Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 7

Advertisement

Ajay and sakthi jadiku etha moodi than....ava ettadi panja ivan pathinara thandi payurane....oru ponna kiss panitu atha solrathukum oru thairiyam venum....sakthi ena pana poranu theriyalaye.....
 
“ஏய் அவரு வராருடி..எனக்கு கைகால் எல்லாம் படபடங்குது... ஐயோ..எவ்வளவு பெரிய ஹீரோ..? பக்கத்துல பார்க்க எவ்வளவு சூப்பரா இருக்காரு..!” என்று மருதாணி படபடக்க...

என்னதான் வெளியில் ஒன்றுமிலை என்பதைப் போல காட்டிக் கொண்டாலும்....சக்திக்கும் ஒரு சிறு படபடப்பு இருக்கத்தான் செய்தது.சற்று முன் அவனுடன் வாயாடும் போது இல்லாத படபடப்பு..இப்போது வந்து தொலைக்க..அதை மறைக்க..அவள் பெரும் பட வேண்டியிருந்தது.

அவர்களுக்கு அருகில் வந்தவன்...அவர்களைக் கண்டு கொள்ளாமல் நிற்க...மருதாணியோ..அவனை அருகில் பார்த்த பிரமிப்பில் இருந்தாள்.

அவளைப் பார்த்து மனதிற்குள் சிரித்தவன்..” என்ன..?” என்பதைப் போல பார்க்க...

“சா..சார்..அது வந்து...ஆ..ஆட்டோகிராப்....” என்று பேப்பரை நீட்ட..சக்தியோ அமைதியாக இருந்தாள்.மகேஷ் அவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருக்க..அதைப் பார்த்த அஜய்யின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

மருதாணியிடம் இருந்து பேப்பரை வாங்கியவன்...அவர்கள் அருகில் இன்னமும் சற்று நெருங்கி நிற்க...

“சார்..நேர்லயும் நீங்க சூப்பரா இருக்கீங்க சார்..என்னால நம்பவே முடியலை சார்..!” என்று மருதாணி வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டிருக்க...

அஜய்யின் கவனமோ..சக்தியிடமும்,மகேஷிடமும் நிலைத்திருந்தது.

“இவன் எதுக்கு இப்படிப் பார்த்து தொலைக்கிறான்...?” என்று மகேஷை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தவள்...

“ஒருவேளை அவன் இவனாத்தான் இருக்குமோ..?” என்ற யோசனையில் அவளும் மகேஷை பார்த்ததை...அஜய் தவறாக எடுத்துக் கொள்ள..ஆரம்பமானது அங்கு ஒரு போர்க்களம்.

மருதாணி கொடுத்த பேப்பரில்....நிறுத்தி..நிதானமாக தன் கையெழுத்தைப் போட்டவன்..அதை அவளிடம் கொடுக்க...அவளோ..ஏதோ கடவுளையே பார்த்த மாதிரி அந்த பேப்பரைப் பார்த்துக் கொண்டிருக்க...

அந்த இடைவெளியில்...சக்தியின் கையை பட்டென்று பிடித்தான் அஜய்.அதைப் பார்த்த சக்தி அதிர்ச்சியாகும் முன்...மகேஷ் அதிர்ந்தான்.

ஆனால் சக்திக்கோ...வேறு உணர்வேயில்லை..அந்த தொடுதலை..அந்த உணர்வைத்தான் அவள் அறிவாலே..!

“இது..இது...இந்த கை....இந்த பிடிப்பு..அப்போ..என்னைத் தீண்டியது இவனா...?” என்று எண்ணியவள்..மனது சொன்ன பதிலை நம்ப முடியாமல் திகைத்து நிற்க....

அவளின் கையை வெடுகென்று தன் புறமாக இழுத்தவன்..அதில் தன்னுடைய கையெழுத்தை நிதானமாக போட்டுக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த மருதாணி ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்து நிற்க....அவனோ நிதானமாக எழுதிக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த மகேஷ் இரண்டடி பின்னால் செல்வதைக் கவனித்தாள் சக்தி....அவளின் அருகில் சென்றவன்...

“நீ தேடுறது என்னைத்தாண்டி....நான் தான் அவன்...என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..!” என்றான் மெதுவான குரலில்...ஆனால் தீர்க்கமான குரலில்.பிறகு எதுவுமே நடக்காததைப் போல அவன் சென்று விட..மகேஷும் அவன் பின்னால் ஓட்டமும் நடையுமாக சென்றான்.

“ஹேய் சூப்பர்டி..இப்படின்னு தெரிஞ்சிருந்தா நானும் பேப்பர் இல்லாமையே ஆட்டோகிராப் கேட்டிருப்பேன்..அவர் எனக்கும் கைல போட்டிருப்பார்..” என்று மருதாணி சந்தோஷத்தில் குதிக்க....அவளை முறைத்த சக்தி...தன் கையைப் வளையலை விளக்கிப் பார்க்க... அவனுடைய கையெழுத்தை போட்டிருந்தவன் ..கூடவே..

“யாரையாவது பார்த்த...கொன்னுடுவேன்..!” என்ற வாசகமும் எழுதியிருக்க...அதைப் படித்தவளுக்கு அதிர்ச்சியும்.கோபமும் மாறி மாறி வர...அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

சாதரணமான மனிதாக இருந்திருந்தால் செருப்பால் அடித்திருப்பாளோ என்னவோ..? ஆனால் இப்போது விக்கித்து நிற்பது அவள் முறையானது.

“ஏய்....இங்க வா..!” என்று துப்னா மருதாணியை அழைத்தாள்.

“ஐயோ...எவ்வளவு பெரிய ஹீரோயின்..என்னை கூப்பிடுறாங்கடி..” என்றபடி அவள் வேகமாய் செல்ல..

“மருதாணி நில்லு..!” என்ற சக்தியின் குரலை அவள் சட்டை செய்யவில்லை.

“சொல்லுங்க...!” என்று அவள் மூச்சு வாங்க அவள் முன் நிற்க...

“இந்த டிரசைப் போட்டுட்டு..இந்த செப்பலை என்னால் மாட்ட முடியலை...என்னோட மேக்கப் மேன்..எங்க போய் தொலஞ்சான்னு தெரியலை...இதை கொஞ்சம் மாட்டி விடுறியா..?” என்றாள்.

“குடுங்க நான் மாட்டி விடுறேன்..!” என்று மருதாணி வாங்க போக...

“ஏய் நில்லுடி...ஒழுங்கு மரியாதையா வந்துடு..நீ மட்டும் அந்த வேலையைப் பார்த்த..அப்பறம் ஏன் மூஞ்சியிலேயே முழிக்காத..!” என்று சக்தி கத்த..

அவ்வளவுதான்...செருப்பை அப்படியே கீழே போட்ட மருதாணி..வேகமாய் சக்தியை நோக்கி செல்ல போக...

மருதாணியின் கெட்ட நேரமோ..என்னவோ..அவள் செருப்பு...அருகில் ஓடிக் கொண்டிருந்த வாய்க்கால் தண்ணீரில் விழுந்து விட்டது.

“ஏய்..கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு...” என்றபடி கையை ஓங்க..அதைத் தடுத்தால் சக்தி.

“உன் திமிரை எல்லாம் வேற எங்கயாவது வச்சுக்க...நீ எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அது உன்னோட..எங்ககிட்ட வச்சுக்காத..” என்று கோபமாய் சொன்னவள்...

“வாடி...எவ கூப்பிட்டாலும் போய்டுவியா..?” என்று மருதாணியைக் கடிந்து கொண்டபடி இழுத்துக் கொண்டு செல்ல...

துப்னாவோ...பட்ட அவமானத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க... அதைப் பார்த்த அஜய்க்கோ..சிரிப்பை அடக்க முடியவில்லை.

“நல்லவேளை...செருப்பால அடிக்காம போனா...!” என்று நினைத்தபடியே சிரித்துக் கொண்டிருந்தான்.
சிலருக்கு பட்டாதான் புரியும்
 
Top