Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 9

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 9:

“இவன் எப்படி இங்க வந்தான்..?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சக்தி.

“ஹேய் சக்தி...அஜய் சார்டி..இப்ப எதுக்கு இங்க வந்திருக்காருன்னு தெரியலைடி...அங்க பாரு கூட்டத்தை..!” என்று மருதாணி வியக்க...

“எதுக்கு வந்திருப்பான்...கூட்டத்தை கூட்டி பந்தா காட்ட வந்திருப்பான்..!” என்றாள் சக்தி.

“எனக்கு என்னமோ..அப்படித் தோணலை சக்தி..அவர் ஏதோ பிளானோட தான் வந்திருக்கணும்..” என்றாள் மருதாணி.

“அவன் எவ்வளவு பெரிய பிளானோட வந்திருந்தாலும் சரி...என்கிட்டே அவன் பாட்சா பலிக்காது...நீ வா..” என்றபடி ஜன்னலை பட்டென்று சாத்தினாள் சக்தி.முகத்தில் அறை வாங்கியதைப் போன்று உணர்ந்தான் அஜய்.

நண்பர்கள் சொன்னதை கேட்டு...மாப்பிள்ளையும் வெளியே வர...அஜய்யை அங்கு கண்ட மாப்பிள்ளை அகம் மகிழ்ந்து போனான்.

வேகமாய் அங்கு ஓடி வந்தவன் அஜய்யைப் பார்த்து முகம் முழுக்க புன்னகையுடன் நிற்க....

“நீங்க பாபுதானே..!” என்றான் அஜய் சரியாக.

“ஆமா சார்..! சேலம் மாவட்ட அஜய் ரசிகர் மன்ற தலைவர் நான் தான் சார்...” என்று முகம் முழுக்க சந்தோஷமாக சொல்ல...கூடுதலாக கிடைத்த செய்தியில் மகிழ்ந்து போனான் அஜய்.

“போச்சு...இது வேறயா....?” என்று மகேஷ் மனதிற்குள் நொந்து கொண்டான்.

“சார்..நாங்க உங்களை இங்க எதிர்பார்க்கவே இல்லை சார்...ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்..!” என்றான்.

“நீங்க என்ன பண்றிங்க..?” என்றான் அஜய்.

“பிஸ்நெஸ் பண்றேன் சார்...!” என்றான்.

“இங்க பக்கத்துல ஷூட்டிங்க்காக வந்தோம்.....உங்களைப் பார்த்துட்டு... இவர் சேலம் மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் பாபு தானேன்னு..சார் சரியா சொன்னார்...அதான் உங்களைப் பார்த்துட்டு போகலாம்ன்னு காரை நிறுத்த சொல்லி வந்தார்..!” என்றான் கண்ணன்...அஜய்யின் கண் அசைவில்.

“சார்..சார்...என்னைப் பார்க்க...என்னால நம்பவே முடியலை சார்...நீங்க ஒரு வார்த்தை சொல்லியிருந்தா..நானே உங்களைப் பார்க்க வந்திருப்பேன் சார்..இன்னமும் கூட என்னால் நம்ப முடியலை சார்..!” என்று அவன் திக்கித் திணறி..ஆச்சரியமும்,அதிர்ச்சியும் கலந்த குரலில் சொல்லிக் கொண்டிருக்க...

“அட லூசே..!” என்பதைப் போல் அவனைப் பார்த்து வைத்தான் மகேஷ்.

“ஓகே பாபு...அப்ப நீங்க கண்டினியு பண்ணுங்க...பாய்..!” என்றபடி அஜய் செல்ல எத்தனிக்க...

“என்ன சார் நீங்க...? இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்குள்ள வராம போறீங்க..!” என்று அவன் குறைபட..

“இது உங்க வீடு மாதிரி தெரியலையே..!” என்றான் அஜய்.

“சார்....இன்னைக்கு பொண்ணு பார்க்க வந்திருக்கோம் சார்..அப்படியே இன்னைக்கு தட்டு மாத்திடலாம்ன்னு இருக்கோம்..நீங்களும் வந்து கலந்துகிட்டா ரொம்ப சந்தோஷப்படுவேன் சார்..!” என்றான் அவன் காலில் விழாத குறையாய்.

“இல்லை பாபு..எங்களுக்கு ஷூட்டிங்க்கு டைம் ஆச்சு..!” என்று அஜய் கிளம்ப எத்தனிக்க...

“சார்..பிளீஸ்..சார்..கொஞ்ச நேரம்...” என்று அவன் மீண்டும் கெஞ்ச..

“சார் போயிட்டு போகலாம் சார்...தன்னோட ரசிகர் மன்ற தலைவர் வீட்டு விழாவுக்கு ..நீங்க நேரில் போனதா நாளைக்கு எல்லா பேப்பர்லயும் நியூஸ் வரும்...அது நமக்கு ஒரு டிஆர்பி தான சார்..!” என்று கண்ணனும் சொல்ல...

“என்னா நடிப்புடா சாமி..!” என்று வியந்து போனான் மகேஷ்.

“ஓகே..நீங்க இவ்வளவு தூரம் சொல்றதால வரேன்..!” என்றபடி கண்ணனையும்,மகேஷையும் அழைத்துக் கொண்டு சென்றான் அஜய்.

இதையெல்லாம் வெளியே வந்து பார்த்த மருதாணிக்கு தலையை சுற்றியது.அவர்களுடன் உள்ளே சென்றவன்...இரண்டு எட்டு பின்னால் வந்து மருதாணியை...ஒரு விரல் நீட்டி அழைத்தான்.

அவள் வேகமாய் அவன் அருகில் வர...”நீ அவளுக்கு பிரண்டு தான..?” என்றான்.

“ஆ..ஆமா சார்..” என்றாள் திக்கித் திணறி.

“அப்ப...போய் அவகிட்ட சொல்லு...இந்த அஜய்யை தாண்டி அவளால ஆணி கூட புடுங்க முடியாதுன்னு..!” என்றான் கடுமையாய்.

அதைக் கேட்ட மருதாணிக்கு அதிர்ச்சியில் வார்த்தையே வரவில்லை. அனால் அஜய்யோ...அசால்ட்டாய் அவர்களுடன் உள்ளே செல்ல..விக்கித்து நின்றாள் மருதாணி.

அன்றைய விழாவில் பாபுவையும்,சக்தியையும் மறந்து...அஜய்யையே அனைவரும் முன்னிறுத்த...அதைப் பார்த்த கண்ணன்...

“இவர் எங்கயோ இருக்க வேண்டியவர்..!” என்று மெச்சிக் கொண்டான்.

“வாங்க தம்பி..! நீங்க வந்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோசம்..!நாங்க உங்களை எதிர்பார்க்கலை...” என்று மகாலிங்கமும்..அவர் பங்குக்கு சொல்ல...அதை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த சக்திக்கு..சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல வந்தது.

“சக்தி...”

“சொல்லுடி...”

அவளை அமைதியாக பார்த்த மருதாணி...அஜய் சொன்னதை அப்படியே அச்சுப்பிசகாமல் சொல்ல....ஆத்திரமாக வந்தது சக்திக்கு.

“நான் பார்த்துக்குறேன்..!” என்பதோடு அவள் முடித்துக் கொள்ள....

“இன்னுமாடி நீ நம்புற...?” என்றாள்.

“நான் என்னை நம்புறேன்..!” என்றாள் சக்தி.

“மருதாணி..சக்தியை கூட்டிட்டு வாம்மா...!” என்ற பாப்பாம்மாவின் குரலில்...

“கூப்பிடுறாங்கடி..என்ன பண்றது..?” என்றாள் மருதாணி.

“வா போகலாம்..!” என்றபடி சக்தி அவளின் கைப் பிடித்துக் கொண்டு அழைத்து போக..
 
“அடியேய்..!உன் கையை நான் பிடிச்சு கூட்டிட்டு போகணும்...ஆனா இங்க எல்லாம் தலை கீழா இருக்கு..!” என்றாள் அவள்.

“பேசாம வா..!” என்றபடி...கூடத்திற்கு முன்னால் வந்தாள்.

“எல்லாரையும் கும்பிட்டுக்க சக்தி..!” என்றார் பாட்டி.

அவர் சொன்னபடியே...அவளும் அனைவரையும் பார்த்து கும்பிட்டாள்.

கிளிப்பச்சை நிற பட்டுப் புடவையில்.....காதில் ஜிமிக்கியும்...கழுத்தில் நீண்ட ஒற்றை ஆரமும்....இடைவரை நீண்ட பின்னலும்...சூடியிருந்த மல்லிகையும்...எளிய ஒப்பனையில் தேவதையாய் நின்றவளைப் பார்த்து...மகுடிக்கு மயங்கிய பாம்பாய் பாபு இருக்க....

சக்தியை அவன் பார்த்த பார்வையை கண்ட அஜய்க்கு...அவனை கொலையே செய்யும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.கை முஷ்டி இறுக...

“சார்..அவருக்கு தான் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க..!” என்று நியாபகப் படுத்தினான் கண்ணன்.அவனின் சொல்லில் முயன்று அமைதி காத்தான் அஜய்.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்க..அவன் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த விதமும்...முகத்தில் இருந்த கடுமையும் சக்தியை சற்று அசைத்து பார்த்தது என்னவோ உண்மைதான்.

யார் என்ன நினைப்பார்கள் என்ற விவஸ்தையின்றி அவளையே உறுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“பொண்ணு மகாலெட்சுமி மாதிரி இருக்கா...எங்களுக்கு பிடிச்சிருக்கு...பாபு உனக்கு..” என்று அனைவரும் கேட்க...

“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றவன்..அஜய்யைப் பார்த்து..வெட்கபட..

“ஐயோ..!” என்று நினைத்துக் கொண்டான் அஜய்.

நிமிர்ந்து சக்தியைப் பார்த்தவன் கண்களில்...”இந்த மூஞ்சியை உனக்கும் பிடிச்சிருக்கா..?” என்ற கேள்வி தொக்கி நின்றது.

“நான் பார்க்குற மாப்பிள்ளை யாரா இருந்தாலும் எனக்கு சம்மதம்ன்னு என் பொண்ணு ஏற்கனவே சொல்லிட்டா..!” என்று மகாலிங்கம் பெருமையாக சொல்ல..

“எதுக்கும் இப்ப ஒரு வார்த்தை கேட்டுடுய்யா..!” என்றார் பாட்டி சக்தியின் முகம் பார்த்தவறாய்.

“என்னம்மா சக்தி...! உனக்கு சம்மதம் தானே..! சம்மதம்ன்னா இப்பவே தட்டை மாத்திடலாம்..!” என்று கேட்க...

அனைவரையும் ஒரு முறைப் பார்த்தவள் கண்கள்....அஜய்யிடம் நிலைக்க...அவனை வெறித்தவள்...

“எனக்குப் பிடிக்கலைப்பா..!” என்றாள்.

அனைவரும் அதிர்ந்து நோக்க...

“எனக்குத் தெரியும்டி..என்னைத்தவிர யாரையும் உனக்கு பிடிக்காது... பிடிக்கவும் கூடாது..” என்று அவன் கண்களில்... மனதில் உள்ளதை சொல்ல...அதைப் புரிந்தவளாய்...சக்தி இறுக்கத்துடன் நின்றிருந்தாள்.

“என்னம்மா சொல்ற..?” என்றார் லிங்கம் அதிர்ந்து.

“ஆமாம்ப்பா...எனக்கு இந்த ரசிகர் மன்ற தலைவன்...கண்டவனுக்கு எல்லாம் ஜால்ரா போடுறவன்...சினிமா பைத்தியம்...இதுல அடங்குர யாரும் வேண்டாம்ப்பா..!” என்றாள் உறுதியாய்..தைரியமாய்.

அவளின் பதிலைக் கேட்ட...கண்ணன்..மனதிற்குள் “சபாஷ்..” போட்டுக் கொண்டான்.

“என்னை மட்டுமில்லை...இது என் தலைவனையும் சேர்த்து அவமானப் படுத்துற மாதிரி..” என்று பாபு குதிக்க...

“வாங்குன பல்பு..இவனுக்கு பத்தாது போலவே..!” என்று எண்ணினான் மகேஷ்.

“ஆமா அப்படித்தான்...என்னைப் பார்க்க வந்துட்டு....தலைவன் வந்த உடனே அவன் பின்னால் போன நீ..நாளைக்கு வாழ்க்கையிலும் இப்படியே விட்டுட்டு போக மாட்டேன்னு என்ன நிச்சயம்..எனக்கு முக்கியத்துவம் இல்லாத இடத்துல சும்மாவேணும் இருப்பதைக் கூட நான் விரும்பியதில்லை..” என்றாள் பொட்டில் அடித்தார் போன்று.

அஜய்....பாபுவைப் பார்த்து முறைக்க...

“என்ன என் தலைவனை அவன் இவன்னு சொல்ற..? உனக்கு இவ்வளவு தான் மரியாதை..அப்படி என்ன நீ பெரிய அழகியா..? ஆமா என் தலைவன் தான் எனக்கு எல்லாமே..அவருக்கு அப்பறம் தான் என் அம்மா அப்பாவே..நீயெல்லாம் எம்மாத்திரம்..!” என்று..தான் ஒரு தலைவன் பைத்தியம் என்று நிரூபித்தான் பாபு.

வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடியும் என்று அஜய்யே எதிர்பார்க்கவில்லை.

“அவங்க சொல்றதுலயும் நியாயம் இருக்கு பாபு..! முதல்ல உங்க வாழ்க்கை தான் உங்களுக்கு முக்கியம்..!” என்றான் அஜய்.

“இல்ல சார்..என் தலைவனை மதிக்காத பொண்ணு..எனக்கும் வேண்டாம் சார்..!” என்றான் பாபு.

“ஹலோ..! நான் தான் உங்களை வேண்டாம்ன்னு சொன்னதா நியாபகம்..!” என்றாள் சக்தி குத்தலாய்.

அவள் குத்தலில்..முகம் கன்றிப் போனான் பாபு.

யாரும் எதுவும் பேச முடியாத நிலையில் இருக்க...சக்தி எப்போதும் இப்படி பேசக் கூடிய பொண்ணு இல்லை என்பதால்...அவள் பேசினால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று புரிந்து கொண்ட மகாலிங்கமும் அமைதியாய் இருக்க...அவளுடைய பாட்டி தான் அவளை கூர்ந்து பார்த்தார்.

பாட்டியின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை குனிந்து கொண்டாள் சக்தி.

“என்னடி இப்படி பண்ணிட்ட..?” என்று மருதாணி கிசுகிசுக்க...

“சரியாதான் பண்ணியிருக்கேன்...!” என்றாள் சக்தி.

“மன்னுச்சுக்கங்க தம்பி...என் பொண்ணு எப்பவும் யார் மனசும் கஷ்ட்ட படுற மாதிரி பேச மாட்டா...உங்களை தப்பா எதுவும் பேசியிருந்தா நீங்க தப்பா எடுத்துக்காதிங்க..!” என்றார் மகாலிங்கம் அஜய்யை பார்த்து.

“இட்ஸ் ஓகே..!” என்றபடி எழுந்தவன்...”லெட்ஸ் கோ..” என்றான் கண்ணனைப் பார்த்து.

அவனும் வேகமாய் அவன் பின்னே செல்ல...அவனின் நடையில் தெரிந்த கம்பீரம் சக்தியை சற்று அசைத்தது.

அவளைப் பார்த்தவர்களும்...முனங்கியபடி செல்ல....வேகமாய் அவள் அருகில் வந்த மகேஷ்..”சூப்பருங்க..!” என்றபடி சென்று விட்டான்.

“இவன் வேறயா..?” என்று மருதாணி கடுப்புடன் பார்த்து வைக்க...

வேகமாய் அறைக்கு சென்று அவள் ஜன்னலைத் திறக்க....

“என்னை மீறி..உன்னால் எதுவும் செய்ய முடியாது..!” என்பதை கண்களால் சொன்னவன்...காரினுள் ஏற...ஏனோ சக்திக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

“நான் அழ மாட்டேன்....! இதுக்கெல்லாம் அழுதா...எப்படி...இன்னும் எவ்வளவோ இருக்கு வாழ்க்கையில்..” என்று தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள் சக்தி.

ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை....

“அவன் உன்னை காதலிக்கிறேன்.. என்று சொல்லவில்லை....பின்னால் திரியவில்லை..ஆனால் எந்த தைரியத்தில் இதை செய்கிறான்..என்னை அடக்க இவன் யார்...?” என்ற கேள்விகள் எழுந்து நிற்க..

அவன் மேலான அவளுடைய வெறுப்பு வளர்ந்து கொண்டே போனது.
 
nice epi mam
 
Top