Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 9

Advertisement

Avan kathalikuren nu unkita sollalathan...

Ana avan parvai atha unaku epavoo soliruchi?
Mathatha unarntha ne itha unarama poitiya enna??

Enna onnu kodave konjam urimai unarvayum katuran☺☺☺

Avana seekirame purinjupa ne??
 
இன்னும் எத்தனை விதமான சங்கடமான சூழ்நிலையை
தருவானோ
 
“அடியேய்..!உன் கையை நான் பிடிச்சு கூட்டிட்டு போகணும்...ஆனா இங்க எல்லாம் தலை கீழா இருக்கு..!” என்றாள் அவள்.

“பேசாம வா..!” என்றபடி...கூடத்திற்கு முன்னால் வந்தாள்.

“எல்லாரையும் கும்பிட்டுக்க சக்தி..!” என்றார் பாட்டி.

அவர் சொன்னபடியே...அவளும் அனைவரையும் பார்த்து கும்பிட்டாள்.

கிளிப்பச்சை நிற பட்டுப் புடவையில்.....காதில் ஜிமிக்கியும்...கழுத்தில் நீண்ட ஒற்றை ஆரமும்....இடைவரை நீண்ட பின்னலும்...சூடியிருந்த மல்லிகையும்...எளிய ஒப்பனையில் தேவதையாய் நின்றவளைப் பார்த்து...மகுடிக்கு மயங்கிய பாம்பாய் பாபு இருக்க....

சக்தியை அவன் பார்த்த பார்வையை கண்ட அஜய்க்கு...அவனை கொலையே செய்யும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.கை முஷ்டி இறுக...

“சார்..அவருக்கு தான் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க..!” என்று நியாபகப் படுத்தினான் கண்ணன்.அவனின் சொல்லில் முயன்று அமைதி காத்தான் அஜய்.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்க..அவன் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த விதமும்...முகத்தில் இருந்த கடுமையும் சக்தியை சற்று அசைத்து பார்த்தது என்னவோ உண்மைதான்.

யார் என்ன நினைப்பார்கள் என்ற விவஸ்தையின்றி அவளையே உறுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“பொண்ணு மகாலெட்சுமி மாதிரி இருக்கா...எங்களுக்கு பிடிச்சிருக்கு...பாபு உனக்கு..” என்று அனைவரும் கேட்க...

“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றவன்..அஜய்யைப் பார்த்து..வெட்கபட..

“ஐயோ..!” என்று நினைத்துக் கொண்டான் அஜய்.

நிமிர்ந்து சக்தியைப் பார்த்தவன் கண்களில்...”இந்த மூஞ்சியை உனக்கும் பிடிச்சிருக்கா..?” என்ற கேள்வி தொக்கி நின்றது.

“நான் பார்க்குற மாப்பிள்ளை யாரா இருந்தாலும் எனக்கு சம்மதம்ன்னு என் பொண்ணு ஏற்கனவே சொல்லிட்டா..!” என்று மகாலிங்கம் பெருமையாக சொல்ல..

“எதுக்கும் இப்ப ஒரு வார்த்தை கேட்டுடுய்யா..!” என்றார் பாட்டி சக்தியின் முகம் பார்த்தவறாய்.

“என்னம்மா சக்தி...! உனக்கு சம்மதம் தானே..! சம்மதம்ன்னா இப்பவே தட்டை மாத்திடலாம்..!” என்று கேட்க...

அனைவரையும் ஒரு முறைப் பார்த்தவள் கண்கள்....அஜய்யிடம் நிலைக்க...அவனை வெறித்தவள்...

“எனக்குப் பிடிக்கலைப்பா..!” என்றாள்.

அனைவரும் அதிர்ந்து நோக்க...

“எனக்குத் தெரியும்டி..என்னைத்தவிர யாரையும் உனக்கு பிடிக்காது... பிடிக்கவும் கூடாது..” என்று அவன் கண்களில்... மனதில் உள்ளதை சொல்ல...அதைப் புரிந்தவளாய்...சக்தி இறுக்கத்துடன் நின்றிருந்தாள்.

“என்னம்மா சொல்ற..?” என்றார் லிங்கம் அதிர்ந்து.

“ஆமாம்ப்பா...எனக்கு இந்த ரசிகர் மன்ற தலைவன்...கண்டவனுக்கு எல்லாம் ஜால்ரா போடுறவன்...சினிமா பைத்தியம்...இதுல அடங்குர யாரும் வேண்டாம்ப்பா..!” என்றாள் உறுதியாய்..தைரியமாய்.

அவளின் பதிலைக் கேட்ட...கண்ணன்..மனதிற்குள் “சபாஷ்..” போட்டுக் கொண்டான்.

“என்னை மட்டுமில்லை...இது என் தலைவனையும் சேர்த்து அவமானப் படுத்துற மாதிரி..” என்று பாபு குதிக்க...

“வாங்குன பல்பு..இவனுக்கு பத்தாது போலவே..!” என்று எண்ணினான் மகேஷ்.

“ஆமா அப்படித்தான்...என்னைப் பார்க்க வந்துட்டு....தலைவன் வந்த உடனே அவன் பின்னால் போன நீ..நாளைக்கு வாழ்க்கையிலும் இப்படியே விட்டுட்டு போக மாட்டேன்னு என்ன நிச்சயம்..எனக்கு முக்கியத்துவம் இல்லாத இடத்துல சும்மாவேணும் இருப்பதைக் கூட நான் விரும்பியதில்லை..” என்றாள் பொட்டில் அடித்தார் போன்று.

அஜய்....பாபுவைப் பார்த்து முறைக்க...

“என்ன என் தலைவனை அவன் இவன்னு சொல்ற..? உனக்கு இவ்வளவு தான் மரியாதை..அப்படி என்ன நீ பெரிய அழகியா..? ஆமா என் தலைவன் தான் எனக்கு எல்லாமே..அவருக்கு அப்பறம் தான் என் அம்மா அப்பாவே..நீயெல்லாம் எம்மாத்திரம்..!” என்று..தான் ஒரு தலைவன் பைத்தியம் என்று நிரூபித்தான் பாபு.

வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடியும் என்று அஜய்யே எதிர்பார்க்கவில்லை.

“அவங்க சொல்றதுலயும் நியாயம் இருக்கு பாபு..! முதல்ல உங்க வாழ்க்கை தான் உங்களுக்கு முக்கியம்..!” என்றான் அஜய்.

“இல்ல சார்..என் தலைவனை மதிக்காத பொண்ணு..எனக்கும் வேண்டாம் சார்..!” என்றான் பாபு.

“ஹலோ..! நான் தான் உங்களை வேண்டாம்ன்னு சொன்னதா நியாபகம்..!” என்றாள் சக்தி குத்தலாய்.

அவள் குத்தலில்..முகம் கன்றிப் போனான் பாபு.

யாரும் எதுவும் பேச முடியாத நிலையில் இருக்க...சக்தி எப்போதும் இப்படி பேசக் கூடிய பொண்ணு இல்லை என்பதால்...அவள் பேசினால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று புரிந்து கொண்ட மகாலிங்கமும் அமைதியாய் இருக்க...அவளுடைய பாட்டி தான் அவளை கூர்ந்து பார்த்தார்.

பாட்டியின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை குனிந்து கொண்டாள் சக்தி.

“என்னடி இப்படி பண்ணிட்ட..?” என்று மருதாணி கிசுகிசுக்க...

“சரியாதான் பண்ணியிருக்கேன்...!” என்றாள் சக்தி.

“மன்னுச்சுக்கங்க தம்பி...என் பொண்ணு எப்பவும் யார் மனசும் கஷ்ட்ட படுற மாதிரி பேச மாட்டா...உங்களை தப்பா எதுவும் பேசியிருந்தா நீங்க தப்பா எடுத்துக்காதிங்க..!” என்றார் மகாலிங்கம் அஜய்யை பார்த்து.

“இட்ஸ் ஓகே..!” என்றபடி எழுந்தவன்...”லெட்ஸ் கோ..” என்றான் கண்ணனைப் பார்த்து.

அவனும் வேகமாய் அவன் பின்னே செல்ல...அவனின் நடையில் தெரிந்த கம்பீரம் சக்தியை சற்று அசைத்தது.

அவளைப் பார்த்தவர்களும்...முனங்கியபடி செல்ல....வேகமாய் அவள் அருகில் வந்த மகேஷ்..”சூப்பருங்க..!” என்றபடி சென்று விட்டான்.

“இவன் வேறயா..?” என்று மருதாணி கடுப்புடன் பார்த்து வைக்க...

வேகமாய் அறைக்கு சென்று அவள் ஜன்னலைத் திறக்க....

“என்னை மீறி..உன்னால் எதுவும் செய்ய முடியாது..!” என்பதை கண்களால் சொன்னவன்...காரினுள் ஏற...ஏனோ சக்திக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

“நான் அழ மாட்டேன்....! இதுக்கெல்லாம் அழுதா...எப்படி...இன்னும் எவ்வளவோ இருக்கு வாழ்க்கையில்..” என்று தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள் சக்தி.

ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை....

“அவன் உன்னை காதலிக்கிறேன்.. என்று சொல்லவில்லை....பின்னால் திரியவில்லை..ஆனால் எந்த தைரியத்தில் இதை செய்கிறான்..என்னை அடக்க இவன் யார்...?” என்ற கேள்விகள் எழுந்து நிற்க..

அவன் மேலான அவளுடைய வெறுப்பு வளர்ந்து கொண்டே போனது.
Sakthium super.ajayum super
 
Top