந்திருக்கும் போல...” என்று சக்தியும் அவனை எடை போட்டுக் கொண்டிருந்தாள்.

மகேஷ் அவனிடம் நடந்ததைச் சொல்ல...அவளைப் பார்த்து முறைத்தான் அஜய்.

உன் முறைப்பெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்பதைப் போல் பார்த்து வைத்தாள் சக்தி.அவ்வளவு தான்..அவளின் பார்வையின் பொருள் உணர்ந்தவன்..கோபத்தின் கடைசி எல்லைக்கு சென்று வந்தான்.

“இப்ப இந்த இடத்தை விட்டு போக முடியாது..நீங்க ஷூட்டிங்க்கு ரெடி பண்ணுங்க..!” என்றான் சாவகாசமாய்.

“வயல் என்னோடது..என்னோட அனுமதி இல்லாம யாரவது உள்ள கால வச்சா...அடுத்து நடக்குறதுக்கு கால் இருக்காது...” என்றாள் தீவிரமாய்.
 
அவளுடைய பேச்சில் மகேஷ் தான் பயந்து போனான்.என்ன இந்த பொண்ணு..இந்த போடு போடுது..!” என்று எண்ணியவன்..பயந்த பார்வை இயக்குனரைப் பார்க்க...அவரோ யோசனையுடன் அஜய்யைப் பார்த்திருந்தார்.
“அதையும் தான் பார்ப்போமே..!” என்றான்.

“பார்க்கலாம்...” என்று அவளும் பிடிவாதம் செய்ய...

“இங்க பாரும்மா..! நாங்க உங்க வீட்டுக்கு வந்தது உங்களுக்கு தெரியும்..அதே சமயம் நீங்க சரின்னு சொன்னது உங்கப்பாவுக்கும் தெரியும்...கிராமத்து மனுஷங்க...சொன்ன சொல் தவற மாட்டாங்கன்னு சொல்லுவாங்க..நீங்களும் அப்படித்தான் இருப்பிங்கன்னு நம்புறேன்...இதனாலே நிறைய பேரோட உழைப்பு வீணா போயிடும்..இப்ப என்ன.. இங்க இருக்குற பயிருக்கு எந்த சேதாரமும் வரக் கூடாது...! அவ்வளவு தானே...கண்டிப்பா வராது...அதுக்கு நான் பொறுப்பு..” என்றார் டைரக்டர் இறுதியாய்.

அவரின் குரலில் இருந்த ஏதோ ஒன்று சக்தியை அசைக்க....

“சரி,...உங்களுக்காக சம்மதிக்கிறேன்..ஆனா ஒன்னு...என்னோட வயலுக்கோ..அதில் இருக்குற நெல் பயிருக்கோ..எந்த சேதாரமும் வரக் கூடாது..!” என்றாள்.

“கண்டிப்பா வராது..நீங்க வேணும்ன்னா..இங்கயே இருந்து பாருங்க..!” என்றார்.

“அப்ப சரி..!” என்றாள்.

ஒரு வழியாய் பிரச்சனை முடிவுக்கு வர...படப்பிடிப்பிற்கான வேலைகள் தொடங்கியது.சிறிது நேரத்தில் துப்னாவை அவள் உதவியாள் அழைத்துக் கொண்டு வர...முன்ன பின்ன பழக்கம் இல்லாததால்..அவளால்..ஒழுங்காக நடக்க கூட முடியவில்லை.

தத்தி தத்தி அவள் நடந்து வர..அதைப் பார்த்த சக்திக்கு சிரிப்பாக இருந்தது.

“அப்பா டக்கர் வேலையெல்லாம் படத்துல தான் போல..நிஜத்துல ஒழுங்கா நடக்க கூடிய முடியலை..ஆனா இவளைத்தான் பெரிய ஹீரோயின்,கனவுக் கன்னின்னு தூக்கி வச்சு கொண்டாடுறாங்க..!” என்று மனதில் எண்ணியவாறே அவள் இருக்க...
அஜய்யோ...அவளைப் பார்க்காதது போல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் பார்வையை உணர்ந்த கண்ணனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

“என்ன இது..? சார் இந்த பொண்ணை ஆர்வமா பார்க்குற மாதிரி இருக்கே..?” என்று சந்தேகப்பட்டவன்....மீண்டும் அஜய்யை பார்க்க...இப்போது உறுதியே செய்து விட்டான்..அவன் பார்வையின் நோக்கத்தை.ஆனால் அறிந்த செய்தி அவனுக்கு உவப்பாக இல்லை.

அவனுக்கு அஜய்யின் தாயைப் பற்றி நன்றாக தெரியும்...பணத்திற்காக எதையம் செய்யும் ரகம்..அப்படி இருக்கும் போது...ஒரு சாதாரண கிராமத்துப் பொண்ணை எப்படி ஏற்றுக் கொள்வார்..? என்று எண்ணினான். அந்த இடத்தில் அஜய்யின் குணத்தைப் பற்றி அவன் மறந்து விட்டிருந்தான்.

தொடரும்.....
 
Top